வாக்கு - மனங்களுக்கு அருள் : தர்மத்திலிருந்து மோட்சம் வரை

வாக்கு மனங்களுக்கு அருள் : தர்மத்திலிருந்து மோட்சம் வரை

ஜீவராசிகளை லட்சக்கணக்கான இனமாக ஸ்ருஷ்டித்திருக்கிற ஈச்வரன் இந்த மநுஷ்ய ஜாதிக்கு மாத்திரம் கொடுத்திருக்கிறது வாக்கு. அந்த வாக்கை உண்டாக்குகிறவர் விக்நேச்வரர் என்றே தமிழ்ப் பாட்டி தமிழ்க் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறாள். 'வாக்குண்டாம்' என்று அவள் ஆரம்பித்ததே அந்த நூலுக்குப் பெயராகிவிட்டது புலவர்கள் மட்டும் அதை 'மூதுரை' என்கிறார்கள்.

வாக்கு மாதிரியே, நல்ல மனஸு, கெட்ட மனஸு என்று பிரிக்க முடியாமல், 'இன்ஸ்டிங்க்டி'ன் மேலேயே ஏதோ ஒரு உள்ளுணர்ச்சி, ஒவ்வொரு இயற்கை வேகங்கள், இவற்றின் மேலேயே பாக்கி அத்தனை ப்ராணி வர்க்கமும் ஜீவித்துக் கொண்டிருக்க, இந்த மநுஷ்ய ஜாதிக்கு மாத்திரமே நல்லது, கெட்டது என்று பாகுபடுத்திக் கொள்ள சக்தியும், அதிலே ஏதோ ஒன்றில் போகிற ஸ்வதந்திரமும் படைத்த மனஸை ஈச்வரன் கொடுத்திருக்கிறார். இதில் மனஸு நல்லதிலேயே போகும்படியாக, 'நல்ல மனம் உண்டாம்' என்னும்படியாக அநுக்ரஹிக்கிறவர் விக்நேச்வரர்தான் என்று குழந்தைப் பிராயத்திலேயே தமிழ் மக்களுக்கு ஒ£வைப் பாட்டி காட்டிக் கொடுத்திருக்கிறாள்.

நல்லதாக நம்முடைய மனஸ் உருவாகி, அது நல்ல வாக்காகவே பேசணுமானால் அதற்கு மனோ வாக்குகள் போகவேண்டிய நல்ல வழியைத் தெரிவிக்க வேணும். அந்த நல்ல வழிக்குத்தான் தர்ம மார்க்கம் என்று பெயர். அந்த மார்க்கத்திற்கு போட்டுக் கொடுப்பதாக 'நல்வழி' என்றும் ஒரு உபதேச நூல் அந்தப் பாட்டி கொடுத்திருக்கிறாள். அதிலேயும் ஆரம்பத்தில் விக்நேச்வரரைத்தான் ப்ரார்த்திக்கிறாள், அதுதான் பாலும் தெளிதேனும் [பாடல்]"நான் ஒனக்கு நாலு வஸ்து தரேன், பதிலுக்கு எனக்கு c மூணு குடுத்தா போறும்"னு வேடிக்கையாகப் பாடியிருக்கிறாள், குழந்தை ஸ்வாமியோல்லியோ?அதனாலே, வேடிக்கையாகக் கணக்குக் காட்டி ஏமாற்றி விடலாம் என்று!

இங்கே அவள் பிள்ளையாரிடம் முத்தமிழ் யாசிக்கிறதற்கு, அவர் மேரு மலையில் முத்தமிழ் எழுதி வைத்தாரென்று அருணகிரிநாதர் சொல்வது ஒத்துப் போகிறது. ஆகையினால் அந்தக் கதை 'ஆதென்டிக்'தான் என்று நிச்சயமாகிறது. ' நல்வழி ' என்பதைத்தான் ' ஸத்கதி ' என்கிறது, நல்வழியில் போய் லோக வாழ்க்கையை நல்லபடியாக வாழ்கிறதோடு ஸத்கதி முடியவில்லை, வாழ்க்கை போதும் என்று ஆகிறபோது "சற்கதி"பெற வேணும்" என்று மஹான்கள் பிரார்த்தித்திருக்கிறார்களே, அந்த 'சற்கதி' என்பதுதான் முடிவான ஸத்கதி மோட்ச மார்க்கம்.

தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் என்பதில் தர்ம மார்க்கத்தில் ஆரம்பிப்பது முடிவான மோட்ச மார்க்கத்தில் பூர்த்தியாகணும். அந்த நல்வழியில் ஓளவையாரைத் தூக்கிக் கொண்டு போய் கைலாஸத்தில் பார்வதி - பரமேச்வராளிடம் சேர்ப்பித்ததும் பிள்ளையார்தான்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is விநாயகரும் தமிழ் மொழியும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  ஒளவை கயிலை சேர்ந்தது: சுந்தரர் சரிதத் தொடர்பு
Next