புதுவிதமான மாணவர் யூனியன்
மாணவர் யூனியன் என்று தற்போது வைத்துக் கொண்டு உரிமைப் போராட்டம் நடத்துகிறார்களோல்லியோ? அதற்குப் பதிலோ,… கொஞ்சம் விட்டுக் கொடுத்துச் சொல்கிறேன்…. அதோடு கூடவோ, தாங்கள் ஸஜ்ஜனங்களாக, அதாவது நன்மக்கள்-மேன்மக்கள் என்பவர்களாக உருவாகிற உண்மையான உரிமைக்காக ஒரு யூனியன் அவர்கள் அமைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு ஏழெட்டு நல்ல பசங்கள், நல்ல செயலூக்கமும் விட்டுக் கொடுக்காத மனோபலமும் கொண்டவர்களாக இதற்காகச் சேர்ந்துவிட்டால் போதும். அவர்களே மற்றவர்களையும் தட்டியெழுப்பி இப்படி ஒரு யூனியனை ஏற்படுத்திவிட முடியும்.
அதம்பிக் கொண்டு, ‘தான்’ என்று புறப்படுகிற பிராயத்தில், தானும் அடங்கி விநயமாக ஆகி, மற்றவர்களையும் ஆக்குவதற்கே அதம்பிக்கொண்டு அங்கங்கே ஏழெட்டுப் பசங்கள் புறப்பட்டுவிட்டால் ‘ஸீன்’ அப்படியே மாறிவிடும். இரும்புக் காலமாக, கரிக்கட்டைக் காலமாக இருக்கிற தற்காலம் பொற்காலமாகிவிடும்.!