இந்த வஸ்துக்களோடு, பசுவிடம் எதுவுமே மட்டமாக இல்லாமல், உத்தமமானதாக இருப்பதால் கோமயமும் கோமூத்திரமுங்கூட மருந்தாக இருக்கின்றன. முன்னைவிட இப்போது புதிது புதிதாக வியாதிகள் முளைத்துக் கொண்டிருந்தாலும் குழந்தைகளுக்கு வயிற்றில் கட்டி விழுவதை மட்டும் தக்கத் தடுப்பு மருந்துகளால் – preventive medicines என்கிறவற்றால் – நன்றாகக் குறைத்திருக்கிறார்களென்பது தெரிகிறது. கட்டி விழுந்து கொண்டிருந்த காலத்தில் அதற்கான மருந்துகளில் கோமூத்ரம் ப்ரதானமான ஸ்தானம் பெற்றிருந்தது.
பஞ்சகவ்யம் மேல் தோலிலிருந்து உள்ளெலும்புவரை நோய்களை நீக்குவதாக வைதிகமான புண்யாஹவாசனத்தில் சொல்லியிருப்பதற்கேற்கவே லௌகிகமான வைத்ய சாஸ்த்ரத்திலும் சொல்லி அப்படியே மருந்தாக அது ப்ரத்யக்ஷ பலன் தருவதையும் பார்க்கிறோம். நம்முடைய ஆயுர்வேத வைத்ய சாஸ்த்ரத்தில் சொல்லியிருப்பதையே மேல் நாட்டாரின் அல்லோபதி மெடிகல் ஸிஸ்டத்திலும் ஆதரித்துச் சொல்கிறார்களென்பது குறிப்பிடத்தக்கது. சர்ம வியாதியான (தோல் நோயான) குஷ்டம் ஸ்வஸ்தமடையப் பால் ஸஹாயம் செய்யும் என்று மேல் நாட்டு வைத்ய நிபுணரொருவர் சொல்லியிருக்கிறார். எலும்பை பலப்படுத்தும் கால்ஷியம் பாலில் இருப்பதும் தெரிந்ததே.
ஆயுர்வேத மருந்துகளில் பலவற்றுக்கு, அவற்றோடு சேர்த்துச் சாப்பிட வேண்டிய ‘அநுபானம்’ என்பதாகப் பாலையே சொல்லியிருக்கிறது.
பாலிலிருந்தே பெறுகிற தயிர்-மோர்-வெண்ணெய்-நெய் ஆகியனவும் புஷ்டியைத் தருகிறவையாயும், ஒவ்வொரு வியாதிக்கு மருந்தாகவும் இருப்பவையாகும்.
ஸங்கீதத்திலும் கோ ப்ரயோஜனப்படுகிறது. அடித்துச் சப்தம் எழுப்புகிற மத்தள-பேரிகை போன்ற சர்ம வாத்யங்களில் மாட்டுத் தோல் ப்ரயோஜனமாகிறது.
வைத்தியத்திலும் வாத்தியத்திலும் இந்த வஸ்துக்களோடு, பசுவிடம் எதுவுமே மட்டமாக இல்லாமல், உத்தமமானதாக இருப்பதால் கோமயமும் கோமூத்திரமுங
வைத்தியத்திலும் வாத்தியத்திலும்