உச்சநிலையில் உள்ளவர் ”வரேண்யாய”: ’வரேண்யர்’ என்றால் ரொம்ப உயர்ந்தவர், சிறந்தவர் என்று அர்த்தம் காயத்ரீ மந்திரத்தில் அந்த வார்த்தை வரு

உச்சநிலையில் உள்ளவர்

”வரேண்யாய”:

’வரேண்யர்’ என்றால் ரொம்ப உயர்ந்தவர், சிறந்தவர் என்று அர்த்தம். காயத்ரீ மந்திரத்தில் அந்த வார்த்தை வரும். பரமாத்ம  தேஜஸுக்கு மிஞ்சி எதுவுமில்லை; அதுதான் best என்று ஸுபர்லேடிவ் போட்டுக் காட்டும் போது வேதஸாரமான காயத்ரியில் வருகிற வார்த்தையை இங்கே தீக்ஷிதர்வாள் போட்டிருக்கிறார். ‘ஸுப்ரஹ்மண்யாய’, ‘லாவண்யாய’, ‘சரண்யாய’ என்று பல்லவியில் ஒரே மாதிரி அந்த்ய ப்ராஸம் போட்டதோடு சேரும்படியாக அநுபல்லவியிலும் ‘வரேண்யாய’ என்று உச்ச ஸ்தானத்தில், உச்ச ஸ்தாயியில், வேதத்தின் உச்சியான மந்த்ரத்தில் வரும் உச்சத்தைக் காட்டும் வார்த்தையை இழைத்திருக்கிறார்…..