ஹொய்ஸள ராஜகுமாரியும் ராமநுஜரும்
ஸ்ரீ இராமாநுஜாசார்யார் கதையிலும் மதம் மாறிய ஒரு ராஜாவை மறுபடி தாய் மதத்துக்குத் திருப்புவதென்பது ஒரு பெண்ணை மையமாக வைத்தே நடந்திருக்கிறது. அப்போது கர்நாடக தேசத்தை ஆண்ட ஹொய்ஸள ராஜா ஜைனனாக மாறியிருந்தான். அவனுடைய பெண்ணுக்குப் பிடித்திருந்த பேயை இராமாநுஜர் விரட்டியதாலேயே அவன் வைஷ்ணவத்துக்கு மாறினான். விஷ்ணுவர்த்தனன் என்று இராமாநுஜரால் பெயரிடப்பட்ட அவன் தான் பிரசித்தி பெற்ற பேலூர் சென்னகேசவர் கோவிலைக் கட்டினவன்.