மதத்தைக் காத்த மற்ற மாதரசியர்
இன்னம் அநேக ஸ்திரீகள் நம் மத உணர்ச்சிக்குப் புது எழுச்சி தந்திருக்கிறார்கள். சிவாஜி துருக்கர்களை ஜயித்து ஹிந்து ஸாம்ராஜ்யம் எழுப்பினானென்றால், அதற்கு விதை ஊன்றியவள் சின்ன வயசிலிருந்தே பாலோடு அவனுக்கு மதாபிமானத்தையும் ஊட்டின மாதா ஜீஜாபாய்தான். அப்புறம் வெள்ளைக்காரர்களுக்கு எதிராக ஜனங்களை எழுப்பினவர்களிலும் ஜான்ஸி ராணி லக்ஷ்மிபாய் போன்றவர்கள் பாலிடிக்ஸைவிட நம் மதத்தை அவர்கள் அழித்துவிடப் போகிறார்களே என்ற விசாரத்திலேயே உயிரைக் கொடுத்தும் மதத்தைக் காப்பாற்றுவதற்காக யுத்தத்துக்குப் போனார்கள்.