பிதா - குரு

பிதா - குரு

'மாதா -பிதா - குரு - தெய்வம்' என்பது எல்லோருக்கும் தெரிந்த பொது வசனம். இதில் மாதா-பிதா இண்டு பேருமே குருவின் கார்யமான நல்வழிப்படுத்தலையும் செய்பவர்கள்தான். ரொம்பக் குழந்தையாக இருக்கும்போது அம்மா பரம ஹிதமாக கொஞ்சம் கொஞ்சம் நல்லதைச் சொல்லிக் கொடுப்பாள். அப்புறம் கொஞ்சம் விவரம் தெரிகிற வயஸிலிருந்து எட்டு வயஸில் உபநயனம் பண்ணி குரு என்றே இருப்பவரிடம் குருகுலவாஸம் பண்ணுவதற்காகக் குழந்தையை ஒப்படைக்கிற வரையில் அப்பா, அம்மாவை விடக் கொஞ்சம் கண்டிப்புக் காட்டி, 'இப்படியிப்படி இருக்கணும், பண்ணணும்' என்று அநேக நல்ல விஷயங்கள் சொல்லிக் கொடுப்பார். அதனால் அவருக்கே குரு பெயர் ஏற்பட்டிருக்கிறது...

'குரு' என்றால், அட்சரம் அட்சரமாகப் பிரிக்காமல் நேராக ஒரே வார்த்தையாக அர்த்தம் பண்ணும்போது 'பெரியவர்' என்றே அர்த்தம். அகத்திற்குப் பெரியவர் head of the family - அப்பாதானே? அதனால் அவர் குரு.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is குருவாகத் திருமால்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  குருவுக்கும் தந்தைத்தன்மை உண்டு
Next