1
ப்ராத:ஸ்மராமி லலிதாவதநாரவிந்தம்
பிம்பாதரம் ப்ருதுலமௌக்திக சோபிநாஸம்!
ஆகர்ணதீர்க்க நயனம் மணி குண்டயாட்யம்
மந்தஸ்மிதம் ம்ருகமதோஜ்வலபாலதேசம்
பிம்பாதரம் ப்ருதுலமௌக்திக சோபிநாஸம்!
ஆகர்ணதீர்க்க நயனம் மணி குண்டயாட்யம்
மந்தஸ்மிதம் ம்ருகமதோஜ்வலபாலதேசம்
பொருள்: காலைவேலையில் ஸ்ரீ லலிதாதேவியின் முகமாகிய தாமரையை ஸ்மரிக்கிறேன். அது கோவைப்பழ மொத்த உதடுகளுடையதாயும், பெரிய முத்துக்களான மூக்குத்தியுடையதாயும், மாணிக்க குண்டங்களுடையதாயும், புன்முறுவல் உடையதாயும், கஸ்தூரி திலகத்தால் விளங்கும் நெற்றியுடையதாயுமுள்ளது
2
ப்ராதர் பஜாமி லலிதா புஜகல்பவல்லீம்
ரக்தாங்குலீயலஸதங்குலி பல்லவாட்யாம்!
மாணிக்யஹேம வல்யாங்கதசோபமாநாம்
புண்ட்ரேஷசாபகுஸுமேஷுஸ்ருணீர்ததாநாம்!!
ரக்தாங்குலீயலஸதங்குலி பல்லவாட்யாம்!
மாணிக்யஹேம வல்யாங்கதசோபமாநாம்
புண்ட்ரேஷசாபகுஸுமேஷுஸ்ருணீர்ததாநாம்!!
பொருள்: காலையில் ஸ்ரீலலிதாம்பிகையின் கல்பகக் கொடி போன்றகைகளை சேவிக்கிறேன். அது சிவந்த மோதிரம் மிளிரும் துளிர் போன்ற விரல்களுடையதாயும், மாணிக்கம் பதிந்த தங்க வளையல்களும், தோள்வளையும் கொண்டு விளங்குகின்றன. கரும்பு வில்லும், புஷ்ப பாணங்களும் ரம்பமும் அவற்றில் உள்ளன
3
ப்ராதர் நமாமி லலிதாசரணாரவிந்தாம்
பக்தேஷ்டதாந நிரதம் பவஸிந்துபோதம்!
பத்மாஸநாதி ஸுரநாயக பூஜநீயம்
பத்மாங்குச த்வஜஸுதர்சனலாஞ்சநாட்யம் II
பக்தேஷ்டதாந நிரதம் பவஸிந்துபோதம்!
பத்மாஸநாதி ஸுரநாயக பூஜநீயம்
பத்மாங்குச த்வஜஸுதர்சனலாஞ்சநாட்யம் II
பொருள்: பக்தர்களின் இஷ்டஷ்டத்தை எப்பொழுதும் நல்குவதும் சம்ஸாரக்கடலைக் கடப்பதற்காக அமைவதும், பிரம்மதேவன் முதலிய தேவர்கள் வழிபடத் தக்கதும், தாமரை அங்குசம், கொடிசுதர்சனம் முதலிய இலச்சினை கொண்டதுமான ஸ்ரீலலிதாம்பிகையின் திருவடித்தாமரையை காலையில் வணங்குகின்றேன்
4
ப்ராத:ஸ்துவே பரசிவாம் லலிதாம்பவாநீம்
த்ரய்யந்த வேத்ய விபவாம் கருணாநவத்யாம்!
விச்வஸ்ய ஸ்ருஷ்டி விலயஸ்திதி ஹேது பூதாம்
வித்யேச்வரீம் நிகம வாங்கமநஸாநிதூராம் II
த்ரய்யந்த வேத்ய விபவாம் கருணாநவத்யாம்!
விச்வஸ்ய ஸ்ருஷ்டி விலயஸ்திதி ஹேது பூதாம்
வித்யேச்வரீம் நிகம வாங்கமநஸாநிதூராம் II
பொருள்: உபநிஷத்துக்களில் தெரிந்து தெளிய வேண்டிய மஹிமை கொண்டவளும், மாசற்ற கருணை பூண்டவளும், உலகத்தை படைக்கவும், காக்கவும், பிறகு லயமடையச் செய்பவளும், வேதங்களுக்கும், வாக்குகளுக்கும், மனதிற்கு அப்பாற்பட்டவளுமான பரசிவையான ஸ்ரீ லலிதாம்பிகையை காலையில் ஸ்தோத்திரம் செய்கிறேன்
5
ப்ராதர் வதாமிலலிதே தவபுண்ய நாம
காமேச்வரீதி கமலேதி மஹேச்வரீதி I
ஸ்ரீசாம்பவீதி ஜகதாம் ஜநநீபரேதி
வாக்தேவதேதி வசஸா த்ரிபுரேச்வரீதி II
காமேச்வரீதி கமலேதி மஹேச்வரீதி I
ஸ்ரீசாம்பவீதி ஜகதாம் ஜநநீபரேதி
வாக்தேவதேதி வசஸா த்ரிபுரேச்வரீதி II
பொருள்: ஹே லலிதாம்பிகே. உனது புண்யமான பெயரை காலையில் சொல்கிறேன். காமேச்வரி என்றும், கமாலா என்றும், மஹேச்வரீ என்றும், ஸ்ரீசாம்பவீ என்றும், உலகத்தின் உயரியதாய் என்றும், வாக் தேவதை என்றும், த்ரிபுராம்பிகை என்றும் அல்லவா அந்த பெயர்கள் அமைந்தன
6
ய:ச்லோக பஞ்சகமிதம் லலிதாம்பிகாயா:
ஸெளபாக்யதம் ஸுலலிதம்படதிப்ரபாதே I
தஸ்மை ததாதி லலிதா ஜடிதி ப்ரஸந்நர்
வித்யாம் ஸ்ரீயம் விமலஸெளக்ய மனந்தகீர்திம் II
ஸெளபாக்யதம் ஸுலலிதம்படதிப்ரபாதே I
தஸ்மை ததாதி லலிதா ஜடிதி ப்ரஸந்நர்
வித்யாம் ஸ்ரீயம் விமலஸெளக்ய மனந்தகீர்திம் II
பொருள்: ஸ்ரீ லலிதாம்பிகையின் ஸ்தோத்திரமான இவ்வைந்து ஸ்லோகங்கள் வளமிக்க வாழ்வை கொடுப்பவை. மிக எளிதானவையுங்கூட - காலையில் படிப்பவருக்கு உடன் மகிழ்ச்சியுடன் கல்வி, செல்வம், குறைவற்ற சௌக்யம், புகழ் ஆகியவற்றை அருள்கிறாள்