1.கல்லோலோல்லஸிதாம்ருதாப்திலஹரீமத்யே விராஜன்மணி
த்வீபே கல்பக வாடிகா பரிவ்ருதேகாதம்ப வாட்யுஜ்வலேமி
ரத்னஸ்தம்ப ஸஹஸ்ரநிர்மித ஸபாமத்யே விமாநோத்தமே
சிந்தாரத்ன விநிர்மிதம் ஜநதி தே ஸிம்ஹாஸநம் பாவயேமிமி
அலை பொங்கும் அம்ருதக்கடலின் அலைகளின் நடுவே விளங்கும் மணித்வீபத்தில், கல்பகச்சோலை சூழ்ந்த கதம்ப மரத்தோப்பு விளங்குகிறது. அங்கு ஆயிரக்கணக்கில் ரத்னத்தூண்கள் அமைந்த ஸபையின் நடுவில் சீரியவிமானத்தின் சிந்தாமணியால் வடித்த ஸிம்மாஸனத்தை ஹேதாயே!மனதிற்பாவிக்கிறேன்.
2.ஏணாங்காநலபர்னு மண்டல லஸத் ஸ்ரீசர்கமத்யே ஸ்திதாம் I
பாலோர்கத்யுதிபாஸுராம கரதலை:பாசாங்குசௌபிப்ரதீம்
சாபம் பாணுமபி ப்ரஸந்நவதநாம் கௌஸும் பவஸ்த்ரான் விதாம்
தாம் த்வாம் சந்த்ரகலாவதம்ஸமகுடாம்சாருஸ்மிதாம் பாவயே II
சந்த்ரன், அக்னி, சூர்யமண்டலங்கள் விளங்கும் ஸ்ரீசக்ரத்தின் நடுவில் அமர்ந்திருப்பவளும், இளம் சூர்யன் போன்று ஒளிர்பவளும், கைகளில் பாசம், அங்குசம், வில், அம்பு, இவற்றை வைத்திருப்பவளும், மகிழ்ச்சி பொங்கும் முகத்துடன், காவிவஸ்திரம் அணிந்தவளும், சந்த்ரபிறை கொண்ட கிரீடம் அணிந்தவளும், அழகிய புன்சிறிப்பு தவழும் அத்தகைய உன்னை மனதிற்காண்கிறேன்.
3.ஈசாநாதிபதம் சிவைகபலகம் ரத்னாஸனம் தே சுபம்
பாத்யம் குங்கும சந்தனாதிபரிதைரர்க்யம் ஸரத்னாக்ஷதை: I
சுத்தை ராச மநீயகம் தவஜலைர்பக்த்யா மயாகல்பிதம்
காருண்யாம்ருத வாரிதே ததகிலம் ஸந்து ஷ்டயே கல்பதாம் II
ஈசாநன், ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன் இவரால் தாங்கப்பட்டதும், சிவனொருவனை பலகையாகக் கொண்டதுமான நல்ல ரத்னமய ஆஸசனம், ஹே அன்னையே!உனது மகிழ்ச்சிக்காக அமையட்டும். குங்குமம், சந்தனம் இவை கலந்த பாத்தியமும், ரத்னமாகிய அக்ஷதையுடன் அர்க்யமும், சுத்த ஜலத்தால் ஆசம நீயகமும் நான் பக்தியுடன் ஸமர்ப்பிக்கிறேன். ஹே கருணைக் கடலே!இவையெல்லாம் உன் மகிழ்ச்சியை உண்டாக்கட்டும்.
4.லக்ஷ்யே யோகிஜநஸ்ய ரக்ஷிதஜகத்ஜாலே விசாலே க்ஷணே
ப்ராலேயாம்பு படீரகுங்கும லஸத்கர்பூர மிச்ரோதகை:
கோக்ஷீரைரபி நாலிகேரஸலிலை:சுத்தோத கைர் மந்த்ரிதை:
ஸ்நானம் தேவி தியா மயைததகிலம் ஸந்துஷ்டயே கல்பதாம் II
ஹே தேவி, யோகிஜனங்களின் கடைசீ இலக்கானவளே. உலகத்தைக் காப்பவளே. பரந்த கண்ணுடையவளே பந்நீரும், சந்தனமும், குங்குமப்பூவும் பச்சைகற்பூரமும் கலந்த தண்ணீராலும், பசும்பால், உளநீர், மந்திரித்த சுத்த ஜலம் இவற்றாலும் மனதளவில் ஸ்நானம் செய்துவைக்கிறேன். இவையெல்லாம் உன் மகிழ்ச்சிக்கு ஹேதுவாகட்டும்.
5.ஹ்ரீங்காராங்கித மந்த்ரலக்ஷிததநோ ஹேமாசலாத் ஸஞ்சிதை:
ரத்னைருஜ்வலமுத்தரீயஸஹிதம் கௌஸும்ப வர்ணாம் சுகம் I
முக்தாஸந்ததியஜ்ஞஸ¨த்ர மமலம் ஸெளவர்ண தந்தூத்பவம்
தத்தம் தேவி தியா மயைத்தகிலம் ஸந்துஷ்டயே கல்பதாம் II
ஹ்ரீங்காரத்தை உள்ளடக்கிய மந்த்ரத்தின் பொருளானவளே!தங்க மலையிலிருந்து சேகரித்த ரத்தினங்கள் இழைத்ததும், உதரீயத்துடன் கூடியதுமான ஆரஞ்சுக்கலர் துகிலையும் முத்துமணி கோவையான தூய யஞ்ஞோப வீதத்தையும் ஸமர்ப்பிக்கிறேன். இவை உனது ஸந்தோஷத்தை உண்டுபண்ணட்டுமே.
6.ஹம்ஸைரப்யதி லோபநீயகமநே ஹாராவ லீமுஜ்வலாம்
ஹிந்தோலத்யுதி ஹீரபூரிததரே ஹேமாங்கதே கங்கணே
மஞ்ஜீரௌ மணிகுண்டலே மகுடமப்யர்தேந்து சூடாமணிம்
நாஸாமெனக்திகம் அங்குலீயகடகௌ காஞ்சீமபிஸ்வீகுரு II
ஹே தேவி. ராஜ அன்னங்களே உன் நடைப்பழக ஏங்கி விரும்புகின்றனவே c, ஒளிரும் ஹாரத்தையும், அசைந்தாடும் ப்ரகாசமுள்ள வைரங்கள் பதித்த தங்க தோள்வளைகளையும், கைவளைகளையும், சதங்கைகளையும், குண்டலங்களையும் கிரீடம், அரைவிட்டப்பிறைசந்திர சிகை ஆபரணம், முத்து மூக்குத்தி, மோதிரம், கடகம், ஒட்டியானம் இவற்றையெல்லாம் ஸ்வீகரித்துக்கொள்.
7.ஸர்வாங்கே கனஸாரகுங்கும கனஸ்ரீகந்த பங்காங்கதிதம்
கஸ்தூரீதிலகம் ச பாலபலகே கோரோச நாபத்ரகம்மி
கண்டா கர்சனமண்டலே நயநயோர் த்வ்யாஞ்ஜநம் தேsரஞ்சிதம்
கண்டாப்ஜேம்ருகநாபி பங்கம் அமலம் த்வத்ப்ரீதயே கல்பதாம்
ஹேதேவி. உனது உடல் முழுவதும் பூசுவதற்கு கெட்டியான குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கலந்த சந்தனக் கலவையும், பளபளப்பான நெற்றியில் கஸ்தூரீ திலகமும், கண்ணாடி போன்று மழமழப்பும், பிரகாசமும் கொண்ட கன்னத்தில் கோரோசனைகோடும், கண்களில் திவ்யமான மையும், கழுத்து பாகத்தில் கஸ்தூரியுமான தொப்புள் விழுதும் உனது மகிழ்ச்சியை கூட்டுவிப்பதாக இருக்கட்டும்.
8.கல்ஹாரோத்பல மல்லிகா மருவகை:ஸெளவர்ண பங்கேருனஹ:
ஜாதீசம்பகமாலதீவகுலகைர் மந்தார குந்தாதிபி:
கேதக்யா தரவீரகை:பகுவிதா:க்லுப்தா:ஸ்ரஜே மாலிகா:
ஸங்கல்பேந ஸமர்பயாமி வரதேஸந்து ஷ்டயே க்ருஹ்யதாம்மிமி
ஹே தேவி. வரங்களை கொடுத்தருள்பவளே. செந்தாமரை, உத்பலம், மல்லிகை, மருவகம், மஞ்சள் தாமரை, குந்தம், தாழை, அரளி ஆகிய பூக்களால் கட்டப்பட்ட மாலைகள், சரங்கள் மனதளவில் ஸமர்பிக்கப்படுகின்றன. இவை உனக்கு மகிழ்ச்சியளிக்கட்டும்.
9.ஹந்தாரம் மதநஸ்ய நந்தயஸி யைரங்கை ரநங்கோஜ்வலை:
பைர்ப்ருங்காவலி நீல குந்தலபரை:பத்நாஸி தஸ்யாசம் I
தாநீமாநி தவாம்ப கோமலதராண்யாமோதலீலாக்ருஹா-
ண்யாமோ தாய தசாங்க குக்குலுக்ருதைர் துபைரஹம் தூபயேமிமி
ஹே அன்னையே. உனது மிக மிருதுவான வாசனை மிக்க கேலீக்ருஹங்களை தசாங்கம், குக்குலு, பசுநெய் முதலியவற்றால் புகைத்து மணம் கமழ வைக்கிறேன். முதலாவதாக, மன்மதனையடக்கிய பரமேச்வரனுக்கே காம விகாரத்தையுண்டு பண்ணும் சில உடற்பாகங்கள், இரண்டாவதாக பரமேச்வரனின் புத்தியை ஸ்தம்பிக்கச்செய்யும் நீலமான சேங்கள் - மொய்க்கும் வண்டுக்கூட்ட மோவென விளங்குமவற்றையும் புகை போட்டு மணக்கவைக்கிறேன்.
10.லக்ஷ்மீ முஜ்வலயாமி ரத்னநிவஹோத் பாஸ்வந்தரே மந்திரே
மாலாரூப விலம்பிதைர்மணிமய ஸ்தம்பேஷ§ ஸம்பாவிதை: I
சித்ரைர்ஹாடக புத்ரிகாகரத்ருதைர் கவ்யைர் க்ருதை: மிவர்திதை:
திவ்யைர்தீபகணை ர்தியா கிரிஸுதே ஸந்து ஷ்டயே கல்பதாம் II
ரத்ன கற்கள் இழைத்த உனது ஸ்ரீகோவிலில் மாலை போல் தொங்குகிறவையும், இரத்னமயத் தூண்களில் நிழலாகத் தெரிகின்றவையும், பலவித தங்கப் பெண் பதுமைகளால் கையில் ஏந்திய வண்ணம் பசுநெய் விளக்குகளால் மனதளவில் அழகை கூட்டுவிக்கிறேன். அது உன்னை மகிழ்விக்கட்டும்.
11.ஹ்ரீங்காரேச்வரி தப்தஹாடகக்ருதை:ஸ்தாலீஸ ஹஸ்ரைர் ப்ருதம்,
திவ்யான்னம் க்ருதஸ¨பசாகபரிதம் சித்ரான்னபேதம்ததா I
துக்தான்னம் மதுசர்கரா ததியுதம் மாணிக்யயாத்ரே ஸ்திதம்
மாஷாபூப ஸஹஸ்ரமம்ப ஸகலம் நைவேத்யமாவேதயே II
ஹே ஹ்ரீங்காரேச்வரி! தாயே! உருக்கிய தங்கத்தால் செய்யப்பட்ட பல கிண்ணங்களில் பரிமாறப்பட்டுள்ள நைவேத்தியம் அனைத்தையும் நிவேதனம் செய்கிறேன். நெய்யும் பருப்பும் கலந்து தயாரித்த கறி வகைகளும் சித்ரான்னங்களும், தயிர், தேன், சர்க்கரை சேர்த்து மாணிக்கம் பதித்த பாத்திரத்தில் இருக்கும் பாலன்னம், ஆயிரம் வடைகள் இப்படி நைவேத்தியம் இங்கு பாவிக்கப்படுகிறது.
12.ஸச்சாயைர்வரகேதகீதலருசா தாம்பூலவல்லீதலை:
பூகைர்பூரிகுணை:ஸுகந்தி மதுரை:கர்பூர கண்டோஜ்வலை: I
முக்தாசூர்ண விராஜிதைர் பகுவிதைர் வக்த்ராம் புஜா மோதனை:
பூரணா ரத்னகலாசிகா தவமுதே ந்யஸ்தா புரஸ்தாதுமே II
ஹே உமேமிஉனது எதிரில் இதோ ரத்ன கற்கள் பதிந்த வெற்றிலை பெட்டி வைத்துள்ளேன். அது உன் மகிழ்ச்சிக்காகவே வைக்கப்பட்டுள்ளது. அந்த பெட்டியில் நல்ல தாழம்பூ போன்ற (நிறமான) வெற்றிலைகளும், இனிய மனம் கொண்ட பாக்குத் துகள்களும், பச்சை கற்பூரம், சுண்ணாம்பு கலந்து வாய்க்கு மணம் உண்டாக்கும் விதத்தில் அனைத்து பொருட்களும் நிரம்பியுள்ளன.
13.கன்யாபி:கமநீயகாந்திபிரலங்காராமலாரார்திகா
பாத்ரே மௌக்திக சித்ரபங்க்தி விலஸத்கர்பூர தீபாலிபி: I
தத்தத்தால ம்ருதங்க கீதஸஹிதம் ந்ருத்யத் பதாம்போருஹம்
மந்த்ராராதன பூர்வகம் ஸுவிஹிதம் நீராஜநம்க்ருஹ்யதாம்மிமி
அழகிய பெண்கள், அலங்கார ஆரத்தி பாத்திரத்தில் வரிசையாக முத்துகேர்த்தாற்போல் கர்பூர தீபங்களை ஏந்தியவர்களாய், அந்தந்த தாள ஒலிக்கு ஏற்றார்போல் ஸங்கீதமும், நாட்டியமும் சேர்ந்து அப்யஸிக்கின்றவர்களாய், மந்திரங்களுடன் காட்டும் நீராஜனத்தை ஏற்றுக் கொள்ளலாமே!
14.லக்ஷ்மீர் மௌக்திக லக்ஷகல்பித ஸிதச்சத்ரம் து தத்தே ரஸாத்
இந்த்ராணீ ச ரதிஸ்ச சாமரவரே தத்தேஸ்வயம் பாரதீ I
வீணாம், ஏணவிலோசநா:ஸுமநஸாம் ந்ருத்யந்திதத்ராகவத்
பாவை:ஆங்கிக ஸாத்விகை:ஸ்புடதரம் மாத ஸ்தாகர்ண்யதாம்மிமி
ஹே அன்னையே!லக்ஷ்மிதேவி, பல முத்து மணிகளால் ஆகிய வெண்பட்டுக்குடையை ஆர்வமாக தாங்கி தலைமேல் பிடிக்கிறாள். இந்த்ராணியும், ரதியும் இரு வெண் சாமரங்களை வீசுகின்றனர். ஸரஸ்வதி தேவியும் வீணை வாசிக்கிறாள். மற்ற தேவ மங்கையர் ராக பாவங்களையட்டி கை கால் அசைவுகளாலும், ஸாத்விக பாவங்களாலும் ரஸம் ததும்ப நடனம் புரிகின்றனர். இவை எல்லாம் கேட்டு மகிழலாமே!
15.ஹ்ரீங்காரத்ரயஸம்புடேந மனுநோபாஸ்யே த்ரியீமௌலிபி:
வாக்யைர்லக்ஷ்யதநோ தவஸ்துதிவிதௌ கோ வா க்ஷமேதாம்பிகே I
ஸல்லாபா:ஸ்துதய:ப்ரக்ஷிணசதம் ஸஞ்சார ஏவாஸ்துதே
ஸம்வேசோ நமஸ:ஸஹஸ்ரமகிலம் த்வத்ப்ரீதயே கல்பதாம் II
ஹே அம்பிகே. மூன்று ஹ்ரீங்காரங்களின் கூட்டால் அறிய வேண்டியவள் c. உபநிஷத்துக்களால் காணத்தக்கவளும் கூட. உன்னை ஸ்தோத்திரம் செய்ய எவர்தான் சக்தியுடையவர்?ஆகவே, நான் பேசுவதெல்லாம் உன் ஸ்தோத்ரங்களாகவும், நான் இக்குங்குமம் ஸஞ்சரிப்பதே உன்னை பிரக்ஷிணம் செய்வதாகவும், நான் படுத்து உறங்குவதே உன்னை நமஸ்கரிப்பதாகவும் பரிணமித்து, உனக்கு மகிழ்ச்சியை தரவல்லதாக அமையட்டும்.
16.ஸ்ரீமந்த்ராக்ஷரமாலயா கிரிஸுதாம்ய:பூஜயேத்சேதஸா
ஸந்த்யாஸுப்ரதிவாஸரம் ஸுநியதஸ்தஸ்யாமலம் ஸ்யான்மந:
சித்தாம்போருஹ மண்டபே கிரிஸுதாந்ருத்தம் விதத்தே ரஸாத்
வாணீ வக்த்ரஸரோருஹே ஜலதிஜா கேஹேஜகன்மங்களா II
எவரொருவர், தினந்தோரும் காலையிலும் மாலையிலும் மந்த்ரபீஜாக்ஷரம் பொதிந்த இந்த ஸ்தோரத்தை மனம் வைத்து பாராயணம் செய்து தேவியை பூஜிக்கிறாரோ, அவர் மனம் அமைதி கொள்வது மட்டுமின்றி, அவர் ஹ்ருதயதாமரையில் ஸ்ரீதேவி மகிழ்ச்சியுடன் களிநடனம் புரிவாள், பேச்சில் ஸரஸ்வதீ நடனம் புரிவாள், வீட்டில் உலகுக்கெல்லாம் மங்கல நாயகியான லக்ஷ்மீ வாஸம் செய்வாள்.
17.இதிகிரிவர புத்ரீ பாத ராஜீவ பூஷா
புவன மமலயந்தீ ஸ¨க்தி ஸெளரப்ய ஸாரை: I
சிவபத மகரந்த ஸ்யந்திநீயம் நிபந்தா
மதயது கவிப்ருங்கான் மாத்ருகா புஷ்பமாலைமிமி
என்றறிந்த அன்னையின் மந்த்ராக்ஷரம் பொதிந்த புஷ்பமாலை, நல்ல வாஸனையால் உலகை தூய்மை பெறச் செய்து, அன்னையின் திருவடிகளுக்கு அணிகலனாக அமைந்துள்ளது. சிவனின் பதங்களின் மகரந்தத்தையும் பெருக்குவதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே கவிகளாகிய தேன் வண்டுகளையும் எக்களிப்படையச் செய்யட்டும்.
மந்த்ர மாத்ருகா புஷ்ப மாலா ஸ்தவம் முற்றிற்று .