ஸ்ரீ ப்ரமராம்பாஷ்டகம் 1 சாஞ்சல்யாருணலோசனாஞ்ச்தக்ருபாம் சந்த்ரார்த சூடாமணிம் சாருஸ்மேரமுகீம் சராசர ஜகத் ஸம்ரக்ஷணீம் தத்பதாம் I சஞ்சத் சம்பக நாஸிகாக்ர வி

ஆதிசங்கரர் ஸ்தோத்திரங்கள்

ஸ்ரீ ப்ரமராம்பாஷ்டகம்

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் அருளியது

1
சாஞ்சல்யாருணலோசனாஞ்ச்தக்ருபாம் சந்த்ரார்த சூடாமணிம்
சாருஸ்மேரமுகீம் சராசர ஜகத் ஸம்ரக்ஷணீம் தத்பதாம் I
சஞ்சத் சம்பக நாஸிகாக்ர விலஸத் முக்தாமணீ ரஞ்ஜிதாம்
ஸ்ரீசைலஸ்தல வாஸினீம் பகவதீம் ஸ்ரீ மாதரம் பாவயே II
பொருள்: செவ்வரி கண்களில் தேங்கும் கருணையுடையவளும், பிறைச்சந்திரனை தலையில் அணிந்தவளும், புன்முறுவல் பூத்த முகத்தையுடையவளும், உலகமனைத்தையும் தன்னில் தாங்கி ரக்ஷிப்பவளும், ஒளிரும் செம்பகப்பூ போன்ற மூக்கு நுனியில் விளங்கும் முத்துமணியால் அழகியவளும், ஸ்ரீசைலத் தலத்தில் உறைபவளுமான தாயை த்யானிக்கிறேன்
2
கஸ்தூரி திலகாஞ்சிதேந்து விலஸத் ப்ரோத்பாஸிபாலஸ்தலீம்
கர்பூரத்ரவ மிச்ர சூர்ணகதிரா மோதோல்லஸத்வீடிகாம் I
லோலா பாங்கதரங்கிதை ரதிக்ருபா ஸாரை:நதானந்தினீம்
ஸ்ரீசைலஸ்தல வாஸினீம் பகவதீம் ஸ்ரீ மாதரம் பாவயே II
பொருள்: ஸ்ரீ சைலத்தில் குடிகொண்ட ப்ரமராம்பிகையை தியானிக்கிறேன். அந்த தாயின் நெற்றியில் கஸ்தூரி திலகமும், சந்திரப் பிறையும் மிளிர்கின்றன. (வாயில்) கற்பூரக் குழம்பும் கதிரப்பொடியும் கலந்து மணக்கும் தாம்பூலச் சுருள் அடக்கியுள்ளாள். சஞ்சலமான கடைக்கண்களில் அலைமோதும் க்ருபாப்ரவாஹத்தால் வணங்கியவரை மகிழ்விக்கிறாள் அவள்
3
ராஜன்மத்த மராளமந்தகமனாம் ராஜீவபத்ரேக்ஷணாம்
ராஜீவப்ரபவாதிதேவமகுடை:ராஜத்பதாம்போருஹாம் I
ராஜீவாயத பத்ரமண்டிதகுசாம் ராஜாதிராஜேச்வரீம்
ஸ்ரீசைலஸ்தல வாஸினீம் பகவதீம் ஸ்ரீ மாதரம் பாவயே II
பொருள்: அழகிய அன்னப்பறவை போன்று மெல்ல செல்பவளாயும், தாமரை இதழ் போன்ற கண்களையுடையவளும், பிரம்மதேவன் முதலிய தேவர்கள் விழுந்து வணங்கப்படுபவளும், பரந்த தாமரை இதழ்கள் படிந்து விளங்கும் மார்பகங்களையுடையவளும், ராஜராஜேச்வரியாயு மிருக்கிற ஸ்ரீசைலவாஸினியான தாயை த்யானிக்கிறேன்
4
ஷட்தாராங்கண தீபிகாம் சிவஸ்தீம் ஷட்வைரிவர்காபஹாம்
ஷட்சக்ராந்தர ஸம்ஸ்திதாம் வரஸுதாம் ஷட்யோகினீ வேஷ்டிதாம் I
ஷட்சக்ராஞ்சித பாதுகாஞ்சிதபதாம் ஷட்பாவகாம் ஷோடசீம்
ஸ்ரீசைலஸ்தல வாஸினீம் பகவதீம் ஸ்ரீ மாதரம் பாவயே II
பொருள்: ஸ்ரீசைலத்தில் வீற்றிருக்கும் ப்ரமராம்பிகையை தியானிக்கிறேன். அந்த அன்னை ஆறுகோணங்களில் நடுவில் ஆறுயோகினிகளால் சூழப்பட்டு அம்ருதமாயிருக்கிறாள். ஆறுசக்ராகார பாதுகையுடையவள், ஆறுபாவங்களாயும், பதினாறு (ஷோடசீ) அக்ஷரங்கள் உடைவளாயுமிருக்கிறாள்
5
ஸ்ரீநாதாத்ருதபாலிதத்ரிபுவனாம் ஸ்ரீசக்ரஸஞ்சாரிணீம்
கானாஸக்த மனோஜயௌவனலஸத் கந்தர்வகன்யாத்ருதாம் I
தீனானாமதிவேலபாக்ய ஜனனீம் திவ்யாம்பராலங்க்ருதாம்
ஸ்ரீசைலஸ்தல வாஸினீம் பகவதீம் ஸ்ரீ மாதரம் பாவயே II
பொருள்: ஸ்ரீநாதரால் ஆதரிக்கப்பட்டு மூவுலகையும் காப்பவள் ஸ்ரீசக்ரத்தில் உலாவருபவள்:பாடத்தொடங்கிய இளம் கந்தர்வ கன்னிகைகள் பாராட்டும் பெற்றவள். ஏழை எளியவருக்கும் மிகப்பெரிய அதிர்ஷ்ட வாய்ப்புகளை நல்குபவள். திவ்யமான ஆடையணிந்தவள்-ஆகிய ஸ்ரீசைலத்தலத்தில் அமர்ந்த ஸ்ரீமாதாவை தியானிக்கிறேன்
6
லாவண்யாதிகபூஷிதாங்கிலதிகாம் லாக்ஷ£லஸத்ராகிணீம்
ஸேவாயாத ஸமஸ்ததேவ வனிதாஸீமந்தபூஷான்விதாம் I
பாவோல்லாஸ வசீக்ருத ப்ரியதமாம் பண்டாஸுரச் சேதிநீம்
ஸ்ரீசைலஸ்தல வாஸினீம் பகவதீம் ஸ்ரீ மாதரம் பாவயே II
பொருள்: அழகிற்கு அதிகமாக அலங்கரிக்கப்பட்டவள். லக்ஷ£ரஸம் தானோவென்று விளங்கும் செந்நிறங்கொண்டவர், சேவிக் கவர்ந்த தேவ மங்கையர் தலைவகிடுதானேயாகிய ஆபரணம் கொண்டவள், பாவநயத்தால் பர்த்தாவான பரமேச்வரனை தன்வசப்படுத்தியவள், பண்டாசுரனைத் தொலைத்தவள் ஆகிய ஸ்ரீசைலவாஸினியான ஸ்ரீமாதாவை தியானிக்கிறேன்
7
தன்யாம் ஸோமவிபாவநீயசரிதாம் தாராதரச்யாமலாம்
முன்யாராதன மோதினீம் ஸுமனஸாம் முக்திப்ரதான வ்ரதாம் I
கன்யாபூஜன ஸுப்ரஸன்னஹ்ருதயாம் காஞ்சீலஸன் மத்யமாம்
ஸ்ரீசைலஸ்தல வாஸினீம் பகவதீம் ஸ்ரீ மாதரம் பாவயே II
பொருள்: மிகப்புண்யம் வாய்ந்தவள்:சந்திரனால் விளக்கம் பெறும் சரிதம் கொண்டவள், மேகம் போலகருமேனியுள்ளவள், முனிவர் பூஜிப்பதில் மகிழ்ந்தவள், ஒட்டியானம் மிளிரும் இடைப்பாகம் கொண்டவள், கன்யகைகளை பூஜிப்பதில் மகிழ்ச்சிபெறுபவளுமாகிய ஸ்ரீசைல வாஸியான ஸ்ரீமாதாவை தியானிக்கிறேன்
8
சர்பூராகருகுங்குமாங்கிதகுசாம் கர்பூர்வர்ணஸ்திதிதாம்
க்ருஷ்டோத்க்ருஷ்டஸுக்ருஷ்ட கர்மதஹனாம் காமேச்வரீம் காமினாம் I
காமாக்ஷீம் கருணாரஸார்த்ரஹ்ருதயாம் கல்பாந்தரஸ்தாயினீம்
ஸ்ரீசைலஸ்தல வாஸினீம் பகவதீம் ஸ்ரீ மாதரம் பாவயே II
பொருள்: பச்சை கற்பூரம், அகில் சந்தனம் பூசிய மார்பகங்களுடையவள், கற்பூர நிறத்தில் நிற்பவள், எவ்வளவோ உயரியதாயினும் கர்மாக்களைப் பொசுக்குபவள்:அவள் காமேச்வரியும் காமினியுமானவள். கருணைச்சுரக்கும் ஹ்ருதயமுள்ள காமாக்ஷியன்னை யுக யுகாந்தரங்களிலுமிருப்பவள்- ஆகிய ஸ்ரீசைலத்தலத்தில் வாழும் ஸ்ரீமாதாவை தியானிக்கிறேன்
9
காயத்ரீம் கருடத்வஜாம் ககனாகாம் காந்தர்வகானப்பிரயாம்
கம்பீராம் கஜகாமினீம் கிரிஸுதாம் கந்தாக்ஷதாலங்க்ருதாம் I
கங்காகௌதம கர்கஸந்நுதபதாம் காம் கௌதமீம் கோமதீம்
ஸ்ரீசைலஸ்தல வாஸினீம் பகவதீம் ஸ்ரீ மாதரம் பாவயே II
பொருள்: கானம் செய்பவரைக் காப்பாற்றும் காயத்ரியானவள் அவள். கருடத்வஜத்துடன் ஆகாயத்தில் செல்லுபவள். கந்தர்வர்கள் பாடும் பாட்டில் ஈடுபாடுள்ளவள்;கம்பீரமாக யானைபோல் நடையுள்ளவள், ஹிமையமலையின் மகளான அவள் சந்தனம், அக்ஷதை இவற்றால் பூஜிக்கப்படுபவள். கங்கை கௌதமர், கர்கர் முதலியோரால் போற்றப்பட்டவள். கௌதமி, கோமதி, கோவாயும், உள்ள ஸ்ரீசைலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீமாதாவை தியானிக்கிறேன்