தக்ஷிணா மூர்திஸ்தோத்ரம் 1 உபாஸகானாம் யதுபாஸநீயம் உபாத்தவாஸம் வடசாகிமூலே! தத்மாம தாக்ஷின்யஜுஷா ஸ்வமூர்த்யா ஜாகர்து சித்தே மம போத ரூபம் !! உபாஸனை

தக்ஷிணா மூர்திஸ்தோத்ரம்

1.உபாஸகானாம் யதுபாஸநீயம்

உபாத்தவாஸம் வடசாகிமூலே!

தத்மாம தாக்ஷின்யஜுஷா ஸ்வமூர்த்யா

ஜாகர்து சித்தே மம போத ரூபம் !!

உபாஸனையில் ஈடுபட்டவர்களுக்கு எது உபாஸிக்கத்தகுந்ததோ, கல்லால மரத்தினடியில் வசித்துக்கொண்டு தென்திசை நோக்கியதான தனது மூர்த்தியையுடைய அந்த நிஜபோத ரூபமான தேஜஸ் என் மனதில் எழுந்தருளட்டம்.

2.அத்ராக்ஷ மக்ஷீண தயா நிதானம்

ஆசார்யமாத்யம் வடமூலபாகே!

மௌநேந மந்தஸ்மித பூஷிதேன

மஹர்ஷிலோகஸ்ய தமோ நுதந்தம் !!

ஆலமரத்தடியில் குறைவில்லாத கருணைப்புதையலாம் முதலாவது ஆசார்யரை நான் கண்டுகொண்டேன். அவர் மந்தஹாஸம் விரவிய மௌனம் ஏற்று, மஹர்ஷிகளின் அஜ்ஞானத்தைப் போக்கிக்கொண்டிருக்கிறார்.

3.வித்ராவிதாசேஷ தமோ கணேந

முத்ராவிசேஷேண முஹ§ர்முனீனாம்!

நிரஸ்ய மாயாம் தயயா விதத்தே

தேவோ மஹான் தத்வமஸீதி போதம்!!

அஜ்ஞானம் முழுதும் தொலையும்படி சின்முத்திரையால் அகற்றி, முனிவர்களின் மாயை தயவுடன் நீக்கி மஹாதோவனாகிய அவர் தத்வமஸி என்று ஆத்ம போதத்தை தோற்றுவிக்கிறார்.

4.அபார காருண்ய ஸுதாதரங்கை:

அபாங்கபாதை ரவலோகயந்தம்!

நிகஸ்ய மாயாம் தயயா விதத்தே

தேவோ மஹான் தத்வமஸீதி போதம்!!

மிகக்கொடிய ஸம்ஸாரமாகிய கோடையில் வெதும்பிய முனிவர்களை எல்லையற்ற கருணையம்ருதம் ததும்பிய கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டிருக்கிற எம் முதல் குருவை வணங்குகிறேன்.

5.மமாத்ய தேவோ வடமூலவாஸீ

க்ருபாவிசேஷாத் க்ருதஸந்நிதான:!

ஒங்கார ரூபாமுபதிச்ய வித்யாம்

ஆகத்யக த்வாந்தமபாகரோது!!

ஆலமரத்தடியில் கருணையுள்ளம் கொண்டு தானே தோன்றிய அந்த ஆதிதேவர், எனக்கு ஒங்கார வித்யையை உபதேசித்து அஜ்ஞான இருளைப் போக்கட்டும்.

6.கலாபிரிந்தோரிவ கல்பிதாங்கம்

முக்தாகலாபைரிவ பத்தமூர்தம்!

ஆலோகயே தேசிகமப்ரமேயம்

அனாத்யவித்யா திமிரப்ரபாதம்!!

சந்திரக்கலைகளைக் கொண்டு வடிக்கப்பட்டவர்கள்போல், அல்லது முத்துக்குவியலால் உருவாக்கப்பட்டவர்போல் இருக்கின்றவரும், அனாதியான அவித்யை என்ற இருளுக்கு உஷ:காலம் போன்றிருக்கிறவருமான ஆசார்யப்பெருமானை என் முன்னே காண்கிறேன்.

7.ஸ்வதக்ஷஜானு ஸ்திதவாம பாதம்

பாதோதராலங்க்ருதயோக பட்டம்!

அபஸ்ம்ருதே ராஹித பாத மங்கே

ப்ரெணௌமி தேவம் ப்ரணிதானவந்தம்!!

தன் வலது காலோடு மடித்து இணைக்கப்பட்ட இடது காலையுடையவளும், பாதங்களிலும் வயிற்றுப்பகுதியிலும் யோகபட்ட மணிந்தவளும், அபஸ்ம்ருதியின் மேல் ஒரு காலை வைத்து தியானாவஸ்தையில் இருக்கும் தக்ஷிணாமூர்த்தி தேவனை வணங்குகிறேன்.

8.தத்வார்த்த மந்தே வஸதாம் ருஷீணாம்

யுவாsபிய:ஸந்நுபதேஷ்டுமீஷ்டே!

ப்ரணௌமி தம் ப்ராக்தன புண்யஜாலை:

ஆசார்ய மாஸ்சர்யகுணாதி வாஸம்!!

தனது சிஷ்ய நிலையை யடைந்த ரிஷிகளுக்கும்கூட, இளைய வயதினரான ஆசார்யர் ஒருவரே தத்வார்த்தை உபதேசிக்க தகுதியுள்ளார். அவ்வரிய வியத்தகு குணங்களையுடைய ஆசார்யரை வணங்குகிறேன்.

9.ஏகனே முத்ராம் பரசும் கரேண

கரேணசான்யேந ம்ருகம் ததான:!

ஸ்வஜானுவின்யஸ்தகர:புரஸ்தாத்

ஆசார்ய சூடாமணி ராவிரஸ்து!!

ஒரு கையால் சின்முத்திரையும், மற்றொன்றால் மழுவையும் வேறொன்றால் மானையும் வைத்துக்கொண்டு, ஒருகையை முழங்காலில் வைத்து விளங்கும் ஆசார்யப் பெருந்தகையை முன்னே காண்கிறேன்.

10.ஆலேபவந்தம் மதனாங்க பூத்யா

சார்தூலக்ருத்யா பரிதானவந்தம்!

ஆலோகயே கஞ்சன தேசிகேந்த்ரம்

அஜ்ஞான வாராகர வாடவாக்னிம்!!

பொசுங்கிய மன்மதன் உடற்சாம்பல் பூசியவரும், புலித்தோலையுடுத்தியவரும் அஞ்ஞானக்கடலை வற்றவைக்கும் வாடவத்தீயாக இருப்பதுமான அந்த ஆச்சார்யப் பெருந்தகையை கண்ணாரக்காண்கிறேன்.

11.சாருஸ்மிதம் ஸோம கலாவதம்ஸம்

வீணாதராம் வ்யக்தஜடா கலாபம்!

உபாஸதே கேசன யோகினஸ்த்வாம்

உபாந்த நாதானுபவப்ரமோதம்!!

அழகிய புன்முறுவலும், சந்திரப்பிறையலங்காரமும் கையில் வீணையும், தலையில் ஜடைமுடியும், நாதானுபவம் மூலம் ஆனந்தக்களிப்பும் கொண்ட தக்ஷிணாமூர்த்தியாக இருக்கும் உம்மை சிறந்த யோகிகள் உபாசிக்கிறார்கள்.

12.உபாஸதே யம் முனய:சுகாத்யா:

நிராசிஷோ நிர்மமதாதி வாஸா:!

தம் தக்ஷிணா மூர்திதநும் மகேசம்

உபாஸ்மஹே மோஹமஹார்தி சாந்த்யை!!

மமதை இல்லாமல் பற்றற்றவர்களாக சுகர் முதலிய முனிவர்கள் எந்த தக்ஷிணாமூர்த்தி யுருவம் கொண்ட மஹேச்வரனை உபாஸிக்கிறார்களோ, அவரை நானும் மோஹமாகிய பெருந்தொல்லை நீங்க உபாஸிக்கிறேன்.

13.காந்த்யா நிந்தித குந்த கந்தலவபு:ந்யக்ரோத மூலே வஸன்

காருண்யா ம்ருத வாரிபி:முனிஜனம் ஸம்பா வயன்வீக்ஷிதை : !

மோஹத்வாந்த விபேதனம் விரசயன் போதேந தத்தாத்ருசா

தேவஸ்தத்வமஸீதி போதயது மாம் முத்ராவதா பாணினா!!

குந்த புஷ்பக்கொத்தையும் தனது உடல் அழகால் பழித்துக்கொண்டும் ஆலமரத்தடியில் இருந்து கொண்டும், கருணையைப்பொழியும் கண் பார்வையால் முனிவர்களை கடாக்ஷித்துக்கொண்டும், ஒப்பற்ற ஜ்ஞானத்தால் மோஹமாகிய இருளை அகற்றிக்கொண்டும் இருக்கிற அந்த தக்ஷிணாமூர்த்திக்கடவுள் சின்முத்ரை கொண்டகரத்தால் எனக்கு தத்வமஸி என்ற பெருங்கருத்தை உபதேசிக்கட்டும்.

14.அகௌரகாத்ரை ரலலாட நேத்ரை:

அசாந்தவேஷை ரபுஜங்க பூஷை:!

அபோத முத்ரை ரநபாஸ்த நித்ரை:

அபூர்ண காமை ரமரை ரலம் ந: !!

வெண்மையான உடல் இல்லாத, நெற்றிக்கண் இல்லாத, சாந்த வேஷமில்லாத, ஸர்பாபரண மில்லாத, ஜ்ஞான முத்ரையில்லாத, நித்ரை விடாத, நிறைந்த

மனதில்லாத, தெய்வங்கள் நமக்கு வேண்டாமே (தக்ஷிணாமூர்த்தி தேவர் ஒருவர் போதுமே)

15.தைவதாநி கதி ஸந்தி சாவநௌ

நைவ தாநி மனஸோ மதாநிமே!

தீக்ஷிதம் ஜடதியாமனுக்ரஹே

தக்ஷிணாபிமுகமேவ தைவதம்!!

உலகில் எத்தனையோ தெய்வங்கள் இருக்கின்றன. ஆனால் அவர் என் மனதிற்கு சம்பந்தமில்லை, அஜ்ஞானிகளை அனுக்ரஹிக்கவென்று தென் திசை நோக்கிய தெய்வதம் ஒன்றே தெய்வதம் என்றே சொல்வேன்.

16.முதிதாய முக்த சசிநாவம்ஸிநெ

பஸிதாவலேப ரமணீயமூர்தயேமி

ஜகதிந்த்ர ஜால ரசனாபடீயஸே

மஹஸே நமோsஸ்து வடமூலவாஸினே!!

இளம் பிளை சந்திரனை ஆபரணமாகக் கொண்டு பெரும்மகிழ்ச்சியுடனிருக்கும், விபூதி பூசியதாலே அழகிய மேனியுடையவராயும், உலகு என்ற இந்த்ர ஜாலத்தை காட்டுவதில் வல்லவராயும், ஆலமரத்தடியில் வசிப்பவராயுமிருக்கிற அந்த தேஜோமய தெய்வத்திற்கு நமஸ்காரம்.

17.வ்யாலம்பினீபி:பரிதோ ஜடாபி:

கலாவசேஷேண கலாதரேண!

பச்யல்லாடேன முகேந்துநா ச

ப்ரகாசஸே சேதஸி நிர்மலானாம்!!

பறந்து தொங்கும் ஜடைகளோடும், பிறைசந்திரனோடும், நெற்றிக்கண்ணோடும் அழகிய முகத்தோடும் புண்யவான்கள் மனதில் பிரகாசிக்கிறீர். (தக்ஷிணாமூர்த்தியாய்)

18.உபாஸகாநாம் த்வமுமாஸஹாய:

பூர்ணேந்து பாவம் பிரகடீகரோஷி!

யதத்ய தே தர்சனமாத்ரதோ மே

த்ரவத்யஹோ மானஸசந்த்ரகாந்த:!!

உபாஸனை செய்பவருக்கு நீர் உரிமையுடன் கூடிய சந்திரனாகவே காட்சியளிக்கிறீர். இப்பொழுது உம்மை கண்டவுடனேயே என் மனதாகிய சந்த்ரகாந்தக்கல், கரைகிறதே! (சந்த்ரனைக் கண்டவுடன் சந்த்ர காந்தக்கல் கரையும்) .

19.யஸ்தே ப்ரஸன்னாமனுஸந்ததானோ

மூர்திம் முதாமுக்த சசாங்கமௌலே:!

ஐச்வர்யமாயுர்லபதே ச வித்யா-

மந்தே ச வேதாநதமஹாரஹஸ்யம்!!

சந்திரக்கலையணிந்த தங்களது பிரஸன்னமான மூர்த்தியை எவன் மகிழ்ந்து நித்யம் மனதில் த்யானம் செய்கிறானோ, அவன் ஐச்வர்யம், ஆயுள், வித்யை இவற்றைப்பெறுவது மட்டுமில்லாமல் கடைசியில் வேதத்தின் பெருரஹஸ்யத்தையும் பெறுவான்.

தக்ஷிணாமூர்த்திஸ்தோத்ரம் முற்றிற்று.