குர்வஷ்டகம் 1 சரீரம் ஸுரூபம் ததா கலத்ரம் யச:சாரு சித்ரம் தனம் மேருதுல்யம்மிமி மன:சேந்த லக்னம் குரோரங்க்ரிபத்மே தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II மி

குர்வஷ்டகம்

1.சரீரம் ஸுரூபம் ததா கலத்ரம்

யச:சாரு சித்ரம் தனம் மேருதுல்யம்மிமி

மன:சேந்த லக்னம் குரோரங்க்ரிபத்மே

தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II

மிக அழகான உடற்கட்டு, மனைவியம் மிக அழகியவள்தான்;புகழும் பலவிதத்தில் இனியது. செல்வமோமேருவையத்தது. இவை யெல்லாம் குருவின் திருவடிகளில் மனம் பற்றுக்கொண்டால்தான் அழகியவை, இனியவை, இல்லையெனில் என்ன பயன்?

2.கலத்ரம் தனம் புக்ரபௌத்ராதி ஸர்வம்

க்ருஹம் பாந்தவா:ஸர்வ மேதத்ஹிஜாதம் I

மன:சேத் ந லக்னம் குரோரங்க்ரிபத்மே

தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II

மனைவி, செல்வம், புத்ரன், பேரன் ஆகியவையும், வீடு, உறவினர் இன்னும் இவையனைத்தும் அமைந்ததுதானே உள்ளது. குருவின் திருவடித்தாமரையில் மனம் படியவில்லையானால் இவையனைத்துமே பயனில்லையே!

3.ஷடங்காதி வேதோ முகே சாஸ்த்ரவித்யா

கவித்வாதி கத்யம் ஸுபத்யம் கரோதிமி

மன:சேத் நலக்னம் குரோ ரங்க்ரிபத்மே

தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II

வாயைத்திறந்தால் போதும் ஆறங்கங்களுடன் வேதம் ஒலிக்கும், சாஸ்திரங்களோ, கவித்வமோ, அது கத்மாயினும் சரி, பத்யமாயினும் சரி இனிதே படைக்க வல்லவன்தான். ஆனால் குருவின் திருவடித்தாமரையில் மனது ஈடுபடவில்லையெனில் அவயனைத்தும் இருந்தும் பயனில்லை, பயனில்லை, பயனில்லை.

4.விதேசேஷ§ மான்ய:ஸ்வதேசஷ§ தன்ய:

ஸதாசார வ்ருத்தேஷ§ மத்தோ ந சான்ய: I

மனஸ்சேத் ந லக்னம் குரோரங்க்ரிபத்மே

தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II

வெளிநாடுகளில் போற்றுதலுக்குறியவனே, நம்நாட்டிலும் நல்லொழுக்க நடவடிக்கைகளில் என்னை விட மேலானவனில்லை என்று மார்தட்டிக்கொண்டால் போதுமா?மனது குருவின் திருவடிகளில் பதியவேண்டாமோ?அதில்லையெனில் எதிருந்தும் பயனில்லை, பயனில்லை, பயனில்லை.

5.க்ஷமாமண்டலே பூப பூபாலப்ருந்தை:

ஸதா ஸேவிதம் யஸ்ய பாதாரவிந்தம்மி

மனஸ்சேத் நலக்னம் குரோ ரங்க்ரிபத்மே

தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II

பூமண்டலம் முழுவதும் உள்ள சிற்றரசர் பேரரசர்களால் எந்த குருவினது திருவடிகள் சேவிக்கப்பட்டுள்ளனவோ அப்படிப்பட்ட குருவின் திருவடித்தாமரைகளில் மனது பற்றவில்லையானால் என்ன பயன், என்ன பயன், என்ன பயன்.

6.யசோ மே கதம் திக்ஷ§தானப்ரதாபாத்

ஜகத் வஸ்து ஸர்வம் கரே யத்ப்ரஸாதாத்மி

மனஸ்சேத் ந லக்னம் குரோரங்க்ரிபத்மே

தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II

கொடைத்திறன் காரணமாக என் புகழ் எட்டு திசைகளிலும் பரவியுள்ளது. குருவருளால் உலகப்பொருளனைத்தும் என் கைவசப்பட்டுள்ளது. ஆனால் மனதுமட்டும் குருவின் திருவடிகளில் பதியவில்லை என்றால் பின் எதிருந்தும் வீணே!

7.நபோகே நயோகே நவா வாஜிராஜௌ

நகாந்தா முகே நைவ வித்தேஷ§ சித்தம்வீ

மனஸ்சேத் ந லக்னம் குரோ ரங்க்ரிபத்மே

தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II

சுகபோகத்திலும், யோகத்திலும், குதிரைப்படையிலும், பிரியையின் முகத்திலும், பணவரவிலும் மனது ஈடுபடவில்லை என்றால் அதுசரி, ஆனால் அதேபோல் குருவின் திருவடித்தாமரைகளிலும் பதியவில்லையென்றால் அதன் பின் பயன்தான் என்ன?

8.அரண்யே ந வா ஸ்வஸ்ய கேஹே ந கார்யே

ந தேஹே மனோ வர்ததே மே த்வநர்க்யேவீ

மனஸ்சேத் ந லக்னம் குரோரங்க்ரிபத்மே

தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II

காட்டிலும் சரி (நாட்டில்) சொந்த வீட்டிலும் சரி, ஏதோ ஒரு வேலையிலேயும், அல்லது தனது உடற்பாதுகாப்பிலும் கூட மனதில்லை, என்றால் அது சரியோ தவறோ?ஆனால் குருவின் திருவடிகளில் மனம் பதியாவிட்டால், பின் என்ன பயன், என்ன பயன் என்ன பயன்?

9.குரோ ரஷ்டகம் ய:படேத் புண்யதேஹீ

யதிர்பூபதி:ப்ரஹ்மசாரீ ச கேஹீவீ

லபேத் வாஞ்சிதா ர்த்தம் பதம் ப்ரஹ்மஸம்ஜ்ஞம்

குரோருக்தவாக்யே மனோ யஸ்ய லக்னம்மிமி

குருவின் வாய்ப்படச்சொன்ன வாக்யத்தில் எவன் மனம் ஈடுபடுகிறதோ, எந்த ஒரு புண்யவான் இந்த குருவின் பெருமை பற்றிய எட்டு சுலோகத்தைப்படிக்கிறானோ - அவன் சன்யாசியாகவோ, அரசனாகவோ, பிரம்மச்சாரியாகவோ, கிருஹத்தனாகவோ - இருக்குமவன் விரும்பியதை அடைந்து பிரம்ம பதவியையும் அடைவான்.

குர்வாஷ்டகம் முற்றிற்று.