1. ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம: சிவாய
தாமலேச தூதகோகபந்தவே நம: சிவாய|
நாமசேஷிதா நமத்பவாந்தவே நம: சிவாய
பாமரேதர ப்ரதான பந்தவே நம: சிவாய||
சீர்மல்கும் ஆத்மஸ்வரூபியாயும், குணங்களின் கடலோ என்றிருப்- பவருமான சிவனுக்கு நமஸ்காரம். சிறிதளவு பிரகாசத்தாலேயே சந்திரனை விரட்டி விடும் சிவனுக்கு நமஸ்காரம். வணங்கி வழிபடும் பக்தர்களின் சம்சாரம் என்ற பாழுங்கிணற்றை பெயரளவினதாக்கி விடும் சிவனுக்கு நமஸ்காரம். அறிவு முதிற்சியுள்ளவருக்கு சிறந்த உறவினரான சிவனுக்கு நமஸ்காரம்.
2. காலபீத விபரபால பால தே நம: சிவாய
சூல பின்ன துஷ்டதக்ஷபால தே நம: சிவாய |
மூலகாரணாய காலகால தே நம: சிவாய
பாலயாதுநா தயாலவால தே நம: சிவாய ||
க £லனிடம் பயந்த பிராமணச் சிறுவனை காத்த சிவனுக்கு நமஸ்காரம். சூலத்தால் துஷ்டனான தக்ஷனின் நெற்றியைப் பிளந்த சிவனுக்கு நமஸ்காரம். மூல காரணரான சிவனுக்கு நமஸ்காரம். தயை காட்டு ஹே சிவ!என்னை காக்க வேணும்!உனக்கு நமஸ்காரம்.
3. இஷ்ட வஸ்து முக்யதான ஹேதவே நம: சிவாய
துஷ்ட தைத்யவம்ச தூமகேதவே நம: சிவாய |
சிருஷ்டிரக்ஷணாய தர்மஸேதவே நம: சிவாய
அஷ்ட மூர்தயே வ்ருஷேந்த்ர கேதவே நம: சிவாய ||
மோட்சம் முதலிய இஷ்டத்தைக் கொடுக்கும் முக்ய காரணமான சிவனுக்கு நமஸ்காரம். துஷ்டர்களான அசுரர்களை அழிக்கும் தூமகேது போன்றவருக்கும், படைப்பை பாதுகாக்கும் தர்ம ஸேதுவானவருக்கும், எட்டு மூர்த்திகளையுடைய விருஷபக் கொடியுடையவருக்கும் நமஸ்காரம்.
4. ஆபதத்ரிபேதடங்க ஹஸ்த தே நம: சிவாய
பாபஹாரிதிவ்ய ஸிந்து மஸ்த தே நம: சிவாய |
பாபதாரிணே லஸந் நமஸ்ததே நம: சிவாய
சாப தோஷ கண்டன ப்ரசஸ்த தே நம: சிவாய ||
ஆபத்துக்களாகிய மலை உடைக்கும் உளியை கையில் உடையவருக்கும், பாபத்தைப் போக்கும் திவ்ய கங்கையை தலையில் கொண்டவருக்கும், பாபத்தைப் போக்குபவருக்கும், அழகாக நமஸ்கரிப்பவர் கூட்டத்தையுடையவருக்கும், சாபத்தை அழிப்பதில் தேர்ந்தவருக்கும் நமஸ்காரம்.
5. பிரஹ்ம மஸ்தகாவலீ நிபத்த தே நம:சிவாய
ஜிஹ்மகேந்த்ர குண்டலப்ரஸித்ததே நம: சிவாய |
ப்ரஹ்மணே பரணீதவேதபத்ததே நம: சிவாய
ஜிம்ஹ கால தேஹதத்தபத்ததே நம: சிவாய ||
பிரஹ்மதேவன் தலை வரிசையில் கவனம் செலுத்திய வரும், நாகத்தைக் குண்டலமாகக் கொண்டவரும், வேத பத்ததியை இயற்றிய ப்ரம்ம தேவனாக இருப்பவரும், வக்ரமான காலதேவனின் உடலில் கால் வைத்தவருமான சிவனுக்கு நமஸ்காரம்.
6. வ்யோமகேச திவ்ய பல்வரூப தே நம:சிவாய
ஹேமமேதினீ தரேந்தரசாப தே நம: சிவாய |
நாம மாத்ர தக்தஸர்வபாப தே நம: சிவாய
காமநைகதாந ஹ்ருத்துராபதே நம: சிவாய ||
ஆகாயத்தை கேசமாக உடையவரும், அழகிய மங்கள ஸ்வரூபியாகவும், மேருவை வில்லாகக் கொண்டவரும், பெயரைச் சொன்ன மாத்திரத்தில் பாபங்களைப் போக்குபவரும், காமனைகள் நிரம்பிய ஹ்ருதயத்திற்கு எட்டாதவருமான சிவனுக்கு நமஸ்காரம்.
7. காமநாசனாய சுத்தகர்மணே நம: சிவாய
ஸாமகான ஜாயமான சர்மணே நம: சிவாய |
ஹேம காந்தி சாகசிக்ய வர்மணே நம: சிவாய
ஸாமஜாஸுராங்கலப்த சர்மணே நம: சிவாய ||
காமனையழித்த வரும், சுத்தமான கர்மாவையுடைவரும், ஸாமகானத்தில் மங்களம் பெருக்குபவரும், தங்கநிறத்தால் பளபளக்கும் கவசம் உடையவரும், கஜாஸுரன் தோல் போர்த்தியவருமான சிவனுக்கு நமஸ்காரம்.
8. ஜன்மம்ருத்யுகோரது:கஹாரிணே நம:சிவாய
சின்மயைகரூப தேஹ தாரிணே நம: சிவாய |
மன்மனோரதாவ பூர்த்தி காரிணே நம: சிவாய
ஸன்மனோகதாய காமவைரினே நம: சிவாய ||
பிறப்பு, இறப்பாகிய கொடிய துக்கத்தைப் போக்குபவராயும், அறிவேயுருவம் தரித்தவரும், என் மனோரதம் நிறைவேறச் செய்பவரும், நல்லோர் மனத்தில் உறைபவருமான சிவனுக்கு நமஸ்காரம்.
9. யக்ஷராஜபந்தவே தயாலவே நம:சிவாய
தக்ஷபாணிசோபி காஞ்சனாலவே நம: சிவாய |
பக்ஷிராஜ வாஹஹ்ருச்சயாலவே நம: சிவாய
அக்ஷிபால வேதபூத தாலவே நம: சிவாய ||
இரக்கம் காட்டுபவரும் குபேரனுக்குப் பங்காளரும், வலது கையில் விளங்கும்
தங்கப் பாத்திரமுடையவரும், விஷ்ணுவின் மனதில் குடிகொண்டவரும், நெற்றிக்கண், வேதம் ஒதும் தாடை இவற்றையுடையவருமான சிவனுக்கு நமஸ்காரம்.
10. தக்ஷஹஸ்த நிஷ்டஜாத வேதஸே நம: சிவாய
அக்ஷராத்மனே நமத்பிடேளஜஸே நம: சிவாய |
தீக்ஷிதப்ரகாசிதாத்ம தேஜஸே நம: சிவாய
உக்ஷராஜ வாஹதே ஸதாம்கதே நம: சிவாய ||
வலது கையில் அக்னியை வைத்துள்ளவரும்;அக்ஷரஸ்வரூபியாயும், இந்திரனால் வணங்கப்பட்டவரும், தீக்ஷிதர்களால் வெளியில் பிரகாசப்படுத்தப்பட்ட தேஜஸை உடையவரும் விருக்ஷபவாஹனராயும், நல்லோருக்கு நற்கதியாயுமிருக்கிற சிவனுக்கு நமஸ்காரம்.
11. ராஜதாசலேந்த்ரஸானு வாஸினே நம: சிவாய
ராஜமான நித்ய மந்தஹாஸினே நம: சிவாய |
ஸ்வானுராக பக்த ரத்னஸானவே நம: சிவாய
தானவாந்தகார சண்டபானவே நம: சிவாய ||
வெள்ளிமலைச் சிகரத்தில் வசிப்பவரும், எப்பொழுதும் (முகத்தில்) விளங்கும் புன்முறுவலையுடையவரும், தனது பக்தர்களுக்கு (வேண்டியதை வழங்கும்) மேருமலை போன்றவரும் அஸுரர்களாகிய இருட்டிற்கு சூர்யன் போன்றவரும் ஆன சிவனுக்கு நமஸ்காரம்.
12. தீனமானவாலி காமதேனவே நம: சிவாய
ஸ¨னபாண தாஹக்ருத்க்ருசானே நம: சிவாய
ராஜகோரகாவதம்ஸ - பாஸினே நம: சிவாய
ராஜராஜ மித்ரதாப்ரகாசினே நம: சிவாய ||
ஏழை எளியோருக்கு வாரி வழங்கும் காமதேனு போன்றவரும், மன்மதனை எரிக்கும் அக்னியாயிருப்பவரும், சந்திரப் பிறையால் விளங்குபவரும், குபேரன் தோழமையால் பிரகாசிப்பவருமான சிவனுக்கு நமஸ்காரம்.
13. ஸர்வமங்களா குசாக்ரசாயினே நம: சிவாய
ஸர்வ தேவதா கணாதிசாயினே நம: சிவாய |
பூர்வ தேவநாசஸம் விதாயினே நம: சிவாய
ஸர்வமந்மனோஜபங்கதாயினே நம: சிவாய ||
எல்லோருக்கும் மங்களங்களை அளிக்கும் அம்பிகையின் மார்பில் துயில் கொள்பவரும், எல்லா தேவர்களையும் கடந்து நிற்பவரும், அஸுரர்களை நாசம்
செய்தவரும், எல்லோர் மனதிலும் தோன்றும் காமவிகாரத்தை தொலைப்பவருமான சிவனுக்கு நமஸ்காரம்.
14. ஸ்தோகபக்தி தோபி பக்தபோஷிணே நம:சிவாய
மாகரந்தஸாரவர்ஷிபாஷிணே நம:சிவாய |
ஏகபில்வதான தோபி தோஷிணே நம:சிவாய
நைக ஜன்மபாப ஜால சோஷிணே நம:சிவாய ||
சிறிதளவு பக்தியையும் கருதி பக்தர்களை போஷிக்கிறவரும், தேன் கொட்டும் பேச்சு பேசுபவரும், ஒரு பில்வதளம் கொடுத்தாலும் ஸந்தோஷிப்பவரும், பல ஜன்மங்களில் செய்த பாபங்களையும் வற்றடிப்பவருமான சிவனுக்கு நமஸ்காரம்.
15. ஸர்வஜீவ ரக்ஷணைகசீலினே நம:சிவாய
பார்வதீப்ரியாய பக்தபாலினே நம:சிவாய |
துர்விதக்த தைத்யஸைன்யதாரிணே நம:சிவாய
சர்வரீசதாரிணே கபாலிநே நம:சிவாய ||
எல்லா ஜீவர்களையும் காப்பதொன்றையே கருதுபவரும், பார்வதிப்ரியனும், பக்தர்களைக் காப்பவனும், கெட்ட கர்வமுள்ள அஸுரர்களை யழிப்பவரும், சந்திரப்பிறையணிபவரும், மண்டையோடு கொண்டவருமான சிவனுக்கு நமஸ்காரம்.
16. பாஹி மாமுமாமனோஜ்ஞதேஹ தே நம:சிவாய
தேஹி மே வரம் ஸிதாத்ரிகேஹ தே நம:சிவாய |
மோஹி தர்ஷிகாமினீ ஸமூஹ தே நம:சிவாய
ஸ்வேஹிதப்ரஸன்ன காமதோஹ தே நம:சிவாய ||
உமையம்பிகைக்குகந்தவரே! என்னைக் காத்தருள வேண்டும். உமக்கு நமஸ்காரம், வெள்ளியங்கிரியில் வாழும் பரமனே!எனக்கு வரமளிக்க வேணும். உமக்கு நமஸ்காரம். பக்தர்களை நேசிப்பவரே!அவர்கள் விருப்பங்களை நிறைவேற்றுபவரே!உமக்கு நமஸ்காரம்.
17. மங்கலப்ரதாய கோதுரங்க தே நம:சிவாய
கங்கயா தரங்கிதோத்மாங்க தே நம:சிவாய |
ஸங்கரப்ரவ்ருத்தவைரிபங்க தே நம:சிவாய
அங்கராஜாரியே கரே குரங்க தே நம:சிவாய ||
மங்கலமளிக்கும் விருஷப வாகனரே!உமக்கு நமஸ்காரம். முடிமீது கங்கை அலைவீசும் பாங்கினரே!உமக்கு நமஸ்காரம். போருக்கு வந்து அரக்கரை அழிப்பவரே!உமக்கு நமஸ்காரம். மன்மதனின் எதிரியே!கையில் மான் கொண்டவரே!உமக்கு நமஸ்காரம்.
18. ஈஹிதக்ஷண ப்ரதான ஹேதவே நம:சிவாய
ஆஹிதாக்னிபாலகோக்ஷ கேதவே நம: சிவாய |
தேஹகாந்தி தூதரௌப்யதாதவே நம:சிவாய
கேஹது:கபுஞ்ஜதூமகேதவை நம: சிவாய ||
விரும்பிய மகிழ்ச்சியை கொடுப்பவருக்கும், யாகம் செய்தவரை காக்கும் விருஷபக் கொடியோனுக்கும், உடலழகால் வெள்ளிதாதுவை விரட்டியடிப்பவருக்கும் வீடு வாசல் போன்ற துன்பங்களைக் களைபவருக்கும் நமஸ்காரம்.
19. த்ர்யக்ஷதீனஸத் க்ருபாகடாக்ஷதே நம:சிவாய
தக்ஷஸப்த தந்து நாசதக்ஷதே நம: சிவாய
ருக்ஷராஜபானு பாவகாக்ஷதே நம: சிவாய
ரக்ஷமாம் ப்ரபன்னமாத்ரரக்ஷதே நம: சிவாய ||
முக்கண்ணரே, எளியோருக்கு க்ருபாகடாட்சம் அருள்பவரே உமக்கு நமஸ்காரம். தட்சனின் யாகம் சிதைக்க செய்த சிவனே!உமக்கு நமஸ்காரம். சந்திர-சூர்ய- அக்னியாகிய கண்கள் உடையவரே, சரணமடைந்தோரையே காப்பவரே சிவனே!உமக்கு நமஸ்காரம்.
20. ந்யங்குபாணயே சிவங்கராயதே நம:சிவாய
ஸங்கடாப்தி தீர்ண கிங்கராய தே நம: சிவாய
கங்கபீக்ஷிதாபயங்கராய தே நம: சிவாய
பங்கஜானனாய சங்கராய தே நம: சிவாய ||
மானைக் கையில் ஏந்தி உலகக்ஷேமத்தைச் செய்பவரும் சம்சார சமுத்ரத்தைக் கடந்த பக்தரையுடையவரும், யமனிடம் பயந்தவரை அபயமளித்து காப்பவரும், தாமரை மலரொத்த முகமுடையவருமான சிவனுக்கு நமஸ்காரம்.
21. கர்ம பாசநாச நீலகண்ட தே நம:சிவாய
சர்மதாய வர்ய பஸ்ம கண்ட தே நம:சிவாய |
நிர்மமர்ஷிஸேவிதோபகண்ட தே நம: சிவாய
குர்மஹே நதீர்நமத்விகுண்ட தே நம: சிவாய ||
கர்மாக்களின் தொடரையழிக்கும் நீலகண்டருக்கு நமஸ்காரம். க்ஷேமத்தைக் கொடுக்கும் பஸ்மம் பூசிய கழுத்தையுடையவரும், பகைவர் கூட பணிந்து போற்றப்படுபவருமான சிவனுக்கு நமஸ்காரம்.
22. விஷ்டபாதியாய நம்ரவிஷ்ணவே நம:சிவாய
சிஷ்ட விப்ரஹ்ருத் குஹாசரிஷ்ணவே நம: சிவாய |
இஷ்டவஸ்து நித்யதுஷ்ட ஜிஷ்ணவே நம:சிவாய
கஷ்ட நாசனாய லோக ஜிஷ்ணவே நம: சிவாய ||
விஷ்ணு வணங்கும் உலகத்தலைவருக்கு நமஸ்காரம். சிஷ்டர்களான பக்தர்களின் ஹ்ரதுய குகையில் வசிப்பவரும் வேண்டிய பொருள் கிடைத்தால் எப்பொழுதும் மகிழ்ந்த அர்ஜுனனையுடையவரும், கஷ்டத்தைப் போக்கி உலகையாளும் சிவனுக்கு நமஸ்காரம்.
23. அப்ரமேய திவ்ய ஸுப்ரபாய தே நம:சிவாய
ஸத்ப்ரபன்ன ரக்ஷணஸ்வபாவதே நம: சிவாய |
ஸ்வப்ரகாச நிஸ்துலாநுபாவ த நம:சிவாய
விப்ரடிம்பதர்சிதாத்ரபாவ தே நம: சிவாய ||
அளவிலாத திவ்யதேஜஸ் உடையவரும், ஸத்ஜனங்களாகிய சரணாகதர்களை ரக்ஷிக்கும் ஸ்வபாவமுடையவரும் தானே ஒளிர்பவராயும், இணையில்லாத சக்தி வாய்ந்தவரும் பிராமண பிள்ளைக்கு மனமிரங்கியவருமான சிவனுக்கு நமஸ்காரம்.
24. ஸேவகாய மே ம்ருட ப்ரஸீத தே நம:சிவாய
பாவலப்யதாவகப்ரஸாத தே நம: சிவாய |
பாவகாக்ஷதேவ பூஜ்யபாத தே நம:சிவாய
தாவகாங்க்ரிபக்த தத்தமோத தே நம: சிவாய ||
உமது ஸேவகனாகிய எனக்கு அருள்புரிவீராக, சிவனே!உமக்கு நமஸ்காரம், உள்ளுணர்வில் பளிச்சிடும் அருளையுடையவரும், அக்னியை கண்ணாகக் கொண்டவரும், தேவர் போற்றும் திருவடியையுடையவரும் தனது காலடி சேர்ந்தாருக்கு மகிழ்ச்சி தருபவருமான சிவனுக்கு நமஸ்காரம்.
25. புக்தி முக்தி திவ்ய போக தாயினே நம:சிவாய
சக்தி கல்பிதப்ரபஞ்ச பாகினே நம: சிவாய |
பக்தஸங்கடா பஹாரயோகினே நம:சிவாய
யுக்தஸன்மன:ஸரோஜயோகினே நம:சிவாய ||
பக்தர்களுக்கு விஷயபோகத்தையும், முக்தியையும், திவ்யபோகங்களையும் அருளும் சிவனுக்கு நமஸ்காரம். தனது சக்தியினால் ஏற்படுத்திய ப்ரபஞ்சத்தில் ஒருவராயுமிருப்பவரும், பக்தர்களின் துயரை நீக்குவதில் ஈடுபட்டவரும், யோகிகளான நல்லோரின் மனதில் உறைபவருமான சிவனுக்கு நமஸ்காரம்.
26. அந்தகாந்தகாய பாபஹாரிணே நம:சிவாய
சந்தமாய தந்திச்ரமதாரிணே நம: சிவாய |
ஸந்ததாச்ரித வ்யதாவி தாரிணே நம:சிவாய
ஜந்து ஜாத நித்ய ஸெளக்ய தாரிணே நம: சிவாய ||
யமனுக்கும் யமனாயிருப்பவரும், பாபமகற்றுபவரும் மங்களகரமானவரும், யானைத் தோல் அணிந்தவரும், அண்டியவர்களின் துயரை நீக்குபவரும், பிராணி வர்கமனைத்திற்கும் சுகமளிப்பவருமாகிய சிவனுக்கு நமஸ்காரம்.
27. சூலினே நமோ நம:கபாலினே நம:சிவாய
பாலினே விரிஞ்சிமுண்ட மாலினே நம: சிவாய |
லீலினே விசேஷருண்ட மாலினே நம:சிவாய
சீலினே நம:ப்ரபுண்யசாலினே நம:சிவாய ||
சூலம், கபாலம் தரித்தவரும் உலகைக் காப்பவரும், பிரம்மனின் முண்டத்தை மாலையாக அணிபவரும், பல லீலைகள் செய்தவரும், விசேஷமுண்டமாலையை அணிபவரும் நல்ல குணமும் புண்யமும் உடையவருமான சிவனுக்கு நமஸ்காரம்.
சிவபஞ்சாக்ஷர முத்ரையுடன் அமைந்த நான்கு பாதங்களுள்ள சுலோகமாகிய மணியுடன் கட்டிய இந்த நக்ஷத்ர மாலையை கழுத்தில் அணிபவர் (பாராயணம் செய்பவர்) உமையுடன் கூடிய சிவனாகவே பரிணமிப்பர் (சிவஸாயுஜ்யம் எய்துவர்) .