ஸ்ரீ கணேசபுஜங்கம் 1 ரணத்க்ஷ§த்ரகண்டாநிநாதாபிராமம் சலத்தாண்தவோத்த்ண்டபத்மதாலம் லஸத்துந்திலாங்கோபரிவ்யாலஹாரம் கணாதீசமீசாநஸ¨நும் தமீடே

ஸ்ரீ கணேசபுஜங்கம்

1.ரணத்க்ஷ§த்ரகண்டாநிநாதாபிராமம்

சலத்தாண்தவோத்த்ண்டபத்மதாலம்

லஸத்துந்திலாங்கோபரிவ்யாலஹாரம்

கணாதீசமீசாநஸ¨நும் தமீடே

பரமேச்வரனின் மைந்தன் ஸ்ரீ கணபதியை துதிக்கிறேன். அவர் அருமையான சிறு மணிமாலையில் மணி ஒலிக்கே தாண்டவம் ஆடுகிறார். தாளம் ஒத்த காலடியின் ஒலி கேட்கிறது. பளிச்சென்று, தொந்தியின் மேல் மிளிரும் கண்ணைக் கவர்கிறது.

2. த்வநித்வம்ஸவீணாலயோல்லாஸிவக்த்ரம்

ஸ்புரச்சுண்டதண்டோல்லஸத்பீஜபூரம்

கலத்தர்பஸெளதந்த்யலோலாலிமாலம்

கணாதீசமீசாநஸ¨நும் தமீடே

மற்ற ஒளி நீங்கி, வீணை ஒளியிலேயே லயித்த அழகிய முகத்துடன், மாதுளைப் பழத்தை துதிக்கையில் வைத்துக்கொண்டு, காது ஒரம் பெருகும் மதஜலத்தின் வாஸனையால் தேனீக்களைக்கவரும் அவ் ஈசன் மகனைத்துதிக்கிறேன்.

3. ப்ரகாசஞ்ஜபாரக்த்தரத்நப்ரஸ¨ந

ப்ரவாலப்ரபாதாருணஜ்யோதிரேகம்

ப்ரலம்போதரம் வக்ரதுண்டைகதந்தம்

கணாதீசமீசாநஸ¨நும் தமீடே

அவர் செம்பருத்திப்பூ போன்ற சிவந்த ரத்னமாலை, பவழ மாலைகளால் காலைக்கதிரவனின் ஒளிப்பிழம்பியானவர், தொங்கிய வயிறும், வளைந்த துதிக்கையும், ஒற்றைக்கொம்பும் விளங்காநின்ற ஸ்ரீ கணேசபிரானைத் துதிக்கிறேன்.

4. விசித்ரஸ்புரத்ரத்நமாலாகிரீடம்

கிரீடோல்லஸச்சந்த்ரரேகாவிபூஷம்

விபூஷைகபூஷம் பவத்வம்ஸஹேதும்

கணாதீசமீசாநஸ¨நும் தமீடே

விசித்ரமாய் ஜ்வலிக்கும் இரத்னக்கற்கள் பதித்த க்ரீடம் சூடி, அந்த க்ரீடத்தின்மேல் சந்த்ரப்பிறையும் அணிந்து, உலக அழகுக்கெல்லாம் அழகாய், உலக வாழ்க்கை அறவே தீர்க்கும் கணபதியைத் துதிக்கிறேன்.

5. உதஞ்சத்புஜாவல்லரீத்ருச்யமூலோ

ச்சலத்ப்ரூலதாவிப்ரமப்ராஜதக்ஷம்

மருத்ஸுந்தரீசாமரை:,ஸேவ்யமாநம்

கணாதீச மீசாநஸ¨நும் தமீடே

துதிக்கை முனைப்பாகத் தோன்றும் இடத்தில் சின்னஞ்சிறு புருவக்கொடியழகுடன் மிளிரும் கண்கள் அவருக்கு அழகைக்கூட்டுகின்றன. தேவமங்கையர் சாமரம் iC சேவிக்கிறார்கள். அவ்விநாயகரை நான் துதிக்கிறேன்.

6. ஸ்புரநிஷ்டுராலோலபிங்காக்ஷிதாரம்

க்ருபாகோமலோதாரலீலாவதாரம்

கலாபிந்துகம் கீதயே யோகிவர்யை-

ர்கணாதீசமீசாநஸ¨நும் தமீடே

சற்று கடுமையாத் தோன்ற அசைவும் செவ்வரிக் கண்கள், கருணைக் கசிவுடன் தானே ஏற, ஏற்றமிகு தோற்றம், யோகிகள் மனளவில் இசைக்கும் கலை, பிந்து இவற்றினிடையில் காட்சி ஆகியவற்றுடன் விளங்கும் ஸ்ரீ கணேசனைத் துதிக்கிறேன்.

7. யமேகாக்ஷரம் நிர்மலம் நிர்விகல்பம்

குணாதீதமாநந்தமாகாரசூந்யம்

பரம் பாரமோங்காரமாம்நாயகர்பம்

வதந்தி ப்ரகல்பம் புராணம் தமீடே

ஒரெழுத்துக்குறியவராய், மாசற்றவராய், மருட்கையில்லாதவராய், வடிவங்கொள்ளாத ஆனந்தமாய், வேத விழுப்பொருள் ஒங்காரமாய் எவரை சான்றோர் கூறுகிறார்களோ அந்த பழம் பெரும் பெருமானைத் துதிக்கிறேன்.

8.சிதநந்தஸாந்த்ராய சாந்தாய துப்யம்

நமோ விச்வகர்த்ரே ச ஹர்த்ரே ச துப்யம்

நமோsநந்தலீலாய கைல்யபாஸே

நமோ விச்வபீஜ ப்ரஸீதேசஸ¨நோ

சாந்தமான சிதானந்தப் பெருக்கான உமக்கு நமஸ்காரம், உலகைத்தைத் தோற்றுவித்தல், மறையச் செய்தல் போன்ற லீலைகள் பல செய்யும் உமக்கு நமஸ்காரம். நீரே கைவல்யம். நீரே உலக முதல்வர். தாங்கள் அருள்வீராக.

9. இமம் ஸுஸ்தவம் ப்ராதருத்தாய ப்கத்யா

படேத்யஸ்து மர்த்யோ லபேத்ஸர்வகாமாந்

கணேசப்ரஸாதேந ஸித்யந்தி வாசோ

கணேசே விபௌ துர்லபம் கிம் ப்ரஸந்நே

காலையில் எழுந்தவுடன் இந்த அறிய ஸ்தியைப் படிப்பவர் எல்லோரும் எல்லாவிருப்பமும் கைகூடப் பெறுவர். கணேசனின் அருளால் பேச்சுவன்மை பெருகும். அவர் மகிழ்ந்துவிட்டால் அடைய முடியாதது ஏது?

ஸ்ரீ கணேசபுஜங்கம் ஸம்பூர்ணம்