அர்த்த நாரீச்வர ஸ்தோத்ரம் 1 சாம்பேய கௌரார்த சரீரகாயை கர்பூர கௌரார்த சரீரகாய I தம்மில்லகாயை ச ஜ்டாதராய நம:சிவாயை ச நம:சிவாய II தங்க நிறங்கொண்ட பக

அர்த்த நாரீச்வர ஸ்தோத்ரம்

1.சாம்பேய கௌரார்த சரீரகாயை

கர்பூர கௌரார்த சரீரகாய I

தம்மில்லகாயை ச ஜ்டாதராய

நம:சிவாயை ச நம:சிவாய II

தங்க நிறங்கொண்ட பகுதி உடலையுடையவளும், கர்பூர வெண்ணிறமான பகுதி சரீரத்தையுடையவரும், கொண்டயிட்ட கேசத்தையுடையவளும், ஜடை தரித்தவரும் ஆகிய சிவைக்கும் சிவனுக்கும் நமஸ்காரம்.

2.கஸ்தூரிகா குங்கும சர்சி தாயை

சிதாரஜ:புஞ்ஜ விசர்சிதாய I

க்ருதஸ்மராயை விக்ருதய்மராய

நம:சிவாயை ச நம:சிவாய II

கஸ்தூரி கலந்த குங்குமம் பூசியவளும், மன்மதனை இயங்குபவளுமான பார்வதிக்கு நமஸ்காரம். சிதைப்பொடி பூசியவரும், மன்மதனை வீணாக்கியவருமான சிவனுக்கு நமஸ்காரம்.

3.ஜணத் க்வணத் கங்கண நூபுராயை

பாதாப்ஜ ராஜத் பணி நூபுராய I

ஹேமாங்கதாயை புஜகாங்கதாய

நம:சிவாயை ச நம:சிவாய II

பார்வதீ தனது கையில் தங்கத் தோல்வளையும், காலில் கங்கணமும், சதங்கையும் அணிந்துள்ளாள் அவை கிலுங்கி ஒசையெழுப்புகின்றன. பரமேச்வரனோ திருவடிகளில் நாககாற்சதங்கையும், தோள்வளையும் அணிந்துள்ளார். அவ்விருவருக்கும் நமஸ்காரம்.

4.விசால நீலோத்பல லோசனாயை

விகாஸி பங்கேருஹ லோசனாய I

ஸமேக்ஷனாயை விஷமேக்ஷணாய

நம:சிவாயை ச நம:சிவாய II

இரட்டைப் படையில் மலர்ந்த கரு நெய்தல் பூ போன்ற கண்களையுடையவள் பார்வதீ. ஒற்றைப்படையில் மலர்ந்த தாமர மலரொத்த கண்களையுடையவர் பாரமேச்வரன். இவ்விருவருக்கும் நமஸ்காரம்.

5.மந்தார மாலா கலிதாலகாயை

கபால மாலாங்கித கந்தராய I

திவ்யாம்பராயை ச திகம்பராய

நம:சிவாயை ச நம:சிவாய II

மிக நேர்த்தியான பட்டும், மந்தார மாலையும் அணிந்து காட்சி தருகிறாள் பார்வதீ. திகம்பரனாயும், கழுத்தில் கபால மாலையணிந்தும் காட்சி தருகிறார் பரமேச்வரன். மங்கள கரமான இந்த தம்பதியருக்கு நமஸ்காரம்.

6.அம்போதர ச்யாமல குந்தலாயை

தடித் ப்ரபா தாம்ரஜடாதராய I

நிரீச்வராயை நிகலேச்வராய

நம:சிவாயை ச நம:சிவாய II

அகிலாண்டிசேவரியாக, நீருண்ட மேகமெனக் கரிய குந்தகக் தோகையுடன் பார்வதியும், அகிலாண்டகோடி பிரம்ம நாயகராய, மின்னலொளி போன்ற ஜடையுடன் பரமேச்வரனும் விளங்குகின்றார். அவ்விருவருக்கும் நமஸ்காரம்.

7.ப்ரபஞ்ச ஸ்ருஷ்ட்யுன்முக லாஸ்ய காயை

ஸமஸ்தஸம் ஹாரக தாண்டவாய I

ஜகத்ஜநன்யை ஜகதேகபித்ரே

நம:சிவாயை ச நம:சிவாய II

உலகப் படைப்பையே நோக்கங்கொண்டு நடனம் புரிகிறாள் உலக மாதா பார்வதீ, உலகத் தந்தையாக, பிறிதொருகாலம், உலக முடிவையாக்கும் தாண்டவம் புரிகிறார் பரமேச்வரன். அவ்விருவருக்கும் நமஸ்காரம்.

8.ப்ரதீப்த ரத்னோஜ்வல குண்டலாயை

ஸ்புரன் மஹாபந்நக பூஷணாய I

சிவான்விதாயை ச சிவான்விதாய

நம:சிவாயை ச நம:சிவாய II

ஒளிமிக்க வைரங்கள் பதித்த குண்டலத்துடன் மங்களமாய் பார்வதீயும், மிளிரும் நாகபூஷணமணிந்து மங்கள ஸ்வரூபியாய் சிவனும் காட்சி தர நான் அவர்களை நமஸ்கரிக்கிறேன்.

9.ஏதத்படேத் அஷ்டக மிஷ்டதம் யோ

பக்த்யா ஸ மான்யோ புவி தீர்கஜீவீ I

ப்ராப்னோதி ஸெளபாக்ய மனந்தகாலம்

பூயாத் ஸதா தஸ்ய ஸமஸ்த ஸித்தி: II

விருப்பங்களை நிறைவேற்றும் இவ் எட்டு ஸ்லோகங்களை பக்தியுடன் படிப்பவர் பூவுலகில் மதிப்பிற்குறியவராய் நீண்ட ஆயுள் பெற்று எல்லா ஸெளபாக்கியங்களையும் பெற்றுய்வர்.

அர்த்த நாரீச்வர ஸ்தோத்ரம் முற்றிற்று.