1
தேவராஜஸேவ்யமான பாவனாங்க்ரிபங்கஜம்
வ்யாலயஜ்ஞஸூத்ரமிந்து சேகரம் க்ருபாகரம் I
நாரதாதி யோகிப்ருந்த வந்திதம் திகம்பரம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே II
வ்யாலயஜ்ஞஸூத்ரமிந்து சேகரம் க்ருபாகரம் I
நாரதாதி யோகிப்ருந்த வந்திதம் திகம்பரம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே II
பொருள்: இந்திரன் சேவிக்கும் திருவடிகளையுடையவளும், சர்பயஜ்ஞோபவீதமும் சந்திரனையும் தரித்து அருள்பாலிப்பவரும், நாரதர் முதலிய யோகியரால் வணங்கப்பட்டவரும், திகம்பரருமான காசிநகரத்தை பாலித்தருளும் காலபைரவரை சேவிக்கிறேன்
2
பானுகோடி பாஸ்வரம் பாவாப்திதாரகம் பரம்
நீலகண்ட மீப்ஸிதார்த்த தாயகம் த்ரிலோசனம் I
கால காலமம்புஜாக்ஷ மஸ்த சூன்ய மக்ஷரம்
காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே II
நீலகண்ட மீப்ஸிதார்த்த தாயகம் த்ரிலோசனம் I
கால காலமம்புஜாக்ஷ மஸ்த சூன்ய மக்ஷரம்
காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே II
பொருள்: காசீபுரத்து காவல் தெய்வமான காலபைரவரை சேவிக்கிறேன். அவர் பல்லாயிரம் சூர்யர்கள் போல் பிரகாசிப்பவர். சம்ஸாரக் கடலிலிருந்து கடத்தேறுவிப்பவர். நீலகண்டர், விரும்பியதை அருளிபவர், முக்கண்னர். காலகாலர், தாமரையத்த கண்ணினர். பரிபூரண - அக்ஷரமானவர்
3
சூலடங்கபாச தண்ட பாணிமாதி காரணம்
ச்யாமகாய மாதிதேவமக்ஷரம் நிராமயம் I
பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ர தாண்டவப்ரியம்
காசிகா புராதிநாத கால பைரவம் பஜே II
ச்யாமகாய மாதிதேவமக்ஷரம் நிராமயம் I
பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ர தாண்டவப்ரியம்
காசிகா புராதிநாத கால பைரவம் பஜே II
பொருள்: சூலம், உளி, பாசம், தண்டம் இவற்றை கையில் தரித்து, ஆதி காரணமாய், கருத்த மேனியராய், குறைவில்லாத அக்ஷரமாய், பயங்கர நெறிமுறைகள் கொண்ட ப்ரபுவாய், விசித்ரமான தாண்டவம் புரிபவராய்த் திகழும் காசீகாலபைரவரை சேவிக்கிறேன்
4
புக்திமுக்தி தாயகம் ப்ரசஸ்தசாரு விக்ரஹம்
பக்தவத்ஸலம் ஸ்திரம் ஸமஸ்தலோக விரக்ரஹம் I
நிக்வணன் மனோஜ்ஞ ஹேம கிங்கிணீ லஸத்கடிம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே II
பக்தவத்ஸலம் ஸ்திரம் ஸமஸ்தலோக விரக்ரஹம் I
நிக்வணன் மனோஜ்ஞ ஹேம கிங்கிணீ லஸத்கடிம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே II
பொருள்: காசீ க்ஷேத்ர காலபைரவர் போகம், மோக்ஷம் இரண்டையும் அருள்பவர். அழகிய உருவங்கொண்டவர், அடியாரிடத்தில் அன்பு பூண்டவர். உறுதியாய் ஸகல லோகமும் வடிவாய் அமைந்தவர். ஒலியெழுப்பும் தங்கமயமான அரைச் சதங்கையணிந்தவர். அவரை நான் சேவிக்கிறேன்
5
தர்மஸேதுபாலகம் த்வதர்மமார்க நாசகம்
கர்மபாசமோசகம் ஸுசர்மதாயகம் விபும் I
ஸ்வர்ணவர்ணகேசபாச சோபிதாங்கநிர்மலம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே II
கர்மபாசமோசகம் ஸுசர்மதாயகம் விபும் I
ஸ்வர்ணவர்ணகேசபாச சோபிதாங்கநிர்மலம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே II
பொருள்: தர்மமாகிய பாலத்தைப் பாதுகாப்பவர். அதர்ம வழியை ஒழிப்பவர். கர்ம பந்தமில்லையெனச் செய்பவர். க்ஷேமத்தையருள்பவர். எங்கும் இருப்பவர். தங்கமயமான கேசங்கள் கொண்டவர். தூய வடிவினாரான காசீ காலபைரவரை வழிபடுகிறேன்
6
ரத்னபாதுகா ப்ரபாபிராம பாதயுக்மகம்
நித்ய மத்விதீயமிஷ்ட தைவதம் நிரஞ்ஜனம் I
ம்ருத்யுதர்பநாசனம் கரால தம்ஷ்ட்ரபூஷணம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே II
நித்ய மத்விதீயமிஷ்ட தைவதம் நிரஞ்ஜனம் I
ம்ருத்யுதர்பநாசனம் கரால தம்ஷ்ட்ரபூஷணம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே II
பொருள்: வைரமிழைத்த பாதுகைகள் அணிந்திருப்பதால் மிகவும் அழகாயிருக்கின்றன. மேலும், அவர் நித்யமான இஷ்ட தெய்வம். இரண்டாகக் கொள்ளப்படாதவர், யமனின் கொட்டத்தையடக்கியவர். பயங்கர தெற்றிப் பற்கள் அவருக்கு அழகாயுள்ளன. அப்படிப்பட்ட, காசீ காலபைரவரை சேவிக்கிறேன்
7
அட்டஹாஸபின்ன பத்மஜாண்ட கோசஸந்ததிம்
த்ருஷ்டிபாத நஷ்ட பாபஜாலமுக்ரசாஸனம் I
அஷ்டஸித்தி தாயகம் கபால மாலிகா தரம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே II
த்ருஷ்டிபாத நஷ்ட பாபஜாலமுக்ரசாஸனம் I
அஷ்டஸித்தி தாயகம் கபால மாலிகா தரம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே II
பொருள்: அட்டஹாஸம் செய்து பிரம்மனின் அண்ட கோசகூட்டை யுடைத்தவரும், பார்த்த மாத்திரத்தில் பாபங்களையழிப்பவரும், பயங்கரமான கட்டளைகளை யுடையவரும், கபால மாலையணிந்து அஷ்டசித்திகளை வழங்கி வரும் காசீ காலபைரவரை சேவிக்கிறேன்
8
பூதஸங்கநாயகம் விசால கீர்த்திதாயகம்
காசிவாஸிலோக புண்யபாப சோதகம் விபும் I
நீதிமார்ககோவிதம் புராதநம் ஜகத்பதிம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே II
காசிவாஸிலோக புண்யபாப சோதகம் விபும் I
நீதிமார்ககோவிதம் புராதநம் ஜகத்பதிம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே II
பொருள்: பூதகணங்களுக்கு அவர் நாயகர். பரந்த கீர்த்தி தருபவர். காசியில் வாழும் மக்களின் புண்யபாபங்களை ஆராய்பவர். எங்குமிருப்பவர். நீதிமார்க்கம் தெரிந்தவர். பழமையான உலகத்தலைவர். இவ்வாரான காசி கால பைரவரை சேவிக்கிறேன்
9
காலபைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம்
ஜ்யானமுக்திஸாதகம் விசித்ரபுண்யவர்த்தனம் I
சோகமோஹ லோபதைன்யகோப தாப நாசனம்
தே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரி ஸந்ந்திம்த்ருவம் II
ஜ்யானமுக்திஸாதகம் விசித்ரபுண்யவர்த்தனம் I
சோகமோஹ லோபதைன்யகோப தாப நாசனம்
தே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரி ஸந்ந்திம்த்ருவம் II
பொருள்: அழகான இந்த கால பைரவாஷ்டகத்தைப் படிப்பவர், ஞானம், முக்தியுடன் பற்பல புண்யங்களையும் அடைவர். துக்கம், மோஹம், லோபம், ஏழ்மை, கோபம் தாபம் நீங்கி கால பைரவர் ஸந்நிதியை நிச்சயம் அடைவர்