1.த்வத்ப்ரபுஜீவப்ரியமிச்சஸி சேத் நரஹரிபூஜாம் குருஸததம்
ப்ரதிபிம்பாலங்க்ருதித்ருதி குசலோ பிம்பாலங்க்ருதி மாதநுதே !
சேதோப்ருங்க ப்ரமஸி வ்ருதா பவமருபூமௌ விரஸாயாம்
பஜ பஜ லக்ஷ்மீ நரஸிம்ஹாநக பதஸரஸிஜ மகரந்தம் !!
ஹே மதனாகிய தேன்வண்டே!ரஸமேதும் இல்லாத உலகியல் பாலைவனத்தில் ஏன் வீணாக அலைகிறாய்?உனது நாயகனுக்கு அன்பு செலுத்த விரும்பினால் லக்ஷ்மீ நரஸிம்ஹனை பூஜை செய். நிழலுக்கு அழகு வேண்டுமானால் நிஜத்திற்கு அழகை கூட்ட வேண்டுமல்லவா?உடனே c ஸ்ரீலக்ஷ்மீ நரஸிம்மனுடைய திருவடித்தாமரையிலுள்ள மகரந்தத்தை நாடி ஸேவை செய்!
2.சக்தௌ ரஜதப்ரதிமா ஜாதா கடகாத்யர்த்தமர்தா சேத்
து:கமயீ தே ஸம்ஸ்ருதிரேஷா நிர்வ்ருதிதான நிபுணா ஸ்யாத் !
சேதோ ப்ருங்க ப்ரமஸி வ்ருதா பவமருபூமௌ விரஸாயாம்
பஜ பஜ லக்ஷ்மீ நரஸிம்ஹாநக பதஸரஸிஜ மகரந்தம் !!
ஹே மதனாகிய தேன்வண்டே!எண்ணிப்பார்-முத்துச் சிப்பியல்லவா வெள்ளியாகத் தோன்றுகிறது. அது எப்படி வளை முதலியவற்றைச் செய்ய தகுதி பெற்றதாகும்?நீ வீணாக ஸம்ஸார மரு பூமியில் அலைகிறாய்!ஸ்ரீ லக்ஷ்மீ நரஸிம்ஹனின் திருவடித்தாமரையிலுள்ள மகரந்தத்தை நாடுவாயாக!
3.ஆக்ருதிஸாம்யாத் சால்மலிகுஸுமே ஸ்தல நளினத்வப்ரம மகரோ:
கந்தரஸாவிஹ கிமு வித்யதே விபலம் ப்ராம்யஸி ப்ருச விரஸேரஸ்மின்!
சேதோப்ருங்க ப்ரமஸி வ்ருதா பவமருபூமௌ விரஸாயாம்
பஜ பஜ லக்ஷ்மீ நரஸிம்ஹாநக பதஸரஸிஜ மகரந்தம் !!
ஹே மனதாகிய தேன்வண்டே!வெளித்தோற்றத்தால் பருத்தி மலரில் ரோஜாமலர் மயக்கம் கொள்கிறாயே!இதில் வாசனையோ, சுவையோ இருக்கிறதா?வீணாக அலைவதால் பயனென்ன?சம்ஸாரப் பாலைவனத்தில் வீணாக அலையாமல் ஸ்ரீலக்ஷ்மீ நரஸிம்ஹனின் திருவடித்தாமரை மகரந்தத்தை நாடிப் போயேன்!
4.ஸ்ரக்சந்தன வனிதாதீன் விஷயான் ஸுகதான் மத்வா தத்ரவிஹரஸே,
கந்தபலீஸத்ருசா நது தேsமீ போகானந்தரது:கக்ருத:ஸ்யு: !
சேதோப்ருங்க ப்ரமஸிவ்ருதா பவமருபூமௌ விரஸாயாம்
பஜ பஜ லக்ஷ்மீ நரஸிம்ஹாநக பதஸரஸிஜ மகரந்தம் !!
ஹே மனமாகிய வண்டே! புஷ்பமாலை, சந்தனம் பெண்கள் முதலிய உலகியல் விஷயங்களை ஸுகம் கொடுப்பவையாக நினைத்து அவற்றை மகிழ்ந்து நாடுகிறாயே அவை பிரியங்கு கொடி போல் முதலில் சுகத்தை கொடுப்பவைபோல் இருந்து பின் துன்பத்தை விளைவிக்குமே!சுவையற்ற ஸம்ஸாரப் பாலைவனத்தில் வீணாக சுற்றியலைக்கிறாயே ஸ்ரீலக்ஷ்மி நரஸிம்ஹனின் திருவடித்தாமரையை நாடிவிடு!
5.தவ ஹிதமேகம் வசனம் வக்ஷ்யே ச்ருணு ஸுக காமோ யதி ஸததம்,
ஸ்வப்னே த்ருஷ்டம் ஸகலம் U ம்ருஷா ஜாக்ரதி ச ஸ்மர தத்வதிதி!
சேதோப்ருங்க ப்ரமஸி வ்ருதா பவமருபூமௌ விரஸாயாம்
பஜ பஜ லக்ஷ்மீ நரஸிம்ஹாநக பதஸரஸிஜ மகரந்தம் !!
ஹே மனமாகிய வண்டே!உனக்கு நன்மை பயக்கக்கூடிய ஒரு செய்தியைச் சொல்லப் போகிறேன் கேள்!நீ எப்பொழுதும் சுகத்தை விரும்புகிறாயல்லவா?ஸ்வப்னத்தில் கண்டதெல்லாம் பொய் என்பது தெரியுமே. அதுபோல் ஜாக்ரத் அவஸ்தையிலும் காணும் காட்சிகள் பொய்யானவையே. விரஸமான ஸம் ஸாரமாகிய பாலைவனத்தில் திரிந்தது போதும். ஸ்ரீலக்ஷ்மீ நமஸிம்ஹனது திருவடித்தாமரையை நாடி மகிழ்வாயே!
லக்ஷ்மீநரஸிம்ஹ பஞ்சரத்னம் முற்றிற்று.