ஜகந் நாதாஷ்டகம் 1 கதாசித் காலிந்தீதட விபினஸங்கீதக வரோ முதா கோபீ நாரீ வதன கமலாஸ்வாத மதுப: I ரமா சம்பு ப்ரஹ்மாமரபதி கணேசார்சிதபதோ ஜகந்நாத:ஸ்வாமீ நயனப

ஜகந் நாதாஷ்டகம்

1.கதாசித் காலிந்தீதட விபினஸங்கீதக வரோ

முதா கோபீ நாரீ வதன கமலாஸ்வாத மதுப: I

ரமா சம்பு ப்ரஹ்மாமரபதி கணேசார்சிதபதோ

ஜகந்நாத:ஸ்வாமீ நயனபதகாமீ பவது மே II

ஒரு சமயம் யமுனையாற்றின் கரையில் காட்டில் ரீங்கார கானம் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் கோபியாஸ்திரீகளின் முக கமலங்களை மொய்க்கும் வண்டாக இருந்தவர். லக்ஷ்மி, சிவன், பிரம்மா, இந்திரன், கணபதி ஆகியோர் சேவைகளை ஏற்கும் ஜகந்நாதஸ்வாமி என் கண்முன்னே தோன்றட்டுமே!

2.புஜேஸவ்யே வேணும் சிரஸி சிகிபிஞ்சம் கடிதடே

துகூலம் நேத்ராந்தே ஸ்ஹசரகடாக்ஷம் ச விதத் I

ஸதா ஷ்ரிமந் ப்ருந்தாவனவஸதி லீலா பரிசயோ

ஜகந்நாத:ஸ்வாமீ நயனபதகாமீ பவது மே II

தன் இடது கையில் புல்லாங்குழலும், தலையில் மயில் தோகையும், இடுப்பில் பீதாம்பரமும், கண்களில் கடாக்ஷமும் வைத்துக்கொண்டு எப்பொழுதும் ப்ருந்தாவனத்தில் வாழும் பாங்குடன் விளங்கும் ஜகந்நாதஸ்வாமி என் கண் முன்னே தோன்ற வேணுமே.

3.மஹாம்போதேஸ்தீரே கனகருசிரே நாலசிகரே

வஸன் ப்ராஸா தாந்த:ஸஹஜபலபத்ரேண பலிநாமி

ஸுபத்ராமத்யஸ்த:ஸகலஸுரஸேவாவஸரதோ

ஜகந்நாத:ஸ்வாமீ நயனபதகாமீ பவது மே II

பெருங்கடற்கரையில் நீலஒடுவேய்ந்த தங்கமயமான மாளிகையினுள் தன்துஸஹோதரர் பலராமுடன், ஸுபத்ரையின் பக்கத்தில் தேவர்கள் வழிபட வாய்ப்பளிக்கும் ஜகந்நாத ஸ்வாமி என் கண்முன்னே தோன்றட்டுமே!

4.க்ருபாபாராவார:ஸஜலஜலதச்ரேணி ருசிரோ

ரமாவாணீ ஸோமஸ்புர தமல பத்மோத்பவ முகை: I

ஸுரேந்த்ரை:ஆராத்ய:ச்ருதிகண சிகா கீதசரிதோ

ஜகந்நாத:ஸ்வாமீ நயனபதகாமீ பவது மே II

கருணைக்கடல், அவர், நீருண்ட மேகம் போன்ற அழகுடையவர், லக்ஷ்மி, ஸரஸ்வதி, சந்திரன் பிரம்மா முதலிய தேவர்கள் வழிபட, உபநிஷதங்கள் போற்றப்பாடும் சரிதையுடையவராத்திகழும் ஜகந்நாதஸ்வாமி என் கண் முன்னே தோற்றட்டுமே!

5.ரதாருடோ கச்சன் பதி மிலித பூதேவ படலை:

ஸதுதிப்ராதுர்பாவம் ப்ரதிபதமுபாகர்ண்ய ஸதய: I

தயாஸிந்து:பந்து:ஸகல ஜகதாம் ஸிந்துஸுதயா

ஜகந்நாத:ஸ்வாமீ நயனபதகாமீ பவது மே II

ரதத்திலேறி iF வலம் வரும்போது, வழியில் கூடிய பிராமணர்கள் பாடும் ஸ்தோத்திரப்பாடலை ஒவ்வொரு அடியிலும் கேட்டு பரிவுகொள்ளும் கருணைக்கடலாய், ஸகல உலகிற்கும் லக்ஷ்மியுடன் பந்து வாய்த்திகழும் ஜகந்நாதஸ்வாமி என் கண்முன்னே தோன்றட்டுமே.

6.பரப்ரஹ்மாபீட:குவலய தலோத்புல்ல நயனோ

நிவாஸீ நீலாத்ரௌ நிஹிதசரணோsனதசிரஸி I

ரஸானந்தோ ராதா ஸரஸவபுராலிங்கனஸுகோ

ஜகந்நாத:ஸ்வாமீ நயனபதகாமீ பவது மே II

பரப்ரஹ்மமேயான முடியழகையுடையவரும், கருநெய்தல் போன்ற மலர்ந்த கண்களையுடையவரும், நீலமலையில் தங்கியிருப்பவரும், ஆதிசேஷன் தலையில் கால்வைத்திருப்பவரும், ரஸானந்தம் மேலிட்டவரும், ராதையின் ஆலிங்கனத்தால் சுகங்கொண்ட வருமான ஜகந்நாதஸ்வாமி என் கண்முன்னே தோன்றட்டும்.

7.ந வை ப்ரார்த்யம் ராஜ்யம் நச கனகதா போகவிபவே

ந யாசே ஷிஹம் ரம்யாம் நிகிலஜனகாம்யாம் வரவதூம் I

ஸதாகாலே காலே ப்ரமதபதினா கீதசரிதோ

ஜகந்நாத:ஸ்வாமீ நயனபதகாமீ பவது மே II

எனக்கு ராஜ்யம் வேண்டப்பட்டதன்று. அனுபவிக்கும் செல்வத்திலும் தங்கம் வேண்டேன். அழகிய அனைவரும் விரும்பும் படியான மணப்பெண்ணையும் வேண்டேன். அவ்வப்போது பரமேச்வரன் போற்றிப்பாடும் சரிதம் வாய்ந்த ஜகந்நாதஸ்வாமி என் கண்முன்னே தோன்றட்டும்!

8.ஹர த்வம் ஸம்ஸாரம் த்ருததரமஸாரம் ஸுரபதே

ஹர த்வம் பாபானாம் விததி மபராம் யாதவபதே I

அஹோ தீநாநாதம் நிஹிதமசலம் பாது மநிசம்

ஜகந்நாத:ஸ்வாமீ நயனபதகாமீ பவது மே II

ஹேதேவபதே!ஸாரமற்ற ஸம்ஸாரத்தை சீக்ரமே விலக்கிவிடு. ஹேயதுபதே!மற்றொறு பாபக்குவியலை விலக்கிவிடு. ஏழை எளியோரையும், அருகில் உள்ள நீலமலையையும் அனவரதமும் காக்கவேண்டி ஜகந்நாதஸ்வாமி என் கண்முன்னே தோன்றட்டுமே!

ஜகந் நாதாஷ்டகம் முற்றிற்று.