நர்மதாஷ்டகம் 1 ஸபிந்து ஸிந்து ஸுஸ்கலத் தரங்கபங்க ரஞ்ஜிதம் த்விஷத்ஸு பாப ஜாத ஜாதகாரிவாரிஸம்யுதம் I க்ருதீயபாத பங்கஜம் நமாமிதேவி நர்மதே II தண்ணீர் துளிகளு

ஆதிசங்கரர் ஸ்தோத்திரங்கள்

நர்மதாஷ்டகம்

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் அருளியது

1
ஸபிந்து ஸிந்து ஸுஸ்கலத் தரங்கபங்க ரஞ்ஜிதம்
த்விஷத்ஸு பாப ஜாத ஜாதகாரிவாரிஸம்யுதம் I
க்ருதீயபாத பங்கஜம் நமாமிதேவி நர்மதே II
பொருள்: தண்ணீர் துளிகளுடன் கூடிய பிரவாஹத்தில் மோதும் அலைகளால் அழகியதும், பாபமூட்டைகள் பகைவரிடம் போய்ச்சேருமாறு செய்யும் தண்ணீரையுடையதுமான உனது திருவடியை, ஹே நர்மதே!நான் வணங்குகிறேன். நீயமதூதர்கள், காலபூதங்கள் ஆகியவற்றின் பீதியைப் போக்கும் கவசமெனத்திகழ்கிறாயே!
2
மஹாகபீர நீரபூர பாததூத பூதலம்
நமத்ஸமஸ்தபாத காரி தாரிதாபதாசலம் I
ஜகல்லயே மஹாபயே ம்ருகண்டுஸூனு ஹர்ம்யதே
த்வதீய பாத பங்கஜம் நமாமி நர்மதே II
பொருள்: மிகவும் ஆழமான இடத்தில் பிரவாஹம் விழுவதால் சிதறுண்டு போகிறது பூமி, வணங்கியவரின் பாபங்களையகற்றுவதும், ஆபத்துக்களாகிய மலையைப் பிளப்பதுமாய் விளங்குகிற உனது திருவடியை வணங்குகிறேன். ஹேநர்மதே, மிகவும் பயங்கரமான பிரலயத்தில் ம்ருகண்டு முனிவரின் குமாரருக்கு நல்ல இருப்பிடம் அளித்தாயன்றோ c!
3
கதம் ததைவ மே பயம் த்வதம் புவீக்ஷிதம் யதா
ம்ருகண்டுஸூனு சௌனகாஸுராரிஸேவிதம் ஸதா I
புனர்பவாப்தி ஜன்மஸம்பவாப்திது:கவர்மதே
த்வதீய பாதபங்கஜம் நமாமி தேவி நர்மதே II
பொருள்: ஹே நர்மதா தேவி!நீ மறுபிறப்பு முதலிய துன்பங்களுக்கு விலக்காக கவசம் அளிப்பவள். உனது திருவடித்தாமரை ம்ருகண்டு முனிவரின் குமாரன், சௌனகர், தேவர்கள் ஆகியோரால் தினமும் போற்றப்பட்டது. அதை நான் வணங்குகிறேன். உனது தண்ணீரைப் பார்த்தவுடனேயே எனக்கிருந்த பயம் நீங்கிவிட்டது
4
அலக்ஷ்யலக்ஷ கின்னராமராஸுராதி பூஜிதம்
ஸுலக்ஷ நீரதீர தீரபக்ஷி லக்ஷ கூஜிதம் I
வஸிஷ்ட சிஷ்ட பிப்பலாதி கர்தமாதிசர்மதே
த்வதீய பாதபங்கஜம் நமாமி தேவி நர்மதே II
பொருள்: கண்ணுக்குத் தெரியாதலக்ஷேபலக்ஷம் கின்னரர்கள், தேவர்கள், அஸுரர்கள் போற்றுவதும், தெளிந்து தெரியும் உனது நீரின் கரைக்கு வந்து தங்கும் பல பறவைகள் கூச்சல் கொண்டதுமான உனது திருவடிகளை வணங்குகிறேன். ஹே நர்மதாதேவி!நீ வசிஷ்டர், சிஷ்டரான பிப்பலர், கர்தமர் முதலியவர்களுக்கு க்ஷேமம் செய்தவள் அன்றோ!
5
ஸந்த்குமார நாசிகேத கச்யபாத்ரிஷட்பதை:
த்ருதம் ஸ்வகீயமானஸேஷு நாரதாதிஷட்பதை:மி
நவீந்து ரந்திதேவ தேவராஜ கர்ம சர்மதே
த்வதீயபாதபங்கஜம் நமாமி தேவிநர்மதோ.
பொருள்: ஸநத்குமாரர் நாசிகேதர், கச்யபர், நாரதர் முதலியோரால் மனதிற் கொள்ளப்பட்ட உனது திருவடித்தாமரையை, ஹே நர்மதாதேவி!வணங்குகிறேன். சூர்யன், சந்திரன், நந்திதேவன், இந்திரன் முதலியவருக்கு க்ஷேமம் தந்தவளன்றோ c!
6
அலக்ஷலக்ஷ லக்ஷ பாபலக்ஷ ஸாரஸா யுதம்
ததஸ்து ஜீவ ஜந்து தந்து புக்திமுக்திதாயகம் I
விரிஞ்சி விஷ்ணு சங்கரஸ்வகீயதாம் வர்மதே
த்வதீய பாதபங்கஜம் நமாமி தேவி நர்மதே II
பொருள்: கண்களுக்குப் புலப்படாத லக்ஷே£ப லக்ஷம் பாபங்களுக்கு நெகிழ்ச்சியுள்ள ஆயுதமானதும், பின், ஜீவஜந்துக்களுக்கு போகம், தருவதுமான உனது திருவடிகளைப் பணிகிறேன். ஹே நர்மதாதேவி!நீ பிரம்மா, விஷ்ணு, சங்கரர் ஆகியோரது இருப்பிடத்தை பாதுகாத்து வருபவளாயிற்றே!
7
அஹோத்ருதம் ஸ்வநம் ச்ருதம் மஹேசகேசஜாதடே
கிராதஸூத பாடவேஷு பண்டிதே சடே நடே I
துரந்த பாப தாபஹாரி ஸர்வ ஜந்து சர்மதே
த்வதீபபாதபங்கஜம் நமாமி தேவி நர்மதே II
பொருள்: கங்கைக்கரையில் நான் கண்டதும் கேட்பதும் உண்மைதான் போலும். c கிராதர்களுக்கும், ஸூதருக்கும், பாவத்திற்கும், பண்டிதருக்கும், பாமரருக்கும், எல்லையற்ற பாபங்களைப் போக்கி க்ஷேமத்தை நல்குபவள் நர்மதாதேவி. அவளது திருவடிகளை வணங்குகிறேன்
8
இதம் து நர்மதாஷ்டகம் த்ரிகாலமேவ யே ஸதா
படந்தி தே நிரந்தரம் நயந்தி துர்கதிம் கதா I
ஸுலப்ய தேஹ துர்லபம் மஹேசதாம கௌரவம்
புனர்பவா நரா நவை விலோகயந்திரௌரவம் II
பொருள்: இந்த நர்மதாஷ்டகத்தை மூன்று வேளையும் விடாமல் படிப்பவர் ஒருபோதும் கெட்டநிலையை அடையமாட்டார்கள். அன்றியும், இந்த உடலிலேயே கிடைத்தற்கரிய கடவுள் தன்மையைப் பெறுவார்கள். மறுபிறவி எடுத்து ரௌரவம் முதலிய நரகத்தை கண்ணாலும் காணமாட்டார்கள்