1.ஓ மித்யேதத்யஸ்ய புதைர்நாம க்ருஹீதம்
யத்பாஸேதம் பாதி ஸமஸ்தம் வியதாதி I
யஸ்யாஜ்ஞாத:ஸ்வஸ்வபதஸ்தா விதிமுக்யா:
தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரம் கலயாமி II
ப்ரணவத்தை எவர்பெயராக அறிவாளிகள் கூறுகிறார்களோ, ஆகாயம் முதலிய பூதங்கள் ஐந்தும் எவர் பிரசாதத்தால் பிரகாசிக்கின்றனவோ, பிரம்மன் முதலியோர் எவரது ஆணைக்கிசைந்து தத்தம் நிலையில் இயக்குகின்றனரோ அத்தகைய தக்ஷிணாமூர்த்தியை நேராகக்காண்கிறேன்.
2.நம் ராங்காணாம் பக்திமதாயம் ய:புருஷார்த்தான்
தத்வா க்ஷிப்ரம் ஹந்திச தத்னர்வ விபத்தீ: I
பாதாம் போஜாதஸ் தநிதாபஸ்ம்ருதி மீசம்
தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரம் கலயாமி II
தன்னை வணங்கிய பக்தர்களின் விருப்பத்திற்கிணங்க புருஷார்த்தங்களைக் கொடுத்து, அவர்களின் தொல்லைகள் பலவற்றையும் நீக்கி, தன் காலுக்கு அடியில் அபஸ்மாரத்தையும் அடக்கியுள்ளாரே அந்த தக்ஷினாமூர்த்தியை நேரில் காண்கிறேன்.
3.மோஹத்வஸ்த்யை வைணிகவையாஸகிமுக்யா:
ஸ்ம்வின்முத்ரா புஸ்தக வீணாக்ஷகுணான்யம் I
ஹஸ்தாம்போஜைர்பிப்ரத மாராதிதவந்த:
தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரம் கலயாமி II
நாரதர், சுகர் முதலிய முனிவர்கள் தமது மோஹம் தொலைய வேண்ட, சின்முத்திரை, புஸ்கம், வீணை, அக்ஷமாலை இவற்றை கைகளில் தரித்த எந்த கடவுளை ஆராதித்தனரோ அந்த தக்ஷிணாமூர்த்தியை நேரில் காண்கிறேன்.
4.பத்ராரூடம் பத்ரதம் ஆராதயித்ரூணாம்
பக்திச்ரத்தாபூர்வகமீசம் ப்ரணமந்தி I
ஆதித்யா யம் வாஞ்சித ஸித்யை கருணாப்திம்
தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரம் கலயாமி II
பத்பாஸனத்தில் வீற்றிருந்து, தன்னை வழிபடுவோருக்கு க்ஷேமம் நல்கும் அந்த தக்ஷிணா மூர்த்தியை நேரில்காண்கிறேன். ஆதித்யர்கள், தமது விருப்பம் நிறைவேற சிரத்தை பக்தியுடன் அவரை நித்யம் வணங்குகின்றனர். அவர் கருணைக்கடல் அன்றோ.
5.கர்பாந்த:ஸ்தா:ப்ராணிந:ஏதே பவபாச
சேதே தக்ஷம் நிஸ்சிதவந்த:சரணம்யம் I
ஆராத்யாங்க்ரிப்ரஸ்புரதம்போருஹயுக்மம்
தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிணாவக்த்ரம் கலயாமி II
கர்பத்தின் நடுவே இருக்கும் பிராணிகள் எல்லாம் சம்சாரக்கயிறு (தொடர்) அற்றுப்போக, எந்த ஒருவரை தக்கவராக எண்ணி சரணம் அடைகிறார்களோ அந்த போற்றுதலுக்குறிய திருவடித்தாமரையையுடைய தக்ஷிணாமூர்த்தியை நேரில் காண்கிறேன்.
6.வக்த்ரம் தன்யா:ஸம்ஸ்ருதி வார்தே ரதிமாத்ராத்
பீதா:ஸத்த:பூர்ண சசாங்கத்யுதி யஸ்ய I
ஸேவந்தேsத்யாஸீன மனந்தம் வட மூலம்
தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரம் கலயாமி II
மிக பயங்கரமான சம்சாரக் கடலினின்று பயந்தவர்களான ஒரு சில புண்யவான்கள் எந்த கடவுளின் பூரண சந்திர பிராகசமான முகத்தை ஸேவிக்கிறார்களோ, அத்தகைய தக்ஷிணாமூர்த்தியை நேராகவே காண்கிறேன். அவர் அந்தமில்லாத ஆலமரத்தினடியில் வீற்றிருக்கிறார்.
7.தேஜ:ஸ்தோமை ரங்கத ஸங்கட்டித பாஸ்வத்
மாணிக்யோத்தை:பாஸிதவிச்வோ ருசிரைர்ய:மி
தேஜோ மூர்திம் காநில தேஜ:ப்ரமுகாப்திம்
தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரம் கலயாமி II
எந்த ஒரு கடவுள் தோள்வனையில் பதித்த உயர்ந்த மாணிக்கக்கற்களின் சீரிய ஒளிகளான உலகையே பிரகாசிக்கச்செய்கிறாரோ, அத்தகைய தேஜோமூர்த்தியான தக்ஷிணாமூர்த்தியை நேரில் காண்கிறேன். அவர் பஞ்சபூதங்கள் ஒடுங்கும் இடமானவர்.
8.தத்யாஜ்யாதித்ரவ்ய கர்மாண்யகிலானி
த்யக்த்வா காங்ஷாம் கர்மபலேஷ்வத்ர கரோதி I
யத்ஜிஜ்ஞாஸாரூபபலார்தீ க்ஷிதிதேவ:
தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரம் கலயாமி II
பூஸுரர்கள் இவ்வுலகில் கர்மபலங்களில் விருப்பத்தை விட்டொழித்து எந்த ஒரு அகண்ட சிதா காரத்தையறிய விருப்பம் ஒன்றையே மனதிற்கொண்டு தயிர், நெய், முதலிய திரவ்யங்களைக்கொண்ட கர்மாக்களைச் செய்கிறார்களோ அந்த தக்ஷிணாமூர்த்தியை நேராகக் காண்கிறேன்.
9.க்ஷிப்ரம் லோகே யம் பஜமான:ப்ருது புண்ய:
ப்ரத்வஸ்தாதி:ப்ரோஜ்ஜிதஸம்ஸ்ருத்யகிலார்தி: I
ப்ரத்யக்பூதம் ப்ரஹ்ம பரம் ஸன் ரமதே ச
தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரம் கலயாமி II
எந்த ஒரு கடவுளை இந்த உலகில் சேவிப்பவன் மிகுந்த புண்யசாலியாய் மனக்கவலையன்றி, சம்ஸாரத்தொல்லைகளுமன்றி, நல்லவனாய் அபரோக்ஷப்ரஹ்மத்தை கண்டுகளிக்கிறானோ, அத்தகைய தக்ஷிணாமூர்த்தியை நேராகக்காண்கிறேன்.
10.ணாநேத்யேவம் யன்மனு மத்யஸ்தித வர்ணான்
பக்தா:காலே வர்ணக்ருஹீத்யை ப்ரஜபந்த: I
மோதந்தே ஸம்ப்ராப்த ஸமஸ்த ச்ருதி தந்த்ரா:
தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரம் கலயாமி II
எழுத்துக்களை உபச்சரிக்க வேண்டுமே என்பதற்காக, எந்த ஒரு கடவுளின் மந்திரத்தின் உள்ளடங்கிய'ண''ந'என்ற முத்துக்களை பக்தர்கள் ஜபிக்கிறார்களோ, அதன் மூலம் எல்லா வேதரஹஸ்யங்களையும் அறிந்து மகிழ்கின்றார்களோ, அத்தகைய தக்ஷிணாமூர்த்தியை நேரிடையாகக் காண்கிறேன்.
11.மூர்தி:சாயா நிர்ஜித மந்தாகினீ குந்த
ப்ராலேயாம் போராசி ஸுதா பூதிஸுரேபோ I
யஸ்யாப்ராபாஹாஸ விதௌ தக்ஷசிரோதிம:
தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரம் கலயாமி II
எந்த கடவுளுடைய வடிவம், கங்கை, குந்தபுஷ்பம், பனிக்கடல், அம்ருதம், விபூதி இவற்றின் காந்தியைவிட மேலானதோ, எவருடைய கழுத்து நீலமேகச்யாமலமோ அத்தகைய தக்ஷிணாமூர்த்தியை கண்ணாரக் காண்கிறேனே!
12.தப்தஸ்வர்ணச்சாய ஜடாஜூடகடாஹ
ப்ரோத்யத் வீசீவல்லி விராஜத்ஸுரஸிந்தும் I
நித்யம் சூக்ஷமம் நித்ய நிரஸ்தாகிலதெஷம்
தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரம் கலயாமி II
உருக்கிய தங்கம் போன்ற ஜடா முடியாகிய தொம்பையிலிருந்து வெளிவந்த அலைக்கொடிகள் தவழும் கங்கையை உடையவரும், நித்யமானவரும், ஸுக்ஷமமானவரும், கொஞ்சமும் தோஷமில்லாதவருமான தக்ஷிணாமூர்த்தியை நேரே காண்கிறேன்.
13.யேந ஜேஞாதேநேவ ஸமஸ்தம் விதிதம் ஸ்யாத்
யஸ்மாத் அன்யத் வஸ்து ஜகத்யாம சசச்ருங்கம் I
யம் ப்ராப்தாநாம் நாஸ்திபரம் ப்ராப்ய மனாதிம்
தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரம் கலயாமி II
எந்த ஒருவரைத் தெரிந்துகொண்டாலே மற்றெல்லாம் தெரிந்ததாகிவிடுமோ, எவரைத்தவிர உலகில் வேறு பொருள் இல்லையோ, எவரை அடைந்துவிட்டால் வேறெதுவும் அடைய வேண்டியதில்லையோ அத்தகைய அனாதியான தக்ஷிணாமூர்த்தியை இதோ காண்கிறேன்.
14.மத்தோ மரோ யஸ்ய லலாடாக்ஷிபவாக்னி
ஸ்பூர்ஜத்கீலப்ரோக்ஷித பஸ்மீக்ருத தேஹ: I
தத்பஸ்மாஸீத் யஸ்ய ஸுஜாத:படவாஸ:
தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரம் கலயாமி II
திமிருடன் வந்த மன்மதன் எந்த ஒரு கடவுளின் நெற்றிக்கண்களில் தோன்றிய அக்னியின் ஜ்வாலையால் பொசுக்கப்பட்டும், பஸ்பமாக்கப்பட்டும் போனானோ, அந்த பஸ்பமே எவருக்கு துணிக்கு இடும்வாசனை பொடியாக நன்கு அமைந்ததோ, அத்தகைய தக்ஷிணாமூர்த்தியை நேரே காண்கிறேன்.
15.ஹ்யம்போராசெள் ஸம்ஸ்ருதிரூபே லுடதாம்தத்
பாரம் கந்தும் யத்பதபக்தி:த்ருடநௌகா I
ஸர்வாராத்யம் ஸர்வாகமானந்தபயோதிம்
தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிண வக்த்ரம் தலமாமி II
ஸம்ஸாரக்கடலில் மூழ்கித் தவிப்பவர்களுக்கு அதிலிருந்து கரை சேர எந்த ஒரு கடவுளின் திருவடிப்பற்று ஒன்றே படாக அமையுமோ, அத்தகைய தக்ஷிணாமூர்த்தியை நேராகக்காண்கிறேன். அவர் அனைவராலும் போற்றப்பட்ட, அனைவருள்ளும் ஊடுருவிய ஆனந்தக் கடலாய் விளங்குகின்றார்.
16.மேதாவீ ஸ்யாத் இந்துவதம்ஸம் த்ருதவீணம்
கர்பூராபம் புஸ்தகஹஸ்தம் கமலாக்ஷம் I
சித்தே த்யாயன் யஸ்ய வபு:த்ராங் நிமிஷார்தம்
தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரம் கலயாமி II
சந்திரனை அணிந்தும், வீணையை தரித்தும், புஸ்தகத்தை கையில் கொண்டும் கர்பூரமேனியாய், கமலக்கண்ணராய் இருக்கும் எந்த ஒருவரை மனதில் தியானம் செய்வதால் மேதாவியாக ஆகிறானோ, எவருடைய உருவம் அரைநொடியாய் 'திடும்'எனத்தோன்றுமோ அத்தகைய தக்ஷிணாமூர்த்தியை காண்கிறேன்.
17.தாம்னாம் தாம ப்ரொடருசீனாம் பரமம் யத்
சூர்யாதீனாம் யஸ்ய ஸ ஹேது:ஜகதாதே: I
எதாவான் யோ யஸ்ய ந ஸர்வேச்வர மீடயம்
தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரம் கலயாமி II
ஒளிகளுக்கெல்லாம் ஒளி, அதாவது மிக அதிகமான பிரகாசமுள்ள சூர்யன் முதலியவர்க்கும் மேலானவர் அவர். உலகுக்கு ஆதியான அவருக்கு மூலக்காரணம் எதுவுமில்லை அளவுள்ள உலகம் முதலியவற்றிற்கு அவர் அளவுள்ளவரில்லை. அவர் சர்வேச்வரன், எல்லோராலும் போற்றப்படுபவர். அவர்தான் தக்ஷிணாமூர்த்தி.
18.ப்ரத்யாஹார - ப்ராணநிரோ தாதிஸமர்த்தை:
பக்தை:தாந்தை:ஸம்யத சித்தை:யதமானை: I
ஸ்வாத்மத்வேந ஜ்ஞாயத ஏவ த்வரயா ய:
தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரம் கலயாமி II
ப்ராணவாயுவை திருப்புவதிலும், அடக்குவதிலும் தேற்ச்சி பெற்ற பக்தர்கள், புலன்களையும், மனதையும் அடக்கி வெகுவாக ஸாதனையில் ஈடுபட்டவர்கள், எவரொருவரை தனதாத்மை தான் என்று அறிகிறார்களோ, அத்தகைய தக்ஷிணாமூர்த்தியை நேரே காண்கிறேன்.
19.ஞாம்சீபூதான் ப்ராணிந ஏதான் பலதாதா
சித்தாந்த:ஸ்த:ப்ரேரயதி:ஸ்வே ஸகலே:பி I
க்ருத்யே தேவ:ப்ராக்தநகர்மா நுஸர:ஸன்
தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரம் கலயாமி II
எல்லாம் அறிந்தவர் அவர். எல்லோருக்கும் தர்மப்பயனை அருளுபவளும் அவரே. அவர்தமது அம்சமாகவே உள்ள பிராணிகளை அவரவர் (வேலையில்) ஈடுபடத்தூண்டுபவரும் அவரே. ஆனால் முன்பிறவியிற் செய்தகர்மாவுக்கு ஏற்ப வழி நடத்துபவர். அத்தகைய தக்ஷிணாமூர்த்தியை இதோ நேரே காண்கிறேன்.
20.ப்ரஜ்ஞாமாத்ரம் ப்ராபிதஸம்விந்நிஜபக்தம்
ப்ராணாக்ஷ£தே:ப்ரேரயிதாரம் ப்ராணவார்த்தம் I
ப்ராஹ§:ப்ராஜ்ஞா:யம் விதிதானுச்ரவ தத்வா:
தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரம் கலயாமி II
வேதப்பொருள் அறிந்த பேரறிவாளிகள் எந்த ஒருவரை அறிவே யானவர் என்றும், தன்பக்தனுக்கு அறிவை அருளுபவரென்றும், ப்ராணன், இந்திரியங்கள் ஆகியவற்றை இயக்குகின்றவராயும், ப்ரணவப் பொருளாகவும் குறிப்பிடுகின்றார்களோ, அத்தகைய தக்ஷிணாமூர்த்தியை இதோ நமஸ்கரிக்கிறேன்.
21.யஸ்யாஜ்ஞாநாதேவ ந்ருணாம் ஸம்ஸ்ருதிபந்தோ
யஸ்ய ஜ்ஞானா தேவ விமோஷோ பவதீதி I
ஸ்பஷ்டம் ப்ருதே வேத சிரோ தேசிதமாத்யம்
தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரம் கலயாமி II
உபநிஷதங்கள், எவரொருவரை அறியாததால்தான் மனிதர்களுக்கு ஸம்ஸாரபந்தம் ஏற்படுகிறதென்றும், எவரை அறிந்துவிட்டால் மோக்ஷம் கிட்டிவிடுகிறதென்றும் தெளிவாகக் கூறுகின்றனவோ அத்தகைய ஆதிகுருவான தக்ஷிணாமூர்த்தியை கண்ணால் காண்கிறேன்.
22.சன்னேsவித்யா ரூபபடேனைவ ச விச்வம்
யத்ராத்யஸ்தம ஜீவபரேசத்வ மபீதம் I
பானோ:பானுஷ்வம்புவதஸ்தாகில பேதம்
தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரம் கலயாமி II
அஞ்ஞானமாகிய துணியால் மூடப்பட்டிருப்பதால் இந்த உலக மாயை தோன்றுகிறது. ஜீவன், பரமாத்மா என்றபேதமும் அப்போதுதான் தோன்றுகிறது. சூர்யர்களின் கிரணங்கள் தண்ணீரில் அனைத்து பேதங்களையும் இழந்து விடுகிறது. அத்தகைய தக்ஷிணாமூர்த்தியை காண்கிறேன்.
23.ஸ்வாபஸ்வப்னௌ ஜாக்ரெதவஸ்தாபி ந யத்ர
ப்ராண:சேத:ஸர்வ கதோ ய:ஸகலாத்மா I
கூடஸ்தோ ய:கேவலஸச்சித்ஸுகரூப:
தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரம் கலயாமி II
எவரிடம் ஜாக்ரத்-ஸ்வப்ன-ஸுஷ§ப்திகள் கிடையாதோ, எவர் ப்ராணனாயும், எனதாயும் எல்லாபிராணிகளிடத்தும் இருந்து ஸகலஸ்வரூபியாயும் இருக்கிறாரோ, எவர் சாஷியாகவும், ஸத் சித் ஆனந்த ரூபியாகவும் இருக்கிறாரோ அத்தகைய தக்ஷிணாமூர்த்தியை இதோ நான் காண்கிறேன்.
24.ஹாஹேத்யேவம் விஸ்மய மீயு: முனிமுக்யா:
ஜ்ஞாதே யஸ்மின ஸ்வாத்மதயானாத் மவிமோஹ:மி
ப்ரத்யக் பூதே ப்ரஹ்மணி யாத:கதமித்தம்
தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரம் கலயாமி II
எவரொருவரை தெரிந்து கொண்டால், ப்ரஹ்மம் தெளிவானபொழுது அனாத்ம விஷயமான மோஹம் சட்டெனப்போய்விட்டதே இதென்ன ஆச்சர்யம் என்று முனிவர்கள் வியப்படைகிறார்கள். அத்தகைய தக்ஷிணாமூர்த்தியை இதோ நான் காண்கிறேன்.
25.யைஷா ரம்யைர்மத்தமயூராபிதவிருத்தை:
ஆதௌ க்லுப்தா யன்மனு வர்ணை:முனிபங்கீ I
தாமேவைதாம் தக்ஷிணவக்த்ர:க்ருபயா ஸெள
ஊரீகுர்யாத் தேசிகஸம்ராட் பிரமாத்மா II
மத்தமயூரம் என்ற அழகிய விருத்தத்தில் முதலில் தக்ஷிணாமூர்த்தி மந்தரத்திலுள்ள எழுத்துக்களால் புனையப்பட்ட மந்திரம் போன்ற இந்த பத்யரசனையை தயவுசெய்து தக்ஷிணாமூர்த்தி குரு ஏற்றுக்கொள்ளட்டும்.
தக்ஷிணாமூர்த்தி வர்ணமாலாஸ்தோத்ரம் முற்றிற்று.