சிவானந்தலஹரீ 1 கலாப்யாம் சூடாலங்க்ருத ஸஸிகலாப்யாம் நிஜதப: - பலாப்யாம் பக்தேஷ§ப்ரகடித பலாப்யாம் பவதுவே! ஸிவாப்யாமஸ்தோக த்ரிபுவனஸிவாப்யாம் ஹ்ருதி புனர்

சிவானந்தலஹரீ

1.கலாப்யாம் சூடாலங்க்ருத ஸஸிகலாப்யாம் நிஜதப: -

பலாப்யாம் பக்தேஷ§ப்ரகடித பலாப்யாம் பவதுவே!

ஸிவாப்யாமஸ்தோக த்ரிபுவனஸிவாப்யாம் ஹ்ருதி புனர்

பவாப்யா மானந்தஸ்புரதனுபவாப்யாம் நதிரியம் !

கலாவடிவமானவர்களும், தலையில் சந்திரப் பிறையணிந்தவர்களும், தத்தம் தவப்பயனாயமைந்தவர்களும், பக்தர்களுக்கு வேண்டியதையருள்பவர்களும், மூவுலகுக்கும் மங்களகரமானவர்களும், ஹ்ருதயத்தில் தோன்றிய ஆனந்தானுபவமாக மிளிர்பவர்களுமான சிவன், சிவையாகிய இருவருக்கும் எனது நமஸ்காரம்.

2.கலந்தீஸம்போ!த்வச்சரிதஸரித:கில்பிஷரஜோ

தலந்தீ தீகுல்யாஸரணிஷ§ பதந்தீ விஜயதாம் !

திஸந்தீ ஸம்ஸார ப்ராமண பரிதாபோபஸமனம்

வஸந்தீ மச்சேதோ ஹ்ரதபுவி ஸிவானந்தலஹரீ !!

ஹேஸம்போ!உமது சரிதமாகிய ஆற்றினின்று தோன்றி, பாபப்புழுதியை நீக்கிய வண்ணம், என் மனமாகிய வாய்க்கால் வழியே பாய்ந்தோடுகின்ற சிவானந்த பிரவாஹம், சம்ஸாரத்தில் உழலுவதால் தடாகத்தில் நிலை கொள்வதாய் விளங்கட்டும்!

3.த்ரயீவேத்யம் ஹ்ருத்யம் த்ரிபுரஹரமாத்யம் த்ரிநயனம்

ஜடாபாரோதாரம் சலதுரகஹாரம் ம்ருகதரம் !

மஹாதேவம் தேவம் மயிஸதயபாவம் பஸுபதிம்

சிதாலம்பம் ஸாம்பம் ஸிவமதிவிடம்பம் ஹ்ருதிபஜே !

ஞானப்பிடியில் மட்டுமே அகப்படுபவரும், ஆடம்பரத்திற்கப்பால் அன்னையுடனுரைபவருமான சிவபெருமானை மனதில் ஸேவிக்கிறேன். அவர் மூன்று வேதங்களினுறை பொருளாய் தெளியத்தக்கவர். அழகியவர், த்ரிபுரம் எரித்தவர், முதல்வர் முக்கண்ணர், ஜடாபரம் தாங்கி சீரிய காட்சியர், தவழும் ஸர்ப்பஹாரம் அணிந்தவர் மானை கையில் ஏந்தியவர், மஹாதேவர், என்பால் இரக்கம் கொண்டவர், பசுபதியுமானவர்.

4.ஸஹஸ்ரம் வர்த்தந்தே ஜகதி விபுதா:க்ஷ§த்ரபலதா:

ந மன்யே ஸ்வப்னேவா ததனுஸரணம் தத்க்ருதபலம் !

ஹரிப்ரஹ்மாதீனாமபி நிகடபாஜாமஸுலபம்

சிரம் யாசே ஸம்போ!ஸிவ!தவ பதாம்போஜபஜனம் !

உலகில் சிறிய பலனையளிக்கும் ஆயிரமாயிரம் கடவுளர் உளர். அவர் அளிக்கும் பயனையோ கனவிலும் நினையேன். மிக நேருக்கமான ஹரி, பிரம்மன் ஆகியவர்களுக்கே கூட கைக்கு எட்டாத, ஹேஸம்போ, சிவ!உமது திருவடித்தாமரையை நெடுநாட்கள் சேவிக்கும் பேற்றையே வேண்டுகிறேன்.

5.ஸ்ம்ருதௌ ஸாஸ்த்ரே வைத்யே ஸகுனகவிதா கானபணிதௌ

புராணே மந்த்ரேவா ஸ்துதிநடன ஹாஸ்யேஷ்வசதுர: !

கதம் ராஜ்ஞாம் ப்ரீதிர் பவதி மயி கோஷிஹம் பஸுபதே

பஸும் மாம் ஸர்வஜ்ஞ ப்ரதித க்ருபயா பாலயவிபோ !!

ஸ்ம்ருதியிலோ, சாஸ்திரத்திலோ, வைத்யத்திலோ, சகுனம், கவிதை, பாட்டு, புராணம், மந்திரம், ஸ்துதி, நடனம், ஹாஸ்யம் முதலியவற்றிலோ ஆற்றல் படைத்திலேன். என்னிடம் தனவந்தர்களுக்கு எப்படி அன்பு தோன்றும்?நான் யார்?ஒரு பசுதானே!எல்லாம் அறிந்த பசுபதியாகிய தாங்கள் தான் பரிவுடன் என்னை பரிபாலிக்கவேணும்.

6.கடோவா ம்ருத்பிண் டோஷிப்யணுரபிச துமோஷிக்னிரசல:

படோவா தந்துர்வா பரிஹரதிகிம் கோரஸமநம் !

வ்ருதா கண்டக்ஷே£பம் வஹஸி தரஸா தர்க்கவசஸா

பதாம்போஜம் ஸம்போர்பஜ பரமஸெளக்யம் வ்ரஜஸுதீ: !!

ஹே அறிஞனே!உன்னை கேட்கிறன் - (தர்க்கத்தில் உதாரணமாகவரும்) குடமோ மண் உருண்டையோ, அணுவோ, புகையோ, தீயோ அல்லது மலையேதான் இருக்கட்டுமே, இன்னும், துணியோ, நூலோ தான் பயங்கர யமனை தூரத்தில் தள்ள முடியுமா?ஏன் இந்த கடித்த தர்க்கப்பேச்சு?சம்புவுன் திருவடியை சேவித்து பரம சௌக்யம் பெறலாமே!

7.மனஸ்தே பாதாப்ஜே நிவஸது வச:ஸ்தோத்ரபணிதௌ

கரௌ சாப்யர்ச்சாயாம் ஸ்ரீதிரபி கதாகர்ணனவிதௌ !

தவ த்யாநே புத்தி:நயனயுலகம் மூர்த்திவிபவே

பரக்ரந்தான் கைர்வா பரமஸிவே ஜானே பரமத: !

பிறர் இயற்றிய நூல்களை எங்கனம் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்?உமது திருவடித்தாமரையில் மனமும், ஸ்தோத்திரம் சொல்வதில் வாக்கும், பூஜை செய்வதில் கைகளும், உமது சரித்ரத்தை கேட்பதில் காதுகளும், தியானிப்பதில் புத்தியும், உமது வடிவழகில் கண்களும் பதியட்டுமே!

8.யதா புத்தி:ஸுக்தௌ ரஜதமிதி காசாஸ்மநி மணி:

ஜலே பைஷ்டே க்ஷீரம் பவதி ம்ருகத்ருஷ்ணாஸு ஸலிலம் !

ததா தேவ ப்ராந்த்யா பஜதி பவதன்யம் ஜடஜனோ

மஹாதேவேஸம் த்வாம் மனஸி ச ந மத்வா பஸுபதே !!

ஹேபசுபதே!பாமர ஜனங்கள் உம்மை மனதிற்கொள்ளாமல் உம்மில் வேறானவரை கடவுள் என மயக்கி சேவிக்கிறார்களோ!அந்தோ பாவம்!அது, சிப்பியை வெள்ளி எனவும், பாசி மணியை வைரக்கல் எனவும், மாவு ஜலத்தைப் பால் எனவும், கானல் நீரை நீர் எனவும் ப்ரமிப்பது போல் அல்லவா?

9.கபீரே காஸாரே விஸதி விஜனே கோரவிபினே

விஸாலே ஸைலே ச ப்ரமதிகுஸுமார்த்தம் ஜடமதி: !

ஸமர்ப்யைகம் சேத:ஸரஸிஜமுமாநாத பவதே

ஸுகேநாவஸ்தாதும் ஜன இஹ ந ஜானதி கிமஹோ !!

விவேகமில்லாதவர் புஷ்பம் பறிக்க தன்னந்தனியே பயங்கர காட்டிலும், ஆழமான குளத்திலும், பெரும் குன்றுகளிலும் புகுவர்;அந்தோ பரிதாபம். உமையருபாகனே!உமக்கு ஒரே ஒரு மனம் என்ற தாமரைப்பூவை ஸமர்ப்பித்து சுகம் பெறலாம் என்பது கூட ஏன் தெரியவில்லை?

10.நரத்வம் தேவத்வம் நகவனம்ருகத்வம் மஸகதா

பஸுத்வம் கீடத்வம் பவது விஹகத்வாதிஜனனம் !

ஸதாத்வத்பாதாப்ஜ ஸ்மரணபரமானந்தலஹரீ

விஹாராஸக்தம் சேத் ஹ்ருதயமிஹ கிம் தேந வபுஷா !!

ஹேப்ரபோ, உமது திருவடித்தாமரையை எக்கணமும் நினைத்துப் பெறும் பரமானந்த வெள்ளப்பெருக்கில் மூழ்கித் திளைக்கும் பற்று மட்டும் ஒருவருக்கு இருந்தால், உருவத் தோற்றம் எப்படி இருந்தாலென்ன?பிறப்பு முறையில் மனிதராகவோ, தேவராகவோ, மலைக்காட்டுமிருகமாகவோ, கொசுவாகவோ, பசுவாகவோ, பூச்சியாகவோ அல்லது பக்ஷியாக இருந்து விட்டுப் போகட்டுமே!

11. வடுர் வா கேஹீ வா யதிரபி ஜடீவா ததிதரோ

நரோ வா ய:கஸ்சித் பவது பவ!கிம்நேந பவதி? !

யதீயம் ஹ்ருத்பத்மம் யதி பவததீனம் பஸுபதே

ததீயஸ்த்வம் ஸம்போ பவஸி பவபாரம் ச வஹஸி !

நிலமை பற்றியும் கவலை வேண்டாம். பிரம்மசாரி, கிருஹத்தன், ஸந்நியாஸி, ஜடை தரித்தவர் இப்படி எந்த நிலையில் இருப்பினும் அதனால் ஆவதொன்றுமில்லை. பசுபதே!உனதடிமை என்ற எண்ணமிருந்தால், அவணடியாளாகவல்லவா தாங்கள் ஆகி அவர் குடும்பச் சுமையை தாங்குவீர்!

12.குஹாயாம் கேஹே வா பஹிரபிவநே வாத்ரிஸிகரே

ஜலே வா வஹ்நௌ வா வஸது வஸதே:கிம்வத பலம் !

ஸதா யஸ்யைவாந்த:கரணமபி ஸம்போ தவ பதே

ஸ்திதம் சேத் யோகோsஸெள ஸ ச பரமயோகீ ஸசஸுகீ !!

ஒருவன் வஸிக்கும் இடத்தின் மூலமும் பயனில்லை. குகையிலோ, வீட்டிலோ மலை உச்சியிலோ, தண்ணீரிலோ, தீயிலோ அவனிருக்கட்டும். அவன் மனம் மட்டும், ஹேஸம்போ!உமது காலடியை பற்றியிருந்தால் அதுவே யோகம், அவனே யோகீ, அவனே ஸகல சுகங்களையும் பெறுவான்.

13.அஸாரே ஸம்ஸாரே நிஜபஜனதூரே ஜடதியா

ப்ரமந்தம் மாமந்தம் பரமக்ருபயா பாதுமுசிதம் !

மதன்ய:கோ தீன ஸ்தவ க்ருபணரக்ஷ£திநிபுண:

த்வதன்ய:கோ வா மே த்ரிஜகதி ஸரண்ய:பஸுபதே !!

ஹேபசுபதே!உமது சேவையைப் புறக்கணித்து சாரமில்லாத சம்சாரத்தில் விவேகமின்றி சுற்றித்திரியும் கபோதியான என்னை நீர் காத்தருளும். உமக்கு என்னைத்தவிர வேறு எளியவன் எவன் கிடைக்கப்போகிறான்?நீரோ எளியோரைக் காப்பதில் மிகவும் தேர்ந்தவர். மூவுலகிலும் உம்மைத்தவிர சரணடைய எனக்கும் வெறொன்றுமில்லை.

14.ப்ரபுஸ்த்வம் தீனாநாம் கலு பரமபந்து:பசுபதே !

ப்ரமுக்யோsஹம் தேஷாமபி கிமுத பந்துத்வமநயோ: !

த்வயைவ க்ஷந்தவ்யா:ஸிவ மதபராதாஸ்ச ஸ்கலா:

ப்ரயத்னாத் கர்த்தவ்யம் மதவனமியம் பந்துஸரணி: !!

ஹே பசுபதே! ஏழை எளியோருக்குப் பங்காளனும் பிரபுவுமாயிருக்கிறீர். நானோ அவ்வேழைகளுக்கு முதன்மையானவன். என்னப் பொருத்தம் இருவருக்கும்!எனது தவறுகளை எல்லாம் மன்னித்து கவனமாக என்னைக்காக்க வேண்டும். உறவினர் பரிமாற்றம் இதுவே!

15.உபக்ஷ£ நோ சேத்கிம் ந ஹரஸி பவத் த்யாநவிமுகாம்

துராஸா பூயிஷ்டாம் விதிலிபிம் அஸக்தோ யதி பவான் !

ஸிரஸ்தத்வைதாத்ரம் நநகலுஸுவ்ருத்தம் பசுபதே

கதம்வா நிர்யத்னம் கரநகமுகேனைவ லுலிதம் !!

ஹேபசுபதே!வேண்டாம் என்ற எண்ணம் இல்லை என்றால் உமது தியானத்தில் பற்று கொள்ளாத, பல ஆசைகள் படர்ந்து மண்டிய என் தலை எழுத்தை ஏன் நீக்கவில்லை?உமக்கு இது முடியாததா?பின் எப்படி அந்த பிரம்மனின் அழகிய தலையை எளிதாக உமது நகமுனையாலேயே கிள்ளி எறிய முடிந்தது?

16.விரிஞ்சிர்தீர்க்காயுர்பவது பவதா தத்பரஸிர-

ஸ்சதுஷ்கம் ஸம்ரக்ஷ்யம் ஸகலு புவி தைன்யம் விலிகிதவான் !

விசார:கோ வாமாம் விஸதக்ருபயா பாதி ஸிவ தே

கடாக்ஷவ்யாபார:ஸ்வயமபி ச தீனாவனபர: !!

போகட்டும் பாவம் அந்த பிரம்மதேவன், நீடூழி வாழட்டும், அவனது மற்ற நான்கு தலைகளாவது காக்கப்பட வேண்டும். அவன்தான் உலகத்தோரின் தலையில் ஏழ்மையை எழுதினான் - என்றால் - கவலை வேண்டாம் - ஹேசிவ!உமது கடாக்ஷமே என்னை அக்கரையுடன் காக்கிறதே!தானும் தான் எளியோரை காப்பதில் அக்கரை கொண்டுள்ளீரே!

17.பலாத் வா புண்யானாம் மயி கருணயா வா த்வயி விபோ

ப்ரஸன்னேஷிபி ஸ்வாமின் பவதமல பாதாப்ஜ யுகலம் !

கதம் பஸ்யேயம் மாம் ஸ்தகயதி நம:ஸம்ப்ரமஜுஷாம்

நிலிம்பானாம் ச்ரேணிர்நிஜகனக மாணிக்ய மகுடை: !!

ஹேஸ்வாமின்!நான் செய்த புண்ணிய பலத்தாலோ, உமது கருணையாலோ, தாங்களே மனமிறங்கிய பின்னும், தங்களது மாசற்ற திருவடித்தாமரையை நான் காணமுடியாதபடி, காலில் விழுந்து வணங்கப் போட்டியிடும் இந்த தேவர் கூட்டம் தமது தங்கக் கிரீட வரிசையினால் திருவடியை மறைந்து விடுகிறதே!

18.த்வமேகோ லோகானாம் பரமபலதோ திவ்யபதவீம்

வஹந்தஸ்த்வன்மூலாம் புனரபி பஜந்தே ஹரிமுகா: !

கியத்வா தாக்ஷிண்யம் தவ ஸிவ மதாஸார ச கியதீ

கதா வா மத்ரக்ஷ£ம் வஹஸி கருணா பூரிதத்ருஸா !!

ஹேசிவ!உலகுக்கு நீர் ஒருவரே சிறந்த பயனை (மோக்ஷத்தை) கொடுப்பவர். திவ்யபதவியை பெற்று அனுபவித்து வரும் நாராயணன் முதலியோர் பின்னும் பின்னும் உமது மூலமாக அப்பதவியை அடைகிறார்கள். உமக்குத்தான் எவ்வளவு தாக்ஷிண்யம்?எனது ஆசைக்கோ எளவு இல்லை. எப்பொழுது தான் கருணையுடன் என்னை பாதுகாக்கப்போகிறீரோ?

19.துராஸாபூயிஷ்டே துரதிபக்ருஹத்வாரகடகே

துரந்தே ஸம்ஸாரே துரிதநிலயே துகமி

மதாயாசம் கிம் நவ்யபநஸி கஸ்யோபக்ருதயே

வதேயம் ப்ரீதிஸ்சேத் தவ ஸிவ க்ருதார்த்தா கலுவயம் II

கெட்ட பணக்காரன் வீட்டு வாசல் வரை கொண்டு போய் விடும் கெட்ட ஆசையும் பாபமும் துன்பமும் நிறைந்த இந்த உலக வாழ்க்கையில் எவரைக்காக்க வேண்டி என் துன்பத்தைப் போக்காமலிக்கிறீர் ஹே சிவனே! ஒன்று சொல்லி விடுகிறேன்- உமக்கு என்னிடம் அன்பு மட்டும் உண்டென்றால் போதும்:எங்கள் கார்யம் நிறைவறிவிடும்!

20.ஸதா மோஹாடவ்யாம் சரதி யுவதீனாம் குசகிரௌ

நடத்யாஸாஸாகாஸ்வடதி ஜடதி ஸ்வைரமபிக: !

கபாலின் பிக்ஷே£!மே ஹ்ருதய கபிமக்யந்த சபலம்

த்ருடம் பக்த்யா பத்வா சிவ!பவததீனம் குரு விபோ !!

மிகச்சபலமுள்ள ஹ்ருதயமாகிய குரங்கு எப்பொழுதும் மோஹம் காட்டில் அலைவதும், குமரிப்பெண்களின் மார்பகக் குன்றுகளில் குதித்துக்களிப்பதும், இஷ்டம்போல் ஆசைக்கிளைகளில் தாவி விளையாடுவதும் கண்டு கொண்டீரல்லவா?ஏ சிவபெருமானே!நீர் ஒரு கபாலியும், பிக்ஷ§வும் கூட, பக்தி என்ற கயிற்றால் இந்த குரங்கை கட்டிப்போட்டு உம் வசப்படுத்திக்கொள்ளலாமே!

21.த்ருதிஸ்தம்பாதாராம் த்ருடகுணநிபத்தாம் ஸகமனாம்

விசித்ராம் பத்மாட்யாம் ப்ரதி திவஸ ஸன்மார்க கடிதாம் !

ஸ்மராரே மச்சேத:ஸ்புடபடகுடீம் ப்ராப்ய விஸதாம்

ஜய ஸ்வாமின் சக்த்யாஸஹ ஸிவகணை:ஸேவித விபோ!!

ஸ்வாமின் சம்போ!நீர் சக்தியோடுகூட சிவகணங்களால் சேவிக்கப்பட்டவராய் எனது மனமாகிய துணிக்கூடாரத்தில் வசிக்கலாம். அக்கூடாரம் பலவர்ணமானது, தாமரைப்பூவடிவம் பொறிக்கப்பெற்றது;ஒவ்வொரு நாளும் நன்றாக அமைக்கப்பெற்றது. தைர்யம் என்ற தூண்கள் தாங்க, குணங்களாகிய கெட்டிக்கயிற்றால் கட்டப்பெற்றது. எங்கு வேண்டுமானாலும் சென்று அமைக்க வசதியானது.

22.ப்ரலோபாத்யை ரர்த்தாஹரணபரதந்த்ரோ தனிக்ருஹே

ப்ராவேஸோத்யுக்த:ஸன் ப்ரமதி பகுதா தஸ்கரபதே !

இம் சேதஸ்சோரம் கதமிஹஸஹே ஸங்கரவிபோ

தவாதீனம் க்ருத்வா மயி நிரபராதே குரு க்ருபாம் !!

ஹே சங்கர!தஸ்கரபதே!இந்த மனமாகிய திருடன் பேராசை முதலிய கெட்ட எண்ணங்களுடன் கூடி, பிறர் பொருளைப்பறிக்கும் நோக்கங் கொண்டுள்ளான். பணக்காரன் வீட்டில் நுழையவும் பலவாறு அலைகிறான். நான் இதை ஸஹிக்க முடியவில்லை. இதைக்கட்டுப் படுத்தி குற்றமற்ற என்னிடம் அருள்புரிய வேணும்.

23.கரோமித்வத்பூஜாம் ஸபதி ஸுகதோ மே பவ விபோ

விதித்வம் விஷ்ணுத்வம் திஸஸி கலு தஸ்யா பலமிதி !

புனஸ்ச த்வாம் த்ரஷ்டும் FM புவி வஹன் பக்ஷிம்ருகதாம்

அதிருஷ்ட்வா தத்கேதம் கதமிஹ ஸஹே ஸங்கரவிபோ !!

ஹேஸங்கர!விபுவே!நான் உமக்கு பூஜை செய்வேன். நீரும் வேண்டிய சுகங்களையளிப்பீர்!அப்பொழுது, பூஜைக்குப் பலனாக பிரமன் பதவியோ, விஷ்ணு பதவியோ தந்து விடுவீர்;நான் முன்போல் மறுபடியும் உமது அடிமுனிகாண வராஹமாகவோ, அன்னமாகவோ ஆகி மேலும் கீழும் போயும் காண முடியாமல் மனக்கஷ்டம் தோன்ற அதை எப்படி ஸஹிப்பேன்?

24.கதா வா கைலாஸே கனக மணிஸெளதே ஸஹ கணை:

வஸன் ஸம்போரக்ரேஸ்புட-கடித-மூர்த்தாஞ்ஜலி புட: !

விபோ ஸாம்ப ஸ்வாமின் பரமஸிவ பாஹீதி நிகதன்

விதாத்ரூணாம் கல்பான் க்ஷணமிவ விநேஷ்யாமி ஸுகத: !!

கைலாஸத்தில், தங்கம், வைரம் இவையாலான மாளிகையில் சிவகணங்களுடன் வஸித்துக்கொண்டு, பரமேச்வரன் எதிரில் தலைக்குமேல் கைகூப்பிய வண்ணம் ஸாம்பசிவனே!ஸ்வாமியே என்னைக் காப்பாற்று என்று பிரார்த்தித்துக்கொண்டு என்றைக்கு பிரம்ம கல்பங்களை ஒரு நொடிப் பொழுதாகக் கழிப்பேனோ?

25.ஸ்தவைர் ப்ரஹ்மாதீனாம் ஜய-ஜய-வசோபிர்நியமினாம்

கணானாம் கேலீபிர்மதகல மஹோக்ஷஸ்ய ககுதி !

ஸ்திதம் நீலக்ரீவம் த்ரிணயனம் உமாஸ்லிஷ்ட வபுஷம்

கதாவாபஸ்யேயம் கரத்ருத ம்ருகம் கண்ட பரஸும் !!

ஒரு பக்கம் பிரம்மன் முதலியோர் ஸ்துதிபாட, மற்றொரு பக்கம் முனிவர்கள் ஜய-ஜய என்று ஆர்ப்பரிக்க, இன்னொரு பக்கம் பிரமதகணங்கள் ஆடிப்பாட, வீறு கொண்ட விருஷபத்தின் திமில் மீது அமர்ந்திருக்கும் உம்மை-நீலகண்டனை, முக்கண்ணனை - உமையருபாகனை, மான்மழுயேந்தியவனை, எப்பொழுது காண்பேனோ?

26.கதா வா த்வாம் த்ருஷ்ட்வா கிரிஸ !தவ பவ்யாங்க்ரியுகலம்

க்ருஹீத்வா ஹஸ்தாப்யாம் ஸிரஸிநயனே வக்ஷஸிவஹன் !

ஸமாஸ்லிஷ்யாக்ராய ஸ்புடஜலஜ கந்தான் பரிமலான்

அலப்யாம் ப்ரஹ்மாத்யைர்முத மனுபவிஷ்யாமி ஹ்ருதயே !!

என்றைக்குத்தான் உம்மை நேரில் தர்சித்து, உமது சீர்ய திருவடித்தாமரையை கைகளால் பற்றி தலையிலும், கண்களிலும் மார்பிலும் அணைத்து பிரம்மன் முதலானோர்க்கும் கிடைக்காத அந்த ஆனந்தக்களிப்பையடைவேனோ?

27.கரஸ்தே ஹேமாத்ரௌ கிரிஸ நிகடஸ்தே தநபதௌ

க்ருஹஸ்தே ஸ்வர்பூஜாமர ஸுரபி சிந்தாமணிகணே !

ஸிரஸ்தே ஸீதாம்ஸெள சரண யுகலஸ்தேகிலஸிவே

கமர்த்தம் தாஸ்யேsஹம் பவது பவதர்த்தம் மம மன: !!

ஹேதேவ!மேருமலை உமது கையிலுள்ளது. குபேரன் அருகிலேயே உள்ளான். மற்றும் காமதேனு, சிந்தாமணி ஆகியவையும் உமது வீட்டிலேயே உள்ளன. அரிய சந்திரப்பிறையும் தலைமீது உள்ளது. இவ்வாறு மங்கலப் பொருளனைத்தும் காலடியில் இருக்க உம்மிடமில்லாத எதைத் தருவேன். எனது மனம் என்ற ஒன்றாவது உமக்காக நான் தரத்தக்கதாக இருக்கட்டுமே!

28.ஸாரூப்யம் தவ பூஜனே ஸிவ மஹாதேவேதி ஸங்கீர்த்தனே

ஸாமீப்யம் ஸிவபக்தி துர்ய ஜனதாஸாங்கத்ய ஸம்பாஷனே !

ஸாலோக்யம் ச சராசராத்மக தனுத்யானே பவானீபதே !

ஸாயுஜ்யம் மம ஸித்தமத்ரபவதி ஸ்ஸாமின் க்ருதார்த்தோ ஸ்ம்யஹம் !!

ஹேஸ்வாமின்!உம்மை பூஜிப்பதில் ஸாரூப்யம் என்ற முக்தி நிலையும், சிவ, மஹாதேவ என்று நாமஸங்கீர்த்தனம் செய்வதில் ஸாமீப்யமுக்தி நிலையும், சிவ பக்தியை தலை மேல் வைத்து கொண்டாடும் ஜனங்களுடன் கூடியிருப்பதிலும் பேசுவதிலும் ஸாலோக்ய முக்தி நிலையும், சராசர ப்ரபஞ்ச வடிவான உமது திருமேனித்யானத்தில் ஸாயுஜ்ய நிலையும் எனக்கு இங்கேயே கிடைத்து விடுவதால் நான் க்ருதார்த்தனானேன்.

29.த்வத்பாதாம்புஜ மார்ச்சயாமி பரமம்த்வாம் சிந்தயாம்யன்வஹம்

த்வாமீஸம் ஸரணம் வ்ரஜாமி வசதா த்வாமேவ யாசே வியோ !

வீக்ஷ£ம் மேதிஸ சாக்ஷ§ஷீம் ஸகருணாம் திவ்யைஸ்சிரம் ப்ரார்த்திதாம்

ஸம்போ லோக குரோ!மதீய மனஸ:ஸெளக்யோபதேஸம் குரு !!

ஹேலோக குரோ!ஸம்போ!உமது திருவடியை அர்ச்சிக்கிறேன். தினமும் உம்மையே த்யானிக்கிறேன். உம்மையே சரணடைகிறேன். வாய்விட்டு உம்மையே வேண்டுகிறேன். தேவர்களும் விரும்பி வேண்டுவதான கருணை ததும்பிய உமது கடாக்ஷம் தந்தருள்வீராக;எனது மனதுக்கு சௌக்யமளிப்பீராக !

30.வஸ்த்ரோத்தூதவிதௌ ஸஹஸ்ரகரதா புஷ்பார்சனே விஷ்ணுதா

கந்தே கந்தவஹாத்மதாsன்னபசனே பர்ஹிர்முகாத்யக்ஷதா !

பாத்ரே காஞ்சனகர்பதாஸ்தி மயி சேத் பாலேந்து சூடாமணே

சுச்ருஷாம் கரவாணி தே பஸுபதே ஸ்வாமின்த்ரிலோகீ குரோ !!

பாலசந்திரனையணிந்த பசுபதே!ஸ்வாமின்!மூவுலகுக்கும் குருவே!உமக்குப் பணிவிடைசெய்ய அருள்பாலிப்பீராக!உமது வஸ்திரங்களைத் துவைக்க நான் ஆயிரம்கைப்படைத்தவனாவேனாக! (சூர்யன்) புஷ்பார்ச்சனை செய்ய விஷ்ணுவாக ஆவேனாக!வாசனைபரப்ப வாயுவாகவும், நைவேத்தியம் தயாரிக்க அக்னியாகவும், பாத்திரமாய் இருக்க ஹிரண்யகர்பனாகவும் ஆகவேண்டுமே!

31.நாலம் வாபரமோபகாரகமிதம் லோகம் பசூனாம் பதே !

பச்யன் குக்ஷிகதான் சராசரகணான் பாஹ்யஸ்திதான் ரக்ஷிதும் I

ஸர்வாமர்த்ய பலாயனௌஷத மதி ஜ்வாலாகரம் பீகரம்

நிக்ஷிப்தம் கரலம் கலே ந கிலிதம் நோத்கீர்ண மேவ த்வயா II

ஹே பசுபதே!பிறருக்கு உபகாரமாயிருக்கும் இதொன்றே போதாதா?வயிற்றினுள் இருந்தவரையும், வெளியிலுள்ளவைகளான சராசரங்களையும் காக்க வேண்டி மிகபயங்கரமான ஜ்வாலை கொண்ட ஹாலகூடவிஷத்தை கழுத்தில் அடைத்து விழுங்கவுமில்லை வெளியே கக்கவுமில்லையே!

32.ஜ்வாலோக்ர:ஸகலாமராதி பயத:க்ஷ்வேல:கதம்வா த்வயா

த்ருஷ்ட:கிம் ச கரேத்ருத:கரதலே கிம் பக்வ ஜம்பூபலம் I

ஜிஹ்வாயாம் நிஹிதஸ்ச ஸித்தகுடிகாவா கண்டதே ப்ருத:

கிம்தே நாலமணி:விபூஷணமயம் சம்போ மஹாத்மன் வத II

ஹேஸம்போ!தேவர்களுக்குகெல்லாம் பயங்கரமான அந்த ஜ்வாலை கக்கும் விஷத்தை தாங்கள் எவ்வாறு கண்டீரோ?கையில் எப்படித்தான் எடுத்தீரோ?அதென்ன பழுத்த நாகைப்பழமா?சித்த மருந்து குளிகையை நாக்கிலிட்டு விழுங்க? அல்லது கழுத்தில் அணியும் அலங்காரமான நீல மாலையா?சொல்லுங்களேன்!

33.நாலம்வா ஸக்ருதேவ தேவ பவத:ஸேவா நதிர்வா நுதி:

பூஜா வா ஸ்மரணம் கதா ச்ரோவணமப்யா லோகநம் மாத்ருசாம் I

ஸ்வாமிந் அஸ்திரதேவதானுஸரணாயாஸேன கிம் லப்யதே

கா வா முக்திரித:குதோ பவதிசேத் கிம்ப்ரார்த் தனீயம்ததா II

ஹேதேவ!எங்களைப் போன்றவர் தங்களை ஒரு தரம் சேவிப்பதோ, நமஸ்கரிப்பதோ, ஸ்திப்பதோ, பூஜிப்பதோ, தினிப்பதோ, தங்கள் சரிதையைக் கேட்பதோ அல்லது நேரில் காண்பதோ போதாதா?அதைவிட வேறென்ன முக்தி என்பது?அப்படி ஒன்று உண்டானால் அப்பொழுது எப்படி பிரார்த்திக்க வேண்டும்?

34.கிம் ப்ரூமஸ்தவ ஸாஹஸம் பசுபதே கஸ்யாஸ்தி சம்போ பவத்

தைர்யம் சேத்ருச மாத்மன:ஸ்திதிரியம் சான்யை:கதம் லப்யதே I

ப்ரச்யத்தேவகணம் த்ரஸின்முனிகணம் நச்யத் ப்ரபஞ்சம் லயம்

பச்யன் நிர்பய ஏகஏவ விஹரத்யானந்த ஸாந்த்ரோபவான் II

ஹே பசுபதே!உமது துணிச்சலை என்னவென்று சொல்ல. வேறு யாருக்கு இந்த தைர்யம் வரும். வேறு யாறுக்கு இந்த நிலை வரும். அந்த ஒரு க்ஷணம் தேவர்கள் சிதறியோட, முனிவர் பயந்து நடுங்க, பிரபஞ்சமே அவிந்து நாசமடையப் பார்த்து, சிறிதும் பயமின்றி ஒருவராய் ஆனந்தக்களிப்புற்று தாண்டவம் செய்தீரே!

35.யோகக்ஷேமதுரந்தரஸ்ய ஸகலச்ரேய:ப்ரதோத்யோகின:

த்ருஷ்டாத்ருஷ்ட மதோபதேசக்ருதினோ பாஹ்யாந்தரவ்யாபின:

ஸர்வஜ்ஞஸ்ய தயாகரஸ்ய பவத:கிம் வேதிதவ்யம் மயா

சம்போ த்வம் பரமாந்தரங்க இதிமே சித்தே ஸ்மராம் யன்வஹம் II

ஹே சம்போ!நீர் மிக அந்தரங்கமானவர் என்று தானே மனதில் எப்பொழுதும் எண்ணிவருகிறேன். நான் தங்களுக்குத் தெரிவிக்க வேண்டியது ஒன்றுமில்லை. ஏனெனில், தாங்கள் எல்லாம் அறிந்தவர், தயாபரர், உள்ளும் வெளியும் வியாபித்தவர், அனைவருக்கும் நல்லதையே வழங்கும் வழக்கமுடையவர். சுருக்கமாக எல்லோரது யோகக்ஷேமத்தையும் தன் பொறுப்பாகக் கொண்டவர்.

36.பக்தோ பக்திகுணாவ்ருதே முதம்ருதா பூர்ணே ப்ரஸன்னேமன:-

கும்பே ஸாம்ப!தவாங்க்ரி பல்லவயுகம் ஸம்ஸ்தாப்யஸம்வித்பலம்!

ஸத்வம் மந்த்ரமுதீரயன் நிஜசரீராகார சுத்திம் வஹன்

புண்யாஹம் ப்ரகடீகரோமி ருசிரம் கல்யாணமாபாதயன் II

ஹே சாம்பஸிவ!பக்தனாகிய நான் பக்தி நூல் சுற்றிய, சந்தோஷ ஜலம் நிரம்பிய தெளிவான மனமென்ற குடத்தில் ஞானப்பழமான தங்கள் திருவடியையும் மாவிலையாகவைத்து, ஸத்வமந்திரங்களை ஒதி, எனது சரீரமாகிய ஆலயத்தை தூய்மைப்படுத்தி, நல்லதை - கல்யாணத்தை நாடி எந்நாளும் நன்நாளாக செய்கிறேனே!

37.ஆம்நாயாம்புதி மாதரேண ஸுமன:ஸங்கா:ஸமுத்யன்மனோ-

மநதானம த்ருடபக்தி ரஜ்ஜுஸஹிதம் க்ருத்வா மதித்வா தத: I

ஸோமம் கல்பதரும் ஸுபர்வஸு ரபிம் சிந்தாமணிம் தீமதாம்

நித்யானந்த ஸுதாம் நிரந்தரரமாஸெளபாக்ய மதநந்வதே II

முன்பு தேவர்கள் கூட்டமாகச்சேர்ந்து மந்தார மாலையைக்கெண்டு பாற்கடலைக் கடைந்து சந்திரன், கல்பகவருஷம், காமதேனு சிந்தாமணி, அம்ருதம், லக்ஷ்மி ஆகியவற்றைப் பெற்றனர். இப்பொழுதும் நல்லோர் வேதக்கடலை மனமென்ற மத்தை பக்திக் கயிற்றால் கட்டி, கடைந்து, உமையுடன் கூடிய தங்களை கல்பக விருஷமாகவும், ஞானியருக்கு சிந்தாமணியாகவும், நித்யானந்த நிலையாகவும், அளவற்றச் செல்வச்செழிப்பைவும் பெறவில்லையா?

38.ப்ராக்புண்யாசல மார்க தர்ஸிதஸுதா மூர்த்தி:ப்ரஸன்ன:சிவ:

ஸோம: ஸத்குணஸேவிதோ ம்ருகதர:பூர்ண ஸ்தமோமோசக: I

சேத:புஷ்கரலக்ஷிதோ பவதி சேத் ஆனந்தபாதோநிதி:

ப்ராகல்ப்யேன விஜ்ரும்பதே ஸுமனஸாம் வ்ருத்திஸ்தாலப்யதே II

உமையுடனிருக்கும் ப்ரஸன்னரான சிவன்!நல்லோரால் வழிபட்டவராய், மானைக்கையில் கொண்டவராய், அஜ்ஞான இருளைப்போக்குபவராய், பரிபூர்ணராய், நமது பூர்வ புண்ய வாயிலாக மனவெளியில் காணக்கிடைப்பவ ரெனில் கடல் போன்ற ஆனந்தம் கம்பீரமாகப் பொங்கி எழும். அப்பொழுது நல்லமனம் படைத்தவருக்கு (தேவர்க்கு) பிழைக்கும் வழி ஏற்படும். (சந்திரனுக்கும் பொருந்தும்)

39.தர்மோ மே சதுரங்க்ரிக:ஸுசரித:பாபம்விநாஸம் கதம்

காமக்ரோதமதாதயோ விகலிதா:காலா:ஸுகாவிஷ்க்ருதா: I

ஞானானந்த மஹெளஷதி:ஸுபலிதா கைவல்ய - நாதே ஸதா

மானேயே மானஸபுண்டரீகநகரே ராஜாவதம் ஸேஸ்திதே II

மனத்தாமரையாகிய நரகத்தில் அனைவரும் புகழும் தலைசிறந்த அரசரான பரமசிவன் ஏகசக்ரவர்த்தியாய் வீற்றிருக்கையில், நான்கு பாதங்களையுடைய தர்மம் நன்கு அனுஷ்டிக்கப்படுகிறது. பாபமகன்றது. காமக்ரோதங்கள் நீங்கின. பருவ காலங்கள் இன்பத்தையே வெளிப்படுத்துகின்றன. ஞானானந்தம் எனும் பயிர் நல்ல பயனை அளிக்கிறது.

40.தீயந்த்ரேண வசோகடேன கவிதா குல்யோப குல்யாக்ரமை :

ஆநீதைஸ்ச ஸதாசிவஸ்ய சரிதாம் போ ராசி திவ்யாம்ருதை: !

ஹ்ருத்கேதாரயுதாஸ்ச பக்திகலமா:ஸாபல்யமாதன்வதே

துர்பிக்ஷ£ன் மம ஸேவகஸ்ய பகவன் விச்வேச பீதி:குத:

ஹே உலகநாதனே!ஸ்வாமின்!உமது அடியவனாகிய எனக்கு பஞ்சத்தினால் பயமில்லை. ஏனெனில் எனது ஹ்ருதயமாகிய வயலில் பக்திப் பயிர்கள் நன்கு பயிராகின்றன. உமது சரித்ரமாகிய நீர்நிலையின் தேவாம்ருதம் போன்ற தண்ணீர், எனது புத்தியாகிய ஏற்றத்தால் வாக்காகிய ஏற்றச்சாலைக்கொண்டு, கவிதையாகிய வாய்க்கால் வழிக்கொண்டு வரப்பட்டு பாய்ச்சப்படுகிறதே.

41.பாபோத்பாதவிமோசனாய ருசிரை ச்வர்யாய ம்ருத்யுஞ்ஜய-

ஸ்தோத்ரத்யான நதிப்ரதக்ஷிண ஸபர்யாலோகனாகர்ணனே !

ஜிஹ்வா சித்த சிரோsங்க்ரி ஹஸ்த நயனச் ரோத்ரைரஹம் ப்ராத்திதோ

மாமாஜ்ஞாபய தந்நிரூபய முஹ§ர்மாமேவ மா மே வச: II

ஹேம்ருத்யுஞ்ஜய!பாபதுன்பம் விலகுவதற்கும், இனிய சுதந்திரம் அடைவதற்கும், ஸ்தோத்திரம், தியானம், நமஸ்காரம், பிரதக்ஷிணம், பூஜை, தர்சனம், சிரவணம் ஆகியவற்றைச் செய்ய முறையே நாக்கு, மனது, தலை, கால்கள், கைகள், கண்கள், காதுகள் இவற்றால் நான் வேண்டப்பட்டுள்ளேன். என்னை அவ்வாறு செய்ய கட்டளை இட்டு அடிக்கடி நினைவூட்ட வேண்டுமே!

42.காம்பீர்யம் பரிகாபதம் கனத்ருதி:ப்ராகார உத்யத்குண-

ஸ்தோமஸ்சாப்தபலம் கனேந்த்ரியசயோ த்வாராணி தேஹேஸ்தித: I

வித்யா வஸ்து ஸ்ம்ருத்திரித்யகில ஸாமக்ரீ ஸமேதேஸதா

துர்காதிப்ரிய தேவ மாமகமனோ துர்கே நிவாஸம் குரு !!

கோட்டையினுள்ளே வசிக்க ப்ரியப்படுகின்ற ஹே தேவனே!எனது மனமாகிய கோட்டையில் எப்போதும் வாஸம் செய்யலாமே!அந்த கோட்டை ஆழம் காண முடியாத தன்மையாகிய அகழியை உடையது. திடமான தைர்யத்தை மதிலாக உடையது. மேலோங்கிய நல்ல குணங்களை நட்புடைய சேனையாக உடையது. தேகத்திலுள்ள இந்த்ரியங்களை வாயில்களாகவும், நிறைவானஞானத்தைப் பொருளாகவும் உடையது. இவ்வனைத்து சாதனங்களையுமுடையதை கையால் வாசம் செய்யலாமே !

43.மா கச்ச த்வமிதஸ்ததோ கிரிச போ மய்யேவ வாஸம் குரு

ஸ்வாமின் ஆதிகிராத மாமகமன:காந்தாரஸீமாந்தரே !

வர்த்தந்தே பகுசோ ம்ருகா:மதஜுஷோ மாத்ஸர்ய மோஹாதய:

தான் ஹத்வா ம்ருகயாவிநோத ருசிதாலாபம் ச ஸம்ப்ராப்ஸ்யஸி !!

மலையில் வாழும் சுபாவமுள்ளவரே!நீர் இங்கும் மங்கும் போக வேண்டாம். என்னிடமே வஸிக்கலாம். என்னிடம் வசிக்கலாம். ஹே ஆதிவேடரே!என் மனமாகிய வனத்தின் நடுவில் பொறாமை, மதிமயக்கம் முதலிய மதம் கொண்ட பல மிருகங்கள் இருக்கின்றன. அவற்றைக்கொன்று வேட்டையாடுவதன் லாபத்தைப் பெறலாமே!

44.கரலக்னம்ருக:கரீந்த்ரபங்கோ கனசார்தூல விகண்டனோsஸ்தஜந்து: !

கிரிசோ விசதாக்ருதிஸ்ச சேத:குஹரே பஞ்சமுகோsஸ்திமே குதோபீ: !

எனது மனமாகிய குகையில் பரமேச்வரன் பஞ்சமுகனாக (சிங்கமாக) தெளிவாக இருக்கையில் எனக்கு பயம் எதுக்கு?அந்த சிங்கம் கையில் சிக்கிய மானை வைத்துள்ளது. மத யானையை வென்று, கொடிய புலிகளையும் கொன்று, மற்ற பிராணிகளையும் அழித்து (லயிக்கச்செய்து) வைத்துள்ளதே!

45.சந்த:சாகிசிகான்விதைர்த்விஜவரை:ஸம்ஸேவிதே சாச்வதே

ஸெளக்யாபாதினி கேதபேதினி ஸுதா ஸாரை:பலைர்தீபிதே !

சேத:பக்ஷிசிகாமணே த்யஜ வ்ருதா ஸஞ்சார மன்யைரலம்

நித்யம் சங்கர பாதபத்மயுகளீ நீடே விஹாரம் குரு !!

ஹேமனமாகிய பறவைகளே!நீ வீணாக அலைந்து திரிய வேண்டாம். வேறு வழிகளையும் நீக்கிவிடு. பரமசிவனது இரு திருவடிகளாகிய கூட்டில் நிலைத்து விளையாடுவாயே!அந்த கூடு வேதசாகைகளாகிய கிளைகளையும், உபநிஷதங்களாகிய உச்சிகளையும் உடையது. த்விஜர்களாகிய பறவைகள் நாடியது. அறிவற்ற இன்பம் தருவது. அம்ருத்திற்கொப்பான தர்ம, அர்த்த, காம, மோக்ஷங்களாகிய பழங்களையுமுடையது.

46.ஆகீர்ணே நகராஜிகாந்தி விபவை ருத்யத்ஸுதா வைபவை:

ஆதௌதே H ச பத்மராகலலிதே ஹம்ஸவ் ரஜைராச்ரிதே

நித்யம்பக்திவதூ கணைஸ் ச ரஹஸி ஸ்வேச்சாவிஹாரம் குரு

ஸ்தித்வா மானஸராஜஹம்ஸ கிரிஜா நாதாங்க்ரிஸெளதாந்தரே !!

என் மனதாகிற அன்னமே!நீ பார்வதி பதியின் திருவடிகளாகிற மாளிகையினுள்ளே ரகஸ்யமாக இருந்துகொண்டு பக்தியாகிற மனைவியுடன் இஷ்டம்போல் கேளித்து இருக்கலாமே!அந்த மாளிகை நகவரிசைகளினின்று வீசும் ஒளிப்பெருக்கால் ப்ரகாசிப்பதையும், தலையிலுள்ள சந்திரனின் அம்ருதக் கலைப்பெருக்கால் வெள்ளையடிக்கப்பட்டது போலிருப்பதாயும் பத்மராக்கல் இழைத்துள்ளதாயும், அழகானதாயும், பரமஹம்ஸர்களாகிய அன்னப் பறவைகள் பல சூழ்ந்துள்ளதாயும் உள்ளது.

47.சம்புத்யான வஸந்தஸங்கினி ஹ்ருதா ராமேsவஜீர்ணச்சதா:

ஸ்ரஸ்தா பக்தி லதாச்சடா விலஸிதா:புஷ்பப்ரவாலச்ரிதா: !

தீப்யந்தே குணகோரகா ஜபவச:புஷ்பாஸ்சஸத்வாஸனா

ஞானானந்தஸுதாமரந்த லஹரீ ஸம்வித் பலாப்யுன்னதி:

எனது ஹ்ருதயமாகிய பூந்தோட்டத்தில் சிவத்யானம் என்னும் வஸந்தருதுவின் சேர்க்கையினால் பாபமாகிய பழுத்த இலைகள் உதிர்ந்து, பக்தியாகிய கொடியின் சமூகங்கள் புண்யமெனும் துளிகள் தோன்றி, அழகாக பிரகாசிக்கின்றன. மேலும் நற்குணங்களாகிய அரும்புகளும் ஜபமந்திரங்களாகிய புஷ்பங்களும், நன்மையாகிய வாஸனையும், ஞானானந்தமாகிற அம்ருதத்தேனும், ஞானானுபவமாகிய பழத்தின் சிறப்பும் உள்ளன.

48.நித்யானந்த ரஸாலயம் ஸுரமுனி ஸ்வாந்தாம்புஜாதா ச்ரயம்

ஸ்வச்சம் ஸத்விஜஸேவிதம் கலுஷஹ்ருத் ஸத்வாஸனாவிஷ்கிருதம் !

சம்புத்யானஸரோவரம் வ்ரஜ மனோஹம்ஸாவதம்ஸ ஸ்திரம்

கிம் க்ஷ§த்ராச்ரய பல்லவ ப்ரமண ஸஞ்ஜாதச்ரமம் ப்ராப்ஸ்யஸி !!

மனம் என்னும் சிறந்த அன்னமே!நீ அற்ப சேவையாகிய குட்டையில் உழல்வதால் கஷ்டத்தை ஏன் அடைகிறாய்?வற்றாத ஆனந்தமாகிய நீர் நிறைந்ததும், தேவரிஷிகளின் ஹ்ருதயமாகிய தாமரைக்கிடமாகியதும், தெளிவானதும், ஸாதுக்களாகிற பறவைகளால் நாடப்பெற்றதும், பாபமாகிய அழுக்கைப் போக்குவதும், புண்யமாகிய வாஸனையை வெளிப்படுத்துவதுமாகிய சிவத்யானமெனும் சிறந்த நீர்நிலையை நிலையாக அடைந்துவிடு!

49.ஆனந்தாம் ருதபூரிதா ஹரபதாம் போஜாலவாலோத்யதா

ஸ்தைர்யோபக்ன முபேத்ய பக்திலதிகா சாகோபசாகான்விதா !

உச்சைர்மானஸ காயமான படலீ மாக்ரம்ய நிஷ்கல்மஷா

நித்யாபீஷ்டபலப்ரதா பவது மே ஸத்கர்மஸம் வர்த்திதா !!

சிவனின் பாத கமலமாகிய பாத்தியில் முளைத்து, திடசித்தமெனும் கொம்பைப் பற்றிக்கொண்டு வளரும் பக்தி என்னும் கொடி ஆனந்தமாகிய அமுத நீரால் போஷிக்கப்பட்டு, கிளை உபகிளைகளை என்றபடி உயர்ந்த மனமெனும் பந்தலின் மேல் படர்ந்து, புண்யச் செயல்களால் நன்கு வளர்ந்து, எனக்கு, மனத்திற்கினிய முக்தி எனும் பழத்தையளிப்பதாய் விளங்கட்டும்.

50.ஸந்த்யாரம்பவிஜ்ரும்பிதம் ச்ருதிசிர:ஸ்தானாந்தராதிஷ்டிதம்

ஸப்ரேம ப்ரமராபிராம மஸக்ருத் ஸத்வாஸனா சோபிதம் !

போகீந்த்ராபரணம் ஸமஸ்தஸுமன: பூஜ்யம் குணாவிஷ்க்ருதம்

ஸேவே ஸ்ரீகிரிமல்லிகார்ஜுன மஹாலிங்கம் சிவாலிங்கிதம் !!

ப்ரதோஷ வேளையில் நடனம் செய்து களிப்பவரும், உபநிஷதங்களில் நிலை பெற்றவரும், ப்ரேமையுடன் ப்ரம்மராம்பிகையால் தழுவப்பட்டவரும், சாதுக்களின் பக்தி மனம் கவழ்பவரும், நாகங்களை ஆபரணமாகக் கொண்டவரும், தேவர்களால் பூஜிக்கப்பட்டவரும், சிவையால் தழுவப்பட்டவருமாகிய ஸ்ரீ சைல மல்லிகார்ஜுன மஹாலிங்கமூர்த்தியை ஸேவிக்கிறேன் (மல்லிகைக்கும் பொருந்தும்)

51.ப்ருங்கீச்சாநடனோத்கட:கரிமத க்ராஹீ ஸ்புரன் மாதவா-

ஹ்லாதோ நாதயுதோ மஹாஸிதவபு:பஞ்சேஷ§ணா சாத்ருத: !

ஸத்பக்ஷ:ஸுமனோவநேஷ§ ஸ புன:ஸாக்ஷ£த்மதீயே மனோ-

ராஜீவே ப்ரமராதிபோ விஹரதாம் ஸ்ரீசைலவாஸீவிபு: !!

ப்ருங்கிமஹர்ஷியின் விருப்பத்திற்கிணங்க நடனமாடியவரும், கஜாஸுரன் மதத்தை ஒடிக்கியவரும், மோஹினி வடிவில் வந்த மஹாவிஷ்ணுவினால் மகிழ்ச்சி கொண்டவரும், பிரணவ நாதமுடையவரும், வெள்ளைத்திருமேனியையுடைய வரும், மன்மத பாணத்திற்கிசைவாக்கப்பட்டவரும், தேவர்களைக் காக்க நேசிப்பவரும், ஸ்ரீசைலமலையில் கோயில் கொண்டவருமான அந்த ப்ரமராம்பிகை நாதனான சிவன் அடிக்கடி என் மனதாகிய தாமரையில் லீலை புரியட்டும் (வண்டுக்கும் பொருந்தும்)

52.காருண்யாம்ருத வர்ஷிணம் கநவிபத்க்ரீஷ்மச்சிதா கர்மடம்

வித்யா ஸஸ்ய பலோதயாய ஸுமன: ஸம்ஸேவ்யமிச்சாக்ருதிம் !

ந்ருத்யத்பக்த மயூர மத்ரிநிலயம் சஞ்சத்ஜடா மண்டலம்

சம்போ வாஞ்சதி நீலகந்தர ஸதா த்வாம் மே மனஸ்சாதக: !!

ஹேசம்போ. நீலகண்டனே. எனது மனமாகிய சாதகப்பறவை உன்னை எப்பொழுதும் ஆவலுடன் விரும்பி நிற்கிறது. ஏனெனில் நீர் கருணையாகிய அம்ருதத்தைப் பொழிகிறீர். கடுங்கோடை வெயில் போன்று பெசுங்கும் தாபங்களைப் போக்குகிறீர். ஞானப்பயிர் நல்ல பயனையளிக்கும் பொருட்டு நன்மனம் படைத்தவரால் சேவிக்கப்படுகிறீர். விரும்பிய வண்ணம் வடிவமெடுத்து பக்தர்களாகிய மயில்களைக்காக்கச் செய்கிறீர். மலையில் வசித்துக்கொண்டு அசைந்தாடும் ஜடாமண்டலத்தை யுடையவராயிருக்கிறீர் (மேகத்திற்கும் பொருந்தும்)

53 ஆகாசேன CW ஸமஸ்தபணிநாம் நேத்ரா கலாபீ நதா-

னுக்ராஹிப்ரணவோ பதேச நிநதை:கேகீதி யோ கீயதே!

ச்யாமாம் சைலஸ முத்பவாம் கனருசிம் த்ருஷ்ட்வா நடந்தம்முதா

வேதாந்தோபவநே விஹாரரஸிகம் தம் நீலகண்டம்பஜே !!

பார்வதியைப் பார்த்து நடனம் புரிபவரான, வேதாந்த பூங்காவில் விளையாட விருப்பமுள்ளவரான அந்த நீலகண்டனை ஸேவிக்கிறேன். அவர் ஆகாயத்தைக் கொண்டையாகக் கொண்டவர். ஆதிசேஷணை ஆபரணமாக உடையவர். வணங்கியவருக்கு அருள் சுரந்து, பிரணவ உபதேசத்தால் மயில்போல் சப்திப்பவர் (மயிலுக்கும் பொருந்தும்)

54.ஸந்த்யா கர்மதினாத்யயோ ஹரிகராகாதப்ரபூதானக-

த்வானோ வாரித கர்ஜிதம் திவிஷதாம் த்ருஷ்டிச்சடா சஞ்சலா !

பக்தாநாம் பரிதோஷபாஷ்பவிததிர்வ்ருஷ்டிர் மயூரீசிவா

யஸ்மின் உஜ்வதாண்டவம் விஜயதே தம்நீலகண்டம்பஜே !!

வெயில் அடங்கிய மாலை வேளை. பிரதேஷகாலம், மஹாவிஷ்ணு இடிமுழக்கம்போல் மிருதங்கம் வாஸிக்க, தேவர்களின் கண்கள் ஒளி மின்னல் போல் பரவ, பக்தர்கள் பரவஸப்பட்டு ஆனந்தபாஷ்ய மழைபொழிய, மயில் போன்ற பார்வதியின் முன் பரமசிவன் நடனம் புரிகிறார். அந்த நீலகண்டனை ஸேவிக்கிறேன்.

55.ஆத்யாயாமிததேஜஸே ச்ருதிபதைர் வேத்யாய ஸாத்யாயதே

வித்யானந்த மயாத்மனே த்ரிஜகத: ஸம்ரக்ஷணோத்யோகிநே !

த்யேயா கில யோகிபி:ஸுரகணீர் கேயாய மாயாவினே

ஸம்யக் தாண்டவஸம்ப்ரமாய ஜடினேஸேயம் நதி:சம்பவே !!

உலகத்தோற்றத்திற்கு முந்தியவராயும், அளவில்லா தேஜோரூபியாயும், வேதப்பொருளாய் அறியத்தக்கவராயும், ஸாத்யமானவராயும், அறிவும் ஆனந்தமுமே வடிவாகக் கொண்டவராயும், மூவுலகையும் காக்க ஊக்கமுள்ளவராயும், யோகிகளால் தியானம் செய்யப்படுபவராயும், தேவரால் போற்றப்படுபவராயும், மாயையைத்தன்வசப்படுத்தியவராயும், நன்றாகத்தாண்டவம் புரிபவராயும், ஜடைதரித்தவராயும் இருக்கிற சம்புவே!இதோ உம்மை நமஸ்கரிக்கிறேன்.

56.நித்யாய த்ரிகுணாத்மநே புரஜிதே காத்யாயனீச்ரேயஸே

ஸத்யாயாதிகுடும்பினே முனிமன:ப்ரத்யக்ஷசின் மூர்த்தயே !

மாயாஸ்ருஷ்ட ஜகத்ரயாய ஸகலா ம்னாயாந்த ஸஞ்சாரிணே

ஸாயம் தாண்டவஸம்ப்ரமாய ஜடினே ஸேயம் நதி:சம்பவே!!

பிரதேஷ காலத்தில் தாண்டவமாடுகிற ஜடாதாரியான ஸம்புவே!உமக்கு இதோ இந்த நமஸ்காரம். நீர் என்றும் இருப்பவர். முக்குணங்களை வடிவமாகக் கொண்டவர். முப்புரத்தை எரித்தவர். பார்வதியின் தவப்பயனாய் ஆனவர், ஸத்யஸ்வரூபி, ஆதிகுடும்பத்தலைவர், முனிவர் மனதில் காட்சியளிக்கிற ஞானஸ்வரூபி, மாயையாக மூவுலகையும் ஸ்ருஷ்டித்தவர், வேதமுடிவான உபநிஷதங்களில் நடம்புரிபவர்.

57.நித்யம் ஸ்வோதரபூரணாய ஸகலா நுத்திச்ய வித்தாசயா

வ்யர்த்தம் பர்யடனம் கரோமி பவத:ஸேவாம் நஜானே விபோ !

மத்ஜன்மாந்த புண்யபாக பலத ஸ்த்வம் சரவர்ஸர்வாந்தர:

திஷ்டஸ்யேவ U தேந வாபசுபதே தே ரக்ஷணீயோ ஸ்ம்யஹம் !!

எங்கும் நிறைந்தவரே!எப்பொழுதும் வயிற்றை வளப்பதற்கே பலரை நாடி, பணத்தாசையால் வீணாக அலைகிறேன். உம்மை சேவிக்க அறியேன். என் பூர்வ புண்யவஸத்தால் நீர் எல்லோரிலும் ஊடுருவி இருப்பதை மட்டும் அறிவேன். அதை நினைத்தாவது ஹேபசுபதே!என்னைக்காக்க வேண்டும்.

58.ஏகோ வாரிஜபாந்தவ:க்ஷிதிநபோ வ்யாப்தம் தமோமண்டலம் பித்வா லோசன கோசரோரபி பவதி த்வம் கோடிசூர்ய ப்ரப:

வேத்ய:கிம்நபவஸ்யஹோ கனதரம் கீத்ருக்பவே மத்தம:

தத்ஸர்வம் வ்யபநீய மே பசுபதே ஸாக்ஷ£த் ப்ரஸன்னோ பவ!!

ஹேபசுபதே!ஒருவனேயான சூர்யன் கூட பூமியையும் ஆகாயத்தையும் கவிழ்ந்து கொண்டுள்ள இருள்படலத்தை பிளந்துகொண்டு கண்ணுக்கு எட்டியவனாக இருக்கிறான். நீரோ கோடி சூர்யப்ரகாசமுள்ளவர். அப்படி இருந்தும் எனக்கு கண்ணுக்கெட்டியவராக ஏன் ஆவதில்லை?ஐயோ!ஏன் அறியாமையாகிய இருள் எவ்வளவு அடர்த்தியாக இருக்க வேண்டும். அதுமுழுவதையும் போக்கி கண்ணெதிரில் தோன்றுவீராக!

59.ஹம்ஸ:பத்மவனம் ஸமிச்சதியதா நீலாம்புதம் சாதக:

கோக:கோக நதப்ரியம் ப்ரதிதினம் சந்த்ரம் சகோரஸ்ததா !

சேதோ வாஞ்சதி மாமகம் பசுபதே சின்மார்கம்ருக்யம் விபோ

கௌரீநாத பவத்பாதாப்ஜயுகலம் கைவல்யஸெளக்யப்ரதம் !!

எங்கும் நிறைந்த ஹே பசுபதே!கௌரீநாத!அன்னப் பறவை தாமரைத்தடாகத்தையும், சாதகம் கார்மேகத்தையும், சக்ரவாகம் சூர்யனையும், சகோகரம் சந்திரனையும் விரும்புவதுபோல் என் மனம் ஞானமார்க்கத்தால் மட்டுமே அறியக்கூடிய, கைவல்ய சுகத்தையளிக்க வல்லதுமான தங்களது திருவடித்தாமரையை எப்பொழுதும் விரும்புகிறது.

60.ரோதஸ்தோயஹ்ருத:ச்ரமேண பதிக:சாயாம் தரோர்வ்ருஷ்டித:

பீத:ஸ்வஸ்தக்ருஹம் க்ருஹஸ்த மதிதிர்தீன:ப்ரபும் தார்மிகம் !

தீபம் ஸந்தமஸாகுலஸ்ச சிகினம் சீதாவ்ருதஸ்த்வம் ததா

சேத:ஸர்வபயாபஹம் வ்ரஜஸுகம் சம்போ:பதாம்போருஹம் !

ஹேமனமே!நீ எல்லா பயத்தையும் நீக்கி, சுகமளிக்கும் சம்புவின் திருவடித்தாமரையை விரும்பியடைவாயாக!வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டவன் கரையையும், வழிநடப்பவன் களைப்பால் மரநிழலையும், மழைக்கு பயந்தவன் நல்ல வீட்டையும், அயலூர் பிரயாணி க்ரஹத்தையும், ஏழை தர்ம சிந்தையுள்ள பணக்காரணையும், இருளில் மயங்கியவன் விளக்கையும், குளிர்தாங்காதவன் நெருப்பையும் விரும்புவதில்லையா?

61.அங்கோலம் நிஜபீஜஸந்ததி ரயஸ்காந்தோபலம் சூசிகா

ஸாத்வீனைநஜவிபும் லதா க்ஷிதிருஹம் ஸிந்து:ஸரித்வல்லபம் !

ப்ராப்நோதீஹயதா ததா பசுபதே:பாதாரவிந்தத்வயம்

சேதோவ்ருத்தி ருபேத்ய திஷ்டதி ஸதா ஸா பக்திரித்யுச்யதே !!

ஏறழிஞ்சல் மரத்தை அதன் விதைக்கூட்டமும், காந்தக்கல்லை ஊசியும், தன் நாயகனை பதிவ்பதையும், கொடிமரத்தையும், ஆறு சமுத்ரத்தையும், நாடியடைவது போல் மனநாட்டம் பசுபதியின் திருவடித்தாமரையை அடைந்து எக்கணமும் இருக்குமேயாகில் அதுவே பக்தி எனப்படும்.

62.ஆனந்தாச்ருபிராதநோதி புலகம் நைர்மல்யத:சாதனம்

வாசா சங்கமுகே ஸ்திதைஸ்ச ஜடரா பூர்த்திம் சரித்ராம்ருதை : !

ருத்ரா¬க்ஷர் பஸிதேந தேவ வபுஷோ ரக்ஷ£ம் பவத்பாவநா-

பர்யங்கே விநிவேச்ய பக்தி ஜனனீ பக்தார்பகம் ரக்ஷதி !!

ஹேதேவ!பக்தி எனும் தாய், கண்ணீரால் நனைந்து மயிர் சிலிற்கச் செய்து, களங்கமற்ற மனதால், ஆடையையும், வாக் என்னும் சங்கு முகத்தில் தோன்றும் உமது சரித்திர அமுதத்தால் போதுமான உணவையும், ருத்ராஷம், பஸ்மம் இவற்றால் உடம்புக்கு பாதுகாப்பையும் ஏற்படுத்தி, உமது தியானமாகிய கட்டிலில் படுக்கவைத்து பக்தனாகிய குழந்தையை காப்பாற்றுகிறான்!

63.மார்காவர்த்திதபாதுகா பசுபதே ரங்கஸ்ய கூர்ச்சாயதே

கண்டூஷாம்பு நிஷேசனம் புரரிபோர் திவ்யா பிஷேகாயதே !

கிஞ்சித் பக்ஷிதமாம்ஸசேஷ கவளம் நவ்யோ பஹாராயதே

பக்தி:கிம் நகரோத்யஹோ வனசரோ பக்தாவதம்ஸாயதே !!

கண்ணப்பரின் வழி நடந்து தேய்ந்த செருப்பு, பரம சிவனுடைய மூர்த்திக்கு கூச்சமாகிறது. கொப்பளித்த நீரால் நனைத்தலே சிவனுக்கு திவ்ய அபிஷேகமாகிறது. கொஞ்சம் சுவைத்துப் பார்த்த மாம்ஸத்தின் மீதியான கவளம் புதிய நைவேத்தியமாகிறது. இதென்ன ஆச்சர்யம்! காட்டில் வாழும் வேடன் பக்த கிரோஷ்டனாகிறான். பக்தி எதையும் செய்யும் போலும்.

64.வக்ஷஸ்தாடன மந்தகஸ்ய கடினா பஸ்மாரஸம்மர்தனம்

பூப்ருத் பர்யடனம் நமத்ஸுரசிர:கோடீரஸங்கர்ஷணம்!

கர்மேதம் ம்ருதுலஸ்ய தாவக பத த்வந்த்வஸ்ய வோசிதம்

மச்சேதோ மணிபாதுகா விஹரணம் சம்போ!ஸதாங்கீகுரு !!

ஹே கௌரீபதே!உமது ம்ருதுவான திருவடிகளுக்குத் தொழிலாவன - யமன் மார்பில் உதைத்தல், கடினமான அபஸ் மாரத்தை மிதித்தல், நமஸ்கரிக்கும் தேவரின் தலைக்கிரீடங்களில் உராய்தல் போன்றவை - இவை மிருதுவான அவற்றிற்குப் பொருந்துமா?ஹேசம்போ!எனது மனமாகிய ரத்னப்பாதுகையை அணிந்து கொண்டு இருக்கலாமே!

65.வக்ஷஸ்தாடன சங்கயா விதலிதோ வைவஸ்வதோ நிர்ஜரா !

கோடீரோஜ்வல ரத்னதீபகலிகா நீராஜனம் குர்வதே !

த்ருஷ்ட்வா முக்தி வதூஸ்தனோதி நிப்ருதாச்லேஷம் பவா நீபதே

யச்சேதஸ்தவ பாதபத்ம பஜனம் தஸ்யேஹ கிம் துர்லபம் !!

ஹே பவாநிபதே!எவனது மனம் திருவடித்தாமரையை சேவிக்கிறதோ அவனுக்கு இவ்வுலகில் அடைய முடியாதது எது?யமனும் மார்பில் உதை கிடக்குமோ என அஞ்சி ஒடிவிடுகிறான்?தேவர்கள் தம் கிரீடத்தில் பிரகாசிக்கும் ரத்ன கற்களாகிய தீபங்களால் ஹாரத்தியை செய்கிறார்கள். முக்தி என்னும் பெண் அவனைக் கண்டதும் இறுகத் தழுவிக் கொள்வாளே!

66.க்ரீடார்தம் ஸ்ருஜஸி ப்ரபஞ்சமகிலம் க்ரீடாம்ருகாஸ்தே ஜநா:

யத்கர்மாசரிதம் மயா ச பவத:ப்ரீத்யை பவத்யேவ தத் !

சம்போ ஸ்வஸ்ய குதூஹலஸ்ய கரணம் மச்சேஷ்டிதம் நிஸ்சிதம்

தஸ்மான் மாமகரக்ஷணம் பசுபதே கர்த்தவ்யமேவ த்வயா !!

ஹே பசுபதே!விளையாட்டிற்காக உலகமனைத்தையும் சிருஷ்டிக்கிறீர். சிருஷ்டித்த அம்மனிதர்கள் உமக்கு விளையாட மான்கள் போல வாகின்றனர். ஹே சம்போ! நான் செய்யும் அனைத்து செயல்களும் உமது ப்ரீர்த்திக்காகவே என்பதால் என்னை ஆட்டுவித்தல் உமது உகப்புக்கே என்பது நிச்சயமாகிறது. ஆகவே என்னைக் காப்பாற்றுவது உமது கடமையே!

67.பஹ§விதபரிதோஷ பாஷ்பபூரஸ்புட புலகாங்கித சாருபோக பூமிம் !

சிரபத பலகாங்க்ஷி ஸேவ்யமானாம் பரமஸதா சிவபாவநாம் ப்ரபத்யே!!

பலவித மகிழ்ச்சி, ஆனந்தகண்ணீர், மயிர் கூச்செரிதல் ஆகியவற்றிற்கு விளைநிலமானதும், மோக்ஷப்பயனை விரும்புவரால் சேவிக்கப்படுபவதுமான பரமேச்வரத்தியானத்தை சரணடைகிறேன்.

68.அமிதமுதம்ருதம் முஹ§ர்துஹந்தீம் விமலபவத் பதகோஷ்டமாவஸந்தீம் !

ஸதய பசுபதே!ஸுபுண்யபாகாம் மமயரிபாலப பக்திதேனுமேகாம் !

தயைமிக்கவரே பசுபதே!என்னுடைய பக்தியாகிய பசு ஒன்றினையே மேன்மேலும் பெருக்குகிறது. மாசற்ற உமது திருவடியாகிய கொட்டிலில் வசிப்பது.

69.ஜடதா பசுதா கலங்கிதா குடிலசரத்வம் ச நாஸ்தி மயி தேவ !

அஸ்தி யதி ராஜமௌலே பவதாபரணய்ஸ நாஸ்மி கிம் பாத்ரம் !!

ஹேதேவ!மூடத்தன்மையோ, மிருகத்தன்மையோ, கரையுடைய தன்மையோ, கோணலான போக்கோ என்னிடம் இல்லை. ஹே சந்த்ரமௌ!மேற்கூறியவை சந்திரனிடத்தில் இருப்பதுபோல் என்னிடமும் இருக்குமேயாகில், உம் அணிகலனாக ஆகும் தகுதி எனக்கும் என்றே!

70.அரஹஸி ரஹஸி ஸ்வதந்த்ர புத்யா

வரிவஸிதும் ஸுலப:ப்ரஸன்னமூர்த்தி: !

அகணிதபலதாயக:ப்ரபுர்மே

ஜகததிகோ ஹ்ருதி ராஜசேகரோsஸ்தி !!

வெளிப்படையாகவும் ரகஸ்யமாகவும் தன்னிஷ்டம் போல் உபாஸிக்க சுலபரான சிரித்த முகத்துடன் எண்ணுதற்கரிய நற்பயன்களைத் தரும் உலகம் கடந்த பிரபுவான சந்த்ரமௌலி என் ஹ்ருதயத்தில் இருக்கிறார்.

71.ஆரூட பக்தி குணகுஞ்சித பாவசாப-

யுக்தை:சிவஸ்மரணபாணகணைரமோகை: !

நிர்ஜித்ய கில்பிஷரிபூன்விஜயீ ஸுதீந்ர:

ஸாநந்த மாவஹதி ஸுஸ்திர ராஜலக்ஷ்மீம் !!

சிறப்பான பக்தியாகிய நாண்கயிற்றினால் இழுத்து வளைக்கப்பட்ட பாவனை என்னும் வில்லில் பூட்டிய சிவத்யானமாகிய அம்புகளால் பாபமாகிய எதிரிகளை ஒழித்து வெற்றி கொண்ட புத்திசாலி ஒருவனே சாச்வதமான ராஜலக்ஷ்மியைப் பெறுகிறான்.

72.த்யானஞ்ஜனேன ஸமவேக்ஷ்ய தம:பரதேசம்

பித்வா மஹா பலிபிரீச்வரநாமம்ந்த்ரை: !

திவ்யாச்ரிதம் புஜகபூஷண முத்வஹந்தி

யே பாதபத்மமிஹ தே சிவ தே க்ருதார்த்தா: !!

ஹேசிவ!தியானமாகிய மையினால் இருக்குமிடத்தை கண்டு அறிந்து கொண்டு நிதியை மறைக்கும் இருளைப் பிளந்து, ஈசனது நாம மந்திரங்களாகிய பஹாபலிகளால் திவ்யமானதும், ஸர்ப்பங்கள் சூழ நின்றதுமான உமது திருவடி என்னும் பத்ம நிதியை மேலே எடுத்து வருபவர்கள் இவ்வுலகில் நிச்சயமாக வாழ்க்கைப் பயனை அடைந்தவராகளாகின்றனர்.

73.பூதாரமுதவஹத்யதபேக்ஷயா ஸ்ரீ-

பூதார ஏவ கிமத:ஸுமதே லபஸ்வ !

கேதார மாகலிதமுக்தியஹெளஷதீனாம்

பாதாரவிந்தபஜனம் பரமேச்வரஸ்ய !!

ஒ நல்லபுத்தியே!உலகனைத்தும் விரும்புகிற மோக்ஷமாகிய சிறந்த மூலிகைக்கு விளைநிலமான பரமேச்வரனின் திருவடி சேவையை நாடிப்பெற்றுவிடு! அதை எதிர்பார்த்துத்தானே ஸ்ரீ தேவி, பூதேவிகளைப் பத்னிகளாகக் கொண்ட மஹாவிஷ்ணுவே வராஹவடிவை (பூதாரத்வம்) எடுத்துக்கொண்டார்.

74.ஆசாபாச க்லேச துர்வாஸனாதி-

பேதோத்யுக்தை:திவ்ய கந்தை ரமந்தை: !

ஆசாசாடீகஸ்ய பாதாரவிந்தம்

சேத:பேடீம் வாஸிதாம் மே தநோது !!

திகம்பரனான பரமேச்வரனுடைய திருவடித்தாமரையை, கயிறு போன்ற ஆசைகள், குழப்பங்கள் என்ற கெட்ட வாசனையைப் போக்க முனைந்த தெய்வீக வாஸனையினால், என் மனதாகிய பெட்டியை நல்ல குணம் (மணம்) உடையதாகச் செய்யட்டும்.

75.கல்யாணினம் ஸரஸசித்ரகதிம் ஸவேகம்

ஸர்வேங்கிதஜ்ஞமனகம் த்ருவலக்ஷணாட்யம் !

சேதஸ்துரங்கமதிரூஹ்ய சரஸ்மராரே !

நேத:ஸமஸ்தஜகதாம் வ்ருபாதிரூடே !!

உலகமனைத்தையும் வழி நடத்திச் செல்கிறவரும், மன்மதனை வென்றவரும், விருஷபத்தை வாஹனமாக உடையவருமான பரமேச்வரனே!அழகிய வடிவம் கொண்டதும், இனிய பற்பல நடைகளையுடையதும், வேகமுள்ளதும், நேக்கமறிந்து நடக்கப்பழகியதும், குற்றமற்ற நல்ல லக்ஷணமுள்ளதுமான என் மனக்குதிரை மீது ஏறிக்கொண்டு இனிஸஞ்சாரம் செய்யலாமே!.

76.பக்திர் மகேசபதபுஷ்கர மாவஸ்நதீ

காதம்பினீவ குருதே பரிதோஷவர்ஷம் !

ஸம்பூரிதோபவதி யஸ்யமனஸ்தடாக:

தத்ஜன்ம ஸஸ்ய மகிலம் ஸபலம் ச நான்யத் !!

பரமசிவன் திருவடியாகிய வானத்தில் இருந்து வரும் பக்தி, மேக்ககூட்டம்போல் இன்பமழையைப் பொழிகிறது. அதன் மூலம் எவரெவருடைய மனதாகிய தடாகம் நிரம்புகிறதோ அவரவருடைய பிரவிப்பயிர் முழுதும் ஸபலமாகிறது. மற்றது அப்படியில்லது.

77.புத்தி:ஸ்திரா பவிது மீச்வரபாத பத்ம-

ஸக்தா வதூர்விரஹிணீவ ஸதாஸ்மரத்தீ !

ஸத்பாவநா ஸ்மரணதர்சன கீர்த்தனாதி-

ஸம்மோஹிதேவ சிவமந்த்ரஜபேந விந்தே !!

பரமேச்வரனது திருவடித்தாமரையில் பற்றுகொண்ட எனது புத்தி, அதில் நிலைத்திருக்க வேண்டுமென்று, பிரிவாற்றாமையால் துன்பப்படும் பதிவிரதை போன்று எப்பொழுதும் அதைதே நினைத்துக் கொண்டும், பற்பலகற்பனைகளுடன் அக்கண்ணில் கண்டும் புகழ்ந்தும், சிவமந்த்ரஜபத்தால் நிலை இழந்தவள்போல் கவலை கொள்கிறது.

78.ஸதுபசாரவிதிஷ்வனுபோதிதாம்

ஸவிநயாம் ஸுஹ்ருதம் ஸமுபாச்ரிதாம் !

மம ஸமுத்தர புத்திமிமாம் ப்ரபோ

வரகுணேந நவோடவதூமிவ !!

ஹேப்ரபோ!எனது புத்தியை புது மணப்பெண்ணைப் போல் குணச்சிறப்பால் தேற்றி கவலையினின்று கைதூக்கிவிடுவீரா?அந்த பெண் பெரியோரை உபசரிக்கக்கற்றுத் தரப்பட்டுள்ளது. விநயமுள்ளது. நல்ல உள்ளம் படைத்தது. நல்லதையே நாடுவது.

79.நித்யம் யோகிமன:ஸரோஜதல ஸஞ்சாரக்ஷமஸ்த்வத்க்ரம்:

சம்போ!தேந கதம் கடோரயமராட் வக்ஷ:கவாட க்ஷதி: !!

அத்யந்தம் ம்ருதுலம் த்வதங்க்ரியுகலம் ஹா மேமன:;சிந்தய-

த்யேதத்லோசனகோசரம் குரு விபோ ஹஸ்தேநஸம் வாஹயே !!

ஹேசம்போ!உமது காலடி எப்பொழுதும் யோகிகளின் மனமாகிய தாமரையிதழில் சஞ்சரிக்கும் பழக்கமுடையது. அதனால், யமனின் முறடான மார்பில் உதைத்து காயப்படுத்த எங்கனம் இயலும்?மிகவும் மெதுவானதாயிற்றே உமது திருவடி என்று என்மனம் கவலைப்படுகிறது. யமனை உதைத்த அந்த திருவடியை என் கண்ணுக்குத் தெரியும்படி செய்தருளும், என் கையால் வருடி விடுகிறேனே!.

80.ஏஷ்யத்யேவ ஜநிம் மநோsஸ்ய கடினம் தஸ்மிந்நடானீதி மத்-

ரக்ஷ£யை கிரிஸீம் G கோமலபத ந்யாஸ:புராப்யாஸித: !

நோசேத்திவ்யக்ருஹாந்தரேஷ§ ஸுமனஸ்தல்பேஷ§ வேத்யாதிஷ§

ப்ராய:ஸத்ஸு சிலாதலேஷ§ நடனம் சம்போ கிமர்த்த் தவ !!

இவன் பிறவி எடுக்கப்போகிறான், இவன் மனம் கடினமானது. அதில் நடனம் புரியவேண்டும் என்று கருதியும், என்னைக்காக்கவும் வேண்டித்தானே ஹேசம்போ!மலைப்பாறைகளில் மெதுவாக காலடிவைத்து முன்னமேயே பயிற்ச்சி எடுத்தீர்!இல்லையெனில் திவ்யமன வீடுகளினுள்ளும், மலர் படுக்கைகளிலும், மேடைகளிலும் நடனமாட வசதி இருந்த பொழுது ஏன் பாறைகளில் இந்த நடனம்?

81.கஞ்சித் காலமுமாமஹேச பவத:பாதாரவிந்தார்ச்சனை:

கஞ்சித்த்யான ஸமாதிபிஸ்ச நதிபி:கஞ்சித்கதாகர்ணனை: !

கஞ்சித் கஞ்சித் அவேக்ஷணைஸ்ச நுதபி:கஞ்சித்தசாமீத்ருசீம்

ய:ப்ராப்நோதிமுதா த்வதர்பிதமனா:ஜீவன் ஸ முக்த:கலு !!

உமையுடன் காட்சிதரும் மஹேச!சிறிது நேரம் உமது பாதகமலங்களையர்ச்சிப்பதாலும், கொஞ்சநேரம் த்யானம், ஸமாதி ஆகியவற்றாலும், கொஞ்ச நேரம் வந்தனங்களாலும், கொஞ்ச நேரம் சரிரத்தை சிரவணம் செய்வதாலும், கொஞ்ச நேரம் மூர்த்திகளை தர்சனம் செய்வதாலும், மேலும் கொஞ்ச நேரம் ஸ்தோத்ரம் செய்வதாலும் இப்படியான நிலையை எவன் அடைகிறானோ அவன் நிச்சயமாக ஜீவித காலத்திலேயே முக்தியடைந்தவனாகிறான்.

82.பாணத்வம் வ்ருஷபத்வ மர்த்தவபுஷா பார்யாத்வமார்யாபதே !

கோணித்வம் ஸகிதா ம்ருதங்க வஹதா சேத்யாதிரூபம் ததௌ !

த்வத்பாதே நயனார்ப்பணம் ச க்ருதவான் த்வத்தேஹபாகோ ஹரி:

பூஜ்யாத் பூஜ்யதர:ஸ ஏவ U நசேத் கோ வா ததன்யோssதிக!!

ஆர்யாபதே!ஹரி, உமது உடலில் பகுதியாக இருந்து பூஜித்தற்குறிய அனைவரிடத்திலும் மிகவும் பூஜிக்கத்தக்கவராவார். இல்லையெனில் அவரிலும் உயர்ந்தவர் யாரே உளர்?அவர் என்ன செய்தார்?உமது பாணமாகவும், வாஹணமாகவும், பாதிஉடலில் பங்கு கொண்ட பார்யையாகவும், பன்றியாகவும், தோழராகவும், மிருதங்கம் வாசிப்பவராகவும் இருந்தாரே!உமது பாதத்தில் கண்ணையும் அர்ப்பணித்து பூஜித்தாரேயல்லவா?

83.ஜனனம்ருதியுதாநாம் ஸேவயா தேவதாநாம்

ந பவதிஸுகேலேச:ஸம்சயோ நாஸ்தி தந்ர !

அஜனி மம்ருதரூபம் ஸாம்பசீமம் பஜந்தே

யஇஹ பரஸெளக்யம் தே U தன்யா லபந்தே !!

ஜனனம், மரணம் என்ற தொடர் உள்ள மனிதருக்கு மற்ற தெய்வங்களை வழிபடுவதால் ஒருவித சுகமும் இல்லை. இது நிச்சயம். பிறப்பில்லாதவர், ஆனால் அம்ருதரூபர், பரமேச்வரன் அம்பிகையருபாகன். அவர்பால் பற்று கொண்டவரோ பரம சௌக்கியம் எய்துகின்றனர். அவரே புண்யவான்களுமாவர்.

84.சிவ தவ பரிசர்யா ஸந்நிதானாய கௌர்யா

பவ மம குணதுர்யாம் புத்திகன்யாம் ப்ரதாஸ்யே !

ஸகல புவனபந்தோ ஸச்சிதானந்தஸிந்தோ

ஸதய ஹ்ருதய கேஹே ஸர்வதா ஸம்வ, த்வம் !!

சிவனே!பவனே!கௌரியுடன் உமது பணிவிடைக்காக எனது குணம் மேவிய புத்தியாகிய கன்னிகையை அர்ப்பணிக்கிறேன். ஸகன புவனங்களுக்கும் பந்துமானவரே!ஸத், சித், ஆனந்தங்களுக்கு கடல் போன்றவரே!கருணையாள!எவனது ஹ்ருதயமாகிய வீட்டில் எப்பொழுதும் குடி கொண்டிருக்க வேணும்.

85.ஜலதி மதனதக்ஷே£ நைவ பாதால பேதீ

ந ச வனம்ருகயாயாம் நேவ லுப்த:ப்ரவீண: !

அசனகுஸும பூஷாவஸ்த்ரமுக்யாம் ஸபர்யாம்

கதய கதமஹம் தே கல்பயாநீந்து மௌலே !!

நான் பாதாளம் சென்று நாகஸர்ப்பங்களைக் கொண்டுவரவோ பாற்கடலைக் கடைந்து சந்திரனையும், விஷத்தையும் தோற்றுவிக்கவோ, வேட்டையாடி புலித்தோலையும், யானைத்தோலையும் கொண்டு வரவோ சக்தியில்லாதவன். அப்படி இருக்க உமக்குப் பிரியமான மேற்படி பொருட்களைத் தேடி எங்கனம் பூஜை செய்வேன்?

86.பூஜாத்ரவ்யஸம்ருத்தயோ விரசிதா:பூயாம் கதம் குர்மஹே

பக்ஷிதிவம் ந ச வா கிடித்வமபி ந ப்ராப்தம் மயா துர்லபம் !

ஜானே மஸ்தகம் அங்க்ரிபல்லவ முமாஜானே ந தேsஹம் விபோ !

சிவன் உதிக்கும் பூஜாத்ரவியங்களை சேகரிக்க முடியாது. அப்படி சேகரித்தாலும் எப்படி பூஜை செய்வேணன்?ஏனெனில் அவருடைய திருவுருவின் அடியும் முடியும் காண பிரம்மாவும், விஷ்ணுவும் கூட அன்னப்பறவையாகவும், பன்றியாகவும் ஆனார்களேயழிய கண்டறியவில்லையே!உமாபதியே!விபுவே!

அவற்றை நான் எப்படி அறிவேன்!

87.அசனம் கரலம் பணீ கலாபோ

வஸனம் சர்ம ச வாஹனம் மஹோக்ஷ: !

மம தாஸ்யஸி கிம் கிமஸ்தி சம்போ !

தவ பாதாம்பு ஜபக்திமேவ தேஹி !!

ஹேசம்போ! உமது ஆகாரம் விஷம்;ஆபரணம் பாம்பு;ஆடை தோல்;வாஹணமும் பெரிய விருஷபம்;எனக்கு வேண்டிய எதை நீர் கொடுப்பீர். என்ன தான் இருக்கிறது?ஹே சம்போ! உமது திருவடிகளில் அயராத பக்தியன்றையே கொடுத்தருள்வீராக!

88.யதா க்ருதாம்போநிஸேது பந்தன:

கரஸ்தலாத:க்ருதபர்வதாதிப: !

பவானி தேலங்கிதபத்மஸம்பவ:

ததா சிவார்சாஸ்தவ பாவநக்ஷம: !!

ஹே சிவ!ஸ்ரீ ராமரைப்போல் சமுத்திரத்தில் அணைகட்டியவனாயும், அகஸ்த்யரைப்போல் கைத்தலத்தால் மலையை அமுக்கியவனாயும், விஷ்ணுவின் நாபிகமலத்திலிருந்து உதித்த பிரம்மாவையும் மீறியவனாகவும் நான் ஆவேனாகில் உம்மை அர்ச்சிப்பதிலும், ஸ்தோத்திரம் செய்வதிலும், தியானம் செய்வதிலும் சக்தியுள்ளவனாவேன்.

89.நதிபிர்நுதிபிஸ்த்வமீச பூஜா-

விதிபிர்த்யான ஸமாதிபிர் ந துஷ்ட: !

தனுஷா முஸலேந சாச்மபிர்வா

வத தே ப்ரீதிகரம் ததா கரோமி !!

ஹே ஈஸ!நமஸ்காரங்களாலும், ஸ்தோத்திரங்களாலும், பூஜா முறைகளாலும், தியானம் ஸமாதி ஆகியவற்றாலும், மகிழ்ச்சியடைவதில்லை. உமக்குப் பிரியமானது எது என்று சொல்லும். அதன்படியே செய்கிறேன். வில்லாலா, உலக்கையாலா, கற்களாலா சந்தோஷமடைகிறீர்?

90.வசஸா சரிதம் சம்போ:

அஹமுத்யோக விதாஸு தேsப்ரஸக்த: !

மனஸாக்ருதிமீச்வரஸ்ய ஸேவே

சிரஸா சைவ ஸதாசிவம் நமாமி !!

ஹேசம்போ!உயர்ந்த யோகமுறைகளில் நான் பழக்கமில்லாதவன். வாக்கினால் சிவசரிதங்களைச் சொல்ல மட்டும் முடியும். மனதால் சிவமூர்த்திகளை சேவிக்கமுடியும். தலையினால் ஸதாசிவனை வணங்க முடியும். அதையே செய்கிறேன்.

91.ஆத்யாவித்யா ஹ்ருத்கதா நிர்கதாஸீத்

வித்யாஹ்ருத்யா ஹ்ருத்கதா த்வத்ப்ரஸாதாத் !

ஸேவே நித்யம் ஸ்ரீகரம் த்வத்பதாப்ஜம்

பாவே முக்தேர் பாஜனம் ராஜமௌலே !!

ஹே சந்த்ரமௌலே!வெகுநாட்களாக இருந்த அஜ்ஞானம் உமதருளால் தொலைந்துவிட்டது. நல்லதான ஜ்ஞானம் ஹ்ருதயத்தில் பதிந்துள்ளது. மங்களகரமான, மோக்ஷமளிப்பதுமான உமது திருவடித்தாமரையை நித்யம் ஸேவிக்கிறேன்.

92.தூரீக்ருதாகி துரிதாநி துரக்ஷராணி

தௌர்பாக்யது:க்க துரஹங்க்ருதி துர்வசாம்ஸி !

ஸாரம் த்வதீயசரிதம் நிதராம் பிபந்தம்

கௌரீச மாமிஹ ஸமுத்தர ஸத்கடா¬க்ஷ:!!

உமாபதே!பாபங்களும், கெட்டதலையெழுத்துக்களும், துரதிஷ்டம், துன்பம், கெட்ட அஹங்காரம் கெட்ட வார்த்தைகள் ஆகிய எல்லாம் தூரே தள்ளப்பட்டன. ஸாரம் மிகுந்த உமது சரிதத்தை இடைவிடாது பருகிக் கொண்டிருக்க என்னை இங்கு இப்போதே கைதூக்கி விடவேண்டுமே!

93.ஸோமகலாதரமௌலௌ கோமலகனகந்தரே மஹாமஹஸி

ஸ்வாமினி கிரிஜாநாதே மாமகஹ்ருதயம் நிரந்தரம் ரமதாம் !!

சந்திரக்கலையை முடியிற் சூடியவரும், கரிய மேகம்போல் கறுத்த கழுத்தையுடையவரும், எல்லாம்வல்ல பரம் பொருளாகியவருமான பார்வதீசனிடத்தில் எனது மனம் இடைவிடாது களித்திருக்கட்டும்.

94.ஸா ரஸநா தே நயனே தாவேவ கரௌ ஸ ஏவ க்ருதக்ருத்ய:!

யா யே யௌ பர்கம் வததீக்ஷேதே ஸதார்சத:ஸ்மரதி!!

பரமசிவனைப் பற்றி பேசுவதே நாக்கு, பரமசிவனைக் காண்கின்றவையே கண்கள், அவரை அர்ச்சிக்கின்றவையே கைகள், எவன் ஒருவன் அவரை ஸ்மரிக்கின்றானோ அவனே வாழ்க்கைப் பயன் பெற்றவன்.

95.அதிரும்துலௌ மம சரணா வதிகடினம் தே மனோ பவாநீச !

இதி விசிகித்ஸாம் ஸந்த்யஜ சிவ கதமாஸீத் கிரௌததாவேச: !!

சிவ!பவாநீபதே!உமக்கு ஒரு சந்தோஷம் எழலாம் - எனக்கு காலடிகள் மிகவும் மென்மையானவை. இவன் மனமோ கடினமானதாயிற்றே - என்று (எவ்வாறு கால்கள் பதிக்க முடியும் என்று) அப்படியானால் மலைப்பாறையில் சஞ்சரித்தது எவ்வாறு ?

96.தைர்யாங்குசேன நிப்ருதம் ரபஸாதாக்ருஷ்ய பக்திச்ருங்கலயா !

புரஹர சாணாலாநே ஹ்ருதயமதேசம்பதான சித்யந்த்ரை : !!

புரமெரித்தசிவனே!எனது ஹ்ருதயமாகிய மதயானையை ஞானமாகிய யந்த்ரத்தின் மூலம் தைர்யம் என்ற அங்குசம் கொண்டு சடாரென்று இழுத்து பக்தி என்ற சங்கலியால் திருவடி என்ற கட்டுத்தறியில் கட்டிப் போடுவீராக!

97.ப்ரசரத்யபித:ப்ரகல்பவ்ருத்யா மதவானேஷ மன:கரீ கரீயான் !

பரிக்ருஹ்ய நயேன பக்திரஜ்வா பரமஸ்தாணுபதம் த்ருடம் நயாமும் !!

ஹே பரமனே!மதம் பிடித்த என் மனமாகிய இந்த யானை அடக்கமுடியாதபடி எங்கு பார்த்தாலும் சுற்றி அலைகிறது. இதை நயமாக பக்தி என்ற கயிற்றால் கட்டி வசமாக்கி நிலையான கட்டுத்தறிக்கு இழுத்துச் செல்வீராக!

98.ஸர்வாலங்காரயுக்தாம் ஸகலபதயுதாம் ஸாதுவ்ருத்தாம் ஸுவர்ணாம்

ஸத்பி:ஸம்ஸ்தூயமானாம் ஸரஸகுணயுதாம் லக்ஷிதாம் லக்ஷணாட்யாம் !

உத்யத் பூஷாவிசேஷாம் உபகதவிநயாம் த்யோதமானார்த்தரேகாம்

கல்யாணீம் தேவகௌரீப்ரிய மம கவிதாகன்யகாம் தவம் க்ருஹாண: !!

ஹேதேவ!கௌரீப்ரிய! எனது மங்கலகரமான கவிதைக் கன்யகையை பாணிக்ரஹணம் செய்து கொள்வீராக! அக்கவிதைகன்யகை, எல்லா அலங்காரங்களுடன் கூடியவள், நல்ல வ்ருத்தம் பொருத்தியவள், நல்லோரால் பாராட்டப்பட்டவள், இனிய குணங்கள் கொண்டவள், உத்தமமானவள், சிறந்த லக்ஷணங்கள், விநயம், அர்த்தரேகை, மங்கல வடிவம் இவையனைத்தும் நிரம்பியவள்.

99.இதம் தே யுக்தம்வா பரமசிவ காருண்யஜலதே

கதௌ திர்யக்ரூபம் தவ பதசிரோதர்சனதியா !

ஹரிப்ரஹ்மாணௌ தௌ FM புவி சரந்தௌ ச்ரமயுதௌ

கதம் சம்போ ஸ்வாமின் கதய மம வேத்யோஸி புரத: !!

பரமசிவ!காருண்யக்கடலே!உம்முடைய அடிமுடிகளைக்காண வேண்டுமென்ற கருத்துடன் பிரம்மாவும் விஷ்ணுவும் பறவையாகவும் மிருகமாவுமாகி ஆகாயத்திலும், பூமியிலும் அலைந்து கலைத்தவர்களாக ஆய்விட்டனரே! ஹே ஸ்வாமின்!என் முன் அவ்வளவு சுலபமாக கண்டறிதற்கு ஏற்றவராக எப்படி இருப்பீர்?இது உமக்கு பொருத்தம்தானா?

100.ஸ்தோத்ரேணால மஹம்ப்ரவச்மி நம்ருஷா தேவா விரிஞ்சாதய:

ஸ்துத்யாநாம் கணநா ப்ரஸங்கஸமயே த்வாமக்ரகண்யம் விது: !

மாஹாத்ம்யாக்ர விசாரணப்ரகரணே தானா துஷஸ்தோமவத்

தூதாஸ்த்வாம் விதுருத்தமோத்தம பலம் சம்போ பவத்ஸேவகா: !!

ஸ்தோத்ரம் செய்துப் பயனில்லை. நான் பொய்யும் சொல்லவில்லை. பிரம்மன் முதலிய தேவர்கள் ஸ்தோத்ரம் செய்யத் தக்கவரின் எண்ணிக்கை தொடங்கியபொழுது உம்மைத்தான் முதன்மையானவராக கூறுகின்றார். உமது அடியார்கள் உயர்பதவிக்குரிய தேவரைப்பற்றி விசாரிக்கும்பொழுது தான்யத்துடன் கூடிய உமிக்கொத்துகள் போல் மற்ற தேவர்கள் ஒதுக்கப்பட்டனர். ஹே சம்போ!பக்தர்கள் உம்மையே மிக மிக உயர்ந்த தான்யம் போல மோக்ஷப்பயனாகக் கருதுகிறார்கள்.

சிவானந்தலஹரீ முற்றிற்று.