ப்ரௌடானுபூதி
1.ப்ரௌடப்பௌரட நிஜானுபூதி கலித த்வைதேந்த்ரஜாலோகுரு:
கூடம் கூடமகௌகதுஷ்ட குதியாம் ஸ்பஷ்டம்ஸுதீசாலிநாம் !
ஸ்வாந்தே ஸம்ய கிஹானுபூதமபி ஸச்சிஷ்யாவபோதாய தத்
ஸத்யம் ஸம்ஸ்ம்ருதவான் ஸமஸ்தஜகதாம் நைஜம் நிஜாலோகநாத் !!
மிகச்சீரிய முறையில் ஆத்மானுபவம் பெற்று, அதன் மூலம் த்வைதம் என்ற மாயை அகன்று தூயவராய் குரு விளக்குகிறார். அவர், தான் அனுபவித்த உண்மையான அந்த ஆத்மானுபவத்தை நல்ல சிஷ்யர்களுக்கு அறிவுருத்த வேண்டி நினைத்துப்பார்க்கிறார். அத்மானுபவம் நல்ல அறிவாளிகளுக்குத் தெளிவானதே. ஆனால் பாபங்கள் மேலிட்டு அறிவு மங்கியவருக்கு அது தெளிவாகாததுதான். தூய மனதில் அந்த ஆத்மானுபவம் தெளிவானதே.
2.த்வைதம் மய்யகிலம் ஸமுத்திதமிதம் மித்யா மன:கல்பிதம்
தோயம் தோயவிவர்ஜிதே மருதலே ப்ராந்த்யைவ ஸித்தம் நஹி I
யத்யேவம் கலு த்ருச்யமேததகிலம் நாஹம் நவா தன்மம
ப்ரௌடானந்த சிதேக ஸன்மயவபு:சுத்தோsஸ்மி அகண்டோsஸ்ம்யஹம் II
அனைத்து இரட்டைத் தோற்றங்களும் மனதளவில் தோன்றியவையே;உண்மையில்லை. மனமயக்கத்தால்தான் தண்ணீரில்லாத மருபூமியில் தண்ணீர் இருப்பதாக தெரிகிறது. இல்லையெனில் கண்ணுக்குப் புலப்பட வேண்டுமே. நானும் அதுவல்ல, அதுவும் எனதல்ல. உண்மையில் ஸத்-சித் ஆனந்த வடிவமான அகண்ட -சுத்த ஆத்மாவாகவே நான் இருக்கிறேன்.
3.தேஹோநாஹ மசேதநோsயமனிசம் குட்யாதிவந்நிச்சிதோ
நாஹம் ப்ராணயோsபி வா த்ருதி த்ருதோ வாயுர்யதா நிச்சித:
ஸோsஹம் நாபி மனோமய:கபிசல:கார்பண்ய துஷ்டோ நவா
புத்திர் புத்தகுவ்ருத்திகேவ குஹநா நாஜ்ஞானமந்தம் தம: II
'ஆத்மா'என்பது என்ன?அது சுவர் போன்று உணரத்தக்கதும் ஆனால் உணர்வில்லாததுமான உடல் ஆத்மா அன்று;தோல் பையில் அடைக்கப்பட்டு அரியத்தக்க காற்று போல் ப்ராணனும் ஆத்மா அல்ல. குரங்குபோல் ஒரிடத்தில் நில்லாததுஷ்டமானதும் ஆத்மா அன்று. கெட்டதைத் தெரிந்து கொள்ளும் சூழ்ச்சியோ, கண்மூடித்தனமான அஜ்ஞானமோ கூட ஆத்மா அன்று.
4.நாஹம் காதிரபி ஸ்புடம் மருதல ப்ராஜத்பய:ஸாம்யத:
தேப்யோ நித்யவிலக்ஷணோ sகிலத்ருசி:ஸெளரப்ரகாசோ யதா !
த்ருச்யை:ஸங்கவிவர்ஜிதோ ககனவத் ஸம்பூர்ண ரூபோsஸ்ம்யஹம்
வஸ்துஸ்தித்யனுரோததஸ்த்வஹமிதம் வீச்யாதிஸிந்துர் யதா II
மருபூமியில் தோன்றும் தண்ணீர் காட்சியை ஒத்திருப்பதால் ப்ருதிவி முதலிய பஞ்சபூதங்களும் ஆத்மா அன்று. பின், எல்லாவற்றையும் காண்கிற சூர்ய ஒளி போன்று முன்கூறியவற்றினின்று வேறுபட்டதே ஆத்மா. கண்களுக்குப் புலப்படும் உலகப் பொருட்கள் எதுவானாலும் தேராமல் ஆகாயம் போல் முழுப்பொலிவுடன் இருப்பதே ஆத்மா. உண்மையில் சமுத்திரமும், அதன் அலைகளும் வெவ்வேறு இல்லையினும், சமுத்திரத்தைச் சார்ந்ததே அலை. அலையைச் சார்ந்ததல்ல சமுத்திரம்.
5.நிர்த்வைதோsஸ்மி அஹமஸ்மி நிர்மலசிதாகாசோsஸ்மி பூர்ணோsஸ்ம்யஹம்
நிர்தேஹோsஸ்மி நிரிந்த்ரியோsஸ்மி நிதராம் நிஷ்ப்ராண வர்கோsஸ்ம்யஹம் I
நிர்முக்தாசுபமானஸோsஸ்மி விகலத் விஜ்ஞான கோசோsஸ்ம் யஹம்
நிர்மாயோsஸ்மி நிரந்தரோsஸ்மி விபுலப்ரௌட-ப்ரகாசோsஸ்ம்யஹம் II
ஆத்மா இடண்டற்றது, தூய அறிவு (ஞானம்) வடிவானது, முழுமையானது. உடலற்றது. உடல் உருப்புகளுமில்லாதது. பிராவர்கமும் இல்லை ஆத்மா. தூ அந்த:கரணமாகவும், விஞ்ஞான கோசமாகவுமில்லை ஆத்மா. மாயை நீங்கியது. தொடரானது, பெரும் ஒளியேயானது ஆத்மா.
6.மத்தோsந்யத்ர U கிஞ்சிதஸ்தி யதி சித்பாஸ்யம் ததஸ்தன் ம்ருஷா
குஞ்ஜாவஹ்நிவதேவ ஸர்வகலநா-திஷ்டான பூதோsஸ்ம்யஹம் I
ஸர்வஸ்யாபி த்ருகஸ்ம்யஹம் ஸமரஸ:சாந்தோஸ்மி அபாபே ஸ்ம்யஹம்
பூர்ணோsஸ்மி த்வயவர்ஜிதோsஸ்மி விபுலா-காசோsஸ்மி நித்யோsஸ்ம்யஹம் II
ஆத்மாவன்றி வேறெதுவும் இல்லை. அப்படி இருந்தால் மஞ்சாடியில் b தெரிவது போல் அது பொய்யே. ஆகவே எல்லாவித தோற்றங்களுக்கும் இடம் கொடுக்கும் ஆத்மாதான் எங்கும் உள்ளது. சாந்தமாயும், தீது அற்றதாயும், பூர்ணமாயும், நித்யமாயும், இரண்டு அற்றதாயும் எங்கும் நிறைந்த, பரந்த ஆகாசமாயும் உள்ளதே ஆத்மா.
7.மய்யஸ்மின் பரமார்த்தகே ச்ருதிசிரோ வேத்யே ஸ்வதோ பாஸநே
காவா விப்ரதிபத்திரேத தகிலம் பாத்யேவ யத்ஸந்நிதே: I
ஸெளரா லோக வசாத் ப்ரதீதமகிலம் பச்யந்த தஸ்மின் ஜன:
ஸந்திக்தோsத்யத ஏவ கேவலசிவ:கோபி ப்ரகாசோஸ்ம்ஹம் II
வேதாந்தம் வாயிலாக அறியத் தகுந்தது ஆத்மா, அது தானே பிரகாசிப்பது, உண்மையானது. அது இருப்பதால் தான் மற்ற கரணங்கள் இயங்குகின்றன. சூரிய வெளிச்சத்தில் காணக் கிடைக்கும் அனைத்தும் சந்தேகமின்றி நம்பப்படுவது போல் சிவமொன்றேயான பேரொளியாய் இருப்பது ஆத்மா.
8.நித்யஸ்பூர்திமயோsஸ்மி நிர்மலஸதா-காசோஸ்மி சாந்தோsஸ்ம்யஹம்
நித்யானந்தமயோsஸ்மி நிர்கதமஹா-மோஹாந்தகாரோs ஸ்மயஹம் I
விஜ்ஞாதம் பரமார்த தத்வமகிலம் நைஜம் நிரஸ்தாசுபம்
முக்தப்ராப்ய மபாஸ்தபேதகலநா கைவல்ய ஸம்ஜ்ஞோsஸ்ம்யஹம் II
எப்பொழுதும் பிரகாசிப்பது, தூய ஆகாசம் போன்று சலனமற்றது ஆத்மா. மோஹமாகிய இருட்டு அகன்ற நித்யானந்த மயமானது அது. வேண்டாதது எல்லாம் நீங்கப் பெற்ற பரமார்த்தத்வம் அதுவே. வீடுபேறு பெற்றவர் நாடுவது. வேற்றுமை கலவாத கைவல்யம் எனக் கூறத்தக்கதும் அதுவே.
9.ஸ்வப்னத்வைத வதேவ ஜாக்ரதமபி த்வைதம் மனோமாத்ரகம்
மித்யேத்யேவ விஹாய ஸச்சிதமல-ஸ்வாத்மைக ரூபோsஸ்ம்யஹம் I
யத்வா வேத்ய மசேஷமேத தநிசம் மத்ரூபமேவேத்யபி
ஜ்ஞாத்வா த்யக்தமருன் மஹோததிரிவ ப்ரௌடோ கபீரோsஸ்ம்யஹம் II
மனதில் மட்டும்படியும் இந்த வேற்றுமையை, ஸ்வப்ன காலத்திய வேற்றைமையாகப் பொய்யெனத் தள்ளி, ஸதி, சித், ஆனந்த மயமானது ஆத்மா என அறிய வேண்டும். அல்லது நானே அகிலமும் என அறிந்து பாலைவனத்தைக் கடலாக எண்ணாமல் முற்றிலும் முற்றிய, ஆழ்ந்த ஞானமே ஆத்மா என்றவாறு தெளிய வேண்டும்.
10.கந்தவ்யம் கிமிஹாஸ்தி ஸர்வபரி- பூர்ணஸ்யாப்ய கண்டாக்ருதே:
கர்தவ்யம் கிமிஹாஸ்தி நிஷ்கிரிய-தநோர்மோ¬க்ஷக ரூபஸ்ய மே I
நிர்த்வைதஸ்ய நஹேயம ன்யதபிவா நோ வாப்யுபாயாந்தரம்
சாந்தோsத்யாஸ்மி விமுக்ததோய-விமலோ மேகோ யதா நிர்மல: II
முழுமையாக, எங்கும் நிரம்பியுள்ள ஆத்மா இனி சென்று அடைய வேண்டிய இடமொன்றுமில்லை. செயலற்ற, மோக்ஷமே உருவான ஆத்மாவுக்கு இனி செய்ய வேண்டியதும் எதுவுமில்லை. வேற்றுமையே இல்லாதபோது விட வேண்டிய வேறொன்று ஏது?நீருண்ட மேகம், நீரைப் பொழிந்த பின், மாசற்ற, தூய அமைதியுடனிருப்பதே ஆத்மாவின் நிலையும் ஆகும்.
11.கிம் ந:ப்ராப்தமித:புரா கிமதுநா லப்தம் விசாராதிநா
யஸ்மாத் தத்ஸுகரூபமேவ ஸததம் ஜாஜ்வல்யமானோsஸ்ம்யஹம்
கிம் வாபேக்ஷ்யமிஹாபி மய்யதிதாரம் மித்யாவிசாராதிகம்
த்வைதா த்வைத விவர்ஜிதே ஸமரஸே மௌனம் பரம் ஸம்மதம் II
பின்னம் பின்னம் ஆராய்வதினால் முன் முடிவானதும் தற்போது முடிவானதும் ஒன்றுதானே!ஏனெனில் அது எப்பொழுதும் ஆனந்தமயமானதுதானே. வீணான ஆராய்ச்சி தேவையில்லையே. வேற்றுமையும் - வேற்றுமையின்மையும் ஒத்துப் போய்விட்டால் அங்கு மௌனம்தானே சிறப்பானது ஏற்கத்தக்கது!
12.ச்ரோதவ்யம் சகிமஸ்தி பூர்ணஸுத்ருசோ நித்யாபரோக்ஷஸ்ய மே
மந்தவ்யம் ச நமேஸ்தி கிஞ்சிதபிவா நி:ஸம்சய ஜ்யோதிஷ: I
த்யாத்ரு த்யேய விபேதஹாநிவபுஷோ ந த்யேயமஸ்த்யேவ மே
ஸர்வாத்மைக மஹாரஸஸ்ய ஸததம் நோ வா ஸமாதிர் மம II
ச்ரோதவ்யோ - மந்தவ்யோ - நிதித்யாஸித்வய:-என்றெல்லாம் சொல்வார்கள்தான். ஆனால் நித்யம் நன்றாக ஆத்ம ஞானம் படைத்தவனுக்கு இனி கேட்கப்பட வேண்டிய தொன்றுமில்லையல்லவா?அதுபோல், சந்தேஹமில்லாமல் பேரொளி கண்டவனுக்கு அது பற்றிய மனமும் தேவையில்லையே. தியானிப்பவன் வேறு - தியானிக்கப்பட வேண்டியது வேறு எந்த நிலைதாண்டியவனுக்கு தியானமும் தேவையில்லைதானே!முடிவாக எல்லாம் ஒரே ஆத்மா என்ற பேரானந்தம் கண்டவனுக்கு ஸமாதி நிலையும் வேண்டியதில்லைதான்.
13.ஆத்மாநாத்மவிவேசநாபி மம நோ வித்வத்க்ருதா ரோசதே
அநாத்மா நாஸ்தி:ய தஸ்தி கோசரவபு:கோ வா விவேக்தும் க்ஷமீ I
மித்யாவாத விசாரசிந்தனமஹோ குர்வந்த்ய த்ருஷ்டாத்மகா
ப்ராந்தா ஏவ ந பாரகா த்ருடதிய:தூஷ்ணீம் சிலாவத் ஸ்திதா: II
வித்வான்கள் செய்யும் ஆத்மா - அநாத்ம ஆராய்ச்சியும்கூட எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. ஏனெனில் அநாத்மா என்பது இல்லவே இல்லை எனலாம். அப்படி இருந்தால் தெளிவாக அதை பகுத்துக் கூற யார் தான் இயலும். ஆத்ம தர்சனமில்லாதவர்கள் வீணானவாத - பிரத்வாசத் சண்டையில் விழுந்துள்ளளர். ஆத்ம தர்சனம் பெற்றவர். முடிவு கொண்டவர் பேசாமல் சிலைபோல் அல்லவா ஆகிவிடுகின்றனர்.
14.வஸ்துஸ்தித் யனுரோததஸ்த்வஹ மஹோ கஸ்சித் பதார்த்தோ நசா
பேsயவம் கோsபிவிபாமி ஸந்தத த்ருசிர்வாங்மானஸாகோசர: I
நிஷ்பாபோsஸ்ம்யபயோஸ்ம்யஹம் விகதது-சங்கா கலங்கோsஸ்ம்யஹம்
ஸம்சாந்தானுபமான சீதல மஹ:ப்ரௌட ப்ரகாசோsஸ்ம்யஹம் II
உண்மையைச் சொல்லுமிடத்தில், இந்த ஜீவாத்மாவும் ஒரு பதார்த்தமில்லைதான், எனினும், சொல்லுக்கும் மனதிற்கும் எட்டாத, எப்பொழுதும் அறிவான வடிவிலே விளக்கிக்கொண்டிருக்கிறது. அங்குபாபத்திற்கோ பயத்திற்கோ ஸந்தேகவிகல்பங்களுக்கோ இடமில்லை. பின் நிகரற்ற தணிவும், பேராற்றலும் கொண்ட ஒளிமயமாக உள்ளது.
15.யோsஹ்ம் பூர்வமித:ப்ரசாந்தகலன:சுத்தோsஸ்மி புத்தோsம்யஹம்
யஸ்மான் மத்த இதம் ஸமுத்திதமபூத் ஏதன்மயா தார்யதே I
மய்யேவ ப்ரலயம் ப்ரயாதி நிரதி ஷ்டானாய தஸ்மை ஸதா
ஸத்யானந்த சிதாத்மகாய விபுலப்ரஜ்ஞாய மஹ்யம் நம: II
எந்த ஆத்மா முன்பிருந்ததோ அதுவே இப்பொழுதும் சுத்த புத்த வடிவத்தில் உள்ளது. எந்த ஆத்மாவில் தோன்றியதோ ஏதோ ஒன்று, அதுவே இப்பொழுதும் தரிக்கப்பட்டு நிற்கிறது. அதுவே தக்க சமயத்தில் ஆத்மாவிலேயே ஒடுங்கியும் போகிறது. அத்தகைய ஸத்ய ஆனந்த ஜ்யான மயமான, எதையும் சார்ந்திராத பேரறிவுக்கு ஆத்மாவுக்கு நமஸ்காரம்.
16.ஸத்தாசித்ஸுக ரூபமஸ்திஸததம் நாஹம் ச ந த்வம் ம்ருஷா
நேதம் வாபிஜகத் ப்ரத்ருஷ்டமகிலம் நாஸ்தீதி ஜாநீஹி போ: I
யத்ப்ரோக்தம் கருணாவசாத் த்வயி மயா தத்ஸத்யமேதத்ஸ்புடம்
ச்ரத்தத்ஸ்வானக சுத்த புத்திரஸிசேத் மாsத்ராஸ்து தே ஸம்சய: II
ஸத்-சித்-ஆனந்தம் அன்னியில் நான் என்பதும் c என்பதும் இல்லை. அது பொய். இந்த உலகும் இல்லை. காணும் காட்சியும் இல்லை என்று அறிவாய். கருணை கூர்ந்து நான் கூறியதெல்லாம் உண்மையெனக்கொள்வாய். c சுத்தமான அறிவு படைத்தவனாயிற்றே!உனக்கேன் வீண் ஸந்தேகம்?
17.ஸ்வாரஸ்யைகஸுபோதசாருமஸே ப்ரௌடானுபூதி ஸத்வியம்
தாதவ்யா நது மோஹதக்தகுதியே துஷ்டாந்தரங்காயச I
யேயம் ரம்யவிதர்பித - உத்தமசிர:ப்ராப்தா சகாஸ்தி ஸ்வயம்
ஸா சேத்-மர்கட ஹஸ்ததேசபதிதா கிம் ராஜதே கேதகீ II
இந்த ப்ரௌடானுபூதி என்ற சீரிய உயர்வு, தன்னியல்பான தூய மனதுடையவருக்கே வழங்கப்பட வேண்டும். அன்றி மோஹம் கவிழ்ந்த புத்தியும், தீய எண்ணமும் கொண்டவருக்கு வழங்கலாகாது. தாழம்பூ, கர்வம் தலையெடுக்காத, சீரிய தலையில்தானே அழகாக இருக்கும். அதுவே குரங்கின் கைத்தலத்தில் போய்விட்டால் விளங்காததன்றோ!
ப்ரௌடானுபூதி முற்றிற்று.