த்ரிபுரஸுந்தரீவேதபாதஸ்தவம் 1 வேதபாத ஸ்தவம் வக்ஷ்யே தேவ்யா:ப்ரியசிக்ர்ஷயா யதாமதி மதிம் தேவ:தந்நோதந்தி:ப்ரசோதயாத் உலக நன்மை செய்ய வேண்டி தேவியின் வேதப

த்ரிபுரஸுந்தரீவேதபாதஸ்தவம்

1.வேதபாத ஸ்தவம் வக்ஷ்யே தேவ்யா:ப்ரியசிக்ர்ஷயா

யதாமதி மதிம் தேவ:தந்நோதந்தி:ப்ரசோதயாத்

உலக நன்மை செய்ய வேண்டி தேவியின் வேதபாத ஸ்தவத்தை அறிவிற்கிசைந்தவாறு சொல்லப்போகிறேன். தந்திதேவன் (கணபதி) எனது புத்தியை உக்குவிக்கவேண்டும்.

2.அகிஞ்சித்கர கர்மப்ய:ப்ரத்யாஹ்ருத்ய க்ருபாவசாத்

ஸுப்ரஹ்மண்ய:ஸ்துதாவஸ்யாம் தந்ந:ஷண்முக:ப்ரசோதயாத்

தயவுடன் ஸ்ரீசுப்ரஹ்மண்யர் ணான கர்மாக்களிலிருந்து இழுத்து இந்த ஸ்தோத்திரத்தில் என்னை ஊக்குவிக்க வேண்டுமே.

3.அகராதிக்ஷகாராந்தவர்ணாவயவசாலிநீ

ணாபுஸ்தகஹஸ்தாவ்யாத் ப்ரணோ தே ஸரஸ்வதீ

அகாரம் முதல் க்ஷகாரம் வரையிலான வர்ணங்களின் அடையாளங்கொண்ட ணை, புஸ்தகம் இவற்றை கையிலுடைய ஸரஸ்வதீ தேவி எங்களை காக்க வேண்டும்.

4.யா வர்ணபத வாக்யார்த்த கத்ய பத்ய ஸ்வரூபிணீ

வாசி நர்தயது க்ஷிப்ரம் மேதாம் தே ஸரஸ்வதீ

எழுத்து, சொல், வாக்யம், அர்த்தம், கத்யம், பத்யம், ஆகிய பல தோற்றங்கள் கொண்ட ஸரஸ்வதீ தே என் வார்த்தையில் புத்தியை நடனமாடச் செய்யட்டும்.

5.உபாஸ்யமாநா விப்ரேந்த்ரை:ஸந்த்யாஸுசதிஸ்ருஷ்வபி

ஸத்ய:ப்ரஸீதமே மாத:ஸந்த்யா வித்யே ஸரஸ்வதி

மூன்று ஸந்த்யாகாலங்களிலும், ப்ரேமணோத்தமர்களால் உபாஸிக்கப்படும் ஸந்த்யா வித்யையான ஸரஸ்வதீ!எனக்கு உடன் அருள்பாலிப்பாயாக.

6.மந்தா நிந்தாலோலுபா-ஷிஹம் ஸ்வபாவாத்

ஏதத்ஸ்தோத்ரம் பூர்யதே கிம்மயேதி

மாதே பீதிர்ஹேமதே த்வாத்ருசாநாம்

ஏஷாநேத்ரீதாதஸா ஸ¨ந்ருதாநாம்

ஹே புத்தியே!நீ குறைவுள்ளதாலும், பிறரை இகழ்வதை இயற்கையாக நேசிப்பதாலும் இந்த ஸ்தோத்ரம் எப்படி முடிக்கப்படும் என்று பயப்பட வேண்டாம். உன்னை போன்றவர்களை நன்நெறிபடுத்த இந்த தேவி முனைப்புடன் முன் நிற்கிறாளே!

7.தரங்க ப்ருகுடீ கோடி பங்க்யா தர்ஜயதே ஜராம்

ஸுதாமயாய சுப்ராய ஸிந்தூநாம் பதயே நம:

தனது அலைகளாகிய புருவநெறித்தலால் தள்ளாத வயதை கடித்து கொள்ளும் சுத்த அம்ருதக் கடலுக்கு என் நமஸ்காரங்கள்.

8.தஸ்ய மத்யே மணித்ப:கல்பகாராம பூஷித:

அஸ்துமே லலிதாவாஸ:ஸ்வஸ்திதா அபயங்கர :

அந்த அம்ருதக் கடலின் நடுவில் கல்பக மரச்சோலை சூழ்ந்த மணித்பம் என்ற அந்த அழகிய லலிதா தேவியின் தங்குடம் எனக்கு அபயம் அளித்து நல்லனவற்றை (க்ஷேமத்தை) அருளுவதாக அமையட்டும்.

9.கதம்பரீமஞ்ஜரீநிர்யத்வாருணீ பாரணோன்மதை:

த்விரேபைர்வர்ணனீயாய வநாநாம் பதயே நம:

கதம்பப் பூங்கொத்திலிருந்து சொட்டும் தேனைப் பருகி மதங்கொண்ட வண்டினங்கள் பாடும் சீர்குக் காட்டிற்கு நமஸ்காரம்.

10.தத்ரவப்ராவலீலீலா ககநோல்லங்கிகோபுரம்

மாத:கௌதூஹலம் தத்யாத் ஸம்ஹார்யம் நகரம்தவ

அந்த கதம்ப வனத்தில் அடுக்கு அடுக்காக அமைந்ததும், வானமளாவியதுமான கோபுரத்தையுடைய முழுமையானதும் அழகியமானதும் உனது நகரம், ஹே அன்னையை!குதூகலமளிக்கட்டும்!

11. மகரந்தஜரீ மஜ்ஜந்லிந்தகுல ஸங்குஸாம்

மஹாபத்மாடம் வந்தே யசஸா ஸம்பரீவ்ருதாம்

மகரந்தப் பெருக்கில் மயங்கி மூழ்கிய தேன்வண்டுக்கூட்டம் ளிரும் புகழ்க்க பத்மாடவியைப் போற்றுகிறேன்.

12.தத்ரைவ சிந்தாமணி தோரணார்சிபி:

விநிர்தம் ரோபிதர்த்னச்ருங்கம்

பஜே பவாநீ பவநாவதம்ஸம்

ஆதித்யவாணம் தமஸ:பரஸ்தாத்

அந்த பத்மாடவியில்தானே நினைத்ததைக் கொடுக்கவல்ல சிந்தாமணியின் எழில்கு ஒளியால் நிர்மாணித்த, இரத்தின கலசம் பதித்த பவானியின் அரண்மனை உள்ளது. அது இருட்டிற் (அஞ்ஞானத்திற்) கப்பால் சூர்ய பிரகாசமாய் உள்ளது அதை நான் உபாஸிக்கிறேன்.

13.முனிபி:ஸ்வாத்மலாயாய யத்சக்ரம்ஹ்ருதிஸேவ்யதே

தத்ரபச்யா புத்யா ததக்ஷரே பரமே வ்யோமன்

முனிவர்கள், தங்கள் ஆத்மஸ்வரூபம் அறிய வேண்டிய ஹ்ருதயத்தில் எந்த சக்ரத்தை சேவிக்கிறார்களோ அதை ப்ரணாவாகாரமான ஆகாவெளியில் அறிவால் காண்கிறேன்.

14. பஞ்ச ப்ரஹ்மமயோ மஞ்ச:தத்ர யோ பிந்துமத்யக:

தவகாமேசிவாஸோ-sயமாயுஷ்மந்தம் கரோதுமாம்

அங்க பிந்து மத்யத்தில் ஐந்து ப்ரஹ்மமேயான மஞ்சத்தில், ஹே காமேச்வரி! c வசிப்பது என்னை நீடூழிகாலம் ஆயுஷ்மானாகக் காக்க வேண்டியல்லவா!

15.நாநாரத்னகுலுச்சாலீ காந்திகிம்மீரிதோதரம்

விம்ருசாவிதாநம்தே அதிச்லக்ஷ்ணமதிலோமசம்

பற்பல ரத்னக் குவியல்கள் காந்தியினால் பலநிறமாக்கப்பட்ட நடுபாகங் கொண்ட அந்த உனது விமானத்தை உன்னிப் பார்க்கிறேன். அது க வழவழப்பாகவும், நேர்த்தியான ரோம வரிசையுடையதாகவும் உள்ளது.

16.பர்யங்கதஸ்போபரிதர்சநீயம்

ஸபாணசாபாங்குச பாசபாணிம்

அசேஷபூஷா ரமணீயமீடே

த்ரிலோசனம் நீலகண்டம் ப்ரசாந்தம்

கட்டிலின் மீது அமைந்த தல்பத்தில் அமர்ந்த அழகிய முக்கண்ணனை, சாந்தமூர்த்தியான நீல கண்டனை வழிபடுகிறேன். அவர் அனைத்து ஆடையாபரணங்களாலும், பாணத்துடன் வில், அங்குசம், பாசம், இவற்றாலும் காட்சியளிக்கிறவராக இருக்கிறார்.

17.ஜபாருணம் சந்த்ரகலாலலாம்ம்

உத்வேலலாவண்ய கலாபிராமம்

காமேச்வரம் காமசராஸ நாங்கம்

ஸமஸ்தசாக்ஷிம் தமஸ:பரஸ்தாத்

மேலும் அவர் ஜடை தரித்து, சந்திரப் பிறையுமனிந்து, அளிவில்லாத அழகு படைத்த காமேச்வரராக காட்சியளிக்கிறார். மனிமத வில்லை அடையாளமாகக் கொண்டிருக்குமவர் அஜ்ஞான இருளினப்பால் ஸர்வ ஸாக்ஷியாகவும் விளங்குகிறார்.

18.தத்ர காமேசவாமாங்கே கேலந்தீமலிகுந்தலாம்

ஸச்சிதானந்தலஹரீம் மஹாலக்ஷ்மீமுபாஸ்மஹே

அங்கே காமேச்வரரின் இடது தொடையில் ஸத்-சித் ஆனந்தஸ்வரூபிணியான மஹாலக்ஷ்யை உபாஸிக்கிறேன்.

19.சாருகோரோசனாபங்கஜம்பாலிதகனஸ்தனீம்

நமா த்வாமஹம் லோகமாதரம் பத்மமாலினீம்

நறுமண கோரோசனைக் குழம்பு பூசப்பட்ட கனமான ஸ்தனங்கள் கொண்ட தாமரை மாலைகளுடன் விளங்கும் உலக அன்னையான உன்னை வணங்குகிறேன்.

20.சிவேநமந்நிர்ஜரகுஞ்ஜராஸுர-

ப்ரதோலிகா மௌலி மரீசி CH:

இதம் தவ க்ஷ£லந ஜாத ஸெளபகம்

சரணம் நோ லோகேஸுதிதாம்ததாது

ஹே மங்கலஸ்வரூபிணீ!நமஸ்கரிக்கும் தேவர்கள் மற்றும் குஞ்ஜராஸுரனின் பிரதானதி போன்ற தலைவரிசையின் அலைகளால் அலம்பப்பெற்று அழகேறிய இந்த உனது சரணம் எங்களுக்கு உலகில் நல்வாழ்க்கையை அளிக்கட்டும்.

21.கல்பஸ்யாதௌ காரணேசாநபித்ரீந்

ஸ்ரஷ்டும் தேவி தாரீந் குணாநாததாநாம்

ஸேவே நிதயம் «ஸ்ரீயஸே பூயஸே த்வாம்

அஜாமேகாம் லோஹித சுக்ல க்ருஷ்ணாம்

யுகத்தின் தொடக்கத்தில் மூன்று காரணமூர்த்திகளைத் தோற்றுவிக்க மூன்று குணங்களைக் கொண்டிருக்கிற உன்னை குந்தசிரேயஸ் கிடைப்பதற்காக எப்பொழுதும் உன்னை சேவிக்கிறேன். c பிறப்பில்லாத ஒருவளே முக்குனத்தோற்றமாகி சிவப்பு, வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்கள் கொண்டவளாகத் தோன்றுகிறாயே!

22.கேசோத்புதைரத்பூதாமோதபூரை:

ஆசாப்ருந்தம் ஸாந்த்ர மாரூரயந்தீம்

த்வாமான்ம்ய த்வத்ப்ரஸாதாத்ஸ்வயம்பூ :

அஸ்மான்மாயீ ஸ்ருஜதே விச்வமேதத்

கேசங்களினின்று வெளியாகும் அத்புதமான வாஸனைப் பெருக்கால் திசைகளை நெகிழும்படி நிறப்புகின்ற உன்னை வணங்கியல்லவா உன்கருணையால் பிரம்மதேவன் எங்களையும் இவ்வுலகையும் சிருஷ்டிக்கிறார்.

23.அர்தோன்மீலத்யௌவநோத்தாமதர்பாம்

த்வ்யாகல்பைரர்பயந்தீம் நயூகான்

தேவி த்யாத்வா த்வாம் புரா கைட பாரி:

விச்வம் பிபர்தி புவனஸ்ய நாபி :

ஓரளவே தோன்றிய யௌவனத்தின் கட்டுக்கடங்காத செருக்கு தோன்றும்படி திவ்யமான ஆபரணங்களால் ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் உன்னை தியானித்து முன்பு விஷ்ணு இவ்வுலகின் அச்சானி போன்றிருந்து இன்று வரை காத்து வருகிறார்.

24.கல்ஹார ஸ்ரீமஞ்ஜரீ புஞ்ஜரீதம்

திக்குர்வந்தீமம்பதே பாடலிம்நா

மூர்திம் த்யாத்வா சாச்வதீம் பூதிமாயந்

இந்த்ரோ ராஜா ஜகதோ ய ஈசே

ஹே அம்பே! செந்நிறத்தால் செந்தாமரைக் கொத்தை சீர்குலைத்த உன் மூர்த்தியை தியானித்து அழியாச்செல்வம் பெற்ற இந்திரன், இவ்வுலகிற்கும் திறம் படைத்த ராஜாவாக ஆகியுள்ளான் !

25.தேவதாந்தரமந்த்ரௌகஜபஸ்ரீபலபூதயா ( மூலயா )

ஜாபகஸ்தவதேவ்யந்தே வித்யயா வந்ததே - ம் ருதம்

மற்ற தேவதைகளின் மந்திங்களை ஜபம் செய்வதன் பயனாக ஏற்பட்ட பேரறிவினால் ஹே தேவி ! அந்த ஜபம் செய்வதன் உனது மந்திரங்களை ஜபித்து கடைசியாக அம்ருதத்தை (மோக்ஷத்தைப்) பெறுகிறான்.

26.பும்ஸ்கோகில கலக்வாண கோமலாலாபசாலினி

பத்ராணி குருமே மாத: துரிதாநி பராஸுவ

ஹே அன்னையே ! ஆண்குயிலின் மென்மையான குரலையத்த அழகிய பேச்சையுடைய c எனது பாபங்களைப் போக்கி மங்களங்களை விளைவிப்பாயாக!

27.அந்தேவாசிந் அஸ்திசேத்தே முமுக்ஷ£

வக்ஷ்யே யுக்திம் முக்தஸர்வைஷண:ஸன்

ஸத்ப்ய:ஸாக்ஷ£த் ஸுந்தரீம் ஜ்ஞப்திரூபாம்

ஸ்ரீத்தா பக்தி த்யானயோகாத் அவேஹி

சிஷ்யனே! உனக்கு மோக்ஷம் கிடைக்க வேணும் என்ற விருப்பருந்தால் ஒருவழி சொல்கிறேன் கேள் - எல்லா காமனைகளையும் விட்டொழித்து, நல்லோரிடருந்து சிரத்தை - பக்தி, த்யானம், யோகம் இவற்றின் மூலம் பேரறிவேயுருவான ஸுந்தரியை நேரில் கண்டறிவாயாக.

28.ஷோடாந்யாஸ ஆதிதேவைஸ்ச ஸேவிதாசக்மத்யகா

காமேசமஹிஷீ பூய:ஷோடசீ சர்ம யச்சது

ஆறுவித ந்யாஸம் முதலியவற்றினாலும், தேவர்களாலும் ஸேவிக்கப்பட்ட ஸ்ரீசக்ரமயத்தில் ற்றருப்பவளான ஸ்ரீகாமேசமஹிஷியான ஷோடசீ எனக்கு மங்களமளிக்கட்டும்.

29.சாந்தோ தாந்தோ தேசிகேந்த்ரம் ப்ரணம்ய

தஸ்யாதேசாத் தாரகம் மந்த்ரதத்வம்

ஜாநீதேசேத் அம்ப தன்ய:ஸமாநம்

நாத:பரம் வேதிதவ்யம் ஹிகிஞ்சித்

புலனடக்கமும், மனஅமைதியும் பெற்று, நல்ல குருவை நாடி வணங்கி, அவனருளால் தாரக மந்திரத்தின் தத்வம் அறிவானாகில், அம்ப! அந்த அதிஷ்டசாலி அதையத்தவேறொன்றை அறிய வேண்டியதில்லை.

30.த்வமேவ காரணம் கார்யம் க்ரியாஜ்ஞானம் த்வமேவச

த்வாமம்பநவிநா கிஞ்சித்த்வயி ஸர்வம் ப்ரதிஷ்டிதம்

ஹே அம்ப! நீயே காரணமும், கார்யமுமாக இருக்கிறாய். செயலும் ஞானமும் நீயே!உன்னையன்றி வேறொன்றில்லை. உன்னிடமே எல்லாம் நிலைபெற்றிருக்கிறது.

31.பராக மத்ரீந்த்ரஸுதே தவாங்க்ரி-

ஸரோஜயோரம்ப ததா மூர்த்நா

அலங்க்ருதம் வேதவதூசிரோபி:

யதோ ஜாதோ புவநாநி விச்வா

ஹே அம்ப பார்வதி! வேத முடிவான உபநிஷத்துக்களில் போற்றிக் கூறப்பட்ட உனது திருவடித்தாமரையின் பொடிகளை என் தலைமீது தாங்குகிறேன். அவை மூலமாகத்தானே இந்த அனைத்துலகும் உண்டாயிற்று.

32.துஷ்டாந்தைத்யாந் ஹந்துகாமாம் மஹர்ஷீந்

சிஷ்டாநந்யான்பாது காமாம் கராப்ஜை:

அஷ்டாபிஸ்த்வாம் ஸாயுதைர்பாஸமாநாம்

துர்காம் தேம் சரணமஹம் ப்ரபத்யே

துஷ்ட ராக்ஷஸர்களை அழிக்கவும், மஹர்ஷிகளையும் மற்ற சிஷ்டர்களையும் காக்கவும் திருவுள்ளங்கொண்டு ஆயுதங்கள் தாங்கிய எட்டு புஜங்களோடு விளங்கும் துர்கா தேவியை சரண் அடைகிறேன்.

33.தேவிஸர்வாநவத்யாங்கி த்வாமநாத்ருத்யயே க்ரியா:

குர்வந்தி நிஷ்பலாதேஷா மதுக்தா இவதேநவ:

ஹே தேவி! உன்னை முன்நிருத்தாமல் எவரெவர் கர்மாக்களை செய்கிறார்களோ, அவர்களின் அக் கர்மாக்கள் கறவை இல்லாத மாடுகள் போலப் பயனற்றவை.

34.நாஹம் மந்யே தைவதம் மாந்ய மந்யத்

த்வத் பாதாப்ஜாத் அம்பிகே கும்பஜாத்யா:

யே த்யாதாரோ பக்திஸம்சுத்த சித்தா:

பராம்ருதாத் பரிமுச்யந்தி ஸர்வே

ஹே அம்பிகே!உன்னைக் காட்டிலும் போற்றுதற்குரிய வேறு தெய்வம் உண்டென நான் எண்ணவில்லை. ஏனெனில் அகஸ்தியர் முதலிய முனிவர் பக்தியால் தூய்மை பெற்று உன்னையே தியானம் செய்து மரண பயத்திலிருந்து விடுபடுகிறார்களே!

35.குர்வாணோ-sபி துராரம்பாந் தவ நாமாநிசாம்பவி

ப்ரஜபந்நேதி மாயாந்தமதி ம்ருத்யும் தராம்யஹம்

கெட்ட கார்யங்களைச் செய்வபனும், ஹே சம்பவி!உனது நாமாக்களை ஜபிப்பவன் மாயையை விட்டு அகல்வான். நானே மரணத்தை விட்டு நீங்குவேனே!

36.கல்யாணித்வம் குந்தஹாஸப்ரகாசை:

அந்தர் த்வாந்தம் நாசயந்தீக்ஷணேந

ஹந்தாஸ்மாகம் த்யாயதாம் த்வத்பதாப்ஜம்

உச்சதிஷ்டமஹதேஸெளபகாய

ஹே கல்யாணி!குந்த புஷ்பமெனத்திகழும் புன்சிரிப்பால் எங்கள் மனஇருளை நொடியில் போக்கும் c, உனது திருவடித்தாமரையை தியானிக்கும் எங்கள் நல்ல செல்வகு வாழ்வுக்கு முனைந்து நிற்பாயே!

37.திதீர்ஷயா பவாம்போதே:ஹயக்ரீவாதய:புரா

அப்ரமத்தாபவத் பூஜாம் ஸுவித்வாம்ஸோ விதேநிரே

முன்பு ஹயக்ரீவர் முதலியோர் ஸம்ஸாரக்கடலைக் கடக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் சிறிதும் தவறின்றி உனது பூஜையை செய்தனரே!

38.மத்வம்ச்யாயே துராசாரா யேச ஸன்மார்ககாந:

பவத்யா:க்ருபயாஸர்வேஸுவர்யந்து யஜமாநா:

ஹே அம்ப! என் வம்ஸத்தைச் சேர்ந்தவர் கெட்டதைச்செய்பவராயினும், நல்வழிச் செய்பவராயினும், நினது க்ருபையால் உன்னை பூஜிப்பவராய் ஸ்வர்கம் அடையட்டும்.

39.ஸ்ரீசக்ரஸ்தாம் சாச்வதைச்வர்யதாத்ரீம்

பௌண்ட்ரம் சாபம் புஷ்பபாணாந்ததாநாம்

பந்தூகாபாம் பாவயா த்ரிநேத்ராம்

தாமக்னிவர்ணாம் தபஸர் ஜ்வலந்தீம்

ஸ்ரீசக்ரத்தில் இருப்பவளும் (அழிவற்ற) சாச்வதமான ஐச்வர்யத்தை யருள்பவளும், கரும்பு வில்லையும், புஷ்ப பாணங்களையும் வைத்திருப்பவளும், செம்பருத்திப்பூ நிறமுள்ளவளும், முக்கண் படைத்தவளும், தீப்பிழம்போ வென்றிருப்பவளும், தவத்தால் ஜ்வலிக்கின்றவளுமான அம்பிகையை தியானிக்கிறேன்.

40.பவாநி தவ பாதாப்ஜ நிர்ணேஜன பவித்ரிதா:

பவாமய ப்ரசாந்த்யை த்வாம் அபோயாசாபேஷஜம்

ஹே அம்ப! பவாநி!உனது திருவடித் தாமரையை அலம்பியதால் சுத்தப்படுத்தப்பட்ட நீரையே சம்ஸார நோய் தனியவேண்டி உன்னிடம் மருந்தாக யாசிக்கிறேன்.

41.சிதானந்தஸுதாம்போதே ஸ்தவானந்தலவோsஸ்திய:

காரணேசைஸ்த்ரிபி:ஸாகம் தத்விச்வமுபஜீவதி

சித்-ஆனந்தம் ஆகியவற்றின் கடலே போலிருக்கிற உனக்கு ஏதோ ஒரு ஆனந்தத்துளி உள்ளதே அதைத்தான் மூன்று காரண மூர்த்திகளுடன் இவ்வுலகம் முழுதும் சார்ந்து நிற்கிறது.

42.நோ வா யாகைர்நைவ பூர்தாதி க்ருத்யை:

நோவாஜப்யைர்நோ மஹத்பிஸ்தபோபி:

நோவா யோகை க்லேசக்ருத்பி:ஸுமேதா

நிசாய்யேமாம் சாந்தி மத்யந்தமேதி

யாகங்களாலோ, ஸத்ரம், சாவடி, தண்ணீர்ப்பந்தல் வைத்தல், குளம் வெட்டுதல், போன்ற பூர்த கர்மாக்களாலோ, ஜபங்களாலோ, பெருந்தவத்தாலோ, யோகங்களாலோ, இன்னும் பலகாயக்லேசங்களாலோ கூட ஆவதொன்றுல்லை. ஆனால் இந்த அம்பிகையை நல்ல புத்திசாலி ஆராய்தறிந்து அமைதியடைவதுதான் உறுதி.

43.ப்ராத:பாஹி மஹாவித்யே மத்யாஹ்நே து ம்ருடப்ரியே

ஸாயம் பாஹி ஜகத்வந்த்யே புனர்ந:பாஹிவிச்வத:

காலையில் மஹாவித்யையாகவும், மத்யானத்தில் மஹேசன் மஹிஷியாகவும், மாலையில் உலகம் போற்றும் அன்னையாகவும் இருந்து காக்க வேண்டும். பின்னும் எங்களை எந்த திசையிலும் காக்க வேண்டும்.

44.பந்தூகாபை:பானுபிர் பாஸயந்தீ

விச்வம் சச்வத்துங்க பீநஸ்தநாட்யா

லாவண்யாப்தே ஸுந்தரித்வம் ப்ரஸாதாத்

ஆயு:ப்ரஜாம் ரயிமஸ்மாஸு தேஹி

செம்பருத்தி நிறமான கிரணங்களால் உலகை பிரகாசிக்கச் செய்துகொண்டு, பருத்து உயரமான ஸ்தனங்கள் கொண்டவளாய் அழகின் கடலாய்த் திகழ்கிறாய். ஹே சுந்தரி!நீ மகிழ்ச்சியுடன் எங்களிடம் ஆயுள், நல்ல புத்ரன், செல்வம் இவற்றை நிறப்புவாயாக!

45.கர்ணாகர்ணய மே தத்வம் யாசித்சக்தி ரிதீர்யதே

த்ரிர்வதா முமுக்ஷ¨ணாம் ஸாகாஷ்டா ஸாபராகதி:

சித்சக்தி என்று சொல்லப்படும் அந்த தத்வமே மோக்ஷம் வேண்டுவோருக்கு உரிய இடமும் மேலான கதியும். இதை மும்முறை சொல்கிறேன். கேட்டு வைத்துக் கொள்ளலாம்.

46.வாக்தே F த்வாம் வதந்த்யம்ப கேசித்

லக்ஷ்மீர்கௌரீத்யேவமன்யே-sப்யுசந்தி

சச்வத் மாத:பிரத்யகத்வைதரூபாம்

சம்ஸந்தி கேசித் நிவிதோ ஜனா:

ஹே அம்ப!ஒரு சிலர் உன்னை வாக்தேவி என்கிறார்கள். வேறு சிலர் லக்ஷ்மீ என்றும் கௌரீ என்றும் சொல்வார்கள். நன்கு அறிந்தவர் ஒன்றேயான ஆத்ம ஸ்வரூபமாகவே கூறிவருகின்றனர்.

47.லலிதேதி ஸுதாபூர மாதுரீசோரமம்பிகே

தவ நாமாஸ்தி யத்தேநஜிஹ்வா மே மதுமத்தமா

ஹே அம்பிகே!அம்ருத தாமரையின் இனிமையத்த லலிதா என்ற உமது பெயர் இருக்கிறதே அதனால் என் நாக்கு இனிமை க்கதாக ஆகட்டும்/உள்ளது.

48.யே ஸம்பந்நா:ஸாதநைஸ்தை ஸ்சதுர்பி:

சுச்ரூஷாபி:தேசிகம் ப்ரீணயந்தி

ஸம்யக்வித்வான் சுத்த ஸத்வாந்தராணாம்

தேஷாமேவைதாம் ப்ரஹ்மவித்யாம்வதேத

நான்கு ஸாதனங்களையும் கைக்கொண்டு குருவை பணிவிடைகள் மூலம் மகிழ்வடையச் செய்கின்ற அந்த சுத்த ஸ்தவகுணமே நிரம்பியுள்ள உத்தமர்களின் உடமையானது ப்ரஹ்மவித்யை என்றறிய வேண்டும்.

49.அபிசாராதிபி:க்ருத்யாம் ய:ப்ரேரயதிமய்யுமே

தவ ஹ§ங்காரஸந்த்ரஸ்தா ப்ரத்யக்கர்தாரம்ருச்சது

ஹே உமே!என் விஷயத்தில் ஏவல் முதலியவற்றால் கெட்ட தேவதையை தூண்டிவிடுவானாகில், அது உமது ஹ§ம் என்ற சப்தத்தால் பயமுற்று திரும்ப ஏவியவனையே போய்ச் சேரட்டும்.

50.ஜகத்பவித்ரிமாகா மபாஹராசு துர்ஜராம்

ப்ரஸீத மே தயாதுநி ப்ரசஸ்திமம்பந:க்ருதி

ஹே உலகத்தை தூய்மைப்படுத்துபவளே!தயாஸாகரி!என்னிடம் கருணை கூர்ந்து எனது தள்ளாமையை கிழத்தன்மையைப் போக்கி புகழைப் பரப்புவாயாக!

51.கதம்பாருணமம்பாயா ரூபம் சிந்தய மே

முஞ்ச பாபீயஸிம் நிஷ்டாம் மா க்ருத:கஸ்யஸ்வித்தனம்

என் மனமே!கதம்ப புஷ்பம் போன்று சிவந்த எனதன்னையின் உருவத்தையே நினை. பாபச் செயலின் ஈடுபாட்டை விட்டொழி!எவருடைய தனத்திற்காகவும் சபலப்படாதே!

52.பணடபண்டநலீலாயாம் ரக்த சந்தனபங்கில:

அங்குசஸ்தவதம் ஹந்யாத்யஸ்ச நோத்வேஷதே ஜந:

பண்டாசுரனை ஒடுக்கும் விளையாட்டில் ரக்தமாகிய சந்தனம் தோய்ந்த உனது அங்குசம் எங்களை வெறுக்கும் பகைவரை அழிப்பதாகட்டும்.

53.ரேரே சித்த த்வம் வ்ருதா சோகஸிந்தௌ

மஜ்ஜஸ்யந்த:வச்உபாயம் விமுக்த்யை

தேவ்யா:பாதௌ பூஜயைகாக்ஷரேண

தத்தே பதம் ஸங்க்ரஹேண ப்ரம்யோம்

ஒ மனமே! c ணாக துன்பக் கடலுக்குள் மூழ்கிக் கொண்டிருக்கிறாயே. அதிலிருந்து விடுபட (மோக்ஷத்திற்கு) ஒர் உபாயம் சொல்கிறேன். தேவியின் சரணங்களை ஒர் அக்ஷரத்தினால் பூஜை செய். சுருக்கமாக அந்த பதம் எதுவெனில் ஒம் என்பதே.

54.சஞ்சத்பாலாதப ஜ்யோத்ஸ்நா கலாமண்டலசாலினே

ஐக்ஷவாய நமோ மாத:பாஹ§ப்யாம் தவதந்வனே

ஏ அன்னையே!உனது கைகளுக்கும், அதன் வசமான கரும்புவில்லுக்கும் நமஸ்காரம். பரவும் வெயில், நிலவின் கலை மண்டபம் இவற்றையுடையதல்லவா அந்த வில்.

55.தாமேவாத்யாம் ப்ரஹ்மவித்யாமுபாஸே

மூர்தைர்வேதை:ஸ்தூயமாநாம் பவாநீம்

ஹந்த ஸ்வாத்மத்வேந யாம்முக்திகாமோ

மத்வா தீரோ ஹர்ஷசோகௌ ஜஹாதி

உருவங்கொண்ட வேதங்களே போற்றிப் பாடும் பவானியாகிய அந்த முதல் ப்ரஹ்ம வித்யையை வழிபடுகிறேன். முக்தியை விரும்புபவன் அந்த ப்ரஹ்ம வித்யையை ஆத்மாவாகவே எண்ணி தீரனாய் விருப்பு, வெறுப்புகளை விட்டு ஒழிப்பானே!

56.சரணம் கரவாண்யம்ப சரணம் தவ ஸுந்தரி

சபே த்வத்பாதுகாப்யாம் மே நான்ய:பந்தா அயநாய

ஹே அம்மே!உனது திருவடியே எனக்கு சரணம். உனது பாதுகைகளன்றி எனக்கு வேறு வழி இல்லை மோக்ஷம் பெறுவதற்கு இது ஸத்யம்.

57.ரத்னச்சத்ரை ஸ்சாமரை:தர்பணாத்யை:

சக்ரேசாநீம் ஸர்வதோபாசரந்த்ய:

யோகின்யோsந்யா:சக்தயஸ்சாணிமாத்யா:

யூயம் பாத ஸ்வஸ்திபி:ஸதா ந:

ஸ்ரீசக்ர மத்யத்தில் தலைவியாக ற்றிருக்கும் அம்பிகையை ரத்னக் குடைகளாலும், சாமரங்களாலும், கண்ணாடி முதலிய உபச்சாரப் பொருட்களாலும் யோகிநிகளும், அணிமா முதலிய சக்திகளும் உபசரித்து வருகிறார்களே அவர்கள் எங்களை மங்களங்களால் எப்பொழுதும் காக்கவேண்டும்.

58.தரித்ரம் மாம் விஜாநீஹி ஸர்வஜ்ஞா R யத:சிவே

தூரீக்ருத்ருத்யாசுதுரிதம் அதாநோவர்தயா ரயிம்

ஹே அம்மே!நீ எல்லாம் அறிந்தவன். நான் ஏழை என்பதும் தெரியும். எனது பாபத்தை சட்டென விலக்கி பிறகு எனக்கு செல்வத்தை வளர்ப்பாயாக!

59.மஹேச்வரி மஹாமந்த்ர கூடத்ரயகலேபரே

காதிவித்யாக்ஷரச்ரேணிமுசந்தஸ்த்வாஹவாமஹே

மஹாமந்த்ரக் கூட்டாகி வடிவம் கொண்ட ஹே மகேச்வரி! காதிவித்யையின் அக்ஷரவரிசையை செய்து கனிவுடன் உன்னை அழைக்கிறோம்.

60.மூலாதாராதூர்த்வ மந்தஸ்சரந்தீம்

பித்வாக்ரந்தீந்மூர்த்நி நிர்யத்ஸுதார்த்ராம்

பச்யந்தஸ்த்வாம் யே ச த்ருப்திம் லபந்தே

தேஷாம் சாந்தி:சாச்வதீ நேதரேஷாம்

மூலாதாரத்தின் மேலே உள்ளே சஞ்சரித்துக்கொண்டு அங்கங்கேயுள்ள இடர்களையும் உடைத்துச் சென்று, சிரஸில் மெல்ல ஒழுகும் அம்ருதப் பெருக்கையுடைய உன்னைப் பார்த்து ஆனந்தம் கொள்பவர்களுக்கன்றி மற்றவருக்கு சாச்வதமான சாந்தி கிடைப்பதில்லை.

61.மஹ்யம் த்ருஹ்யந்தி யே மாத:த்வத் த்யாநாஸக்தசேதஸே

தாநம்ப ஸாயகைரேபி:அவ ப்ரஹ்மத்விஷோஜஹி

ஒ அன்னையே!உன் தியானத்தில் ஆழ்ந்திருக்கும் எனக்கு துரோஹம் இழைக்கும் அந்த பிரம்மத்வேஷம் கொண்டோரை இந்த பாணங்களால் வதைத்து என்னைக் காப்பாயே!

62.த்வத்பக்தாநாம் அம்ப சாந்தைஷணாநாம்

ப்ரஹ்ஷ்டாநாம் த்ருஷ்டிபாதேந பூத:

பாபீயாநப்யாவ்ருத:ஸ்வர்வதூபி:

சோகாதிகோ மோததே ஸ்வர்கலோகே

ஹே அம்மே! உனது பக்தர்களும் ஏஷ்ணாத்ரயம் அடங்கியவர்களுமான ப்ரஹ்ம ஞானிகளின் கடாக்ஷமம் பட்டு பரிசுத்தனாய்ப் பரிணத்த பாபிகூட தேவலோக மங்கையர் சூழ துன்பமெல்லாம் நீங்கி, பின் சுவர்க லோகத்தில் மகிழ்ந்திருப்பானே!

63.ஸந்து வித்யா ஜகத்யஸ்ன் ஸம்ஸார ப்ரமஹேதவே:

பஜே sஹம் த்வாம் யயாவித்வான் வித்யயாsம்ருதமச்நுதே

இவ்வுலகில் சம்சாரச் சூழலைத் தோற்றுவிக்கும் வித்யைகள் பல உண்டு. ஆனால் எந்த ஒரு வித்யையால் மோக்ஷத்தைப் பெறலாமோ அந்த வித்யாரூபிணியான உன்னை ஸேவிக்கிறேன்.

64.வித்வன்முக்யைர் வித்ருமாபம் விசால-

ச்ரோணீசிஞ்ஜன் மேகலா கிங்கிணீகம்

சந்த்ரோத்தம்ஸம் சின்மயம் வஸ்து கிஞ்சித்

வித்தி த்வமேதந்நிஹிதம் குஹாயாம்

பவழம் போல் பிரகாசிப்பதும், விசாலமான கடிதடத்தில் ஒலிக்கும் ஒட்டியான மணிகளைக் கொண்டதும், சந்திரனையணியாகவுடையதுமான ஒரு தத்வப் பொருள் அறிவாளிகளால் மறைவாக வைக்கப்படுவதை c அறிவாயாக!

65.நவிஸ்மரா சின்மூர்திம் இக்ஷ§தேண்டசாலி

முனய:ஸநகப்ரேஷ்டா ஸ்தாமாஹ§:பரமாம்கதிம்

கரும்பு வில்லுடன் விளங்கும் சின் மூர்த்தியை ஸனகர் முதலிய முனிவர் சிறந்த கதியாகக் கூறுவதை நான் மறக்கவில்லை.

66.சக்ஷ§:ப்ரேங்கத் ப்ரேமகாருண்யதாராம்

ஹம்ஸஜ்யோத்ஸ்னாபூர ஹ்ருஷ்யச்சகோராம்

யாமாச்லிஷ்யன் மோததே தேவதேவ:

ஸாநோ தேஸுஹவா சர்ம யச்சது

கண்ணில் சுரக்கும் அன்பு, கருணை இவற்றின் தாரையை உடையவளும், அன்னமாகிய நிலா வெள்ளத்தில் மகிழ்ந்து நிற்கும் சகோரப் பிறவைகளுடையவளுமான எந்த தேவியை அணைத்துக்கொண்டு தேவதேவனான பரமேச்வரன் மகிழ்கிறாரோ அந்த தேவி எங்களுக்கு மங்களம் தந்தருளட்டும்.

67. முஞ்ச வஞ்சகதாம் சித்த பாமரம் சாபிதைவதம்

க்ருஹாண பதம்மபாயா ஏததாலம்பனம் பரம்

ஒ மனமே!ஏமாற்றும் தன்மையை விட்டுவிடு! சாதாரண தைவங்களையும் விட்டுவிடு. அம்பிகையின் திருவடியன்றையே நாடு. அதுவே உயரிய பிடியாகும்.

68.காமே பீதி:கா க்ஷதி:கிம்துராபம்

காமேசாங்கோத்துங்க பர்யங்கஸம்ஸ்தாம்

தத்வாதீதாம் அச்யுதானந்த தாத்ரீம்

தேமஹம் நிர்ருதிம் வந்தமாந:

காமேச்வரர் மடியாகிய உயர்ந்த கட்டிலின் மீதமர்ந்துள்ளவளும், தத்வம் கடந்த தத்வமாகவும், அழிவற்ற ஆனந்தமளிப்பவளுமான நிர்ருதிதேவியை நான் வழிபடுவதால் எனக்கு பயமும் இல்லை. குறையுல்லை. அடைய முடியாத பொருளுல்லையே!

69.சிந்தாமணி மயோத்தம்ஸ காந்திகஞ்சுகிதாநநே

லலிதே த்வாம் ஸக்ருந்நத்வா ந பிபேதி குதஸ்சந

சிந்தாமணியின் சீரிய ஒளி படர்ந்த முகத்தைக் கொண்ட ஹே லலிதாம்பிகே!உன்னை ஒருதரம் நமஸ்கரித்தவர் வேறு எங்கிருந்தும் பயப்பட மாட்டார்.

70.தாருண்யோத்துங்கிதகுசே லாவண்யோல்லா ஸிதேக்ஷணே

தவாஜ்ஞயைவ காமாத்யா மா ஸ்மான் ப்ராபந்நராதய:

இளமையின் காரணமாக உயரமான குசங்களும், அழகு ளிரும் கண்களும் கொண்ட அம்பிகே! உனது ஆஞ்ஞையால் காமம் முதலிய ஆறுவித எதிரிகளும் எங்களை அணுகாமலிருக்கட்டும்.

71.அகர்ணாக்ருஷ்ட காமாஸ்த்ர ஸஞ்ஜாதம் தாப மம்பமே

ஆசாமது கடாக்ஷஸ்தே பர்ஜந்யோ வ்ருஷ்டி மானிவ

நன்கு இழுத்து விடப்பட்ட காம பாணத்தால் எனக்கு உண்டான தாபத்தை, ஹே அம்மே!உனது கடாக்ஷம் மழை பொழியும் மேகம் போல்தணிக்கட்டும்.

72.குர்வே கர்வணாபசாராந் அபாராந்

யத்யப்யம்ப த்வத் பாதாப்ஜம் ததாபி

மந்யேதன்யே தேவி வித்யாவலம்பம்

மாதேவ புத்ரம் பிப்ருதாஸ்வேநம்

கர்வத்தினால் எத்தனையோ அபச்சாரங்களைச் செய்தாலும், தேவி!உனது திருவடித் தாமரையை ஜ்ஞானப்பிடியாகவே கருதி வருகிறேன். இந்த உனது சிறுமகனை தாய்போல தாங்கி பராமரிப்பாயாக!

73.யதோபாஸ்திக்ஷதிர்ந ஸ்யாத் தவ சக்ரஸ்ய ஸுந்தரி

க்ருபயா குரு கல்யாணி ததா மே ஸ்வஸ்திராயுஷீ

ஹே தாயே! உனது இருப்பிடமான சக்ரத்தை நான் உபாஸிக்கத் தடையில்லாமல் க்ருபையுடன் ஆரோக்யத்தையும் ஆயுளையும் அருள்வாயாக!

74.சக்ரம் ஸேவே தாரகம் ஸர்வஸித்யை

ஸ்ரீமந் மாத:சித்தயஸ்சாணி மாத்யா:

நித்யாமுத்ரா சக்தய ஸ்சாங்க தேவ்யோ

யஸ்ந்தேவா அதிவிச்வே நிஷேது:

ஸ்ரீமாதாவே! எல்லா சித்திகளும் கைவசப்பட உனது தாரக சக்ரத்தை ஸேவிக்கிறேன். அதில் அணிமாதி ஸித்திகளும், சக்தி, அங்கதேவிகளும் மற்றும் தேவர்களும் அமர்ந்துள்ளனரே!

75.ஸுகுமாரே ஸுகாகாரே ஸுநேத்ரே ஸ¨க்ஷ்மமத்யமே

ஸுப்ரஸந்நா பவ சிவே ஸும்ருடீகாஸரஸ்வதி

ஹே சிவே!ம்ருதுவானவள், ஸுகமே உருவானவள், நல்ல கண்கள் கொண்டவள், மெல்லிய இடையுடையவள், எனக்கு ப்ரஸன்னமானவளாகவும், எதையும் ஸகித்துக்கொள்பவளாகவும் ஸரஸ்வதியாகவும் இருந்துவிடேன்.

76.வித்யுத்வல்லீகந்தலீம் கல்பயந்தீம்

மூர்திம் ஸ்பூர்த்யா பங்கஜம் தாரயந்தீம்

த்யாயன் U த்வாம் ஜாயதே ஸார்வபௌமோ

விச்வா ஆசா:ப்ருதாநா:ஸஞ்ஜயன்ஜயன்

துடிப்புடன் தனது மூர்த்தியை ன்னற்கொடியின் அடிக்கிழங்காகச் செய்து கொண்டும், தாமரையை வைத்துக்கொண்டுருக்கிற உன்னை தியானம் செய்பவன் திசைகளையும் சைன்யங்களையும் ஜயிக்கும் ஸார்வபௌமனாக, ஆகிவிடுகிறானே!

77.அவிஜ்ஞாய பராம் சக்திம் ஆத்மபூதாம் மஹேச்வரீம்

அஹோ பதந்திநிரயேஷ்வேகே சாத்மஹநோஜநா:

ஹே அம்ப!ஒருசில ஆத்மத்ரோஹம் செய்து கொள்ளும் மனிதர் ஆத்ம ஸ்வரூபிணியான மகேச்வரியை - பராசக்தியை தெரிந்துகொள்ளாமல் நரகத்தில் ழ்வது விந்தையே!

78.ஸிந்தூராபை:ஸுந்தரை:அம்சுப்ருந்தை:

லாக்ஷ£லக்ஷ்ம்யாம் மஜ்ஜயந்தீம் ஜகந்தி

ஹேரம்பாம்பத்வாம் ஹ்ருதாலம்பதே ய:

தஸ்மை விச:ஸ்வயமேவா நமஸ்தே

ஹேரம்ப கணபதியின் தாயே!உலகனைத்தையும் ஸிந்துரம் போன்ற அழகிய செங்கிரணங்களால் லாக்ஷ£க்குழம்பில் ஆழ்த்துபவள் போலிருக்கிற உன்னை மத்தியில் தியானிப்பவரை மக்கள் அனைவரும் தாமாகவே வணங்குவாரே!

79.தவதத்வம் விம்ருசதாம் ப்ரத்யகத்வைதலக்ஷணம்

சிதானந்த கநாதன்யத்நேஹ நாநாஸ்தி சிஞ்சந

ஹே அம்ப!இரண்டற்ற ஆத்மாவான உனது தத்வத்தை ஆராய்பவருக்கு சித்-ஆனந்தம் என்ற படிக்கு அல்லாத வேறு பலவாக ஒன்றுமே தட்டுப்படாதே!

80.கண்டாத் குண்டலிநீம் நீத்வா ஸஹஸ்ராரம் சிவே தவ

ந புநர்ஜாயதே கர்பே ஸுமேதா அம்ருதோக்ஷித:

ஹே சிவே!கழுத்து வழியாக குண்டலினியை ஸஹஸ்ராரம் வரை கொண்டுசென்று உனது அம்ருதத்தைப் பருகிய நல்லமேதை படைத்தவர் மறுபடியும் கர்பத்தில் பிறப்பதில்லை.

81.த்வத்பாதுகானுஸந்தான ப்ராப்தஸர்வாத்மதாத்ருசி

பூர்ணாஹங்க்ருதிமத்யஸ்ந் நகர்மரலிப்யதே நரே

ஹே அம்மே! உன் பாதுகையை தியானித்து, ஸர்வாத்மத் வஜ்ஞானம் உண்டாகி அஹங்காரம் நிரம்பிவிட்ட ஒருவரிடம் கர்மபந்தம் இருப்பதில்லை.

82.தவானுக்ரஹநிர்பிந்ந ஹ்ருதயக்ரந்திரத்ரிஜே

ஸ்வாத்மத்வேந ஜகன்மத்வா ததோ நவிகுஜுப்ஸதே

ஹே பர்வநந்தினி!உனது அருளால் ஹ்ருதய முடிச்சு அவிழ்ந்து, உலகத்தையே ஆத்மாவாகக் கண்டபின் ஒருவர் எதிலிருநதும் அருவருப்பு கொள்வதில்லை.

83.கதா வஸுதலோபதே த்ரிகோண நவகாந்விதே

ஆவாஹயா சக்ரே த்வாம் ஸ¨ர்யாபாம் ஸ்ரீயமைச்வரீம்

ஹே அம்ப!எட்டு தளம் கொண்ட, ஒன்பது முக்கோணமும் கொண்ட ஸ்ரீ சக்ரத்தில், சூர்ய ப்ரகாசமாயும் ஈச்வரனுடையதாயுருக்கிற அழகை எப்பொழுது ஆவாஹனம் செய்யப் போகிறேனோ!

84.ஹ்ரீத்யேகம் தாவகம் வாசகார்ணம்

யஜ்ஜிஹ்வாக்ரே தேவி ஜாகர்தி கிஞ்சித்

கோ வாஷியம் ஸ்யாத்காமகாமஸ்த்ரிலோக்யாம்

ஸர்வேsஸ்மை தேவா பலிமாவஹந்தி

ஹே தேவி!உன்னைக் குறிப்பிடும் ஒருஎழுத்து ஹ்ரீம் என்பதாகும். அது ஒரளவு எவர்நாக்கில் பதிந்துள்ளதோ, அதனால் மூவுலகிலும் காமகானமாக இருப்பவர் இவனைத்தவிர வேறு யார்?அவருக்குத்தானே தேவர்கள் எல்லோரும் பூஜை (பலி) செய்கிறார்கள்.

85.நாகஸ்த்ரீணாம் கிந்நரீணாம் ந்ருபாணா

மப்யாகர்ஷீ சேதஸா சிந்தநீயம்

த்வத்பாணிஸ்தம் குங்குமாபம் சிவே யம்

த்விஷ்ம ஸ்தஸ்த் ப்ரதிமுஞ்சா பாசம்

தேவலோக மங்கையரையும், கிந்நர ஸ்திரீகளையும், அரசர்களையும் கூட கவர்ந்திழுப்பது என்று மனதில் சிந்திக்க வேண்டியதும் உன் கையில் குங்கு நிறத்தில் விளங்குவதுமாகிய பாசத்தை எங்களது எதிரியின் மேல் போடுவோம்.

86.நுநம் ஸிம்ஹாஸநேச்வர்யாஸ்தவாஜ்ஞாம் சிரஸா வஹந்

பயேந பவமாநோsயம் ஸர்வா திசோ sநுவிதாவதி

ஹே தேவி!ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்திருக்கும் மஹிஷியான உனது ஆஜ்ஞையை தலையால் தாங்கிக்கொண்டு பலத்தினால் போலும் இந்து காற்று எல்லாத் திசைகளிலும் பறந்தோடிப் பரவுகிறது.

87.த்ரிகலாட்யாம் த்ரிஹ்ருல், லேகாம் த்விஹம்ஸஸ்வரபூஷிதாம்

யோ ஜபத்யம்பதே வித்யாம் ஸோ sக்ஷர:பரம:ஸ்வராட்

மூன்று கலைகளுடன் மூன்று ஹ்ருதயாக்ஷரமும், இரண்டு ஹம்ஸ ஸ்வரமும் கூடி விளங்கும் உனது வித்யையை எவன் ஜபம் செய்கிறானோ அவனே தனக்குத்தானே தலைவனாய் (ஸ்வராட்) பரமாக்ஷரமாயும் விளங்குகிறான்.

88.தாரித்ர்யாப்தௌ தேவி மக்நோsபிசச்வத்

வாசா யாசே நாஹமம்ப த்வதன்யம்

தஸ்மாதஸ்மத் வாஞ்சிதம் பூரயைதத்

உஷாஸா நக்தா ஸுதுகேவ தேநு :

ஹே தேவி! ஏழ்மைக்கடலில் மூழ்கிய நான் உன்னைத் தவிர வேறு எவரையும் வாக்கினால் யாசிக்கவில்லை. ஆகையால் எங்கள் விருப்பத்தை காலையும் மாலையும் நன்கு சுரந்து கறக்கும் பசுவைப்போல் பூர்த்தி செய்ய வேண்டும்.

89.யோ வா யத்யத்காமநாக்ருஷ்ட சித்த:

ஸ்துத்வோபாஸ்தே தேவி தே சக்ர வித்யாம்

கல்யாணாநாமாலய:காலயோகாத்

தம் தம் லோகம் ஜயதே தாம்ஸத் காமாந்

ஹே தேவி!எந்தெந்த விருப்பங்களுடன் ஒருவன் உனது ஸ்ரீசக்ர வித்யையை ஸ்தோத்திரம் செய்து உபாஸிக்கிறானோ அவன் எல்லாவித நன்மைகளையும் பெற்று, காலப்போக்கில் அந்தந்த உலகங்களையும் அந்தந்த விருப்பங்களையும் பெறுகிறான்.

90.ஸாதக:ஸததம் குர்யாத் ஐக்யம் ஸ்ரீசக்ரதேஹயோ:

ததாதேவ்யாத்மநோ ரைக்யம் ஏதாவதனுசாஸனம்

ஸாதகன் ஸ்ரீசக்ரம், தேகம் இவற்றை ஒன்றாக எண்ண வேண்டும். அதேபோல் தேவி, ஆத்மா இவற்றையும் ஒன்று என எண்ண வேண்டும். இதுதான் ஸாதனுக்குள்ள போதனை.

91.ஹஸ்தாம் போஜ ப்ரோல்லஸத் சாமராப்யாம்

ஸ்ரீவாணீப்யாம் பார்ச்வயோர் ஜ்யமாநாம்

ஸ்ரீஸம்ராஜ்ஞி த்வாம் ஸதாலோகயேயம்

ஸதா ஸத்பி:ஸேவ்யமாநாம் நிகூடாம்

ஹே ஸ்ரீ ஸம்ராஜ்ஞி!தங்கள் திருக்கரங்களில் சாமரம் தாங்கி லக்ஷ்யும் ஸரஸ்வதியும் பக்கங்களில் சிக்கொண்டிருக்க மற்ற ஸத்ஜனங்கள் ஸேவை புரியும்படி தனித்து விளங்கும் உன்னை நான் எப்பொழுதும் காண வேண்டுமே.

92.இஷ்டாநிஷ்ட ப்ராப்திவிச்சித்திஹேது:

ஸ்தோதும்வாசாம் க்லுப்திரித்யேவ மன்யே

த்வத்ரூபம் U ஸ்வானுபூத்யேகவேத்யம்

நசக்ஷ§ஷாக்க்ருஹ்யதே நாபிவாசா

ஹே தேவி!நீ இஷ்டங்களை நிறைவேற்றுபவள். அனிஷ்டங்களை துடைப்பவள் என்று சொல்வது ஸ்தோத்திரம் செய்யும்போது வார்த்தைகள் அடக்கமாக இருப்பதற்கு வேண்டி சொன்னதே. ஏனெனின் உனது ஸ்வரூபம் அவரவர் அனுபவத்தினால் மட்டுமே அறியக்கூடியது. அது, பார்வையாலோ பேச்சிலோ க்ரஹிக்கக்கூடியதல்லவே!

93.ஹரஸ்வரைஸ்சதுர்வர்கபதம் மந்த்ரம் ஸபிந்துகம்

தேவ்யா ஜபதவிப்ரேந்த்ரா அன்யா வாசோ விமுஞ்சத

ஹே தீரர்களே!தேவியின் மந்த்ரம் ஹகார ரேபஸ்வரங்களும் பிந்துவும் சேர்ந்து அமைந்தது. அது தர்ம-அர்த்த-காம-மோக்ஷங்களை பயப்பது. அதுவே ஜபிக்கப்பட வேண்டியது. மற்றதை விலக்குங்கள்.

94.யஸ்தே ராகாசந்த்ரபிம்பாஸநஸ்தாம்

பியூஷாப்திம் கல்பயந்தீம் மயூகை:

மூர்திம் பக்த்யா த்யாயதே ஹ்ருத்ஸரோஜே

ந தஸ்ய ரோகோ நஜரா ந ம்ருத்யு:

ஹே தேவி! பூர்ணிமை சந்திரனாகிய ஆஸனத்தில் ற்றிருப்பதும், கிரணங்களால் அம்ருதக் கடலைத் தோற்றுவிப்பதுமான உனது மூர்த்தியை எவன் தனது ஹ்ருதயத்தாமரையில் தியானிக்கிறானோ அவனுக்கு நோயோ, வயோதிகத் தன்மையோ, மரணமோகூட ஏற்படாது.

95.துப்யம் மாதர்யோ sஞ்ஜலிம் மூர்த்நி தத்தே

மௌலி ச்ரேண்யா பூபுஜஸ்தம் நமந்தி

ய:ஸ்தௌதி த்வாமம்ப சித்வல்லிவாசா

தம் தீராஸ:கவய உந்நயந்தி

ஹே அன்னையே!எவன் தன் தலைமீது உனக்கு அஞ்சலி செய்கிறானோ அவனை அரசர்கள்கூட தலை வரிசைகளால் வணங்குவர். அம்மையே! சித்வல்லியே!உன்னை சொற்களால் ஸ்தோத்திரம் செய்பவனை தீரர்களாகிய கவிகள் மேம்படுத்திப் பேசுவார்களே!

96.வைரிஞ்சௌகைர்விஷ்ணுருத்ரேந்த்ர ப்ருந்தை:

துர்காகாலீ பைரசக்தி ஸங்கை:

யந்த்ரேசி த்வம் வர்ததே ஸ்தூயமாநா

நதத்ர ஸ¨ர்யோபார ந சுந்த்ரதாகம்

ஹே யந்த்ரேசி!தேவி!நீ ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன், இந்திரன் இவர்களாலும், துர்க்கை, காலீ, பைரவி, சக்தி இவர்கள் கூட்டத்தாலும் ஸ்தோத்திரம் செய்யப்படுகிறாய். அங்கு சூர்யனோ, சந்த்ரனோ, நக்ஷத்திரங்களோ பிரகாசிக்கவில்லை.

97.பூத்யை பவாநி த்வாம் வந்தே ஸுரா:சதமகாதய:

த்வாமாநம்ய ஸம்ருத்தா:ஸ்யுராயோ தாமாநிதிவ்யாநி

ஐச்வர்யம் பெற உன்னை நான் வணங்குகிறேன். ஹே பவானி!இந்திரன் முதலிய தேவர்களே உன்னை வணங்கி திவ்யமான ஸ்தானங்களைப் பெற்று செழிப்பாக இருக்கிறார்களே!

98.புஷ்பவத்புல்ல தாடங்காம் ப்ராதராதித்யபாடலாம்

யஸ்த்வாமந்த:ஸ்மரத்யம்ப தஸ்ய தேவா அஸன் வசே

எவனொருவன், புஷ்பம்போல் மலர்ச்சியான தோள்வாளையணிந்து, காலை சூர்யன் போல் சிவந்த மேனியுடையவளான உன்னை மனதில் தியானிக்கிறானோ, ஹே அம்மே!அவன் வசப்பட்டுவிடுகிறார்களே தேவர்கள்!

99.வச்யே வித்ரும சங்காசாம் வித்யாயாம் விசதப்ரபாம்

த்வாமம்ப பாவயேத் பூத்யைஸுவர்ணாம் ஹேமமாலிநீம்

ஹே வசப்படும் சுபாவமுடைய அம்ப!பவழம் போல் இருப்பவளும், வித்யையில் தெளிவாக ஒளிர்பவளும் நல்ல தங்க மாலையணிந்தவளுமான உன்னை ஐச்வர்யம் பெற தியானிக்கலாமே !

100.வாமாங்கஸ்தாமீசிது:தீப்யமாநாம்

பூஷாப்ருந்தை ரிந்துரேகாவதம்ஸாம்

யஸ்த்வாம் பச்யந்ஸந்ததம் நைவத்ருப்த:

தஸ்மை சங்கர மடம் தேவி வஷடஸ்து துப்யம்

ஹே தேவி!பரமேச்வரனின் இடது தொடையில் ற்றிருப்பவளும், ஆபரணங்கள் பூண்டு விளங்குபவளும், சந்திர பிறையை அணிந்திருப்பவளும் ஆன உன்னை பார்த்துக்கொண்டிருந்தும்கூட திருப்தியடையாத அந்த ஸாதகனுக்கும் உனக்கும் இதோ ஹவிர்பாகம் ஸமர்ப்பிக்கிறேன்.

101.நவநீப வநீ வாஸ லாஸோத்தரமாநஸே !

ச்ருங்காரதேவதே மாத:ஸ்ரீயம் வாஸய மே குலே

புது நீபக்காட்டில் வசிக்க விழையும் தாயே!சிருங்கார தேவதையே!என்ட்டில் லக்ஷ்யை வாசம் செய்விப்பாயே!

102.பக்த்யா அபக்த்யா வா sH பத்யாவஸாந-

ச்ருத்யா ஸ்துத்யா சேதயா ஸ்தௌதியஸ்த்வாம்

தஸ்ய க்ஷிப்ரம் த்வத்ப்ரஸாதேந மாத:

ஸத்யா:ஸந்துயஜமாநஸ்ய காமா:

ஹே தாயே!ஒவ்வொரு செய்யுளின் முடிவிலும் வேதவாக்யம் பொதிந்த இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி பக்தியுடனோ, பக்தி இல்லாமலோகூட உன்னை ஸ்தோத்ரம் செய்யும் அந்த யஜமானரின் விருப்பங்கள் உன் அருளால் நிறைவேற வேண்டுமே!

103.பாலிசேந மயா ப்ரோக்தமபி வாத்ஸல்ய சாலிதோ:

ஆனந்தமாதிதம்பத்யோரிமா வர்தந்து வாங்கிர:

அறியாத சிறுவன் சொல்லியிருந்தாலும், அன்புவயப்பட்ட ஆதி தம்பதியருக்கு இந்த சொற்கள் ஆனந்தத்தை கூட்டுவிப்பதாக!

104.மாதுரீஸெளரயாவாஸ சாபஸாயகதாரிணீம்

தேம் த்யாயன்படே தேத்ஸர்வ காமார்த்த ஸிந்தயே

இனிய மணம் கமழும் புஷ்ப வில்லும், பாணமும் தாங்கிய தேவியை தியானம் செய்துகொண்டு இந்த ஸ்தோத்திரத்தைப் படிக்க, எல்லா விருப்பங்களும் நிறைவேறும்.

105.ஸ்தோத்ரமேதத் ப்ரஜபதஸ்தவ த்ரிபுரஸுந்தரி

அனுத்க்ஷ்ய பயாத்தூரம் ம்ருத்யுர்தாவதி பஞ்சம் :

ஹே த்ரிபுரசுந்தரி!உனது இந்த ஸ்தோத்ரத்தை ஜபிப்பவரை பயத்தினால் போலும் கண்ணெடுத்துப் பாராமல் யமன் அம்பரந்து வெகுதூரம் ஒடுகிறான்.

106.ய:படதி ஸ்துதிமே தாம் வித்யாவந்தம் தமம்பதநவந்தம்

குருதேவி!யசஸ்வந்தம் வர்சஸ் வந்தம் மனுஷ்யேஷ§

ஹே தேவி!இந்த ஸ்தோத்திரத்தை படிக்குமவரை, மனிதரில் கல்வி, செல்வம்,

புகழ், அழகு மேம்பட்டவராகச் செய்வாயே!

107.யே ச்ருண்வந்தி ஸ்துதிமாம் தவதேவ்ய நஸ¨யகா:

தேப்யோ தேஹி ஸ்ரீயம் வித்யாமுத்வர்ச உத்தநூபலம்

இந்த ஸ்தோத்திரத்தை காழ்பு இன்றி எவர் கேட்கிறார்களோ அவர்களுக்கு செல்வத்தையும், கல்வியையும், வர்சஸையும் உடல் பலத்தையும் அருள்வாயே ஹே தேவி!

108.த்வாமேவாஹம்ஸ்தௌ நித்யம் ப்ரணௌ

ஸ்ரீவித்யேசாம் வச் ஸஞ்சிந்தயா

அத்யாஸ்தே யா விச்வமாதா விராஜோ

ஹ்ருத்புண்டரீகம் விரஜம் விசுத்தம்

விராட்புருஷனின் தூயதாய ஹ்ருதயத் தாமரையில் விச்வ மாதாவான அம்பிகை ற்றிருக்கிறாள். அத்தகைய தாயான உன்னைத்தான் ஸ்தோத்ரம் செய்கிறேன். நிதமும் வணங்குகிறேன். வார்த்தைகளில் பேசுகிறேன். மனதில் எண்ணுகிறேன்.

109.சங்கரேண ரசிதம் ஸ்தவோத்தமம்

ய:படேத் ஜகதி பக்திமான் நர:

தஸ்ய ஸித்திரதுலா பவேத் த்ருவா

ஸுந்தரீ ச ஸததம் ப்ரஸீததி

ஸ்ரீசங்கரரால் இயற்றப்பட்ட இந்த உயர்ந்த ஸ்தோத்ரத்தை உலகில் பக்தியுள்ள மனிதர் படிப்பாரேயாகில் அவருக்கு நிகரற்ற ஸித்தியும், திரிபுரஸுந்தரியின் ஆழ்ந்த அன்பும் கைகூடும்.

110.யத்ரைவ யத்ரைவ தவஸ்வரூபம்

தத்ரைவ தத்ரைவ தவ ஸ்வரூபம்

யத்ரைவ யத்ரைவ சிரோ மதீயம்

தத்ரைவ தத்ரைவ பதத்வயம் தே

எங்கெங்கெல்லாம் என்மனம் செல்கிறதோ அங்கெல்லாம் உனது ஸ்வரூபம் தெரியவேணும். எங்கெல்லாம் என் சிரஸ் இருக்கிறதோ அங்கெல்லாம் உனது திருவடி அமைய வேணுமே!