1.விசுத்தம் பரம் ஸச்சிதானந்த ரூபம்
குணாதாரமாதாரஹீநம் வரேண்யம்
மஹாந்தம் விபாந்தம் குஹாந்தம் குணாந்தம்
சுகாந்தம் ஸ்வயம் தாம ராமம் ப்ரபத்யே
மேன்மை, தூய்மை பெற்று ஸத்-சித்-ஆனந்தம் என்ற மைந்தவரும், குணங்களுக்கு ஆதாரமாயும், ஆனால் ஆதாரமேதுல்லாதவரும், சிறந்தவரும், பெரியவரும், விளங்குபவரும், சூக்ஷ்மம், குணம் இவற்றின் எல்லையாயும் ஸ்வயம் பிரகாசமாயுருக்கிற ராமரை சரணடைகிறேன்.
2.சிவம் நித்யமேகம் விபும் தாரகாக்யம்
ஸுகாதார மாகாரசூன்யம் ஸுமான்யம்
மஹேசம் கலேசம், ஸுரேசம் பரேசம்
நரேசம் நரீசம் மஹீசம் ப்ரபத்யே
ஸ்ரீதராக ராமர் என்ற ஒருவரே நித்யமானவர், எங்கும் வியாபித்தமங்கல ரூபமானவர். அவர் உருவமற்றவரெனினும் ஆனந்தமே உருவானவர், அனைவரும் போற்றக்குரியவர் மஹேசர், கலைகளுக்கு ஈசர், தேவர்களுக்கு ஈசர், பர-ஈசர், நரர்களுக்கு ஈசர், பூக்கு ஈசர், ஆனால் தனக்குமேல் ஈசர் இல்லாதவர் அந்த ராமரை சரணடைகிறேன்.
3.யதாவர்ணயத் கர்ணமூலேsந்த காலே
சிவோ ராம ராமேதி ராமேதி காச்யாம்
ததேகம் பரம் தாரகப்ரஹ்மரூபம்
பஜேsஹம் பஜேsஹம் பஜேsஹம் பஜேsஹம்
காசியில் சிவன் உபதேசித்த வண்ணம் ( ராம ராம ராம ) என்ற ஒரே தாரகப்ரஹமரூபமான அந்த ராமனை எப்பொழுதும் சேவிக்கிறேன்.
4.மஹாரத்னபீடே சுபே கல்பமூலே
ஸுகாஸீன மாதித்ய கோடி ப்ரகாசம்
ஸதாஜானகீ லக்ஷ்மணோபேத மேகம்
ஸதா ராமசந்த்ரம் பஜேsஹம் பஜேsஹம்
கல்பகமரத்தடியில் நல்ல ரத்ன பீடத்தில் ஸுகமாக அமர்ந்திருப்பவரும் பலசூர்யர்கள் போன்று ப்ரகாசிக்கிறவரும், எப்பொழுதும் ஸ்ரீஸீதாலக்ஷ்மணர்களோடு சேர்ந்திருப்பவரும் ஆன ஸ்ரீராம சந்த்ரனை எப்பொழுதும் சேவிக்கிறேன்.
5.க்வணத்ரத்ன மஞ்ஜீர பாதாரவிந்தம்
லஸன் மேகலா சாருபீதாம்பராட்யம்
மஹாரத்ன ஹாரோல்லஸத்கௌஸ்பாங்கம்
நதத் சஞ்சரீ மஞ்ஜரீலோல மாலம்
ஒலிக்கும் சதங்கை திருவடித்தாமரையில், அழகிய ஒட்டியாணமும் பீதாம்பரமும் இடையில், பெரிய வைரஹாரமும், கௌஸ்துபமும் மார்பில், தேனீக்கள் ரீங்காரம் செய்யும் மாலையும் அவனது மார்பில் அன்றோ!
6.லஸத் சந்த்ரிகா ஸ்மேர சோணாதராபம்
ஸமுத்யத்பதங்கேந்து கோடிப்ரகாசம்
நமத்ப்ரஹ்மருத்ராதிகோடீரரத்ன
ஸ்புரத்காந்தி நீராஜனா ராதிதாங்க்ரிம்
செவ்விய உதட்டில் தவழும் நிலவே போன்ற புன்சிரிப்புடையவர், உதயகால சூர்ய சந்த்ரர்களின் ஒளி போன்று ப்ராகாசிப்பவர், பிரம்மன், ருத்ரன் இவர்கள் வணங்கும் பொழுது அவர்களின் கிரீடரத்ன ப்ரபைபால் நீராஜனம் செய்விக்கப்பட்ட திருவடிகளையுடையவர் அப்பெருமான்.
7.புர:ப்ராஞ்ஜலீன் ஆஞ்ஜனேயாதிபக்தான்
ஸ்வசின் முத்ரயா பத்ரயா போதயந்தம்
பஜேsஹம் பஜேsஹம் ஸதா ராமசந்த்ரம்
த்வதன்யம் ந மன்யே ந மன்யே ந மன்யே
தன் எதிரில் கைகூப்பிய வண்ணம் நிற்கும் ஆஞ்ஜனேயர் முதலிய பக்தர்களை சீரிய சின்முத்ரையால் போதித்துக் கொண்டிருக்கிற ஸ்ரீராமசந்திரனை சேவிக்கிறேன். அவனன்றி வேறேவரையும் நினைக்கவில்லை. நினைக்கவில்லை.
8.யதா மத்யமீபம் க்ருதாந்த: ஸமேத்ய
ப்ரசண்டப்ரகோபை: படை: பீஷயேத்மாம்
ததாவிஷ்கரோஷி த்வதீயம் ஸ்வரூபம்
ஸதாபத்ப்ரணாசம் ஸகோண்ட பாணம்
என்னருகில் யமன் வந்து கக்கோபங்கொண்ட தூதர்கள் மூலம் என்னை பயமுறுத்தும் பொழுது, ஆபத்தை நீக்கும், கோதண்டம், பாணம் இவற்றுடன் விளங்கும் உனதுஸ்வயரூபத்தைக்காட்டியருள்வாயல்லவா?
9.த்வமேவாஸி தைவம் பரம் மே யதேகம்
ஸுசைதன்யமேதத் த்வதன்யம் ந மன்யே
யதோsபூத் அமேயம் வியத்வாயுதேஜோ
ஜலோர்வ்யாதி கார்யம் சரம் ச அசரம்ச
ராம! எனக்கு நீர் ஒருவரே மேலான தைவம், உன்னையன்றி வேறொரு சைதன்யத்தை மனதாலும் நினையேன். உம்டருந்து தானே இந்த அளவற்ற HKFM அப்தேஜோ வாயு ஆகாசாதி சராசரப்ரபஞ்சம் தோன்றியுள்ளது!
10.நம:ஸச்சிதானந்தரூபாய தஸ்மை
தமோ தேவதேவாய ராமாய துப்யம்
நமோ ஜானகூ ஜீவிதேசாய துப்யம்
நம:புண்டரீகாயதாக்ஷ£ய துப்யம்
ஸத்-சித்-ஆனந்த ரூபியான அந்தராமனுக்கு நமஸ்காரம், தேவர்களுக்கெல்லாம் தேவனான, ஜானகீபிராண நாதனான, வெண்தாமரை போன்ற கண்களையுடைய ராமனுக்கு நமஸ்காரம்.
11.நமோ பக்தியுக்தாணுரக்தாய துப்யம்
நம: புண்யபுஞ்ஜைக லப்யாய துப்யம்
நமோ வேத வேத்யாய ச ஆத்யாய துப்பம்
நம: ஸுந்தராயேந்திராவல்லபாய
பக்தியும், அன்பும் கொண்ட சேவகர்களையுடைய உமக்கு நமஸ்காரம். புண்யம் ஒன்றால் மட்டுமேயடைய முடிந்த உமக்கு நமஸ்காரம். வேதத்தால் அறியதக்க ஆதிபுருஷரான உமக்கு நமஸ்காரம். லக்ஷ்தேவியின் அழகிய மணாளனான உமக்கு நமஸ்காரம்.
12.நமோ விச்வகர்த்ரே நமோ விச்வஹர்த்ரேத
நமோ விச்வபோக்த்ரே நமோ விச்வமாத்ரே
நமோ விச்வநேத்ரே நமோ விச்வஜேத்ரே
நமோ விச்வபித்ரே நமோ விச்வமாத்ரே
உலகை ஆக்கியும், அழித்தும், வருகிற உமக்கு நமஸ்காரம். உலகை அனுபவிப்பவரும், அதை உள்ளவாரு அளப்பவரும், அதன் தலைவரும், அதையே வெற்றி கொள்பவரும், உலகத்தாயும் தந்தையுமான ஸ்ரீ ராமருக்கு நமஸ்காரம்.
13.நமஸ்தே நமஸ்தே ஸமஸ்தப்ரபஞ்ச
ப்ரபோக ப்ரயோகப்ரமாண ப்ரண
மதீயம் மனஸ்த்வத் மதத்வந்த்வ ஸேவாம்
விதாதும் ப்ரவ்ருத்தம் ஸுசைத்ன்யஸித்யை
உலகமனைத்தையும் அனுபவிக்கவோ, இயக்கவோ, அளவிடவோ தக்கபடி அறிந்துள்ள உமக்கு, ஹேராம! நமஸ்காரம். நல்ல ஞானம் பெறுவதற்கு என்மனம் உன்திருவடிசேவையை மேற்கொண்டுள்ளது.
14.சிலாபி த்வதங்க்ரி-க்ஷமா-ஸங்கிரேணு-
ப்ரஸாதாத் U சைதன்ய மாதத்த ராம
நரஸ்த்வத் பதத்வந்த்வ ஸேவாவிதானாத்
ஸுசைதன்யமேதீதி கிம்சித்ரமத்ர
ஹே ராம! உனது திருவடிமண் தூசு பட்டதால் அல்லவா சிலைவடிவமாகிய அஹல்யை ஸ்வய உணர்வு பெற்றால். உனது திருவடி சேவைபுரிந்து மனிதன் நல்ல ஞானம் பெறுவதில் என்ன வியப்பு உள்ளது?
15.பவித்ரம் சரித்ரம் விசித்ரம் த்வதீயம்
நரா யே ஸ்மரந்த்யன் வஹம் ராமசந்த்ர
பவந்தம் பவாந்தம் பரந்தம் பஜந்தோ
லபந்தே: க்ருதாந்தம் நபச்யந்த்யதோsந்தே
உனது விசித்ரமான சரித்ரம் கப்புண்யம் வாய்ந்தது. ஹேராம! அந்த சரிரத்தை தினமும் ஸ்மரிக்கின்ற மனிதர்களும், போஷித்து வளர்க்கும் உன்னை சேவிப்பவரும் ஸம்ஸாரத்தை முடித்துவிட்டு அதன் பின் யமனைக்காணவே மாட்டார்.
16.ஸ புண்ய: ஸ கண்ய: சரண்யோ மமாயம்
நரோ வேத யோ தேவசூடாமணிம் த்வாம்
ஸதாகாரமேகம் சிதானந்த ரூபம்
மனோவாக கம்யம் பரம் தாம ராம
ஹேராம! எந்த ஒரு மனிதர், தேவர்தலைவனாயும் ஸத்வடிவமாயும், சித் ஆனந்தஸ்வரூபியாயும், மனம், வாக் இவற்றிற்கு எட்டாதவராயும், பெரும் ஒளியாயுருக்கிற உம்மை அறிந்துள்ளாரோ அவர் புண்யமானவர், மதிக்கத்தக்கவர்; எனக்கு சரணடையத்தகுந்தவர்.
17.ப்ரசண்ட் ப்ரதாபப்ரபாவாபிபூத-
ப்ரபூதாரிர ப்ரபோ ராமசந்த்ர
பலம் தே கதம் வர்ண்யதேsதீவ பால்யே
யதோsகண்டி சண்டீச கோதண்டதண்ட:
ஹேப்ரபா! ராமசந்த்ர! கடியப்ரதாபத்தின் தாக்கம் மேலிட்ட பலப்பகைவரை ழ்த்தியவரே! உமது பலம் வர்ணிக்கமுடியாதது; ஏனெனில் சிறுவயதிலேயே மகேச்வரன்வில்லை ஓடித்தீரே!
18.தசக்ரீவமுக்ரம் ஸபுத்ரம் ஸத்ரம்
ஸரித் துர்க மத்யஸ்தரக்ஷே£கணேசம்
பவந்தம் விநா ராம! ரோ நரோவா
sஸுரோ வாsமரோ வா ஜயேத்க: த்ரிலோக்யாம்
ஸமுத்திரத்தின் நடுவில் இருந்த ராக்ஷஸத்தலைவனான கொடிய ராவனனை பிள்ளையுடனும், நண்பர்களுடனும் ஜயிக்கவல்லவர் உம்மைத்தவிர வேறு யார் மூவுலகிலும் உள்ளனர்?
19.ஸதா ராம ராமேதி ராமாம்ருதம் தே
ஸதாராம மானந்த நிஷ்யந்த கந்தம்
பிபந்தம் நமந்தம் ஸுதந்தம் ஹஸந்தம்
ஹனூமந்த மந்தர்பஜே தம் நிதாந்தம்
எப்பொழுதும் ராம ராம என்ற உனது ராமாம்ருதத்தைப் பருகி, வணங்கி, வாய்விட்டு சிரித்து சாதுக்களின் களிப்பிடமாயும், ஆனந்தப்பெருக்கின் வேறாகவும் இருக்கின்ற ஹனுமனை எப்பொழுதும் மனதில் தியானிக்கிறேன்.
20.ஸதா ராம ராமேதி ராமாம்ருதம் தே
ஸதா ராம மானந்த நிஷ்யந்தகந்தம்
பிபன் அன்வஹம் நன்வஹம் நைவ ம்ருத்யோ:
பிபே ப்ரஸாதாத் அஸாதாத் தவைவ
சாதுக்களைக்களிக்கச்தெய்யும் ஆனந்தப்பெருக்கின் வேறுபோலிருக்கின்ற ராம ராம என்ற உனது ராமாம்ருதத்தைப் பருகிக் கொண்டு அனுதினமும் நான் இருப்பேன். உனது குறைவற்ற அருளால் மரணத்திற்காக பயப்படமாட்டேன்.
21.அஸீதாஸமேதை ரகோதண்ட பூஷை:
அஸெளத்ரிவந்த்யை ரசண்யப்ரதாபை :
அலங்கேச காலை ரஸுக்ரீவ த்ரை:
அராமாபிதேயைரலம் தைவதைர்ந:
ஸீதையுடனில்லாத, கோதண்டத்தால் அழகுபெறாத, லக்ஷ்மணன் ஸேவிக்காத, ரல்லாத, ராவணனை அழிக்காத, சுக்ரீவனைத் தோழமை கொள்ளாத, ராமன் என்று பெயர் பெறாத எந்த தெய்வமும் எங்களுக்கு தெய்வல்லை.
22.அராஸனஸ்தை ரசின் முத்ரிகாட்யை :
அபக்தாஞ்ஜனேயாதி த்த்வப்ரகாசை :
அமந்தாரமூலை ரமந்தாரமாலை :
அராமாபிதேயைரலம் தைவதைர்ந:
ராஸனத்தில் அமராத, சின்முத்ரை தரிக்காத, பக்தஆஞ்ஜயர் முதலிய தத்வப்ரகாசகரில்லாத, மந்தாரமரத்தடியில் அமராத, மந்தாரமாலை யணியாத, ராமர் எனப்பெயர் பெறாத எந்த தெய்வமும் எங்கள் தெய்வமன்று.
23.அஸிந்துப்ரகோபை ரவந்த்யப்ரதாபை :
அபந்துப்ரயாணை: அமந்தஸ்தாட்யை:
அதண்யப்ரவாஸை: அகண்டப்ரபோதை:
அராமாபிதேயை ரலம் தைவதைர்ந :
ஸமுத்ரராஜாவிடம் கோபங்கொள்ளாத புகழ்க்கப்ரதாபல்லாத, பரதன் போன்ற உறவினர் சந்திப்பில்லாத, புன்சிரிப்பு இல்லாத, தண்டகவனத்தில் பிரவாசம் கொள்ளாத, அகண்ட ஞானம் பெறாத ஸ்ரீ ராமர் என்ற பெயர் பெறாத எந்த தெய்வமும் எங்கள் தெய்வமன்று.
24.ஹரே ராம ஸீதாபதே ராவணாரே
கராகே முராரேsஸுராரே பரேதி
லபந்தம் நயந்தம் ஸதா கால மேவம்
ஸமாலோகயா லோகயாசேஷபந்தோ
ஹே ஹரே ராம! ஸீதாபதே! ராவணனின் பகாவனே! கரனையழித்தவனே! முராரே! அஸுரர்களை ழ்த்தியவரே பரனே என்று எப்பொழுதும் ஜபித்துக்கொண்டு காலம் கழிக்கும் இந்த அடியேனை அனைவரையும் உறவுகொண்டாடும் ஹேராம நன்குகவனி, கவனி!
25.நமஸ்தே ஸுத்ராஸுபுத்ராபிவந்த்ய
நமஸ்தேஸதா கைகயாநந்தனேட்ய
நமஸ்தேஸதா வாநராதீசவந்த்ய
நமஸ்தே நமஸ்தேஸதா ராமசந்த்ர
ஸுத்ரையின் மகன் மக்ஷ்மணனால் சேவிக்கப்பட்டவனே! எப்பொழுதும் கைகயீபுத்ரனான பரதனால் பூஜிக்கப்பட்டவனே ! வானரத்தலைவன் வணங்கும் ஹே ராமசந்ர! உனக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
26.ப்ரஸீத ப்ரஸீத ப்ரசண்யப்ரதாப
ப்ரஸீத ப்ரஸீத ப்ரசண்டாரிகால
ப்ரஸீத ப்ரஸீத ப்ரபன்னானுகம்பின்
ப்ரஸீத ப்ரஸீத ப்ரபோ ராமசந்த்ர
கோரப்ரதாபம் வாய்ந்த ஹேராம! எனக்கு அருள்செய். கொடியபகைவரை அழித்த ஹேராம! எனக்கருள்வாயாக சரணடைந்தோரிடம் பரிவுகொள்ளும் ஸ்ரீராமனே! எனக்கு அருள்செய். ஹேப்ரபோ ராமசந்த்ரா அருள்வாய் அருள்வாய்.
27.புஜங்கப்ரயாதம் பரம் வேதஸாரம்
முதாராமசந்த்ரஸ்ய பக்த்யா ச நித்யம்
படன் ஸந்ததம் சிந்தயன் ஸ்வாந்தரங்கே
ஸ ஏவ ஸ்வயம் ராமசந்த்ர: ஸ தன்ய:
எவனெருவன் ஸ்ரீ ராமனிடம் பக்தியுடன் இந்த வேதஸாரமான புஜங்கப்ரயாதஸ்தோத்ரத்தை படித்து வருகிறானோ அவனே ஸ்ரீ ராமனாகிவிடுகிறான் அவனே புண்யசாலியாகவும் ஆவான்.
ஸ்ரீ ராமபுஜங்கப்ரயாதஸ்தோத்ரம் முற்றுப் பெற்றது.