1
தாகில விஷயேச்சம் ஜாதானந்தாச்ரு புலகமத்யச்சம்
ஸீதாபதிதூதாத்யம் வாதாத்மஜமத்ய பாவயே ஹ்ருத்யம்
ஸீதாபதிதூதாத்யம் வாதாத்மஜமத்ய பாவயே ஹ்ருத்யம்
பொருள்: உலக விஷயங்களனைத்திலும் விருப்பல்லாதவர், ஆனந்தக் கண்ணீர் பெருக்கும் ரோமாஞ்தமும் கொண்டு கத்தூய்மையுள்ளவர். ஸீதாபதியான ஸ்ரீராமரின் முதல் தூதனவர், இனியவர், அப்படிப்பட்ட வாதாத்மஜரான ஹனுமனை தியானிக்கிறேன்
2
தருணாருண முககமலம் கருணாரசபூர பூரிதாபாங்கம்
ஸஞ்ஜீவனமாசாஸே மஞ்ஜுளமஹிமான மஞ்ஜனாபாக்யம்
ஸஞ்ஜீவனமாசாஸே மஞ்ஜுளமஹிமான மஞ்ஜனாபாக்யம்
பொருள்: இளம் சூர்யனையத்து சிவந்த முகமுள்ளவர், கருணைததும்பும் கடைக்கண்கள் கொண்டவர், உயிர்நாடியைத் தூண்டும் பெரும் பெருமையுடையவர். அவர் அஞ்ஜனாதேவியின் அதிர்ஷ்டமான அருமைப்புதல்வர். அவரை வாழ்த்துகிறேன்
3
சம்பரவைரிசராதிக மம்புஜதலவிபுலலோசனோதாரம்
கம்புகல மனிலதிஷ்டம் பிம்பஜ்வாலிதோஷ்டமேக மவலம்பே
கம்புகல மனிலதிஷ்டம் பிம்பஜ்வாலிதோஷ்டமேக மவலம்பே
பொருள்: மன்மதபாணத்தையும் விஞ்சியவர், தாமரை இதழ் போன்று மலர்ச்சிபெற்ற கண்கள் கொண்டவர். சங்கு போன்ற கழுத்தும், கொவ்வைப்பழ மெனத்திகழும் உதடும் கொண்ட வாயு புத்திரரான ஹனுமனை ஆச்ரயிக்கிறேன்
4
தூரிக்ருதஸீதார்தி: ப்ரகடீக்ருத ராமவைபவஸ்பூர்தி:
தாரித தசமுக கீர்தி:புரதோ மம பாது ஹனுமதோ மூர்தி :
தாரித தசமுக கீர்தி:புரதோ மம பாது ஹனுமதோ மூர்தி :
பொருள்: ஸீதையின் துன்பத்தை விலக்கியவர், ஸ்ரீராமரின் வைபவத்தை உலகறியச் செய்தவர், ராவணனின் புகழை கிழித்தெறிந்தவர், அப்படிப்பட்ட ஹனுமனின் மூர்த்தி என்னெதிரே பளிச்சிடுகிறது
5
வானர நிகராத்யக்ஷம் தானவகுல குமுத ரவிகரஸத்சத்ருக்ஷம்
தீன ஜனாவன தீக்ஷம் பவனதப: பாக புஞ்ஜ மத்ராக்ஷம்
தீன ஜனாவன தீக்ஷம் பவனதப: பாக புஞ்ஜ மத்ராக்ஷம்
பொருள்: வானரக் கூட்டத்தின் தலைவர், ராக்ஷஸ குலமாகிய அல்லிப் பூக்களுக்கு சூர்ய கிரணம் போன்றவர், எளிய ஜனங்களைக் காக்கும் வ்ரதம் கொண்டவர். வாயு தேவன் செய்த தவத்தின் திறன் போன்றவர்- அந்த ஹனுமனை கணடுகொண்டேன்
6
ஏதத் பவனஸுதஸ்யஸ்தோத்ரம் ய: படதி பஞ்சரத்னாக்யம்
சிரஹ நிகிலான் போகான் புக்த்வா ஸ்ரீராம பக்திபாக்பவதி
ஹனுமத்பஞ்சரத்னம் முற்றுப்பெறுகிறது.
சிரஹ நிகிலான் போகான் புக்த்வா ஸ்ரீராம பக்திபாக்பவதி
ஹனுமத்பஞ்சரத்னம் முற்றுப்பெறுகிறது.
பொருள்: இந்த ஹனுமனின் பஞ்சரத்னம் என்ற ஸ்தோத்ரத்தைப் படிப்பவர் இவ்வுலகில் அனைத்து ஸுகபோகங்களையும் அனுபவித்து பின் ஸ்ரீராம பக்திக்கவராக ஆவர்