1அஹமானந்த ஸத்யாதிலக்ஷண:கேவல:சிவ:
ஸதானந்தாதி ரூபம் யத்தேநாஹமசலோsத்வய:
பெருமகிழ்ச்சி-ஸத்யம்-என்றெல்லாம் குறிப்பிடும் சிவம் ஒன்றே நான். எது ஆனந்தம்-ஸத்யம்-என்று கூறப்படுகிறதோ அது பற்றியே 'நான்'என்ற ஒன்றும் அசையாத இரண்டற்ற பரம் ஆகும்.
2.அக்ஷிதோ ஷாத்யதைகோsபி த்வத்பாதி சந்த்ரமா:
ஏகோsப்யாத்மா ததா பாதி த்வயத் மாயமா ம்ருஷா
சந்திரன் ஒருவனே எனினும், கண்ணின் குற்றத்தால் இரண்டு சந்திரர்கள் போல காண்கிறது. அதுபோலவே ஆத்மா ஒன்றே எனினும் மாயையால் பொய்யாக இரண்டுபோல தோன்றுகிறது.
3.அக்ஷிதோஷவிஹீநாநாம் ஏக எவ யதா சசீ
மாயாதோஷவிஹீநாநாம் ஆத்மைவைக:ததாஸதா
கண்ணில் குற்றல்லாதவருக்கு எவ்வாறு சந்திரன் ஒருவனே எனத் தோற்றுகிறதோ அவ்வாறே மாயா தோஷம் நீங்கியவருக்கு ஆத்மா எப்பொழுதும் ஒன்றேதான் தோன்றும்.
4.த்வித்வம் பாத்யக்ஷிதோஷேண சந்த்ரே மாயயா ஜகத்
த்வித்வம் ம்ருஷா யதாசந்த்ரே ம்ருஷாத்வைதம் ததாsத்ம G
கண்ணில் தோஷத்தால் சந்திரன் இரண்டு போல் தோன்றுகிறதே அதுபோல் ஆத்மாவில் மாயையால் உலகம் வேறெனவாகத் தோன்றுகிறது. இரண்டு என்பது சந்திரனில் பொய்யானதுபோல ஆத்மாவிலும் இரண்டு என்பது பொய்யானதே.
5.ஆத்மந:கார்யமாகாச: விநாssத்மாநம் ந ஸம்பவேத்
கார்யஸ்ய பூர்ணதாஸித்தா கிம் புந:பூர்ணதாssத்மந:
ஆத்மாவின் மூலம் தோன்றியது ஆகாசம். ஏனெனில் ஆத்மா இல்லையெனில் ஆகாசம் தோன்ற முடியாது. ஆகாசமே பூர்ணமானதாக ஏற்கப்படுகிறது. எனின் காரணமான ஆத்ம பூர்ணமானது எனச் சொல்ல வேண்டுமா?
6.கார்ய பூ தோ யதாssகாச ஏகஏவ நத்விதா
ஹேதுபூத ஸ்ததாssத்மாவுயம் ஏக ஏவ விஜாநத:
ஆத்மாவின் படைப்பான ஆகாசம் ஒன்றேதான். இரண்டுவிதல்லையானது போல் காரணமாக அமைந்த ஆத்மாவும் ஒன்றேதான் என அறிவாளிக்கு விளங்கும்.
7.ஏகோsப்த்வய வத்பாதி யதாssகாசஉபாதித:
ஏகோsபித்வய வத்பூர்ண:ததாத்மாயமூபாதித:
ஆகாயம் கடம், மடம் என்ற குறிப்பின் காரணமாக இரண்டாகத் தோன்றுவதுபோல், பூர்ணமான ஆத்மா ஒன்றே எனினும் குறிப்பிற்காக இரண்டு போலத் தெரிகிறது.
8.காரணோபாதி சைதந்யம் கார்யஸம்ஸ்தசிதோsதிகம்
ந கடாப்ராத் ம்ருதாகாச:குத்ரசித் நாதிகோ பவேத்
சாஸ்திரங்களில் காரண-உபாதி என்றும், பார்ய-உபாதி என்றும் கூறுவதுண்டு. அவற்றில் கார்ய-உபாதி உணர்வைக் காட்டிலும் காரண-உபாதி உணர்வு மேலானது என்பதும் உண்மையானதே. குடத்திற்கு காரண-உபாதியான மண் என்பது சீரியதே. அதாவது கடாகாசத்தை விட ம்ருதாகாசனம் பெரிது என்பதில் சந்தேகல்லை.
9.நிர்கதோபாராகாச:ஏக எவ யதாபவேத்
ஏக ஏவ ததாssத்மாsயம் நிந்கதோபாதி கஸ்ஸதா
கடம், மடம், என்ற சிறு குறிப்பு ஏதுல்லாதபோது அது பற்றிய ஆகாசம் எவ்வாறு ஒன்றேதானோ அவ்வாறே குறிப்பு ஏதுல்லாதபோது ஆத்மாவும் ஒனறுதான்.
10.ஆகாசாதன்ய ஆகாச:ஆகாசஸ்ய யதா நஹி
ஏகத்வாதாத்மநோ நான்ய ஆத்மாஸித்யதி சாத்மன:
ஆகாசத்தின்று வேறுபட்ட ஆகாசம் இல்லை என்பது போல், ஒன்றேயான ஆத்மாவினின்று வேறுபட்ட ஆத்மாவும் நிலைநிறுத்தப்பட மாட்டாதே!
11.மேக யோகாத் யதா நீரம் காரகா காரதாயாத்
மாயா யோகாத் ததைவாத்மா ப்ரபஞ்சாகாரதா யாத்
சாதாரண மழை நீர் மேகத்தினுள்ளிருந்து ஆலங்கட்டியாவதுபோல், ஆத்மாவும் மாயையுடன் இணைந்து நிற்கும்போது இந்த பிரபஞ்சம் பரிணக்கிறது.
12-13 வர்ஷோபல இவாபாதி நீரமேவா ப்ரயோகத:
வர்ஷோபல நாசேந நீரநாசோ யதா நஹி
ஆத்மை வாஸம் ததா பாதி மயாயோகாத் ப்ரபஞ்சவத்
ப்ரபஞ்சஸ்ய விநாசேந ஸ்வாத்ம நாசோ நஹிக்வசித்
மேகத்தின் இணைப்பில் நீரானது ஆலங்கட்டியாக மாறுவதும், அந்த ஆலங்கட்டி மாயும்போது நீரானது மாயவில்லை என்பதும் போல மாயையுடன் இணையும்போது இதே இந்த ஆத்மா, ப்ரபஞ்சம் போல பரிணத்து, பின் பிரபஞ்சம் அழியும்போது அதுவே அழியாமலிருப்பதும் இயற்கையன்றோ!
14.ஜலாதன்ய இவாபாதி ஜலோத்தோ புத்புதோ யதா
ததாssத்மந:ப்ருதகிவ ப்ரபஞ்சோsய மநேகதா
நீரில் தோன்றிய குழி, நீரில் நின்று வேறானதாகத் தோன்றுவது போல், பலவாறாக அமைந்த இந்த ப்ரபஞ்சமும் ஆத்மாவினின்று வேறானதுபோல் தோன்றும்.
15.யதா புத்புத நாசேந ஜலநாசோ ந கர்ஹிசித்
ததா ப்ரபஞ்சநாசேந நாச:ஸ்யாத் ஆத்மநோ நஹி
குழ் மாய்ந்து போனாலும் தண்ணீர் மாய்வதில்லையே!அது பிரபஞ்சம் அழிந்தாலும், ஆத்மா அழிவதில்லை.
16.அஹிநிர்ல்வயநீஜாத:சுச்யாதி:நாஹிமாப்நுயாத்
ததாஸ்தூலாதி ஸம்பூத:சுச்யாதி:நாப்நுயாதிமம்
நாகம் உரித்த சட்டையில் உண்டான வெண்மை முதலியன நாகத்தைச் சாராதுபோல, ஸ்தூல-சூக்ஷ்ம-காரண சரீரங்களிலுள்ள வெண்மை முதலிய குணங்கள் ஆத்மாவைச் சாராது.
17.த்யக்தாம் த்வசமஹிர்யத்வத் ஆத்மத்வேந நமந்யதே
ஆத்மத்வேந ஸதா ஜ்ஞாநீ த்யக்ததேகத்ரயம் ததா
ஸர்பம் தனது உடலிலிருந்து உரித்த சட்டையை (மேல்தோலை) தனது உடலாக (தானாக) எண்ணுவதில்லை. அதுபோல் ஜ்ஞானியானவன் ஸ்தூல-சூக்ஷ்ம- காரண சரீரங்களை விட்டபின் ஆத்மாவாக எண்ணுவதில்லை.
18.அஹிநிர்ல்வயநீ நாசாத் அஹோநாசோயதா நஹி
தேஹத்ரய விநாசேந நாத்மநாசஸ்ததா பவேத்
மேலுரிச்சட்டை நீக்கியதால் ஸர்பமே அழிவதில்லையே!அதுபோல் மூன்றுவித சரீரங்கள் அழிந்தாலும் ஆத்மா அழிவதில்லை.
19.தக்ராதி லவணோபேத மஜ்ஞைர் லவணவத்யதா
ஆத்மா ஸ்தூலாதி ஸம்யுக்தோ த்ருச்யதே ஸ்தூலகாதிவதி
உப்பு கரிக்கும் மோர் முதலியவற்றை சாமான்யர்கள் உப்பாகவே நினைக்கிறார்கள். அதுபோல ஸ்தூல-சூக்ஷ்ம-காரண சரீரங்களோடு சேர்ந்திருப்பதால் ஆத்மாவையும் ஸ்தூலகம் முதலியன போலவே எண்ணுகிறார்கள்.
20.அய:காஷ்டாதிகம் யத்வத் வஹ்நிவத்வஹ்நியோகத:
பாதி ஸ்தூலாதிகம் ஸர்வம் ஆத்மவத் ஸ்வாத்ம யோகத:
தீயில் முழுதும் காய்ச்சிய போது b ஏறியுள்ளதால் இரும்புக் கம்பி b போலவே ஆகிவிடுகிறதோ அது போலவே நிஜ ஆத்மா சம்பத்தப்பட்டிருப்பதால் ஸ்தூல-சூக்ஷ்ம-காரண சரீரங்கள் ஆத்மா போலவே ஆகிவிடுகிறது.
21.தாஹகோ நைவ தாஹ்யம் ஸ்யாத் தாஹ்யம் தத்வந்த தாஹகம்
நைவாத்மாsயமநாத்மா ஸ்யாத் அநாத்மாsயம் நசாத்மக:
b முதலியன எரிக்கும் சக்தியுடையவை மற்றொரு எரிசக்தியினால் கொளுத்தப்பட முடியாது. அதுபோல் எரிக்கப்படும் பொருளும் எரிப்பதாவதில்லை. ஆத்மாவாயுள்ளது அநாத்மாகவோ, அநாத்மா என்பது ஆத்மாவாகவும் ஆவதில்லை.
22.ப்ரமேயாதித்ரயம் ஸார்த்தம் பாநுனா கடகுட்யவத்
யேந பாதி ஸ ஏவாஹம் ப்ரமேயாதிவிலக்ஷண:
ப்ரமாணம், ப்ரமாதா, ப்ரமேயம் என்றிவை மூன்றும் பெயருக்கு ஏற்ப பொருளுள்ளவை. குடம், சுவர் முதலியன சூர்ய வெளிச்சமாகிய ப்ரமாதாவினால் மெய்ப்பிக்கப்படுகின்றன. இந்த ப்ரமேயம் முதலிய மூன்றினுக்குட்படாமல் எதன் மூலம் இவ்வுலகம் முழுதும் தெளிவாகிறதோ அதுவே ஆத்மா.
23.பானுஸ்புரணதோ யத்வத் ஸ்புரதீவ கடாதிகம்
ஸ்புரதீவ ப்ரமேயாதி:ஆத்மஸ்புரணத ஸ்ததா
குடம் முதலிய சூர்ய ப்ரகாசத்தினால் ஒளிர்வது போல், ப்ரமேயம், ப்ரமானம், ப்ரமாதா ஆகியவையும் ஆத்மா பிரகாசிப்பதால்தான் ஒளிப்பிக்கப்படுகிறது.
24.பிஷ்டாதி:குளஸம்பர்காத் குளவத் ப்ரீதிமான்யதா
ஆத்மயோகாத் ப்ரமேதாதி:ஆத்ம வத்ப்ரீதிமான் பவேத்
வெல்லம் சேரும்பொழுது மாவு முதலியன திதிப்பு உள்ளதாகவும், உகந்ததாகவும் ஆவதுபோல், ஆத்மாவோடு, சம்பந்தப்பட்டு உலக வஸ்துக்கள் ஆத்மா போன்று மனதிற்கு உகந்தவையாகின்றன.
25.கடநீராந்ந பிஷ்டாநாமுஷ்ணத்வம் வஹ்நியோகத:
வஹ்நிம்விநா கதம்தேஷாம் உஷ்ணதா ஸ்யாத்யதாக்வசித்
கடம், தண்ணீர், அன்னம், மாவு இவற்றிற்று தீயுடன் சேரும்போது சூடு ஏற்படுபவது இயற்கையானே. b இல்லாமல் அவற்றிற்கு சூடு வேறு எங்கிருந்து வரமுடியும்.
26.பூதபௌதிக தேஹாநாம் ஸ்பூர்திதா ஸ்வாத்மயோகத:
விநாssத்மானம் கதம் தேஷாம் ஸ்பூர்திதா ஸ்யாத் ததாக்வசித்
பிருதிவி முதலிய ஐந்து பூதங்களுக்கோ, பௌதிக வடிவங்களுக்கோ ஆத்மசம்பந்தத்தினால்தான் உணர்வு, எழுச்சி, பிரகாசம் இவை எல்லாம் ஏற்படுகின்றன. ஆத்மாவின்றி அவை ஏற்படுவதில்லை.
27.நாநாவிதேஷ§ கும்பேஷ§ வஸத்யேகோ நபோயதா
நாநாவிதேஷ§ தேஹேஷ§ தத்வத் ஏகோ வஸாம்யஹம்
பல குடங்களில் ஒரே ஒரு ஆகாசமே ப்ரதிபலிக்கிறது. அதுபோலவே பல சரீரங்களில் ஒரே ஒரு ஆத்மாதான் இருக்கிறது.
28.நாநாவிதத்வம் கும்பாநாம் நயாத்யேவ யதா நப:
நாநாவிதத்வம் தேஹாநாம் தத்வதேவ ந யாம்யஹம்
குடங்கள் பலவாக இருப்பினும் ஆகாசம் பலவாக இருக்க முடியாது. அதுபோல சரீரங்கள் பலவிருப்பினும் ஆத்மா பலவாக இருப்பதில்லை.
29.யதா கடேஷ§ நஷ்டேஷ§ கடாகாசோ ந நசியதி
ததா தேஹேஷ§நஷ்நைவ நச்யா சர்வக:
எல்லா சரீரங்களும் ஊடுருவி இருப்பதால் பல சரீரங்கள் அழிந்தாலும் ஆத்மா அழிவதில்லை. குடங்கள் பல அழிந்தாலும் குடம் சார்ந்த ஆகாசம் அழியாததுபோல.
30.உத்தமாதீநி புஷ்பாணி வர்தந்தே ஸ¨த்ரதே யதா
உத்தமாத்யா ஸ்ததா தேஹா வர்தந்தே மயி ஸர்வதா
நூலில் (மாலையாக கட்டியிருக்கும்போது) எவ்வாறு சிறந்த, நடுத்தர, சாதாரண புஷ்பங்கள் உள்ளனவோ அதுபோல் என்னிடத்தில் (ஆத்மாவிடத்தில்) இணையும் பொழுதும் உயர்ந்த-நடுத்தர-சதாரண சரீரங்கள் உள்ளன.
31.யதா ந ஸம்ஸ்ப்ருசேத் ஸ¨த்ரம் புஷ்பாணாம் உத்தமாதிதா
ததா நைகம் ஸர்வகம் மாம் தேஹாநாமுத்த மாதிதா
தொடுக்கப்பட்ட மாலையின் இழைநூல், தொடுத்துள்ள புஷ்பங்களின் உயர்வு- தாழ்வுகளைச் சார்வதில்லை. அதுபோல் எல்லாவற்றிலும் ஊடுருவி நிற்கும் ஒன்றேயான ஆத்மா, சரீரங்களின் சீர்மை - தாழ்மை குணங்களைச் சார்வதில்லை.
32.புஷ்பேஷ§ தேஷ§நஷ்டேஷ§ யத்வத் ஸ¨த்ரம் ந நச்யதி
ததா தேஹேஷ§நஷ்டேஷ§ நைவ நச்யாம்யஹம் ஸதா
மாலையின் இழைநூல், தொடுத்த புஷ்பங்கள் காய்ந்து உதிர்ந்தாலும் ணாவதில்லை. அதுபோல் சரீரங்கள் அழிந்தாலும் ஆத்மா ணாவதில்லை.
33.பர்யங்க-ரஜ்ஜு-ரந்த்ரேஷ§ நாநேவைகாயி ஸ¨ர்யபா
ஏகோsப்ய நேகவத் பாதி ததாக்ஷேத்ரேஷ§ ஸர்வக:
கட்டிலின், கயிற்று துவாரங்களிலும், பொந்திலும் விழும் சூர்ய வெளிச்சம் ஒன்றாயினும் பலவை போல தோன்றுகிறதல்லவா அதுபோல் எல்லா சரீரங்களிலும் இசைந்து நிற்கும் ஆத்மா ஒன்றேயானும் பலவாறாகவே தோற்றமளிக்கிறது.
34.ரஜ்ஜுரந்த்ஸ்த தோஷாதி சூர்யபாம் ஸ்ப்ருசேத்யதா
ததா க்ஷேத்ரஸ்த தோஷாதி ஸர்வகம் மாம் ந ஸம்ஸ்ப்ருசேத்
(கட்டில்) கயிறு, துவாரங்களிலுள்ள குற்றங்குறைகள் சூர்ய வெளிச்சத்தையனுகாது போல சரீரங்களிலுள்ள குறைகள் ஊடுருவியிருக்கும். ஆத்மாவை யணுகுவதில்லை.
35.தத்ரஜ்ஜுரந்த்ர நாசேஷ§ நைவ நச்யதிஸ¨ர்யா
ததா க்ஷேத்ரவிநாசேஷ§ நைவ நச்யா ஸர்வக:
அந்த கயிறோ, துவாரமோ இல்லா என்று ஆனபின்னும் சூர்ய வெளிச்சம் இல்லையாவதில்லை. அதுபோல் சரீரங்கள் இல்லையென ஆனபொழுதும் அவையனைத்திலும் உள்ள ஆத்மா இல்லாயாவதில்லை.
36.தேஹோ நாஹம் ப்ரத்ருச்யத்வாத் பௌதிக த்வாத் நசேந்த்ரியம்
ப்ராணோ நாஹமநேகத்வாத் மநோ நாஹம் சலத்வத;
உடல் கண்ணுக்குத் தெரிவதுபோல் ஆத்மா தெரிவதில்லை. அதனால் உடல் ஆத்மா ஆகாது. புலன்கள் பௌதிகமாய் இருப்பது போல் ஆத்மா பௌதிகல்லை. அதனால் அவையும் ஆத்மா இல்லை. ப்ராணன் முதலியவையும் ஆத்மாவாகாது. பிராணன் முதலியனபோல் பலவாக ஆத்மா இல்லை. மனம் சஞ்சலமாய் இருப்பதுபோல் சஞ்சலமாக இல்லாததால் மனமும் ஆத்மா இல்லை.
37.புத்திர் நாஹம் விகாரித்வாத் தமோநாஹம் ஜடத்வத:
தேஹேந்த்ரியாதிகம் நாஹம் விநாசித்வாத் கடாதிவத்
புத்தியும் ஆத்மாவாகாது - விகாரத்தை அடைவதால் ஜடமாக இருப்பது தமஸ் என்ற அஜ்ஞானம். ஆகவே அஜ்ஞானமும் ஆத்மாவன்று. உடலோ புலன்களோ ஆத்மா எனப்படமாட்டாது. ஏனெனில் அவை அழியக்கூடியவை. உண்டாக்கிய குடம் முதலியவைபோல. ஆதலால் இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டது ஆத்மா.
38.தேஹேந்த்ரிய ப்ராணமனோ புத்யஜ்ஞாநாநி பாஸயன்
அஹங்காரம் ததாபா சைதேஷா மபிமானினம்
தேஹம், இந்த்ரியம், பிராணன், மனது, புத்தி, அஜ்ஞானம் இவற்றை ஒளிர்விப்பதுடன், இவற்றின் மறு உருவமாக எண்ணப்படும் அஹங்காரத்தையும் ஒளிர்விக்கிறதுதான் ஆத்மா.
39.ஸர்வம் ஜகதிதம் நாஹம் விஷயத்வாத் இதம்திய :
அஹம் நாஹம்ஸுஷ§ப்த்யாதௌ அஹம: ஸாக்ஷித:ஸதா
இவ்வுலகம் முழுவதுமே கூட ஆத்மாவன்று. ஏனெனில் இது உலகம் என்றறிகின்றவனுக்கு இவ்வுலகம்தானே இலக்காகிறது. ஸுஷ§ப்தி காலத்தில், ஆத்மா ஸாக்ஷியாக இருப்பதால் அஹம் பதவாச்யம் ஆத்மாவல்ல.
40.ஸுப்தௌ யதா நிர்விகாரஸ்:ததா வஸ்தாத்வயேsபி ச
த்வயோர் மாத்ராபியோகேந விகாரீவ விபாம்யஹம்
ஸுஷ§ப்தியில் போலவே ஜாக்ரத்+ஸ்வப்னாவஸ்தைகளிலும் கூட ஒரளவு விகாரம் இல்லையெனினும், விகாரமுள்ளது போல் ஆத்மா தோற்றமளிக்கிறது. அவ்வளவுதான்.
41.உபாதிநீல ரக்தாத்யை:ஸ்படிகோ நைவ லிப்யதே
ததாssத்மா கோசஜை:ஸர்வை:காமாத்யை:நைவ லிப்யதே
ஸ்படிகக்கல், உபாதிகளான நீலம், சிவப்பு முதலிய குணங்களால் ஸம்பந்தப்படுவதில்லை அது போலவே ஆத்மாவும் கேசங்களில் தோன்றும் காமாதிகளால் சம்பந்தப்படுவதில்லை.
42.பாலேந ப்ராம்யமாணோந ப்ரமதீவயதா மஹீ
அகோவுப்யாத்மா விமூடேந சலதீவ ப்ரத்ருச்யதே
சுழற்றப்பட்டு சுழலும் உழவாரப் படையினால் பூயும் சுழல்வதுபோல் காணப்படும். அதுபோல் மயக்கம் காரணமாக அசையாத ஆத்மா அசைவதாகத் தோன்றும்.
43.தேஹத்ரயதம் நித்யம் ஆத்மத்வேநாபி மந்யதே
யாவத்தாவதயம் மூடோ நாநாயோநிஷ§ ஜாயதே
இந்த மூன்று சரீரமும் ஆத்மாவாய் எண்ணப்படுவதுண்டு. போகும்வழி தெரியாத மனிதன் பல ஜன்மாக்களில் பிறக்கும் வரை அது தொடரும்.
44.நித்ராதேஹஜது:காதி:ஜாக்ரத்தேஹம் நஸம்ஸ்ப்ருசேத்
ஜாக்ரத்தேஹஜது:காதி:ததாssத்மானம் ந ஸம்ஸ்ப்ருசேத்
ஸ்வப்னாவஸ்தையில், தேஹத்திலுண்டாகும் துன்பம் எவையும் ஜாக்ரதவஸ்தையிலுள்ள தேகத்தை தீண்டாது. அதுபோல் ஜாக்ரத் அவஸ்தையிலுள்ள தேகத்தை தீண்டாது. அதுபோல் ஜாக்ரத் அவஸ்தையிலுள்ள துன்பம் முதலியன ஆத்மாவையும் தீண்டாது.
45.ஜாக்த்தேஹவத் ஆபாதி நித்ராதேஹஸ்து நித்ரயா
நித்ராதேஹ விநாசேந ஜாக்ரத் தேஹோ நநச்யதி
ஸ்வப்நாவஸ்தையிலுள்ள தேகம் ஜாக்ரத் அவஸ்தையில் உள்ள தேகம் போலவே காணப்படுமாயினும், நிர்ராதேஹம் அழிவதால் ஜாக்ரத்-காலதேகம் அழியாதே!
46.ததாய த்மவத்பாதி ஜாக்ரத் தேஹஸ்து ஜாக்ரத்
ஜாக்ரத் தேஹவிநாசேந நாத்மா நச்யதி கர்ஹிசித்
ஜாக்ரத் அவஸ்தையிலுள்ள தேகம் விழித்திருப்பதால் ஆத்மாபோல் தோன்றுமே தவிர, அந்த ஜாக்ரத்-தேகம் தொலையும் பொழுது ஆத்மா ஒரு பொழுதும் தொலையாது.
47.ஹித்வாsயம் ஸ்வாப்னிகம் தேஹம் ஜாக்ரத் தேஹமபேக்ஷதே
ஜாக்ரத் தேஹப்ரபுத்தோsயம் ஹித்வாssத்மாநம் யதாயதா
ஸ்வ்ப்நாவஸ்தா தேஹத்தை நீக்கி ஜாக்ரத் அவஸ்தா தேகத்தைத்தான் இந்த ஆத்மா குடிகொள்ளத் தேடுகிறது. ஆனால் ஜாக்ரத்-அவஸ்தையில் தேகத்தைப் பெற்று விளக்கமுடனிருந்தும் அந்தர்யாயான ஆத்ம பாவத்தைக் கொள்வதில்லை.
48.ஸ்வப்நபோகே யதைவேச்சா ப்ரபுத்தஸ்ய நவித்யதே
அஸதீத்ஸ்வர்காதிகே போகே நைவேச்சா ஜ்ஞாநிநஸ்ததா
ஜாக்ரத் அவஸ்தையில் உள்ளவனுக்கு ஸ்வப்ன அவஸ்தையிலுள்ள சுகபோகத்தில் விருக்குமோ?இருக்காதே, அதுபோல், ஜ்யானியானவனுக்கு மாயையான ஸ்வர்கம் முதலிய போகங்களில் விருப்பம் இருக்காது.
49.போக்தர பஹிர்யதா போக்ய:ஸர்போ த்ருஷதி கல்பித:
ரூபசீலாதயஸ்சாத்ம போகா-போக்யஸ்வரூபகா:
கல்லில் உருவாக்கப்பட்ட ஸர்பம், உபயோகிப்பவருக்கு உபயோகப்பொருளாவதுபோல், வெளித்தோற்றம், சுபாவம், இவை பெயரளவில் ஆத்மாவின் அனுபவப் பொருளாக இருக்கலாம்.
50.ஜ்ஞஸ்ய வாஸ்த்யேவ ஸம்ஸாரோ யத்வத் ஜ்ஞஸ்ய கர்ண:
ஜாநதோ நைவ பீர்யத்வத் ரஜ்ஜுஸர்ப மஜாநத:
ஆத்மஞானம் இல்லாமல் கர்மாக்களை மட்டும் அனுஷ்டிப்பவனுக்கு ஸம்ஸ்காரம் என்பது பொருட்டல்ல. அதுபோல் ஆத்ம ஜ்ஞாநிக்குஸம்ஸாரம் இல்லை. மேலும் அவனுக்கு பயமும் இல்லை. கயிற்றில் பாம்பு என்ற ப்ரமஞானல்லாதவனுக்கு பயல்லாதது போல்.
51.ஸைந்தவஸ்ய கனோயத்வத் ஜலயோகாத் ஜலம்பவேத்
ஸ்வாத்மயோகாத் ததா புத்திராத்மைவ ப்ரஹ்மவேதிந:
சமுத்ரஜலம் சேர்ந்துள்ளதால் கரிய மேகமே ஜலமாவது போல் ப்ரஹ்மஞானம் ஏற்பட்டவனுக்கு ஆத்ம ஸம்பந்த ருப்பதால் புத்தியே ஆத்மாவாகிறது.
52.தோயாச்ரயேஷ§ ஸர்வேஷ§ பானுரேகோsப்யநேகவத்
ஏகோsப்யாத்மா ததாபாதி ஸர்வக்ஷேத்ரேஷ்வநேக வத்
தண்ணீர் நிலைகளில் சூர்யன் ஒருவனே எனினும் பலவாராக காண்பது போல், ஆத்மா ஒன்றே எனினும் எல்லா சரீரங்களிலும் பலவாராகக் காண்கிறது.
53.பானோரன்ய இவாபாதி ஜலபாநுர்ஜலேயதா
ஆத்மநோsன்ய இவாபாஸோ பாதி புத்தௌத தாத்மந:
தண்ணீரில் நிழல் கொண்ட ஜல சூர்யன் சாதாரண சூர்யனைக் காட்டிலும் வேரானவராகத் தோன்றுவதைப்போல் புத்தியில் ஆத்மத் தோற்றம், ஒன்றான ஆத்மாவைக் காட்டிலும் வேறானதாக ஏற்படுகிறது.
54.பிம்பம் விநா யதா நீரேப்ரதிபிம்போ பவேத் கதம்
விநாத்மாநம் ததாபுத்தௌ சிதாபாஸோ பவேத்கதம்
தண்ணீரில் நிழல் படிய வேண்டுமாயின் அதன் நிஜ பிம்பம் வேண்டுமல்லவா?அதுபோல், ஆத்மா இல்லாமல் புத்தியின் ஜ்ஞானப் போலிதான் எப்படி ஏற்படும்?
55.ப்ரதிபிம்ப சலத்வாத்யா யதா பிம்பஸ்ய கர்ஹிசித்
ந பவேயுஸ்ததாssபாஸ கர்த்ருத்வாத்யாஸ்து நாத்மந:
நீரில் நிழல் அசைவதால், நிஜபிம்பத்தின் போலி செயல்திறன் இவை தெரியாமல் போவது போல் ஆத்மாவின் ஆபாஸம், (போலி) கர்த்ருத்வம் (செயல்திறம்) இவை இல்லாம்ல போகிறது.
56.ஜலே சைத்யாதிகம் யத்வத்ஜலபானும்ந ஸம்ஸ்ப்ருசேத்
புத்தே:கர்மாதிகம் தத்வத் சிதாபாஸம் ந ஸம்ஸ்ப்ருசேத்
நீரின் தன்மை, நீரில் சூர்ய நிழலைத் தீண்டுவதில்லை அதுபோல் புத்தியின் (ஞானத்தில்) செயலாக்கம் முதலியன ஞானப்போலியைத் தேடுவதில்லை.
57.புத்தே:கர்த்ருத்வ-போக்த்ருத்வ-து:கித்வாத்.¬ஸ்து ஸம்யுத:
சிதாபாஸோ விகாரீவ சராவஸ்தாம்புபாணனுவத்
புத்திக்கு (ஜாஞானத்திற்கு) கர்த்ருத்வம்-போக்த்ருத்வம்-துஃகித்வம்-என்று மாறுபட்ட தன்மை உண்டு. அதுபோல் ஞானப்பொலிவிற்கும் மாற்றம் ஏற்படலாம். மண் அகலில் உள்ள தண்ணீரில் படிந்த சூர்யநிழல் விகாரியாவது போல்.
58.சராவஸ்தோதகே நஷ்டே தத்ஸ்தோ பானுர்விநஷ்டவத்
புத்தேர்லயே ததா ஸுப்தௌ நஷ்டவத் ப்ரதிபாத்யயம்
மண் அகலில் தண்ணீர் காலியானபின் அதனுள் படிந்த சூர்ய நிழலும் இல்லையாயிற்றே அதுபோல் புத்தி (ஞானம்) இல்லாத பொழுதோ அல்லது ஸுஷ§ப்தியிலோ இந்த ஆத்மாவும் இல்லைபோல் ஆகிவிடுகிறது.
59.ஜலஸ்தார்கம் ஜம் சோர்ம் பாஸயன் பாதி பாஸ்கர:
ஆத்மாபாஸம் தியம் புத்தே:கர்த்ருத்வாதீநயம் ததா
தண்ணீரிலுள்ள சூர்யனையும், தண்ணீரையும், அதிலுள்ள அலையையும் பிரகாசிப்பித்துக்கொண்டு சூர்யன் விளங்குவதுபோல் இந்த ஆத்மா, ஆத்மப்போலியான புத்தியையும், புத்தியின் கர்த்ருத்வம், போக்த்ருத்வம் முதலியவற்றையும் பிரகாசிக்கச்செய்கிறது.
60.மேகாவபாஸகோ பாணு:மேகச்சந்நோவுப பாஸதே
மோஹவபாஸக ஸதத்வத் மோஹச்சந்நோ வியாத்யயம்
மேகம் மூடியபோதிலும் மேகத்தை பிரகாசிக்கச் செய்யும் சூர்யன் போல் மோஹம் மறைத்தும் கூட ஆத்மா மோஹத்தை பிரகாசிக்கச் செய்கிறது.
61.பாஸ்யம் மேகாதிகம் பானு:பாஸயன் ப்ரதிபாஸதே
ததா ஸ்தூலாதிகம் பாஸ்யம் பாரதிபாத்யயம்
சூர்யன், மேகம் முதலிய ஒளிரச் செய்ய வேண்டியதை ஒளிரச் செய்து தானும் ஒளிர்வதிபோல், ஆத்மா ஸ்தூலம் சூக்ஷ்மம் முதலிய பிரகாசிக்கச் செய்ய வேண்டியதை பிரகாசிக்கச் செய்து தானும் ப்ரகாசிக்கிறது.
62.ஸர்வப்ரகாசகோ பாநு:ப்ரகாச்யை:நைவ தூஷ்டதே
ஸர்வப்ரகாசகோ ஹ்யாத்மா ஸர்வைஸ் தத்வத்ந தூஷ்யதே
எல்லாவற்றையும் பிரகாசிக்கச் செய்யும் சூரியன், பிரகாச்யமான மேகம் முதலியவற்றால் தூஷிக்கப்படுவதுண்டு. ஆனால் ஆத்மா ஸர்வத்தையும் பிரகாச்க்கச் செய்கிறதோடு மற்றைய ப்ரகாச்யங்களால் தூஷிக்கப்படுவதில்லை.
63.முகுரஸ்தம் முகம் யத்வத் முகவத்ப்ரததே ம்ருஷா
புத்திஸ்தா பாஸக ஸ்தத்வத் ஆத்மவத் ப்ரததேம்ருஷா
கண்ணாடியில் தெரியும் முகம் பொய்யான முகம் போலவே நினைக்கப்படுவதுபோல, புத்தியிலுள்ள ஆத்மப் போலி பொய்யாக ஆத்மாபோல் நினைக்கப்படுகிறது.
64.முகுரஸ்தஸ்ய நாசேந முக நாசோ பவேத்கதம்
புத்திஸ்தாபாஸநாசேந நாசோ நைவாத்மன:க்வசித்
கண்ணாடியில் தோன்றிய முகம் அழிந்தால் முகமே அழிந்து விடுவதில்லையே அதுபோல் புத்தியிலுள்ள போலி இல்லாமல் ஆகிவிடுவதால் ஆத்மாவே இல்லையென்று ஆகிவிடாது.
65.தாம்ரகல்பித தேவாதி:தாம்ராத்ன்ய இவ ஸ்புரேத்
ப்ரதிபாஸ்யாதி ரூபேண ததாssத்மோத்ததம் ஜகத்
தாரம் முதலிய உலோகத்தில் தயாரித்த தேவர்களுடைய உருவம் தாரத்தைக் காட்டிலும் வேறானதாகத் தெரியும். அதுபோல ஆத்மாவில் தோன்றிய இந்த உலகம் ப்ரதிபாஸ்ய உருவத்தில் காணக்கிடைக்கிறது.
66.ஈச ஜீவாத்மகவத்பாதி யதைகமபி தாம்ரகம்
ஏகோsப்யாத்மா ததைவாய மீசஜீவாதிவன்ம்ருஷா
தாரம் ஒன்றேயாயினும் ஜீவாத்ம-பரமாத்மாபோல் தோற்றமளிக்கிறதே. அதே போல் ஆத்மா ஒன்றேயாயினும் பரமாத்ம-ஜீவாத்ம ரூபமாக தோற்றமளிக்கிறது.
67.யதேச்வராதிநாசேந தாம்ரநாசோ ந வித்யதே
ததேச்வராதிநாசேந நாசோ நைவாத்மந:ஸதா
தாரத்தில் பொறித்த கடவுளர் உருவம் மங்கினும் தாரம் அழிவதில்லை. அதுபோலவே பரமாத்மா (போலி) நாசம் இருந்தாலும் ஆத்ம நாசம் ஒருபோதும் இல்லை.
68.அத்யஸ்தோ ரஜ்ஜுஸர்போsயம் ஸத்யவத் ரஜ்ஜஸத்தயா
ததாஜகதிதம் பாதி ஸத்யவத் ஸ்வாத்மாஸத்தயா
கயிற்றில் சர்பம் என்றது அத்யாஸ மூலமாய் இருந்தாலும் கயிறு இருப்பதால் உண்மைபோல் தெரிகிறது. அதுபோல் இந்த உலகம் உண்மை போல் உள்ளது. ஏனெனில் ஆத்மா இருப்பதால்.
69.அத்யஸ்தாஹேரபாவேந ரஜ்ஜுரேவாவசிஷ்யதே
ததா ஜகதபாவேந ஸதாத்மைவாய சிஷ்யதே
அத்யாஸமாகக் கருதப்பட்ட ஸர்பம் (ஸர்பபுத்தி) நீங்கியபின் கயிறுதானே ஞ்சுகிறது. அதுபோல் உலகத் தோற்றம் நீங்கியபின் ஸத்தான ஆத்மா மட்டுமே ஞ்சுவது.
70.ஸ்படிகே ரக்ததா யத்வத் உபாதேர்நீலதாவும்ரே
யதா ஜகதிதம் பாதி ததாஸத்ய வாத்வயே
உபாதியின் காரணமாகத்தான் ஸ்படிக்ததில் சிவப்பு நிறமும், ஆகாயத்தில் நீலநிறமும், அதுபோலஜகத்தும் அத்வயமான ஆத்மாவில் ஸத்யம் போல தோன்றுகிறது.
71.ஸ்படிகே ரக்ததா த்யாம்ருஷா கே நீலதா யதா
ததா ஜகதிதம் த்யா ஏகஸ்ந் அத்வயே மயி
ஸ்படிகத்தில் சிவப்பு பொய்யானது போலவும் ஆகாயத்தில் நீலநிறம் பொய்யானது போலவும் அத்வயமான ஆத்மாவில் உலகமும் அவாவறே பொய்யானது.
72.ஜீவேச்வராதிபாவேந பேதம் பச்யதி மூட b:
நிர்பேதே நிர்விசேஷேsஸ்த் கதம்பேதோபவேத் த்ருவாம்
ஒன்றும் தெரிந்து கொள்ளாதவன் ஜீவாத்மா, பரமாத்மா என்ற கணக்கில் வேற்றுமை காண்கிறான். வேற்றுமையும் விசேஷமும் இல்லாத ஆத்மாவில் எவ்விதம் வேற்றுமை உண்டாகும்?
73.லிங்கஸ்ய தாரணாதேவ சிவோsயம் ஜீவதாம் வ்ரஜேத்
லிங்கநாசே சிவஸ்யாஸ்ய ஜீவதாவேசதா குத:
லிங்க சரீரம் எடுப்பதால்தானே பரமாத்மா ஜீவாத்மாவாக ஆகிறது. இருக்கட்டும். அந்த லிங்க சரீரம் அழிந்தால் இந்த பரமாத்மா ஜீவாத்மாவாக ஆவது எப்படி?
74.சிவஏவ ஸதாஜீவோ ஜீவஏவ ஸதாசிவ:
வேத்யைக்யமநயோர்யஸ்து ஸ ஆத்மஜ்ஞோந சேதர:
பரமாத்மாவே ஜீவாத்மா, ஜீவாத்மாதான் பரமாத்மா. இவ்வாறு ஜீவாத்மா - பரமாத்மாக்களின் அறிபவன்தான் ஆத்மஞானி:வேறு எவருல்லை.
75.க்ஷீரயோகாத்யதா நீரம் க்ஷீரவத் த்ருச்யதேம்ருஷா
ஆத்மயோ காத் அநாத்மாsயம் ஆத்மவத் த்ருச்யதே ததா
தண்ணீர் பாலோடு சேர்ந்தால் பால் போல் பொய்யாக தென்படுகிறது. அதுபோல் ஆத்மாவுடன் சேர்ந்த அநாத்மாவும் ஆத்மா போல் காண்கிறது.
76.நீராத் க்ஷீரம் ப்ருதக் க்ருத்ய ஹம்ஸோ பவதி நான்யதா
ஸ்தூலாதே:ஸ்வம்ப்ருதக் க்ருத்ய முக்தோ பவதி நான்யதா
தண்ணீரிலிருந்து பாலைப் பிரித்து வைத்தால்தான் ஹம்ஸம் (அன்னம்) எனப்படுகிறது. அதுபோல், ஸ்தூலத்திலிருந்து ஆத்மாவை பிரித்தால்தான் முக்தனாக (டுபேறு பெற்றவன்) ஆகிறான்.
77.க்ஷீரநீர விவேகஜ்ஞோ ஹம்ஸ ஏவ நசேதர:
ஆத்மாநாத்ம விவேக ஜ்ஞோ யதிரேவ நசேதர:
பாலையும் தண்ணீரையும் பகுத்தறிவது அன்னப் பறவையேயன்றி, மற்றவரில்லை. அதுபோல் ஆத்மா-அநாத்மா என்று பகுத்தறிய பெற்றவனே ஸந்நியாசி மற்றவரில்லை.
77.அத்யஸ்த சோரஜ:ஸ்தானோ:விகார:ஸ்யாத் நஹிக்வசித்
நாத்மநோ நிர்விகாரஸ்ய விகாரோ விச்வஜஸ்ததா
துணை இருட்டில் பார்ரும்போது திருடனோ என திகைப்பு உண்டாகிறது. இது முற்றிலும் அத்யாஸனத்தினால் ஏற்படுவதே. இங்கு திருடனால் ஏற்படும் மாறுதல் தூணிற்கு ஏற்படுவதில்லையே. அதுபோல் மாறுதலே இல்லாத ஆத்மாவிற்கு 'ஜகத்' மூலம் ஏற்படும் விகாரம் ஏற்பட நியாயல்லை.
79.ஜ்ஞாதே ஸ்தாணௌ குதஸ்சோர:சோராபாவே பயம்குத:
ஜ்ஞாதேஸ்வஸ்ன் குதோவிச்வம் விச்வாபாவே குதோsகிலம்
'தூண்'என்பது தெரிந்து தெளிந்துவிட்டால் 'திருடன்'எண்ணம் அற்றுப்போகும். திருடன் இல்லையென்றால் பயம் ஏது?அதுபோல் ஆத்மஜ்ஞானம் உண்டானபின் உலகம் ஏது?உலக எண்ணம் இல்லையெனில் மற்ற த்வந்த்வாதிகள் இல்லாமல்தானே போகும்?
80.தேஹத்ரயதம் பாதி யஸ்ன் ப்ரஹ்மணி ஸத்யவத்
ததேவாஹம் பரம்ப்ரஹ்ம தேஹக்ரய விலக்ஷண:
ஒன்றுக்கொன்று மாறுபட்ட நிலையுள்ள மூன்று குணங்களின் இயக்கம், ஸத்யமானது என்றிருக்கும் ஆத்மாவில் அமைகிறது. ஆனால் அந்த ஆத்மா பகுக்க முடியாதது.
81.தேஹத்ரயதம் பாதி யஸ்ன் ப்ரஹ்மணி ஸத்யவத்
ததேவாஹம் பரம்ப்ரஹ்ம தேஹத்ரய விலக்ஷண:
எந்த ப்ரஹ்மத்தைச் சார்ந்து இந்த ஸ்தூலே-சூக்ஷ்ம-காரண சரீரங்கள்
உண்மையானதுபோல் தெரிகிறதோ அதே பரப்ரஹ்மமாகவே ஆத்மா உள்ளது. ஆனால் அம்மூன்று சரீரங்களுக்கு அப்பாற்பட்டது ஆத்மா.
82.ஜாக்ரதாதித்ரயம் யஸ்ன் ப்ரத்யகாத்மநி ஸத்யவத்
ஸ ஏவாஹம் பரம் ப்ரஹ்ம ஜாக்ரதாதி விலக்ஷண:
அந்தராத்மாவில் ஜாக்ரத்-ஸ்வப்ன-ஸுஷ§ப்தி ஆகிய மூன்று அவஸ்தைகள் உண்மையானது போல் தோற்றமளித்தாலும், அம்மூன்று அவஸ்தைகளுக்கப்பால் இருக்கும் ஆத்மாவே பரப்ரஹ்மம்.
83.விச்வாதிகத்ரயம் யஸ்ன் பரமாத்மநி ஸத்யவத்
ஸ ஏவ பரமாத்மாsஹம் விச்வாதிகவிலக்ஷண:
எந்த பரமாத்மாவில் விச்வ-ப்ராஜ்ஞ-தைஜஸம் என்ற மூன்றும் ஸத்யம் போல் தோன்றுகிறதோ அந்த பரமாத்மாவேதான் அஹம்பதவாச்யம். ஆனால் முன்கூறிய விச்வம் முதலியவற்றிற்கு அப்பாற்பட்டவர்.
84.விராடாதித்ரயம் யஸ்ன் பரமாத்மநிஸத்யவத்
ஸ ஏவ ஸச்சிதானந்த லக்ஷணோsஹம்ஸ்வயம்ப்ரப:
விராட் முதலிய மூன்றும் எந்த பரமாத்மாவில் ஸத்யமானதுபோல் தோன்றுகிறதோ அதே அந்த ஆத்மாதான் ஸத்-சித்-ஆனந்தம் என்ற குறிப்புடன் தானே ஒளிர்வதாக உள்ளது.