1.நாஹம் தேஹோ நேந்த்ரியாண் யந்தரங்கோ
நாஹங்கார:ப்ராணவராகோ ந புத்தி :I
தாராபத்ய ஷேத்ர வித்தாதிதூர :
ஸாக்ஷீநித்ய: ப்ரத்யகாத்மா சிவோsஹம் II
இந்த உடலோ, புலன்களோ, மனதோ, அஹங்காரமோ, ப்ரண வாயுக்களோ, புத்தியுமோ, மனைவி, மக்கள், நிலம், சொத்து இவையோ நான் அல்ல. இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு ஸாக்ஷியாயும், சாச்வதமாயும் உள்ள அந்தராத்மா என்ற சிவன் நான்.
2.ரஜ்வஜ்ஞாநாத் பாதி ரஜ்ஸெள யதாsஹி:
ஸ்வாத்மாஜ்ஞாநாத் ஆத்மநோ ஜீவபாவ :I
ஆப்தோக்த்யாஹிப்ராந்தி நாசே ஸ ரஜ்ஜு :
ஜீவோ நாஹம் தேசிகோக்த்யா சிவோsரஹம் II
கயிறு என்று தெரியாததால், கயிற்றில் ஸர்பம் என்ற எண்ணம் தோன்றுகிறது. அது போல் ஆத்மஜ்ஞானம் இல்லாததால் ஆத்மாவை ஜீவன் என்கிறோம். வேண்டப்பட்டவர் சொன்னபிறகு ஸர்பம் என்ற மயக்கம் ஒழிந்தபின் அது கயிறுதானே அது போல் நமது குரு உபதேசித்தபின் ஜீவன் ஆத்மா இல்லை சிவனே நான்.
3.அபாதீதம் விச்வமாத்மந்ய ஸத்யம்
ஸத்யஜ்ஞானாந்தரூபே விமோஹாத் I
நித்ராமோஹாக் ஸ்வப்ன வத்தந்நஸத்யம்
சுத்த: பூர்ணோ நித்ய ஏக: சிவோsஹம் II
உண்மையான, பேரறிவான, பேரானந்தமான ஆத்மாவில் பொய்யான உலகம் தோற்றமளிக்கிறது அது உண்மையல்லவாவது போல ஆத்மாவை உலகமாக எண்ணுவதும் பொய்தான். ஆனால், தூயதும், பூர்ணமானதும், நித்யமானதும், ஒன்றானதுமான சிவனே நான்.
4.நாஹம் ஜாதோ ந ப்ரவ்ருத்தோ ந நஷ்டோ
தேஹஸ்யோக்தா: ப்ராக்தா: ஸர்வதர்மா :I
கர்த்ருத் வாதிஸ்சின்மயஸ்யாஸ்தி நாஹங்
காரஸ்யைவ ஹ்யாத்மநோ மே சிவோ sஹம் II
நான் பிறப்பதுமில்லை, வளர்வதுமில்லை, பின் அழிவதுமில்லை, இயற்கையான அனைத்து தர்மங்களும் தேகத்திற்கே கூறப்பட்டுள்ளன. ஞானமயமான ஆத்மாவுக்கு செய்பவன் என்ற நிலை கிடையாது. அஹங்காரரூபமான அதற்குத் தான் உண்டு. ஆகவே நான் சிவமே!
5.மத்தோ நான்யத்கிஞ்சிதத்ராஸ்தி விச்வம்
ஸத்யம் பாஹ்யம் வஸ்து மாயோபக்லுப்தம் I
ஆதிர்சாந்தர்பாஸமாநஸ்ய துல்யம்
மய்யத்வைதே பாதி தஸ்மாத்சிவோsஹம் II
என்னைத்தவிர வேறு உலகம் என்பது இல்ல. இருந்தால் அது உண்மையானதில்லை. வெளியில் தோன்றும் பொருள் மாயையினால் தோற்று விக்கப்பட்டதே. கண்ணாடிக்குள் தெரியும் பிரதிபிம்பத்திற்கொப்பானது அது. இரண்டற்ற என்னிடத்தில் அது தோன்றுகிறது. ஆகவே நான் சிவமே.
அத்வைத பஞ்சரத்னம் முற்றிற்று.