வரமருளும் எழில் ததும்பும் அரசராகத் பெருமாளின் திருஸ்தலங்கள் அண்ணன் கோவில் ஸ்ரீநிவாஸர் சீர்காழியிலிருந்து சுமார் 10 A e தொலைவில் நாகை மார்கத்தில் அமைந்துள

வரமருளும் எழில் ததும்பும் அரசராகத் பெருமாளின் திருஸ்தலங்கள்

அண்ணன் கோவில் ஸ்ரீநிவாஸர்

சீர்காழியிலிருந்து சுமார் 10 A.e. தொலைவில் நாகை மார்கத்தில் அமைந்துள்ள திவ்யதேசம் அண்ணன் கோவில் என்று வழங்கப்படும் திருவெள்ளக்குளம். இந்தக் கோயில் பெருமாள், திருப்பதி ஸ்ரீநிவாசருக்கு அண்ணனாகக் கருதப்படுவதால் இக்கோவில் அண்ணன் கோவில் என்றழைக்கப்படுகிறது. ஸ்வேத ராஜன் என்ற அரச குமாரன் ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தை இக்கோவில் இருக்கும் இடத்தில் அமர்ந்து உச்சரித்து, மார்க்கண்டேயரைப் போன்று இறவாவரத்தைப் பெருமாளிமிருந்து பெற்றதால் இந்த

ஊர் ஸ்வேத புஷ்கரிணி அல்லது வெள்ளக்குளம் என்று அழைக்கப்படலாயிற்று. இன்னும் தீர்த்தத்திற்கு ஸ்வேத புஷ்கரிணி என்றே பெயர். விமானம் தத்வத்யோக அல்லது ஸ்வேத விமானம்.

மூனறு நிலை இராஜகோபுரத்துடன் விளங்குகிறது இக்கோவில். இதனைத் தென்திருப்பதி என்றே அழைக்கின்றனர். திருமங்கை ஆழ்வாரின் பத்னாயாரான குமுதவல்லியரின் அவதாரஸ்தலம் இதுதான். திருநாங்கூர் திருப்பதிகள் 11ல் இது மிகவும் முக்கியமானது. ஆலயத்தில் முதலில் அழகிய மண்டபம் உள்ளது. அடுத்து வருவது தனிக்கோவில் நாச்சியார் அலர்மேலுமங்கைத் தாயாரின் புருஷாகாரம் பெற்று ஸந்நிதிகருடனை வணங்கியபின் பெருமாளிடம் செல்லலாம். அதற்கு முந்

தாயார் ஸந்நிதி அருகே எழுந்தருளி உள்ள மங்கை மன்னனின் மனைவியார் குமுதவல்லியைத் தரிசிக்கலாம்.

ப்ரகாரச் சுற்றில் நாம் விமானத்தை காணலாம். இதனை ஸ்வேத விமானம் என்றும் கூறுவர். வாகனமண்டபம், யாகசாலை ஆகியவற்றையும் ப்ரகாரத்தில் உள்ளன. சோபனமண்டபத்தில் நர்த்தன விநாயகர் காட்சி அளிக்கிறார். அதற்கு அடுத்து வருவது ஆழ்வார்கள் ஸந்நிதி. மணவாள மாமுனிகளும், சேனை முததலியாரும் தனி ஸந்நிதிகளில் உறைகின்றனர். ப்ரதான ஸந்நிதியில் அண்ணன் பெருமாள் நின்ற திருக்கோலத்தில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸேவை ஸாதிக்கின்றார். எழில் ததும்பும் உற்சவராக ஸ்ரீநிவாசப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளியுள்ளார். மற்றும் ஸந்நிதியில் உற்சவமூர்த்திகளாக கண்ணன், சந்தான கிருஷ்ணன், செல்வம் முதலான பஞ்ச பேரர்களும் இருக்கின்றனர். திருநாங்கூர் கருடஸேவையில் இந்தத் திவ்யதேசப் பெருமாளும் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறார். வேங்கடமாம் திருப்பதியில் உறையும் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு வேண்டிக் கொண்ட ப்ரார்த்தனைகளை இங்கேயே செலுத்தலாம். ஏனென்றால் இவர் திருமலை நாயகருக்கு அண்ணன்.

இங்குப் புரட்டாசி மாதம் ப்ரஹ்மோத்ஸவம் மிகவும் விசேஷம். கோவில் சிறப்பாகக் பராமரிக்கப்பட்டு வருவது போற்றத் தக்கது. திருமங்கையாழ்வார் 10 பாசுரங்களால் இந்த அலர்மேல் மங்கை மணளனை மங்களாசாஸனம் செய்துள்ளார்.

பூவார் திருமாமகள் புல்கியமார்பா

நாவார்புகழ் வேதியர் மண்ணிய நாங்கூர்

தேவா. திருவெள்ளக்குத்து உறைவானே

ஆவா. அடியேன் இவனென்று அருளாயே.