காரியமின்மையைச் சொல்லவே ஓயாக்காரிய அவதாரம் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

இந்த நிலைக்கு வழி திறந்துவிடுவதற்காகவே அவதாரம் பண்ணவேண்டுமென்று ஸ்வாமி (தக்ஷிணாமூர்த்தி) நினைத்தார். “ஒன்றும் செய்யாமலிருப்பதை ஜனங்களுக்கு நன்றாக ஞாபகப்படுத்தி நிலை நாட்டுவதற்காக, இதுவரை ஒன்றும் செய்யாமல் சும்மாயிருந்து கொண்டிருக்கும் நாம் அவதாரம் செய்து சுற்றிச் சுற்றி ஸஞ்சாரம் செய்து, ஊர் ஊராக உபதேசம் செய்து, ஸபை ஸபையாக வாதம் செய்து, கட்டுக் கட்டாகப் புஸ்தகங்கள் எழுதி அத்வைத ஸித்தாந்த ஸ்தாபனம் செய்யவேண்டும். எத்தனைக்கெத்தனை பேச்சே இல்லை என்றிருந்துவிட்டோமோ அத்தனைக்கத்தனை பேசி, அலைந்து திரிந்து, பேசாமல், அசையாமல் இருப்பதான லக்ஷ்யத்தை ப்ரசாரம் செய்யவேண்டும். [விடாமல் சிரித்தவாறு] கார்யமே பண்ணாமலிருந்து கொண்டிருக்கும் நாம், ஓயமால் கார்யம் பண்ணிக்கொண்டிருக்கிற ஜனங்களிடம் போய், கார்யமே பண்ணாமலிருக்கும் நிலையைப் பற்றித் தெரிவிப்பதற்காக ஓயாமல் கார்யம் பண்ணவேண்டும்” என்றிப்படி ஸ்வாமி தீர்மானித்துக் கொண்டார்!

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is சும்மாயிருப்பதாலும் லோகோபகாரம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  சம்-பு-சம்-கரரானார்
Next