ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
பெரிய திருமொழி
மூன்றாம் பத்து
வந்து
திருவாலி: 1
திருவாலி என்னும் திவ்வியதேசம் திருநாங்கூர் திருப்பதிகளுள் ஒன்று. திருமங்கையாழ்வார் 'அனைவரும் காழிச்சீராம விண்ணகருக்குச் செல்லுங்கள்' என்று உபதேசித்தார்.
ஆழ்வார் அந்த இடத்தின் சிறப்பை நினைத்து அங்கேயே தங்கிவிடுவாரோ என்று நினைத்தான் திருவாலி எம்பெருமான்; ஆழ்வார் தன்னை நினையாமல் இருந்தாலும், தானாகவே சென்று ஆழ்வாரின் நெஞ்கில் குடிகொண்டான். ஆழ்வார் பகவானின் செயலை அறிந்தார்: 'எம்பெருமானே! நான் உன்னை நினையாவிடினும் நீயாகவே வந்து என்னை அங்கீகரித்தாய். என் நெஞ்சிலேயே தங்கிவிட்டாய்! என் மனம் உன்னைவிட்டு வேறு எங்கும் செல்லாதபடி செய்துவிட்டாய். உன்னை விட்மாட்டேன். உன்னை விட்டால் பிழைக்கமாட்டேன். c என்றும் என்னைவிட்டுப் பிரியாமல் இருந்து, என் கைங்கர்யத்தை ஏற்க வேண்டும்' என்று வேண்டுகிறார்.
ஆசிரியத்துறை
சிந்தனைக்கு இனியான் திருமாலியம்மான்
1188. வந்துன தடியேன் மனம்புகுந்தாய்
புகுந்ததற்பின் வணங்கும்,என்
சிந்தனைக் கினியாய்! திருவே!என் னாருயிரே,
அந்தளி ரணியா ரசோகி ளிளந்தளிர்கள்
கலந்து,அவை யெங்கும்
செந்தழல் புரையும் திருவாலி யம்மானே! 1
அடியேன் மனத்திருந்த அணியாலியம்மான்
1189. நீலத் தடவரை மாமணி நிகழக்
கிடந்ததுபோல், அரவணை
வேலைத் தலைக்கிடந்தா யடியேன் மனத்திருந்தாய்,
சோலைத் தலைக்கண மாமயில் நடமாட
மழைமுகில் போன்றெழுந்து,எங்கும்
ஆலைப் புகைகமழும் அணியாலி யம்மானே! 2
மனத்தில் நிலைபெற்றவன் ஆலியம்மான்
1190. நென்னல்போய் வருமென்றென் றெண்ணி
யிராமையென் மனத்தே புகுந்தது,
இம்மைக் கென்றிருந்தே னெறிநீர் வளஞ்செறுவில்,
செந்நெற் கூழை வரம்பொரீஇ யரிவார்
முகத்தெழு வாளைபோய், கரும்பு
அந்தற் காடணையும் அணியாலி யம்மானே! 3
நின் திருவடிகளை மறக்காமல் இருக்க அருள் செய்தாயே!
1191. மின்னில் மன்னு நுடங்கிடை மடவார்தம்
சிந்தை மறந்து வந்து,நின்
மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால்,
புன்னை மன்னு செருந்தி வண்பொழில்
வாயகன் பணைகள் கலந்தெங்கும்,
அன்னம் மன்னும் வயலணி ஆவி யம்மானே!
1192. நீடு பன்மலர் மாலையிட்டு நின்னிணையடி
தொழுதேத்தும், என்மனம்
வாட நீநினையேல் மரமெய்த மாமுனிவா,
பாட லின்னொலி சங்கி னோசை பரந்து
பல்பணை யால்மலிந்து, எங்கும்
ஆட லோசையறா அணியாலி யம்மானே! 5
அம்மானே! c எங்கும் செல்ல விடமாட்டேன்
1193. கந்த மாமல ரெட்டுமிட்டு நின்காமர்
சேவடி கைதொழுதெழும்,
புத்தியேன் மனத்தே புகுந்தாயைப் போக லொட்டேன்,
சந்தி வேள்வி சடங்கு நான்மறை
ஓதி யோதுளித் தாதி யாய்வரும்,
அந்த ணாள ரறாவணியாலி யம்மானே! 6
புண்ணியனே! உன்னை நான் விடமாட்டேன்
1194. உலவுதிரைக் கடற்பள்ளி கொண்டு வந்துன்
அடியேன் மனம்புகுந்த,அப்
புலவ! புண்ணிய னே!புகுந் தாயைப் போக லொட்டேன்,
நிலவு மலர்ப்புன்னை நாழல் நீழல்
தண்டாமரை மலரின் மிசை,மலி
அலவன் கண்படுக்கும் அணியாலி யம்மானே! 7
திருவாலியம்மானே! என் மனத்தில் புகுந்துவிட்டாய்
1195. சங்கு தங்கு தடங்கடல் கடன்மல்லை
யுள்கிடந்தாய், அருள்புரிந்து
இங்கென்னுள் புகுந்தா யினிப்போயி னாலறையோ,
கொங்கு செண்பக மல்லிகை மலர்புக்கி
இன்னிள வண்டு போய்,இளந்
தெங்கின் தாதளையும் திருவாலி யம்மானே! 8
ஆயிரநாமமும் கூறினேன்; ஒரு சொல் உரை
1196. ஓதி யாயிர நாமமும் பணிந்தேத்தி
நின்னடைந் தேற்கு,ஒரு பொருள்
வேதியா! அரையா!உரையாய் ஒருமாற்ற மெந்தாய்,
cF யாகிய வேதமா முனியாளர்
தோற்ற முரைத்து, மற்றவர்க்
காதியாய் இருந்தாய்! அணியாலி யம்மானே! 9
இவற்றைப் பாடுவோர்க்கு இடம் வானுலகு
1197. புல்லி வண்டறையும் பொழில் புடைசூழ்
தென்னாலி யிருந்த மாயனை,
கல்லின் மன்னு திண்டோள் கலிய னொலி செய்த,
நல்ல இன்னிசை மாலை நாலுமோ
ரைந்துமொன் றும்நவின்று, தாமுடன்
வல்ல ராயுரைப் பார்க்கிட மாகும் வானுலகே. 10
அடிவரவு: வந்து நீல நென்னல் மின்னில் நீடு சுந்தம் உலவு சங்கு ஓதி புல்லி -- தூவிரிய.
.