திருச்சந்த விருத்தத் தனியன்கள்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெருமாள் திருமொழி

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

திருச்சந்த விருத்தத் தனியன்கள்

திருக்கச்சி நம்பிகள் அருளிச்செய்தவை
தரவு கொச்சகக் கலிப்பா

தருச்சந்தப் பொழில்தழுவு தாரணியின் துயர்தீர

திருச்சந்த விருத்தம்செய் திருமழிசைப் பரன்வருமூர்,

கருச்சந்தும் காரகிலும் கமழ்கோங்கும் மணநாறும்,

திருச்சந்தத் துடன்மருவு திருமழிசை வளம்பதியே.

இருவிகற்ப நேரிசை வெண்பா

உலகும் மழிசையு முள்ளுணர்ந்து,தம்மில்
புலவர் புகழ்க்கோலால் தூக்க,- உலகுதன்னை
வைத்தெடுத்த பக்கத்தும், மாநீர் மழிசையே
வைத்தெடுத்த பக்கம் வலிது.

திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம்











 





 













 


 


 



Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is அங்கணெடுமதிள்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  திருச்சந்த விருத்தம்
Next