அறவழி வாசகம்
காந்தியடிகள்
எங்கள் அண்ணல் காந்தியே
ஏற்றம் மிக்க காந்தியே
உலகம் ஒன்றாய் வாழவே
உயர்ந்த வழியைக் காட்டினார்
அஹிம்சை அன்பு சத்தியம்
அமைந்த வாழ்வு வாழ்ந்திட்டார்
கருணை யாளன் காந்தியை
கருத்தில் வைத்துப் போற்றுவோம்
நம் குடும்பம்
தாயின் திருவடி போற்றிடுவோம்
தந்தை சொற்படி நடந்திடுவோம்
அண்ணன் வார்த்தை மதித்திடுவோம்
அக்கா அன்பை பெற்றிடுவோம்
தம்பியை நாளும் வளர்த்திடுவோம்
தங்கையை என்றும் காத்திடுவோம்
குருவின் பாதம் பணிந்திடுவோம்
குன்றாய் புகழுடன் வாழ்ந்திடுவோம்.