விவேகமும் வைராக்கியமும்

விவேகமும் வைராக்யமும்

ஆத்ம ஞானமும் அதன் ஸ்தானங்களும்

நமது பாரத தேசத்தின் மிகப் பழமையான அனாதியான மதம் வைதிக

மதம். இதனை ஸநாதன மதம் என்பர். மற்ற மதங்கள் எவரேனும் ஒரு மகானால்

தொடங்கப்பட்டிருக்கும். அதனால் அந்த மதத்திற்கு அவரது பெயரை

வைத்திருப்பார்கள். அந்த மதங்கள் ஆரம்பித்த நாட்குறிப்பு உண்டு. நம் மதம்

ஒன்றே அனாதியானது. வேதத்தை அடிப்படையாகக் கொண்டபடியால் வைதிக

மதம் என்றும், என்றும் நிலைத்திருக்கக் கூடிய வைதிக மதம் என்றும், என்றும்

நிலைத்திருக்கக் கூடிய தானதாலும் தொடங்கியவர் இல்லாமையாலும் ஸநாதநம்

என்றும் வழங்குவர். இந்து மதம் என்ற பெயர் கூட இடத்தைக் குறிப்பதாக

அமைந்துள்ளது. இதற்கு ஆதார நூல் வேதம்.

வேதம் நான்கு. நடக்கிற கலியுகத்தின் முன்யுகமாகிய துவாபரம் வரை அது

ஒரே வேதமாக இருந்தது. துவாபரத்தின் இறுதியில் மனிதர்களின் அறிவும்

ஆற்றலும் குறையத் தொடங்கியதால், வேத வியாஸர் அதனை நான்காகத்

தொகுத்தார்.

வேதம் ஒலி வடிவமானது. அதுவும் அநாதி. என்றும் ஒலி வடிவில்

ஆகாயத்தில் நிலைத்திருக்கக்கூடியது. ஆகாயத்திற்கும் ஒலிக்கும் ஒரு நிலைத்த

தொடர்பு உண்டு. அலை வடிவில் இருவித வேத ஒலியை மகரிஷிகள் தியானத்தில்

அமர்ந்து கேட்டனர். தியானமும், தவமும் காரணமாக அவர்களுடைய

காதுகளுக்கு அந்த தெய்வீக ஒலியைக் கேட்கின்ற திவ்ய சிரவண சக்தி கிட்டியது.

அதனால் ஒவ்வொர மந்திரத்திற்கும் அப்படி திவ்ய சிரவணம் செய்த KS உண்டு.

அதற்குள் சந்தம் உண்டு. தேவதை உண்டு.

வியாஸர் அப்படி வந்த வேதங்களை நான்காகப் பிரிக்க ஒவ்வொன்றிலும்

பல கிளைகளை வகுத்து அமைத்தார். மந்திரம், பிராம்மணம், ஆரண்யகம்,

உபநிஷதம் என்ற பல பிரிவுகளில் வகுத்தார். ஒவ்வொரு வேதத்திற்கும் ஒரு

உபவேதமும் உண்டு. ருக்வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வ வேதம்

என்று நான்கு வேதங்கள். ருக் வேதத்திற்கு ஆயுர் வேதம் உபவேதம். யஜுர்

வேதத்திற்கு தனுர் வேதம், ஸாம வேதத்திற்கு அர்த்த சாஸ்திரம் என வேதத்திற்கு

ஆறு அங்கங்கள் உண்டு, சிக்ஷ£, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம்,

கல்பம் என வேதத்தை வேத புருஷனாகவோ வேத மாதாவாகவோ கொள்வர்.

சிக்ஷ£ அதன் மூக்காகும். வியாகரணம் அதன் முகமாகும். சொல்லிற்கு உச்சரிப்பே

முக்கியமானபடியால் வேதம் சொல்வடிவமானதனால் இலக்கணம் (வியாகரணம்)

அதன் முகமாகிறது. வேதம் வேள்விகளின் செய்முறையை விளக்குகிறது.

அதற்குக் கால அறிவு முக்கியம். காலத்தை விளக்குகின்ற ஜோதிஷம் அதன்

கண்களாகிறது. கண்ணிற்கு நயனம் என்ற பெயருண்டு. நயனம் - அழைத்துச்

செல்வது, வழிகாட்டுவது, யாகத்திற்கு உரிய நேரத்தை விளக்கி வேள்வியைப்

பயன்தரவல்ல தாக்குகின்றது.

நடக்கக் கால்கள்தான் முக்கியமெனினும் கண்கள் வழிகாட்டுவதால்

அழைத்துச் செல்வதால்தான் சேர வேண்டிய இடத்திற்குச் செல்கிறோம்.

ஜோதிஷம் அப்படி வழிகாட்டுகிறது. யாகத்திற்குரிய வேளையை விளக்குவதைப்

போல், நமது வாழ்க்கைக்கும் அது வழிகாட்டுகிறது. சொல்லின் அமைப்பைக்

குறிக்கின்ற நிருத்தம் வேதத்தின் காதாக உள்ளது. கல்பம் என்பது வேள்வி

முதலானவற்றின் செயல் முறை. அது வேதத்தின் கைகளாக உள்ளது. சந்துஸ்

என்பது வாக்கிய அமைப்பைக் காட்டும் சந்தமாகும். அது வேதத்தின் கால்கள்.

இவை ஆறு அங்கங்கள். ஷடங்கம் என்று இவைகளின் பெயர்.

"நிஷ்காரனோ வேத: ஷடங்க: அத்யேய:" என்பர். வேறு எதிர்பார்ப்பு இன்றி,

கடமையுணர்ச்சியுடன் வேதத்தை அத்யயனம் செய்ய வேண்டும். பிறந்த பிறவி

முழுப் பயனைப் பெற இது அவசியம். வேதத்தை ஆறு அங்கங்களுடன்

படிப்பதும் முக்கியம். ஷடங்கம் அறிந்தவன் செய்யும் செயல் சடங்கு என்று

சொல்கிறோம். ஷடங்கமே சடங்காக மருவி சொல்கிறோம். ஷடங்கமே சடங்காக

மருவி வந்துள்ளது. இதனைச் செய்பவர் புரோகிதர். முன்னதாக மனிதனுக்கு

ஹிதமானதை உணர்ந்து செய்பவர் எனப் பொருள். (புர: ஹிதம் தத்தே)

வேதத்தில் கூறியுள்ளவை மூன்று 1. யாகங்கள் முதலான சடங்குகள் 2.

உபாஸனை. 3. தத்துவம் என்பது வேதத்தின் தலையாய பக்தி. இல்லறத்தில்

சடங்குகளை செய்கிறோம். உபாஸனை மனதால் செய்கின்ற ஈசுவர உபாஸனை.

அதுவும் தத்துவ விசாரம் ஒதுங்கிய ஆசிரமம், மடம், காடு முதலிய இடங்களில்

தனித்திருந்து செய்யக்கூடியது. வேதத்தில் கோயில் வழிபாடும் மூர்த்தி வழிபாடும்

மிகக் குறைவு, ஈச்வரன், தேவி முதலிய குறிப்புகள் மிகக் குறைவு. உபாஸனையில்

எங்கும் நிரம்பியவர் (ஸர்வகதர்) எல்லாமறிந்தவர் (ஸர்வஜ்ஞர்) எல்லாம்

நிறைந்தவர். ஈச்வரன், பேராளுமை கொண்டவர் என்ற குறிப்புகளே அதிகம்.

குணமான மூர்த்தி வழிபாடு வேதத்தை அடுத்து வந்த புரணாங்களில்தான் அதிகம்

காணப்படுகின்றது. பஞ்சாயதன வழிபாடு விக்கிரகாராதனை, அவதாரச் சிறப்பு

முதலியவை புராணத்தால் விளக்கப்படுவன.

கோயிலில் மூர்த்தி வழிபாடு, யாகங்கள் இவற்றிற்கு நிறைய ஸாதனங்கள்

தேவை. கால தேசக் கட்டுப்பாடும் உண்டு. உபாஸனத்தில் வெளிச்சாதனங்கள்

தேவையில்லை. தியானம் முக்கியம். மனம் நிலைத்து அடங்கியுள்ள நிலையில்தான்

இது சாத்தியம். யாகாதிகளில் இந்த மனத்தின் கட்டுப்பாடு அவசியமே. ஆனாலும்

உபாசனையில் இது மிக முக்கியம். மனத்தைக் கட்டுப்படுத்தி அதனை உயர்

நிலைக்குக் கொணர்ந்து ஆத்மவிசாரம் செய்வதற்கே மனிதப் பிறவி எடுத்தது.

உயிரினங்களை நான்கு விதமாகப் பிரிப்பர்.

1. ஸ்வேதஜம், சூழ்நிலையில் தூய்மை கெட்டுப் புழுக்கமும் அழுகலும்

ஏற்பட்டுத் தானே உண்டாகின்ற கொசு, மூட்டைப் பூச்சி, புழு போன்றவை

இப்பிரிவில் அடங்கும். தோன்றிச் சிறிது காலம் வாழ்ந்து உடன் அழிபவை.

பிறரைத் துன்புறுத்துவதில் இவற்றிற்கு ஈடுபாடு அதிகம். மிக அல்பமான உயிரினம்

இது.

2. உத்பித்ஜம் - பூமியைப் பிளந்து வெளிவருகின்ற மரம், செடி, கொடி

இப்பிரிவில் அடங்கும். சிறிய முளையாகத் தோன்றி வளர்ந்து காய்த்தோ பழுத்தோ

முதிர்ந்து அழிபவையானதால் பரிணாம வளர்ச்சிக்கு உட்படுகின்ற இது

உயிரினமே.

3. அண்டஜம் - முட்டையிலிருந்து வெளியாகுபவை. கோழி முதலிய

பட்சிகள். ஆமை, பாம்பு முதலியவை இதனுள் அடங்கும்.

4. ஜராயுஜம் - கருப்பையிலிருந்து வெளியாகுபவை. ஆடு, மாடு மனிதன்,

மற்ற விலங்குகள் இந்தப் பிரிவில் அடங்கும். ஸத்வமோ, ரஜஸோ, தமஸோ

அதிகமாக இருப்பதற்கேற்ப இவை வேறுபடுகின்றன.

மற்ற உயிரினங்களை விட ஜராயுதம் உயர்ந்தது. ஜராயுதங்களிலும்

மற்றவைகளை விட மனிதன் உயர்ந்தவன். ஆடும், மாடும், புலியும், சிங்கமும்

அதனதன் பிறவிக்கேற்ற சுபாவம் உடையவை. இவைகளின் சுபாவம்

மாறுவதில்லை. மனிதன் இயல்பால் மிருகமாவான். தேவனுமாவான். மனிதர்களில்

ராக்ஷஸர்களும் உண்டு. அரக்க சுபாவம் பெற்றதால் அவர்களை ராக்ஷஸர்கள்

எனப் பிரித்துக் கூறுகிறோம்.

மற்ற உயிரினங்கள் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவோ, பசியின்

காரணமாகவோ, பிற உயிரினத்தை அழிக்கும். மனிதன் மட்டும் காரணமின்றியும்

பிற உயிரினத்தை அழிப்பான். மிருகங்கள் ஆழ்ந்த துவேஷத்தையோ மனக்

கொதிப்பையோ கொள்வதில்லை. மனிதன் துவேஷம் முதலிய கெட்ட

உணர்ச்சிகளை ஆழ்மனத்தில் கொள்கிறான். மனிதனின் ஒவ்வொரு செயலும்

புன்யத்தையோ, பாபத்தையோ தரும். ஆழ்மனத்தின் செயலாலும் எண்ணத்தாலும்

ஒரு ஸம்ஸ்காரம் அல்லது வாஸனை அவனுக்குப் பதியும். மிருகங்களுக்கு இந்தப்

பாப புண்ய வினையோ ஸம்ஸ்கார வாஸனைகளோ இயற்கையாகக் கிடையாது.

மனிதன் மிருகமாக நடப்பதுண்டு. "மனுஷ்ய ரூபேணா ம்ருகாச்சரந்தி" என்பர்.

பகுத்தறிவை மனிதன் பயன்படுத்தித் தவிர்கக்தக்கதைத் தவிர்த்து நல்லதைக்

கடைபிடிப்பதால் உயர்ந்தவன் ஆகிறான். அவன் பிறவி எடுத்ததன் முக்கியப்பயன்

மறுபடி பிறாவதிருப்பதாகும். பிறந்தவன் இறப்பைத் தவிர்க்க முடியாது. இறந்தால்

நிம்மதி என்பது தவறு. இப்பிறவி தப்பினால் எப்பிறவி வருமோ என்று அஞ்சுவர்.

மனிதனாகப் பிறந்தவன் மறுபடியும் மனிதனாகத்தான் பிறப்பான் என்ற

நியதியில்லை. புழுவாகவோ, பூச்சியாகவோ, மரம், கல், கொடிய விலங்கு என்ற

ஏதேனும் ஒன்றாகப் பிறக்கலாம். அப்படிப் பிறந்தால் மறுபடி மேல் நிலையுடைய

முயற்சி எடுக்க முடியாது. அப்போது ஈச்வரனின் நினைவு வராது.

"புழுவாகப் பிறந்தாலும உன் நினைவு அகலக்கூடாது" என்று ஈச்வரனிடம்

வேண்டிக் கொள்வார்கள். அது எளிதில் கிட்டாது. முற்பிறிவியில் செய்த

பிரார்தனை சில உயிரினிடத்தி பலித்துள்ளதைக் காண்கிறோம். யானையும்,

எறும்பும், மயிலும், பாம்பும் ஈச்வரனை வழிபட்டதாக வரலாறு உண்டு. இது மிக

அரிது. முற்பிறவியில் மிகக் கடும் தவமாக வழிபட்டவர்களுக்கு விட்ட குறை

தொட்ட குறையாக அப்படி நேர்வதுண்டு. அதனால் மறபடி மனிதனாகவே

பிறப்பதற்கு இப்பிறவில் மனிதத் தன்மையுள்ள மனிதனாகத் தன்வாழ்வின்

லட்சியத்தை அடைய முற்பட்டவனுக்கு மட்டும் வாய்ப்புண்டு.

மனிதன் தன் வினையால் மற்ற உயிரினத்தில் பிறக்க முடியும். மனிதனாகவும்

பிறக்கவும் முடியும். மற்ற உயிரினங்களால் முன்வினைப் படி மறுபடி ஒரு பிறவி

அடைய முடியுமே தவிர மனிதனைப்போல் நல்வினைகளைச் செய்து உத்தமப்

பிறவி பெறுவதற்கு இயலாது. வாழ்வை மேம்படச் செய்யக்கூடிய நற்கருமங்களைச்

செய்ய அவற்றிற்கு வாய்ப்பில்லை. அதனால் மனிதனாகப் பிறப்பதே அரிது.

"ஜந்தூநாம் நர ஜந்ம துர்லபம்" என்கிறார் ஆதிசங்கரர்.

மனிதர்கள் எண்ணிக்கையில் அதிகமாகி விட்டனர் என்று இன்ற

கவலைப்படுகின்றனர். உணவும், குடியிருப்பும், வசதிகளும் குறைந்த விடுமே

எனப் பயப்படுகின்றனர். எண்ணிக்கை அதிகம் கவலைப்படத் தக்கதல்ல.

மனிதனின் எண்ணத்திலும் செயலிலும் ஏற்பட்டுள்ள தாழ்வே கவலைக்குரியது.

அத்தகைய தாழ்வு நேராமல் காப்பதே மனிதப் பிறவியின் லட்சியம்.

மனிதன் ஆற்ற வேண்டிய கடமைகள் உண்டு. எறும்பு தனக்கும் தன்னைச்

சேர்நத்வர்களுக்கும் வருங்காலத்திற்கும் உணவு முதலியவற்றைச் சேமிக்கிறது.

ஆனால் இந்தக் குணம் மற்ற பிராணிகளிடம் காண்பதரிது. குரங்கின் குட்டி தன்

தாயைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டிருக்கும். அந்தக் குட்டிக்க உணவளிக்காமல்

தாயக்குரங்கு தானே உணவை ஏற்கும். நாயும் காக்கையும் கூட சண்டையிடும்.

மனிதன் ஒருவனிடம்தான் அன்பும், தாய் குழந்தைப் பாசப் பிணைப்பும்

ஒருவருக்கு மற்றவர் உதவுவதும், அன்பின் பிரதிபிலிப்பாகக் காணப்படுகிறது.

தான் மட்டும் வாழச் செயல்படுவது மனிதனுக்கு ஏற்றதல்ல. மிருகங்கள் வாழ்வைச்

சீர் செய்யக்கல்வியை நாடுவதில்லை. வருங்காலத்தைப்பற்றி நினைப்பதில்லை. தன்

துன்பத்தை நீக்கிக் கொள்ளவும், நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும்

வகையறியாது, மனிதன் தன்னை வளர்த்துக் கொள்ளப் படிக்கிறான், பொருள்

சேமிக்கிறான், நோயைத் தீர்க்க மருந்து சாப்பிடுகிறான். சோதிடம், பரிகாரம்,

பெயரிவர்களிடம் ஆசி பெறுதல், ஈச்வரனை வழிபடுதல், பரோபகாரம்,

முதலியவற்றில் அதிகம் ஈடுபடுகிறான். தாற்காலிகமாகத் துன்பம் குறைவதை

மிருகங்கள் நாடுகின்றன. மனிதன் முழுமையாக துக்கம் நீங்கவும் நிலைத்த சுகம்

பெறவும், ஆன்மீக வாழ்ககை முறையையும், ஈச்வர வழிபாட்டையும் நாடுகிறான்.

இதுவே மனிதன் மற்ற உயிரினத்தை விடச் சிறப்பு பெறக் காரணம்.

மனதின் ஆற்றல் எல்லையற்றது. பகுத்தறிவு அவனது தனிச்சிறப்பு.

பகுத்தறிவும் ஆற்றலும் மிக்க மனிதன் விஞ்ஞானத்தின் துணை கொண்டு சந்திர

மண்டலம் சென்று வருகிறான். ஆத்மாவின் சிறந்த ஆற்றல்களை பலவகைகளில்

காட்டுகிறான். ஆனால் எதிலும் அவன் நீடித்த சுகம் காணவில்லை.

சுகம் என்பது மனம் அடங்கி ஒரு நிலைப்படுத்துவதால் ஏற்படுகிறது.

கண்ணால் அழகிய பொருளைக் காண்கிறான். மனம் அதில் லயிக்கிறது. அந்த

லயிப்பு நீடிக்கும் வரை சுகத்தை அனுபவிக்கிறான். இனிய பாட்டைக் கேட்கிறான்.

காது வழியே மனம் அதில் லயிக்கிறது. அந்த அமைதியும் லயமும் ஆனந்தத்தைத்

தருகின்றன. இப்படி எல்லா இந்திரியங்களும் எதிலாவது லயித்தால் அது

பரமானந்தம். ஆத்மாவிடம் எல்லா இந்திரியங்களும் மனமும் லயமடைவதில்

அநதப் பரமானந்தம் ஏற்படுகிறது. மனிதப் பிறவியின் லட்சியம் இந்தப்

பரமானந்தத்தைப் பெறுவதுதான். ஆத்மானந்தம் பெற்றவனுக்கு மறு

பிறவியில்லை. அப்போது ஒரு பிரச்சனையும் கிடையாது. மறு பிறப்பு தரும்படி

இறந்தால் பல பிரச்னைகள் தொடரும்.

விஞ்ஞானத்தின் மூலம் மனம் ஒன்றிச் செயலாற்றிப் பெரும் சாதனைகள்

புரியலாம். ஆனால் மனம் அப்போது வெளிப் பொருளில் நாட்டம் கொள்கிறது.

அந்தப் பெரும் சாதனை புரியும் அற்றலை - மனப்போக்கை உட்புறம்

செலுத்தினால் - பேரானந்தம் - ஒரு பொருளையும் பார்க்காமல் கேட்காமல்

உணராமல் இருக்கின்ற அந்த நிலையில் மனம் அமைதி பெறுகின்றது.

கண் முதலிய ஐந்து இந்திரியங்கள் வழியே மனம் வெளியே செல்கிறது.

நாடுகின்ற பொருளில் உள்ள ஈர்ப்பால் மனம் சிக்கிக் கொள்கின்றது. ஐந்து

இந்திரியங்களும் இப்படி சிக்க வைக்கின்றன. ஸ்ரீ சங்கரர் இதற்கு உவமானம்

தருகிறார்.

சப்தாதிபி: பஞ்சபிரேவ பஞ்ச

பஞ்சத்வமாபு: ஸ்வகுணேநபத்தா

குரங்க மாதங்க பதங்கமீன

ப்ருங்கா நர: பஞ்சபிரஞ்சித: கிம்

மீன் ஒரு சிறிய மாமிசத் துண்டின் ருசியால் ஈர்க்கப்பட்டு தூண்டிலில் சிக்கி

அழிகிறது. மான் அழகிய கானத்தின் ஒலியால் ஈர்க்கப்பட்டுத் திகைத்து நிற்கையில்

வேடன் அதனைக் கொல்கிறான். விட்டில் பூச்சி நெருப்பின் ஜொலிப்பின் நிறத்தில்

மயங்கி அதனை அணைத்துக் கொள்ள அதில் விழுந்து அழிகிறது. தேனீ

தாமரைப் பூவின் மகரந்த மணத்தால் ஈர்க்கப்பட்டு மயங்கித் தாமரை மணத்தால்

அழிகிறது. யானை தன்னினத்தின் ஸ்பரிசத்தால் மயங்கிப் பிடிபடுகிறது. ஒவ்வொரு

இந்திரியத்தின் ஈர்ப்பால் மயங்கி இவை அரிகின்றன எனில், ஐந்தின் ஈர்ப்பிற்கும்

மயங்குகின்ற மனிதனின் நிலை வருந்தத்தக்கதே என்கிறார்.

மனிதனின் உடலில் ஒன்பது ஒட்டைகள். மனிதனின் உயிர் ஏதேனும் ஒரு

ஒட்டை வழியே மரணத்தின் போது வெளியேறும். இந்த ஒட்டைகள் எப்போதும்

திறந்துள்ளவையே. எந்த நொடியிலும் மரணம் நேரலாம். அதனால்

உயிருடனிருப்பதுதான் ஆச்சரியமே தவிர, இறப்பது ஆச்சரியமல்ல.

மனிதனின் வேகத்தையும், புத்தியின் கூர்மையையும் ஆராய்ந்து பார்க்க

முடியாது.

அத்தனை சூட்சமமானவை. அவற்றை வசப்படுத்துவது எளிதல்ல. அவற்றை

அடக்க முடியாது. அடக்க அடக்க அவை மீறியெழும். மனமும் அறிவும்

இந்திரியங்களும் எதனால் இயங்குகின்றனவோ அதனிடம் கவனத்தை

திருப்பினால் அவை தானே வசமாகும். ஆத்மாதான் சைதன்ய சக்தி. அதன்

சலனத்தை ஏற்குமளவில் தான் மனமும் புத்தியும், இந்திரியங்களும்

செயலாற்றுகின்றன. வெளியில் தெரிகின்ற காதோ, கண்ணோ, ஒரு கோளகமே.

அந்த கோளகம் எதுவரை ஆத்மசைதன்யத்தை ஏற்கின்றதோ அதுவரைதான்

உணர்ச்சி. காது பார்க்க அழகாயிருந்தாலும் செவிடனாயிருப்பான். கண்கள்

அழகாயிருப்பினும் குருடனாயிருப்பான். ஆத்ம சைதன்யம் கண்ணிலும் காதிலும்

பிரதிபலிக்காதிருப்பது தான் காரணம், கண் என்ற வெளிகோளகம், அதில்

ஸ¨க்ஷ்மமாயுள்ள நேத்ரேந்திரியம். அதன் அதிஷ்டான தேவதையான ஸ¨ர்யன்,

இவற்றில் பிரதிபலிக்கின்ற ஆத்மசைதன்யம் என்ற நான்கும் சேர்ந்தே நேத்ரி

இந்திரியமாகிறது. இந்த கண்ணின் ஆற்றலை உட்புறம் திருப்ப, மனம்

உள்நோக்கிப்பாய, ஸம்ஸாரபந்தம் விலகுகிறது. இப்படித் திருப்புவதற்குக் குரு

சரணங்களில் பக்தி உதவுகிறது என்கிறார் ஆதிசங்கரர், பஜகோவிந்த

ஸ்தோத்திரத்தில்

குர சரணாம்புஜ நிர்ப்பரபக்த:

ஸம்ஸாராத்சிராத்பவ முக்த:

ஸேந்த்ரிய மாநஸ நியமாதேவம்

த்ரக்ஷ்யஸி நிஜஹ்ருதயஸ்த்தம் தேவம்.

வெளியில் மனத்தின் நாட்டம் ஏற்படும்போது விஷயத் தொடர்புக்கேற்ப

சுகத்தையோ துக்கத்தையோ மனம் பெறகிறது. மனம் வெளிவிஷய நாட்டத்தைத்

தவிர்த்து உட்புஜத்தை நோக்கும்போது ஆத்மாவைக் கண்டு கொள்கிறது. ஆத்மா

ஸச்சிதானந்த ஸ்வரூபம். ஸத் - எப்போதும் நிலைத்திருக்கக் கூடியது. அதனால்

பிரிவதாலோ இழப்பதாலோ ஏற்படக் கூடியது துக்கமில்லை. ஆத்மா சைதன்யம்.

அதனால் அறிவின்மையால் ஏற்படும் துக்கமில்லை. ஆத்மா ஆனந்தம். அதனால்

நித்ய சுகம், துக்கம் என்ற பேச்சிற்கே இடமில்லை. துக்கக் கலப்பில்லாத சுகம்.

கல்கண்டை வாயிலிட்டதும் அது கரையக் கரைய வாயில் இனிப்புத் தெரியும்.

முழுவதும் கரைந்ததும் இனிப்பு வாயில் தங்கி சில நொடிகள் உணரப் பெறும்.

அது கல்கண்டு என்ற பொருள் தொடர்பில்லாத தனி இனிப்பு. அதுபோல் நாம்

அனுபவிக்கின்ற வெளிப்பொருளால் ஏற்படும் சுகம் கல்கண்டு சுவைக்கும் போது

உணரப் பெறும் இனிப்பைப் போன்றது. ஆத்ம சுகம் வாயில் இனிப்பு மட்டும்

உணர்கின்ற பின் நிலையை ஒத்தது. இந்த ஆனந்தம் அழியாத - அகண்டமான

சுகம். வெளியே பெறும் சிற்றின்பம் காலத்தாலும் தேசத்தாலும் பொருளாலும்

மாறுகின்ற சுகம். அதற்கு மாறான இது பேரின்பம்.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is வரதட்சணை
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is  மஹாளய பட்சம்
Next