கர்மாக்கள்

கர்மாக்கள்

கர்மாக்கள் மூன்று விதம், நித்யம், நைமித்யம், காம்யம். காம்ய கர்மா என்பது

மழை பொழிவதற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும், சுவர்க்கம் போன்ற சுகங்களை

அடையவும் ஒன்றை விரும்பி செய்யக் கூடிய கர்மா. நைமித்திக கர்மா சந்திர

கிரஹணம், சூர்ய கிரஹணம் போன்ற காலங்களில், சில பாவ பரிஹாரங்களுக்காக

செய்யக்கூடிய கர்மாக்கள் நைமித்திக கர்மாக்கள், காம்ய கர்மா பலனை விரும்பி

செய்யக்கூடியது. நைமித்திக கர்மா மூலம் பலம் கிடைப்பதும், பாவம் போவதும்

உண்டு. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் காம்ய கர்மாவை பலனை வரும்பிய

போதெல்லாம் செய்யலாம். நைமித்திக கர்மாவை, ஒரு காலம் வரும்போது, ஒரு

காரணத்தை வைத்துத்தான் (நிமித்தம்) அந்த கர்மாவை செய்ய வேண்டும். நித்ய

கர்மா என்பதற்கு பலன் ஒன்றும் கிடையாது. தினந்தோறும் குளிக்கிறோம், அழுக்க

போகிறது, சாப்பிடுவதால் வயிறு நிரம்புகிறது. அது போல நித்ய கர்மா செய்வது

மனசுக்கு தெளிவு (சித்த சுத்தி) மாத்திரமே பலன். பண்ணினால் மனத்தெளிவு,

நித்யகர்மா பண்ணாவிட்டால் மாபெரும் பாவம். ஆகவே விரும்பிய போது

பண்ணுவதல்ல நித்யகர்மா. அதுபோல ஒரு காலத்தில், காரணத்தை வைத்து

செய்வது அல்ல நித்ய கர்மா. எந்தெந்த நேரத்தில் எந்த கர்மா

சொல்லப்பட்டிருக்கிறதோ அதைச் செய்வது நித்ய கர்மா. "சந்த்யா வந்தனம்,

அக்னி ஹோத்ரம், வேள்விகளை விடாமல் செய்து கடவுள் வழிபாடு செய்வது"

இவைகள் தான் நித்யகர்மா.

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும், நாம் செய்யக் கூடிய ஒவ்வொரு

கர்மாவும், மூன்றுநிலை அடைகிறது. சஞ்சிதம், ஆகாமியம், பிராரப்தம். இப்போது

நமக்கு இந்த பிறவி கிடைத்த உள்ளது. இதில் சில வியாதிகளும், சில சுகங்களும்,

துன்பங்களும் கிடைக்கின்றன. இப்போது நாம் இந்த சரீரத்தின் மூலம்

அனுபவிக்கும் சுக, துக்கங்களுக்கு ப்ராரப்தம் என்ற கர்மா காரணமாகிறது.

இப்போது இந்த சரீரத்தின் மூலம் செய்யக்கூடிய நல்வினை, தீவினைகள், வரும்

காலத்தில் பலன் அளிக்கக்கூடியதுமாக, ஆகாமிய என்ற பெயரோடு வருகிறது.

இப்படி ஒருபிறவியல்ல ஆகாமிய கார்யங்கள் பல செய்துவிடுகிறோம். இதற்கு

பலன் உண்டு. இப்படி ஆகாமிய கார்யங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அமைந்து

விடுகிறது. இப்படிசேர்ந்த கர்மாக்களுக்கு சஞ்சிதம் என்று பெயர் இப்படி

சஞ்சிதத்திலிருந்து ஒரு பிறவியில் நாம் அனுபவிக்கும் சுக, துக்கங்களுக்கு,

பிராரப்தம் என்று பெயர் சொல்லுகிறோம். பிராரப்தம் என்று இப்பிறவியில் பல,

இன்ப, துன்பங்களை அனுபவிக்கிறோம். இது முற்பிறவிகள் ஒன்றில் செய்த பாவ,

புண்ணியங்களுக்கு இப்போது பலனளிக்கிறது. முன்பு செய்த நல்வினை, தீவினை

தொடர்ந்து பல பிறவிகளில் சுக. துக்கங்களைக் கொடுக்கிறது. இந்த பிறவியில்

அனுபவிக்கிற சுக, துக்கங்களுக்கு மறுபிறவிகளில் செய்த நல்வினை, தீவினையே

தவிர இப்பிறிவியில் செய்ததற்கு அல்ல. இதனால் ஆகாமிய கர்மா புதிது, புதிதாக

நிறைய பல பிறவிகளில் ஏற்படுகிறது. இப்படி ஒவ்வொரு பிறவியிலும்

பலவிதமான நல்வினை தீவினைகள் நிறைய சேர்ந்தாலும், அதே வரிசைப்படி

தொடர்ந்து அடுத்த பிறிவியில் பலன் தராது. உதாரணமாக பொருள்களை

வாங்குவதற்கு ரேஷன் கார்டுகள் கொடுக்கிறார்கள். அந்த ரேஷன் கார்டில் ஒரு

வரிசை எண் தரப்பட்டிருக்கிறது. அதில் எத்தனை நபர் என்று

குறிக்கப்பட்டிருக்கிறது. எப்போது ரேஷன் கார்டு வழங்கப்பட்டது என்ற விபரமும்

இருக்கும். இத்தனையும் இந்த ரேஷன் கார்டில் இருந்தாலும் ரேஷன் வாங்க

செல்பவர்கள், குறிப்பிட்ட வரிசை எண் பிரகாரம் செல்லமாட்டார்கள். யாரக்கு

எப்போது தேவையோ அதற்கு ஏற்றாற்போல் செல்வார்கள். அதுபோல நம்

முன்வினைகள் என்பதற்கு முற்பிறவியில் என்றோ, முன் செய்த வினை என்றோ

இரண்டும் அர்த்தமல்ல, ஏதோ ஒரு பிறவியில் ஏதோ ஒன்று செய்து இருக்கிறோம்.

அதற்கேற்றபடி அடுத்த பிறவி வருகிறது. அந்த ரேஷன் கார்டில் இத்தனை

நபர்கள் என்று எழுதப்பட்டு இருக்கிறது, அதற்கு ஏற்றவாறு பொருள்களை

வழங்குகிறார்கள். கூடுதலாக வழங்க மாட்டார்கள். குறைந்த பொருளைப் பெற

இரண்டு வழிகள் உண்டு. பொருள்கள் குறைந்த இருந்தாலும், குறைந்து கொடுத்து

விடுவார்கள். நம்மிடையே பணம் குறைவாக இருந்தாலும் குறிப்பிட்ட பொருளை

குறைத்து வாங்கிக் கொள்ளும் வாய்ப்பு உண்டு, அதுபோல் நமக்கு இந்த பிறவியில்

கூடுதலாக வர வாய்ப்பு கிடையாது. நாம் இந்த பிறவியில் எவ்வளவு அனுபவிக்க

வேண்டுமோ அவ்வளவுதான் வர வாய்ப்பு உண்டு. சுக துக்கங்கள் குறைத்துக்

கொள்ள வாய்ப்பு உண்டு, கடவுள் பக்தி, பெரியோர் ஆசிகள் மூலமாக.

உதரணமாக பெரிய மழை வருகிறது, மழையை நிறுத்த முடியாது, நாமும்

வெளியில் செல்ல வேண்டும், மழையிலும் நனையக் கூடாது. இப்படி மழையைத்

தடுக்க நாம் என்ன செய்வோம்? உடல் பூராவும் மறைத்து மழைக் கோட்டு

அணிந்து கொள்ளுவோம். அப்போது மழை நம்மீது பெய்யும், மழைக் கோட்டு

முழுவதும் நனையும். நாம் நனைய மாட்டோம். எப்படி மழையில் நனைந்தாலும்,

மழைக்கோட்டு நம்மை காக்கிறதோ, அதுபோல நம் சுக துக்கங்களை குறைத்து

காக்கும். ரேஷன் கார்டில் சாமான்கள் பெற்றுக் கொண்டதற்கு குறியிட்டு

விடுவார்கள். ஆனால் அதே கார்டை வைத்துக்கொண்டு அடுத்தவாரம்

செல்லலாம். அது புதிதாக பொருள் வாங்க உதவுமே தவிர, பழைய சாமான்களுக்கு

பயன்படாது. ஏனெனில் ரேஷன் கார்டில் சாமான்கள் பெற்றுக் கொண்டதற்கு

குறியிட்டு விடுவார்கள். ஆனால் அதே கார்டை வைத்துக்கொண்டு அடுத்த வாரம்

செல்லலாம். அது புதிதாக பொருள் வாங்க உதவுமே தவிர, பழைய சாமான்களுக்கு

பயன்படாது. ஏனெனில் ரேஷன் கார்டில் பெறப்பட்ட பொருள் குறிக்கப்பட்டு

விடுவதால், அது போல நாம் இப்பிறவியில் அனுபவிக்கும் வினைகளும்,

முன்னாடி அனுபவித்த நல்வினை, புதியதை அனுபவிக்க அனுபவிக்க பழையவை

தீர்ந்து விடுகின்றன. புதியவை செய்ய அது சேரும். ஆகவே பழையவினை

அனுபவிப்பதால் அது அழிந்துவிடும் ஆகவே சுக, துக்கங்களை

அனுபவிக்கிறோம் என்றால் பழைய வினைகள் அழிந்து கொண்டு வருகின்றன

என்று அர்த்தம்.

இந்த ரேஷன் கார்டின் விதி ஒரு பொது விதி, சில சமயம் விசேஷ

கோட்டாவில் பொருள்கள் வழங்கப்படும். அப்போது பொருட்கள் கூடுதலாக

கிடைக்கும். இதே பேலத்தான் அதிக புண்யமோ, பாவமோ, மனிதன்

வாழ்க்கையில் அதிக துக்கமோ, நன்மையோ ஏற்பட்டு விடுகின்றன, ஒரு

சமயத்தில் பொருட்கள் நிறைந்த விட்டால் ரேஷன் கார்டு தேவையில்லாத நிலை

ஏற்படுகிறது. அதுபோலப் பகவான் அருள் பரிபூரணமாக நிறைந்து விட்டால் இந்த

நல்வினை, தீவினைப் பயன்கள் அடிபட்டு விடுகின்றன. ஞானமும், ஆனந்தமும்

கிட்டிவிடுகிறது.

இப்படியாக ஒரே வினை மூன்று நிலைகள் அடைந்து கடைசியில் ஒரு

மனிதப் பிறவியில், பிறவியல்லாத நிலை அடைவதற்கு காரணமாக ஆகிறது.

ஒவ்வொரு மனிதனும் மாலையில் வெளியே சென்று வீட்டிற்கு வந்த பிறகு

கைகால்களை அலம்பிக் கொண்டு நெற்றிக்கு இட்டுக் கொண்டு நித்ய கடமைகளை

முடித்து விட்டு வீட்டில் உள்ள சுவாமி படத்திற்கு முன்பாக இஷ்ட தெய்வத்தின்

நாமத்தை 108 முறையோ (அ) 16 முறையோ ஜபிக்கவேண்டும், வீட்டில் உள்ள

அனைவரும் ஒன்று கூடி உட்கார்ந்து கொண்டு விநாயகர் முதல் ஆஞ்சநேயர்

வரை உள்ள சுலோகங்களையோ (அ) நாமாவளியோ சொல்ல வேண்டும். பிறகு

அனைவரும் 2 நிமிடம் மௌன தியானம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்

கொள்ளவேண்டும்.

அனைவரும் படுக்கும் முன்பாக அன்று காலை முதல் இத்தனை நேரம்

நடந்த நிகழ்ச்சிகளை நினைத்து பார்த்துக் கொள்ளவேண்டும். காலை முதல் நடந்த

நிகழ்ச்சிகளை எல்லாம் டயரியில் எழுதி வைத்துக் கொள்ளவேண்டும். பிறகு

கெட்ட சொப்பனம் வராமல் இருப்பதற்கும் அப்படி ஏதாவது கெட்ட சொப்பனம்

வந்தாலும் பலிக்காமல் இருப்பதற்கும், நல்ல தூக்கம் வருவதற்கும் தங்களுடைய

குல தெய்வத்தையோ, இஷ்ட தெய்வத்தையோ நினைத்து பிரார்த்தனை செய்ய

வேண்டும். பிறகு கீழ்கண்ட சுலோகத்தை சொல்லி பிரார்த்தனை செய்து கொண்டு

தூங்கவேண்டும்.

1. அகஸ்திய மாதவச்சைவ, முசுகுந்தோ மஹாபல,

கபிலோ முனிரஸ்தீக பந் சைதே ஸுக சாயின,

2. அச்யுதம் கேசவம் விஷ்ணும், ஹரிம் ஸோமம் ஜனார்த்தனம்

ஜபேத் துஸ்வப்ன சாந்தயே

3. ப்ரும்மானம் சங்கரம் விஷ்ணும், யமம் ராமம் தனும் பலிம்

ஸப்தைதான் யஸ்மரேந்நித்யம், துர்ஸ்வப்னஸ் தஸ்ய நச்யதி

ஒவ்வொரு மனிதனும் தன் வாழ் நாளில் மற்றவர்களிடம் பிரியமாய்,

சிநேகமாய் இருக்கவேண்டும். அதிலும் முக்கியமாக தனது நண்பனிடம் கஷ்டம்

வருங்காலத்தில் அதிக சிநேகமாய் இருக்க வேண்டும். நன்பன் சௌகரியமாய்

இருந்த காலத்தில் சிநேகமாய் இருந்து அவனிடம் பல சௌகரியங்கள் அடைவதை

காட்டிலும், நண்பனுக்கு ஆபத்து வருங்காலத்தில் யார் காப்பாற்றுகிறானோ,

அவனே உண்மையான நண்பன், பால், நெருப்பில் காய்ச்சப்படுகிறது. நன்றாக சூடு

ஏறின பிறகு பாலிலுள்ள தண்ணீர் அனைத்தும் நன்றாக சூடு ஏறின பிறகு

அப்பொழுது பால் பொங்கி நெருப்பில் பொங்கி வந்து தன்னோடு இணைந்திருந்த

நீரை சூடுபடுத்தி நெருப்பு எப்படி இழுத்துக் கொண்டுவிட்டதோ, நாம் மட்டும்

எப்படி சூட்டை பொறுத்துக் கொண்டு தனியாக இருப்போம் என்று எண்ணி அந்த

நெருப்பிலே பொங்கி வழிகிறது. தண்ணீரை தெளிக்கிறோம், பொங்குதல் அடங்கி

விடுகிறது, தன் நண்பன் தன்னோடு வந்த விட்டான் என்ற எண்ண பொங்குதல்

அணைந்து விடுகிறது? இதுபோல் நண்பனின் அபத்து காலத்தில் உதவுவது

உண்மையான நண்பனின் லட்சியம்.

ஒரு மனிதனுடைய வாழ்வில் நல்லோருடைய நட்பு சிறிதாக ஆரம்பித்து

பெரிதாக முடியும்.

தீயோருடைய நட்பு பெரிதாக ஆரம்பித்து சிறிய விஷயத்தில் நட்பு முறிந்து

விடும்.

காலையில் வெயில் தொடரும் பொழுது நம்முடைய நிழல் நம்மை காட்டிலும்

பெரிதாக இருக்கும். மத்தியானம் உச்சி வேளையில் அந்த நிழலுக்கு இருப்பிடம்

தெரியாது. 2 மணி வெயிலில் சிறிதாக நம்முடைய நிழல் தொடங்கி மாலையில்

பெரிதாக வளர்ந்து அப்படியே நின்று விடும். இதுபோலத்தான் துஷ்டர்களுடைய

நட்பும், நல்லவர்களுடைய நட்பும் இருக்கும். அவைகளை நாம் ஆலோசித்து

தொடங்கும்போதே பெரிதாக உள்ள நட்பை கண்டு மயங்காமல், சிறிதாக தொடங்கி

முறையாகப் பெரிதாக வளரும் நட்பையே மேற்கொள்ளவேண்டும்.

நாம் எந்த ஒரு காரியம் செய்தாலும் செய்யும் காரியத்தை நல்ல காலம், நல்ல

நேரம், அறிந்து செய்ய வேண்டும். அப்பொழுது அதற்கு விசேஷ பலன்

ஏற்படுகிறது. நெருப்பில் காய்ந்த வாணலியில் ஜலத்தை விட்டால் ஜலம்பட்ட வடு

கூட தெரியாமல் எல்லாம் சுண்டி போய்விடும். தாமரை இலையில் நீர் தெளித்தால்

முத்து போல பளபளக்கும். மழையானது முத்து சிப்பியில் ஒரு பொட்டு விழுந்தால்

அது முத்தாகி விடுகிறது. அதுபோலத்தான் நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும்.

பாத்திரம் அறிந்து செய்வதன் மூலம் அது விசேஷ பலன் ஆகி விடுகிறது.

நம் வாழ்வில் நல்ல அறிவுள்ளவரிடம் பழக வேண்டும். அதனால் பல

நற்குணங்கள் நமக்கு கிடைக்கும். அகங்காரம் உள்ளவரிடம் பழகினால்,

கிட்டத்திலிருந்து பேசினால், எத்தனை கர்வம் என்று நம்மை திட்டுவான்.

தூரத்திலிருந்து பேசினால் மரியாதை இல்லாமல் தூரத்திலிருந்து பேசுகிறான்

என்றும் பயந்தாங்கொள்ளி என்றும் சொல்லுவான். தைரியமாக பேசினால்

அகங்காரம் உள்ளவன் என்று சொல்லுவான். மெதுவாக நிதானமாக பேசினால்

பேசத் தெரியாதவன் என்று சொல்லுவான். இரைந்து வேகமாக பேசினால்

பேசுவதையே புரியாமல் பேசுகிறான் என்று சொல்லுவான். இப்படிபயாக எந்த

காரியம் நாம் செய்தாலும் ஒவ்வொன்றிலும் ஒரு குற்றத்தை கண்டு பிடிப்பான்.

அதனால் அகங்காரம் உள்ள மனிதனுடன் பழகுவதைத்தடுப்பது நல்லது.

நாயை நாம் வீட்டிலேயே எவ்வளவு பழக்கி வைத்திருந்தாலும் யாராவது

உணவு உட்கொள்ளும் பொழுது வாலைக் குழைத்துக் கொண்டுதான் இருக்கும்.

யானைக்கு சாப்பாடு வேண்டும் என்று நினைக்கும் பொழுது யானைப் பாகன்

கொடுக்கும் பொழுது அது அப்படியே உடனடியாக வாங்கி சாப்பிட்டு விடாது.

கம்பிரமாய் கர்ஜனை செய்து கொண்டு ஆலோசித்து நிதானமாய்த்தான் உணவு

உட்கொள்ளும். அதுபோல் சாமான்ய மனிதன் ஆசைக்கு அடிமைப்பட்டு எந்தப்

பொரளை எங்கே கண்டாலும், அதை அடைவதற்கு அலைந்து திரிந்து பெறுவான்.

அறிவாளி, தனக்கு வேண்டிய பொருளை தன்னுடைய கௌரவத்திற்கு

குறைவு ஏற்படாத வகையில் அந்தப் பொருளை பெற்று மகிழ்வான். அறிவுள்ளோர்

மத்தியில் படிப்பில்லாதவன், வாதத்தில் கலந்து கொள்வதைவிட மௌனமாய்

இருத்தலே அவனுக்கு அழகாக அமையும்.

அரிவாளினால் சந்தன மரத்தை வெட்டினாலும் வாசனை கொடுக்கும்.

அதுபோல் தீயவர்கள் நல்லவர்களுக்கு தீயது செய்தாலும், நல்லவர்கள்

தீயவர்களுக்கு நல்ல புத்தி வளர முயற்சிப்பார்கள்.

மின் சக்தி ஒரு வீட்டினுள் இருந்து கொண்டு காற்று கொடுப்பது பேனிலும்,

ஒலி கொடுப்பது ரேடியோவிலும், ஒளி லைட்டிலும், மற்றும் பலவகை பணிகளுக்கு

உபயோகமாய் இருக்கிறது. அதுபோல் ஒரே பரம்பொருள் பலவிதப் பணிகள்

நாட்டில் நடைபெறுவதற்கு பலவகைகளில் பல பொருள்களில் இயக்கி வைக்கிறார்.

ஒரே மின் சக்தியால், ஒலி, ஒளி, காற்று முதலியவைகள் நமக்கு

கிடைத்தாலும், ஒளி, ஒலி, காற்றினுடைய நிலையை அதிகரித்துக் கொள்வதும்

குறைத்து கொள்வதும் மின் சக்தியில் இல்லை. நம்முடைய கையில் இருக்கின்றது.

நம்முடைய கையினால் நமக்கு தேவையான காற்றைக் குறைத்தோ, கூட்டியோ

தேவையான அளவுக்கு வைக்கிறோம். அதேபோல பரம்பொருள் இத்தனை

பொருட்களை இயக்கினாலும், இயக்குவதை நாம் உபயோகப்படுத்தி கொள்வதற்கு

நம்முடைய புத்தியை உபயோகப்படுத்திக் கொள்ளவேண்டும்.

பகுத்தறிவு என்பது அறிந்த உண்மையை விரிந்து தெரிந்து கொள்வது என்று

பொருள். இந்தப் பகுத்தறிவு மனிதனுக்கு மட்டும் அல்ல. பல உயிரினங்களுக்கும்

இருக்கின்றன. ஆடு, மாடு, போன்ற பிராணிகள், மற்றும் சில ஜந்தக்களும்கூட,

தான் உண்ணக்கூடிய உணவை நல்ல வகையில் உண்ண வேண்டும் என்று அறிந்து

கொண்டு உட்கொள்கிறது. விஷ சம்பந்தமான பொருள் இருந்தால் அதை

தன்னுடைய பகுத்தறிவு சிந்தனையினால் அறிந்து கொண்டு ஒதுக்கிவிடுகிறது.

அதனால் மனிதன் பொருளின் தன்மையை அறிந்து கொண்டு, நல்லது தீயதை

அறிந்து கொண்டு அதை ஏற்றுக் கொள்வது அல்லாமல் எப்படி நல்ல பொருட்கள்,

தீய பொருட்கள் வந்தன என்பதை அறிந்த பிறகு அதன்படி நல்ல பொருட்கள், தீய

பொருட்கள் செய்வதற்கு தெரிந்து கொண்டவன் ஆகிறான். மற்ற உயிரினங்கள்

ஒதுங்கி விடும்.

மனிதன் ஒதுங்கவும் செய்வான். அவைகளை ஆக்கவும் செய்வான்.

அவைகளை அழிக்கவும் செய்வான். (அல்லது) விஷப் பொருட்களை

மற்றவர்களுக்கு கொடுத்து இம்சை செய்யவும் செய்வான். ஆகவே பகுத்தறிவு

உயிரினங்களிடம் பொதுவாக இருந்தாலும், செயல்படும் விதம் மாறிவிடுகிறது.

ஆடு, மாடு, நாய் போன்ற பிராணிகள் தன்னுடைய தற்காப்புக்காக,

முட்டுவது, கத்துவது, கடிப்பது போன்றவையெல்லாம் செய்யும். அதனால் அதற்கு

எந்த விதமான பாவ கணக்கும் கிடையாது. மனிதன் ஆடு, மாடு, நாய் போன்று

முட்டுவது, உதைப்பது, கடிப்பது போன்றவை செய்தால் அதற்கு பாபத்தில் கணக்கு

உண்டு. மனிதனை தவிர மற்ற எந்தப் பிராணிகள் செய்யும் காரியத்திற்கும் பாவ

புண்ணியங்கள் கணக்கில் வராது. மனிதனுக்கு மாத்திரம் வரும். ஏனென்றால்

பகுத்தறிவு விசேஷமாகப் பெற்று இருப்பதினால், ஆகையினாலே மனிதன்

செய்யும் ஒவ்வொரு பாவத்திற்கும் கணக்கு உண்டு.

பொதுவாக வேகம் என்கிற பகுத்தறிவு பலவகைப் படுகிறது. ஆத்மா எது,

மற்ற வஸ்துக்கள் என்ன என்று சிந்தனை செய்வது ஒரு விதமான விவேகம்.

படிப்பின் மூலம் பொருளின் தன்மையை அறிந்து கொள்வது ஒரு விதமான

விவேகம் உண்மை பாகம் என்ன என்பதை தெரிந்து கொண்டு செய்வது ஒரு

விதமான விவேகம்.

ஒரு துணியில் சிம்மத்தின் பொம்மை வரையப்பட்டிருக்கிறது. படித்தவர்கள்,

பாமரர்கள் குழந்தைகள் அனைவரும் இந்த அழகான சிம்மத்தின் இடத்தை

பார்த்து, சிம்மம் கம்பீரமகவும், அழகாகவும் இருக்கிறது என்று சொல்லுகிறார்கள்.

ஆனால் நிஜமான சிம்மம் அது அல்ல. வரையப்பட்ட சித்திரத்தை பார்த்து சில

குழந்தைகள் பயப்படுகிறார்கள். அறிவாளிகள் கூட அதிசயத்தோடு பார்க்கிறார்கள்.

அதன்நிலை எப்படியோ அப்படித்தான் இந்த உலக வாழ்வும். துணி ஒன்றுதான்,

வரையப்பட்ட சிம்மம் கற்பனையானது. பிரம்மம்தான் நிஜமானது. உலகம்

கற்பனையானது.

ஒரு மனிதனுடைய நிழல் காலை வேளையில் நீண்டதாக இருக்கிறது. உடல்

இல்லாமல் நிழல் இல்லை,. ஆனால் உடல் 4 அடி இருந்தாலும் நிழல் 10 அடி

இருக்கும். உச்சி வேளையில் 1/2 அடியிலும் இருக்கும். அதுபோல் பிரம்மத்தை

ஆதாரமாகக் கொண்ட, மாயை பெய்கிறது என்னும் நிழல் வளர்கிறது. நிழல்

அசுத்தமான இடத்தில் இருந்தாலும் அதனால் உடலுக்கு எந்தவிதமான அசுத்தமும்

ஏற்படுவதில்லை. அதுபோல் பிரம்மத்தை ஆதாரமாய் கொண்டு உலக

காரியங்களுக்கு எத்தனை புண்யபாவங்கள் செய்து கொண்டாலும், மாயைக்கு

ஆதாரமான பரமாத்மாவை பாதிக்காது. உடலை காட்டிலும் தனியாக நிழலை

இல்லை. ஆனாலும் நிழல் பல நிலை அடைகிறது. கூடுதல், குறைத்தல் பிறரால்

மிதிக்கப் படுதல், போன்ற பல நிலை அடைகின்றன. இதனால் உடலுக்கு எந்த வித

பாதிப்பும் இல்லை. அதுபோல்தான் மாயை மூலமாக பிரம்மத்திற்கு எந்தவித

பாதிபபும் ஏற்படாது. நிழல் பல பொருள் மீது விழும் உடல் மீது எப்போதும் தன்

நிழல் விழாது. அதுபோல் மாயை பல பொருள், சிருஷ்டி, ஸம்ஹாரம் போன்ற பல

பணிகள் செய்யும். ஆனால் மாயை கட்டாயமாக பிரம்மத்தில் விழாது.

ஒரு நாடகம் நடைபெறுகிறது. பல ஜனங்கள் இருக்கிறார்கள். நாடகம்

நடக்கும் பொழுது குறைந்து இருந்தால் பார்ப்பவர்கள் நாடகத்தை பார்ப்பார்கள்.

அது போல் உலகத்தின் உள்ள பொருள் எல்லாம் மாயையின் நாடகம். நாடகம்தான்

என்று தெரிந்து கொள்வதற்கு விவேக சக்தி, ஒலி இல்லாததனால், உலக நாடகத்தை

பொய்யாக பார்ததுக் கொண்டிருக்கிறார்கள். நாடகத்தில் நடக்கும் பாத்திரங்களை

பார்த்த சாமானிய பாமர மக்கள் நிஜமாக அப்படி இருக்கிறார்கள் என்று

நினைக்கிறார்கள். நாடகத்தில் நடித்தவர்கள் நாடகம் முடிந்தவுடன் இயற்கையாக

வரகிறார்கள். வந்தவுடன் பேசி மகிழ்கிறார்கள். நாடகங்களைப் பார்த்தவர்கள்

எல்லாம், இவர்கள் இத்தனை நேரம் நடித்தது உண்மை நடிப்பு போல் நடித்தார்கள்

என்று பாராட்டி பேசுவார்கள். அது போல் அறிவாளிகள், அநுபவசாலிகள், உலகம்

உலகிலுள்ள எல்லாம் மாயை நாடகம் என்று நினைப்பது கூட உண்மையான

பரம்பொருள் ஒன்றுதான். மற்றவைகள் எல்லாம் தோற்றம் என்பதை உணர்ந்து

கொண்டு ஊரோடு பொதுமக்களோடு பேரறிவோடு வாழ்வார்கள்.

தாமரை இலையில் எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் அந்த தண்ணீர்

நிலைத்து நிற்காமல் ஓடி போய்விடுகிறது. இரண்டு முத்துகள் தாம் நிற்கிறது. அதே

போல்தான் அறிவாளிகள், அநுபவசாலிகள் வாழ்க்கையில் அறியாமையில்

முழுகாமல் முத்துபோல முக்தர்களாக விளங்குவார்கள். நாடகம் நடப்பதற்கு முன்பு

அங்கு ஒளி விளக்கு இருக்கும். நடக்கும்போது ஒளிவிளக்கு இருந்து கொண்டே

இருக்கும். மத்தியில் ஒளி விளக்கு வந்து போகும் அதே போல் பரம்பொருளான

ஜோதி, ஒளி முற்காலத்தில் எப்போதும் படைத்தல் காத்தல் அழித்தல் என்ற

நிலையில் அதற்கு அப்பாற்பட்ட நிலையிலும் ஒரேவிதமான ஒளியாகத் திகழ்ந்து

கொண்டிருக்கும்


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is அனுஷ்டானங்கள்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is  நமது செயல்களை இறைவனுக்கே அர்ப்பணி   விட்டால் உடம்பும் உள்ளமும் தூய்மை அடையும்
Next