சீதா கல்யாணம்

சீதா கல்யாணம்

சீதா கல்யாண வைபோகமே" என்று ஒவ்வொரு வீட்டின் கல்யாணத்திலும்

பாடுவது வழக்கம். சீதாதேவி சாக்ஷ£த் மஹால்க்ஷ்மியினுடைய ஸ்வரூபம். சீதை

நம்மைப் போல் கர்ப்பத்திலிருந்து பிறக்கவில்லை. ஸ்ரீதேவி, பூதேவி'

மஹாவிஷ்ணுவின் இரு சக்திகள், மஹா விஷ்ணுவின் இருதயத்திலேயே ஸ்ரீ

தேவி எப்போதும் குடிகொண்டிருப்பதாக புராணங்கள் கூறும். சமுத்திரத்திலிருந்து

கடையும் போது ஸ்ரீதேவி வெளிவந்ததாகக் கூறப்படுவாள். பூமி தேவியினிடத்தில்

தான் வராஹ அவதாரத்தில் நரகாசுரன் பிறந்தான்.

ஸ்ரீ தேவிக்கும், பூமாதேவிக்கும் ஒரு விஷயத்தில் மிகவும் பொருத்தம்.

ஸ்ரீதேவி சமுத்திரத்தில் தோன்றினதாகச் சொல்லப்படுகிறது. பூமாதேவி பூமிக்கு

அதிர்ஷ்டான தேவதையாக பூமியிலிருந்தே வந்ததாகச் சொல்வார்கள். சமுத்திர

ஜலம் பூமியின் மேலும், கீழும் இருக்கின்றது. ஆகவே சமுத்திரத்திலிருந்து

உண்டானவள் என்றால் பூமியிலிருந்து உண்டானவள் என்ற கொள்ள வேண்டும்.

அதற்கேற்றாற்போல் சீதா தேவி பூமியிலிருந்துதான் வந்தாள். பிறகு கடைசியில்

பூமியைப் பிளந்து கொண்டு அதில் அடைக்கலம் புகுந்து கொள்கிறாள்.

இவ்விரண்டையும் பார்க்கும்போது சீதாதேவியும், பூமாதேவியும் ஒரே அம்சம்

கொண்டவர்கள் எனக் கருதப்படுகிறது.

தசரத மஹாராஜாவிற்கு வெகு காலம் பிள்ளை இல்லாமல் யாகம் செய்து,

பின் பாயச வடிவில் பகவான் மஹா விஷ்ணு வந்து, தசரதனுக்கு மகனாகப்

பிறந்தார். ஜனக மஹாராஜா சிறந்த ஞானியாக விளங்கி புத்ர சம்பத்தில்

அபே¬க்ஷயில்லாமல் வாழ்ந்தவருக்கு, பூமியிலிருந்து தேவியின் அம்சமாக

சீதாதேவி கிடைத்தாள். இப்படி தேவதைகளின் நன்மைக்காகவும், உலகத்தில்

தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும் அயோத்தியிலும், மிதிலையிலும் அவதரித்த

ராமனுக்கும், சீதைக்கும் மனித வாழ்க்கை முறைப்படி மனிதர்களுக்கு வாழ

வேண்டிய வழி முறைகளை தெரிவிப்பதற்காகவே அவதாரம் எடுத்துக் கல்யாணம்

முறைப்படி நடைபெறுகிறது.

இந்து சமயத்தில் கல்யாணம் அக்னிசாக்ஷியாக நடைபெற வேண்டும். ஏழு

அடிகள் சேர்ந்து நடந்து கரங்கல்லின் மேல் கால் வைக்க வேண்டும். மாலையில்

சப்தரிஷி மண்டலத்தில் அருந்ததி தரிசனம். கையோடு கையை பிடித்துக்கொண்டு

இந்தப் பணிகளைச் செய்ய வேண்டும். இதை வைத்துத்தான் பாணிக்ரஹணம்

என்ற பெயர் வந்தது. (பாணி - கை, க்ரஹணம் - பிடிப்பது) இதுவரை தனி

மனிதனாக பிரம்மச்சாரியாக இருந்த ஒருவன், சாப்பாட்டிலே கூட

பொறுப்பில்லாமல் இருக்கக்கூடிய நிலையில் இருந்தான். பிரம்மச்சர்ய நிலையில்

இருக்கும்வரை மற்றவர்கள் வீடுகளில் அவனுக்குக் கிடைத்த உணவைச் சாப்பிட

வேண்டும் என்ற நியதி. அவன் ருசியையோ, இடத்தையோ, காலத்தையோ

பார்த்துச் சாப்பிட வேண்டும் என்று சொல்லவில்லை. அப்படி இருந்தவனுக்கு

பாணிக்ரஹணம் என்ற மங்களகரமான கல்யாணம் ஏற்பட்ட பிறகு விசேஷமாக

ஒரு பொறுப்பு வருகிறது. இதை வைத்துத்தான் கல்யாணத்திற்கு விவாஹம் என்ற

பெயர் ஏற்பட்டது. "விசேஷண வாஹயதி இதி விவாஹ" அதாவது பொறப்பற்று

இருந்த இருவரையும், கல்யாணம் பொறுப்புள்ளவர்களாக செய்விக்கிறது.

பொறுப்புடன் வாழ்க்கை நடந்தால்தான் உலக இயல்பே சரியாக நடைபெறும்.

பொறுப்பில்லாத வாழ்க்கை அமைதியில்லாத வாழ்க்கை. ஒருவருக்கொருவர்

விட்டுக் கொடுத்து வாழும் வாழ்க்கை அமைதியுள்ள வாழ்க்கை.

ஒருவருக்கொருவர் விடாப்பிடியாக தன்னுடைய பலஹீனத்தையோ, பலத்தையோ

காண்பிப்பது, அமைதியற்ற நிலையை உருவாக்குகிறது. ஒரு மனிதனுடைய உடல்,

அதன் நிழல் இரண்டும் வெவ்றோக பார்வைக்குத் தோன்றினாலும், உடலில்லாமல்

நிழலில்லை, நிழலில்லாமல் உடலில்லை. சில சமயம், குறைந்தும் இருக்கும். அது

போல் வாழ்க்கையில் கொஞ்சம் ஏற்றத்தாழ்வு இருக்கும். மனத்தினால் அவைகளை

ஆலோசித்து செயல்பட வேண்டும்.

"உடலுடைய நிலை ஒரே மாதிரிதான் உள்ளது. சூரியனின் ஒளியினால் ஏற்றத்

தாழ்வு ஏற்படுகிறது. அது வெறும் தோற்றமே தவிர, நிஜமல்ல" என்று நாம் எப்படி

புரிந்து கொள்ள வேண்டுமோ அது போல் வாழ்க்கையில் சிறிய ஏற்றத் தாழ்வுகள்

வந்தாலும் அவைகள் உள்ளத்தின் மூலம் வராமல் ஏதோ சிறு சலனத்தின் மூலம்

வந்தது என்று அறிந்து, அந்தச் சலனத்தை அகற்றிக் கொண்டு இரு உடல், ஒரு

மனதாக வாழ்க்கை நடத்த வேண்டும். இந்தக் காலத்திலே உடல் என்ன நிறமாக

இருந்தாலும் தன்னுடைய உடலை அலங்கரிப்பதில் மேட்சிங் வைத்துக்

கொண்டிருக்கிறார்கள். ஒரே விதமான கலரில் பொட்டு முதல் செருப்பு வரை

அணிந்து கொள்வதை நாம் பார்க்கிறோம். இது வெளி மேட்சிங் அது போல்

இரண்டு உடலின் நிறம், உடல் அலங்காரப் பொருள்கள் எப்படி இருந்தாலும்

மேட்சிங் ஆக அல்லது மேட்சிங் அல்லாமல் இருந்தாலும், மனதில் இருவருடைய

உள்ளத்தில் ஒரே சிந்தனை, ஒரே எண்ணம், ஒரே செயல் இவையெல்லாம் இருந்து

விட்டால் இதுதான் அமைதியுள்ள பாதையில் நமது வாழ்க்கையை எடுத்துச் செல்ல

ஒரே மேட்சிங்.

இதைத்தான் சீதாதேவி தன் வாழ்நாளில் ராமருடன் கல்யாணம் ஆனது

முதல், அரண்மனையில் வாழ்க்கை நடந்தாலும், காட்டில் வாழ்க்கை நடந்தாலும்

இரண்டையும் சமமாகப் பாவித்து கணவனைப் பிரியாமல் ஒரு மனதாக வாழ்க்கை

நடத்த வேண்டுமென்பதை எடுத்துக் காட்டினாள். இதை வைத்துத்தான், "சீதா

கல்யாண வைபோகமே" என்று பாடினார்கள்.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is திருமணம்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is  பெண்மணிகள் தெரிந்துகொள்ள - 1
Next