ஜோதிடச் சுடர்ஒளி பத்திரிகைக்கு அளித்த பேட்டி

ஜோதிடச் சுடர் ஒளி பத்திரிக்கைக்கு சுவாமிகள் அளித்த பேட்டி

புத்தாண்டின் ஜனவரி 6-ம் தேதி வியாழக்கிழமை காஞ்சிப் பெரியவர்

ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளைத் தரிசனம் செய்து, ஆசிகள் பெறும்

பேற்றினைப் பெற்றேன்.

அவரிடம் ஜோதிடர் சுடர் ஒளி பத்திரிகைக்கு பேட்டி வேண்டும் என்று

கேட்டதற்கு, முகமலர்ச்சியுடன் குழந்தைபோல் கள்ளமில்லா சிரிப்புடன் பேட்டி

அளித்தார்.

ஜனவரி மாதத்தில மேல் அட்டையில் திருப்பதி வெங்கடாசபதி படம்

நேர்த்தியாக, பக்தி பரவசமூட்டும் விதத்தில இருப்பதாகச் சொல்லி மிகவும்

சந்தோசப்பட்டார்.

அவரிடம் எவ்வளவோ கேட்க வேண்டும் என்று தான் நினைத்தேன்.

ஆன்மீகத்தின் சூழ்நிலையில் பரவசத்தில் கேட்டவற்றை என் அன்பு

வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மட்டில்லா மகிழ்ச்சி

அடைகிறேன்.

ஜோதிட சாஸ்திரத்தை மக்கள் எப்படி கடைப்பிடிக்கணும்? பயன்படுத்தணும்?

குழந்தை பிறந்ததும் ஜாதகம் கணித்துக் கொள்ள வேண்டும். காலாகாலத்தில்

என்ன என்ன செய்யணுமோ அதை எல்லாம் அந்த அந்த FF படி கிரமமாக

செய்து வரவேணும். அப்படிச் சரிவர நடந்து வந்தால், எல்லாம் நல்லபடியாக

நடக்கும். சிலபேர் கல்யாணம் பண்றப்போ, இல்லைனா அவசியமாக இருக்கும்

போதுதான் ஜாதகம் கணிக்கிறார்கள். பிறந்த உடனேயே கணித்து வைத்து

அதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கறது நல்லது.

திருக்கணிதமா? வாக்கியமா?

திருக்கணிதம், வாக்கியம் இரண்டு பஞ்சாங்கம் இருக்கே. சிலர்

திருக்கணிதத்தையும், சிலர் வாக்கியத்தையும் பின் பற்றுகிறார்களே!ஜனங்கள்

மத்தியில் இது குழப்பம் விளைவிக்கிறது. எதை பயன்படுத்த வேண்டும்? எது

சிறந்தது?

வாக்கிய கணிதம் பழையதுன்னு அதை கடைப்பிடிக்கணும் என்று

கட்டாயம் இல்லை. விஞ்ஞான அடிப்படையில் திருக்கணிதம்தான் சிறந்தது.

அதைத்தான் பின்பற்றி பயன்படுத்த வேண்டும். சந்திர கிரகணம் ஏற்படும்போது,

எல்லோரும் அந்தத் திதியை ஒத்துக்கொள்ளுகிறார்கள். அதை மட்டும் வாக்கிய,

திருக்கணிதப் பஞ்சாங்கத்தைப் பயன்படுத்துபவர்கள் இருவரும் ஒத்துக்

கொள்கிறார்கள். சூரிய கிரகணமும் தான்.

"அதாவது அந்த ஒற்றுமை அன்று கிரகண தினம் மட்டும்தான்" பிறகு

வாக்கிய பஞ்சாங்கத்தை பயன்படுத்துபவர்கள் பழையபடி அவர்கள்

கணக்குப்படிதான் வாக்கியத்துக்கு போகிறார்கள்.

கிரகணம் கண்ணுக்கு தெரியறது. அதான் ஒத்துக்கிறார்கள். இரு

பஞ்சாகங்கங்களுக்கும் பொதுவான நேரத்திலிருந்து அல்லது அந்த கிரகண

தினத்திலிருந்து இரு சாராரும் ஒன்று சேர்ந்து வானசாஸ்திர Ephermeris

கணக்குப்படி அமைந்த திருக்கணிதத்தை பின்பற்றுவது சிறப்பு.

நீங்க இரு சாரருக்கு எடுத்துச் சொல்லி ஏற்பாடு செய்தால் எங்களுக்கு

நல்லதாயிற்றே.

60 வருஷ பஞ்சாங்கத்தை - வாக்கியம், திருக்கணிதம் இரண்டையும் தான்

எடுத்து, எத்ந FF இரண்டிலும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கிறதோ, அந்த திதிப்படி

கணக்கு வைத்து இருசாராரும் ஒரே மாதிரியே திருக்கணிதத்தைப் பின்பற்றுவது

நல்லது. என்னை அவர்கள் அணுகி கேட்டால் கட்டாயம் சொல்லுவேன்.

சிரார்த்தம் எல்லாம் வேதத்தில் சொல்லியபடி செய்யணும். எந்த தேதியில்

செய்வது என்பதை திருக்கணிதப்படி பார்க்கணும்.

மனச்சுத்தமும், சரியான கணிப்பும்

ஜாதகம் பார்தது பலன் சொல்லுபவர்கள் முக்கியமாகக் கடைபிடிக்க

வேண்டிய முறைகளைச் சொல்லுங்களேன்.

மனசு சுத்தமா, ஒழுக்கமா, கடவுளை மனதில் நினைத்துப் பலன்

சொல்லணும். தசாபுக்தி கணக்கைத் தப்பில்லாமே போடணும் முதல்ல..

(குழந்தைபோல சிரிக்கிறார்) . கணக்கு மட்டும் தப்பா போச்சு எல்லாமே

தப்பாயிடும்.... நிதானமாப் பொறுமையா ஜாதகத்தை பார்ததுப் பலனைத்

தீர்மானிக்க வேண்டும்.

சில சமயம் ஜாதகத்தில் கிரகங்கள் பலமாக இருந்தும், குறிப்பிட்ட ஜாதகர்

வாழ்வில் முன்னேற்றம் இருப்பது இல்லையே? கிரகங்கள் நீசமாகவும்,

பலவீனமாகவும் இருப்பவர் சிலர் நீசதமகவும், ஓஹோன்னு வாழ்க்கையில்

இருப்பதை அனுபவத்தில் பார்க்க முடிகிறதே, அது ஏன்?

ஜாதகம் கணித்ததில் பிழை இருக்கக்கூடும். முதலில் சரியான

பஞ்சாங்கத்தைப் பார்த்து, சரியாகப் பிழை இல்லாம கணக்குப் போட்டு ஜாதகம்

கணித்துப் பலன் தெரிஞ்சுக்கணும்!ஜாதகம் சரியில்லாவிடில் சம்பந்தா சம்பந்தமே

இல்லாமத்தான் பலனும் இருக்கும். அது மட்டுமில்லாம கர்மவினைப்படி

ஊழ்வினை காரணமாக கூட நல்லது கெட்டது மனுஷாளுக்கு நடக்கும்.

ஆக இரண்டு காரணம். ஒண்ணு கணக்கு தப்பா இருக்கும். இரண்டாவது

ஊழ்வினைப் பயன்.

குறிப்பிட்ட கிரகத்தால் ஜாதகருக்கு சோதனையும் கஷ்டமும் ஏற்படும்போது

அந்தக் கிரகத்திற்கு பரிகாரம் செய்யணுமா?அல்லது அந்தக் கிரகத்தின்

அதிதேவதைக்கா?

பரிகாரம் - கிரகத்திற்கா?அதிதேவதைக்கா?

கிரகத்தின் அதி தேவதைக்குத்தான் செய்யணும். கிரகம் என்றால் வீடு.

இருப்பிடம் இருப்பிடத்துக்கு பரிகாரம் அவசியமல்ல. வீட்டில் இருப்பவர்க்கு

செய்தால் வீட்டிற்கும் சேர்ந்துதான். அதனால் கிரகத்தின் அதிதேவதைக்குப்

பரிகாரம் செய்வதே சிறப்பு.

ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபட எலுமிச்சைபழம் தீபம் ஏற்றும்

முறைபற்றி.... எலுமிச்சம் பழத்தை அறுத்து சாறுபிழிந்து ஏற்றுவது நல்லதா, சாறு

பிழியாமல் மூடி மேல் நெய் வைத்து திரிபோட்டு ஏற்றுவது சிறப்பா?

இரண்டு முறையிலும் செய்யலாம். ராகு காலம் ஆரம்பிக்க இரண்டு

நிமிஷம் முன்னால் செய்யறது சிறப்பு. நல்லது.

எலுமிச்சை தீபம் வீட்டில் ஏற்றலாமா?

கோவிலில் துர்க்கை அம்மன் சந்நிதானத்தில் தான் ஏற்றி வழிபட வேண்டும்.

வீட்டில் கூடாது.

செவ்வாய் தோஷம் என்றால் எல்லாரும் பயப்படுகிறார்களே?

செவ்வாய் தோஷம் மட்டுமல்ல, ஆயில்யம், மூலம், பூராடம் இந்த

நட்சத்திரங்களால் தோஷம், கல்யாணத் தடங்கல் என்று பயப்பட வேண்டாம்.

ஜாதகத்தைப் பார்த்து 'கல்யாணம் நடைபெற, ஏன் தடங்கல் உண்டாகிறது?'

என்று தெரிந்து கொண்டு, தகுந்தபடி அவாஅவா குலதெய்வம், கடவுளை

வணங்கி வேண்டிக் கொண்டு நன்றாக பிரார்த்தனை செய்து கொண்டு, நல்ல

காரியத்தைத் தொடங்கிச் செய்தால் நல்லது. அதுக்காக வீணாக பயப்பட

வேண்டாம்.

கடவுளை வழிபடும் நேரத்தில் மனது இடையில் வேறு கற்பனைக்கு மாறி

விடறதே.. மனதை ஒரு நிலைப் படுத்தி கடவுளிடம் ஈடுபட வழி தான் என்ன?

பிராணாயாமம் மிகவும் சிறந்தது. மூச்சைச் கட்டுப்படுத்தப் பழகிக்கணும்.

யோகாப்பியாசமும் சிறந்தது. மனதைக் கட்டுப்படுத்த கண்ணால ஒரு பொருள்

மீது லயிக்கணும். அது ஜோதியா இருக்கலாம், கடவுள் திருவுருவப் படமா

இருக்கலாம்.

கண்களை இப்படிக் கட்டுப்படுத்தணும். பின்னர் காதால நல்லதைக் கேட்டு,

காதைக் கட்டுப்படுத்தப் பழகிக்கணும். இப்படித்தான் ஒவ்வொரு உறுப்பையும்

கட்டுப்படுத்திக்கணும்.

இப்படி நல்ல பழக்கவழக்கத்தாலே கொஞ்சம் கொஞ்சமாகப் பழகி, பயிற்சி

பெற்று, மனதை ஒரு நிலைப் படுத்தி விட்டால், பகவானை நினைக்கிறபோது

மனசு பகவானிடம் மட்டும் நிலைக்கும். தாறுமாறா அலைபாயாது.

முயற்சியுடன் உழைத்தாலும் சில சமயம் தோற்றுவிடுகிறது ஏன்? உழைத்தும்

பலன் இல்லாமல் போவது ஏன்?

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். முயற்சி திருவினை ஆக்கும்

என்பதுதான் சரி. ஒரு வேளை முயற்சி, உழைப்பு இரண்டும் பலனைத் தர தாமதம்

ஆகலாம். முயற்சியும் உழைப்பும் குறைவா இருந்தா பலனை அடைய தாமதம்

ஆகும்.

அத்துடன் வினைப்பயன் ஒண்ணு இருக்கே. இறை அருளும் வேண்டுமே?

அதனால், நல்ல உழைப்பும் இருந்து, வினைப்பயனும் சரியா இருந்தால் இறை

அருள் உண்டு. பலனும் உழைப்பிற்கேற்றபடிச் சரியா கிடைக்கும்.

அதனால் உழைக்கக் கத்ததுக்கணும். சோம்பல் பட்டு சோர்வு

அடையக்கூடாது. மேலும் இறைவனைப் பக்தியால் கவர்ந்து விட்டால் எல்லாமே

நல்லபடியா நடக்கும்.

எல்லாம் பூர்வ புண்ணியபடி தான் நடக்கிறது என்றாலும் இப்போது உண்மையை

உணர்ந்து நல்லது செய்யறமே!அதுக்கு நல்ல பலன் இப்போதே நடக்காதா?

பூர்வ புண்ணியபடி நடக்கிறது என்ற சொல்றப்பவே, இப்போ இந்த

ஜன்மாவில் செய்யறதுக்குத் தகுந்தபடி அடுத்த ஜன்மாவில் நல்லதோ கெட்டதோ

நடக்கும்னு தெரியறதே.

இப்போ கஷ்டம் துன்பம் இருக்கும்போது ஆண்டவனை வேண்டியும்,

நல்லதும் செய்து வரப்போ கஷ்டத்தோட உபாதையை தாங்கிக்கும் சக்தியை

ஆண்டவன் தருவான். அதுக்காக விதியை மாத்த முடியாது. அந்த துன்பத்தின்

அளவு வேணுமானா குறையும். அதுக்கும் பகவான் கருணை வைக்கணும்.

அதுக்கு நல்ல மனசோட நல்லதை செய்து கொண்டு ஆண்டவனைப்

பிரார்த்தனை செய்யணும்.

கலிகாலத்தில் பலன் கைமேலே என்று சொல்கிறார்களே அதே போல நல்லதோ

கெட்டதோ அப்போவே நடக்காதா? இப்போ கலியுகம் தானே?

நடக்கும், நடந்தும் இருக்கு. சிலருக்கு நடபப்து தெரியறது, பலருக்குத்

தெரியல. அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும். சிசுபாலனை

கிருஷ்ண பரமாத்மா எப்படி வதம் செய்தார்? நூறு திட்டுக்கள் திட்டும் வரை

பொறுத்தார். 100 ஆனதும் சக்ராயுதத்தை விட்டு வதைத்தார் இல்லியா?

அதுபோலத்தான்.

கலிகாலத்தில் பலன் கைமேலே என்று சொல்கிறார்களே அதே போல நல்லதோ

கெட்டதோ அப்போவே நடக்காதா? இப்போ கலியுகம் தானே?

நடக்கும், நடந்தும் இருக்கும். சிலருக்கு நடப்பது தெரியறது, பலருக்குத்

தெரியல. அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும். சிசுபாலனை

கிருஷ்ண பரமாத்மா எப்படி வதம் செய்தார்? நூறு திட்டுக்கள் திட்டும் வரை

பொறுத்தார், 100 ஆனதும் சக்கராயுதத்தை விட்டு வதைத்தார் இல்லியா? அது

போலத்தான்.

நேச உணர்வு இப்போது குறைஞ்சு இருக்கிறது. அதன் விளைவு கண்முன்னால்

தெரியறதே. நேசத்தை வளர்க்க என்ன செய்யணும்.

முதல்ல அவாஅவா குடும்பத்துல அன்பை வளர்த்துக்கணும். பாசத்தைக்

கடைப்பிடிக்கணும். அப்போ நேச உணர்வும் பந்தமும் ஏற்படும். அதுபோல

பின்னர் கிராமத்துல, நகரத்துல நேச உணர்வு மக்களிடம் ஏற்பட்டு விட்டால்

நாட்டிலும் நேச உணர்வு வளர்ந்து ஒற்றுமை ஏற்படும்.

ஜோதிடம் படிக்க ஜாதி மதம் விதிமுறை உண்டா?

எல்லாரும் இப்போது படிக்கிறார்கள். எல்லாரும் படிக்கலாம். அந்த

காலத்தில் வேதம் படித்தவர்கள் மட்டுமே படித்து வந்தார்கள். இப்போ

வெளிநாட்டவர்களும் படிக்கிறார்களே இந்த தெய்வீக விஞ்ஞான கலையை

எல்லாரும் படிக்கலாம். ஆனால், தெளிவா, நன்னா, படிச்சு கற்றுக்க வேணும்.

எல்லா கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் அரசாங்கம் ஆதரவு அளித்து

கௌரவித்து பாராட்டுகிறது. ஆனால் ஜோதிடக்கலைக்கு ஜோதிடர்களுக்கு

ஆதரவு இன்னும் முழுமையா கிடைக்கலையே!ஜோதிடப்பாடம் பள்ளியில்

வைக்கலாமா?

(சிரித்துக் கொண்டே) அரசியல்வாதிகள் தாம் உங்களைப் போன்ற

ஜோதிடர்களிடம் ஜாதகம் பார்க்கிறார்களே!அப்போது அரசாங்க ஆதரவு உண்டு

என்று தானே அர்த்தம்? அரசியல்வாதிகள் வேறு அரசாங்கம் வேறா?

(மறுபடியும் குழந்தை போல சிரிக்கும் போது மனம் லேசாகி பரவசப்படுகிறது) .

ஜோதிடத்தைப் பள்ளியில் பாடமாக தாராளமாக வைக்கலாம்.

1994-ம் ஆண்டு உங்கள் தரிசனம் எனக்கு கிடைத்ததில் மனதில் நிம்மதி

சந்தோஷம் ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு எல்லாம் உங்கள் ஆசிகளும்

ஆலோசனைகளும் சொல்ல வேண்டும் என்று தாழ்மையுடன்

கேட்டுக்கொள்கிறேன். எல்லா ஜனங்களும் கடவுள் மேல் நம்பிக்கை வைத்து

பக்தியை வளர்த்துக்கணும். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் வாழணும்.

அன்புடனும், ராமர் லட்சமணர் போல சகோதர பாசத்துடனும், ஆனால் வாலி,

சுக்கிரீவன் போல இல்லாமலும், தைரியத்தோட நல்லதுக்கு முயற்சி

பண்ணிக்கொண்டு முழுச் சக்தியுடன் உழைத்துப் பாடுபட்டு முனனேற்றம்ம்

பெற்று மேன்மேலும் வளர வேண்டும். ஆசீர்வாதம்!


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is குமுதம் ஸ்பெஷல் பத்திரிகைக்கு அளித்த பேட்டி
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is  சத்துவ குணமே சாந்திக்கு வழி
Next