தமிழ்ப் புத்தாண்டு

தமிழ்ப் புத்தாண்டு

சந்திரனுடைய ஆகாச தகனத்தை அனுசரித்தும், சூரியனுடைய ஆகாச நிலையை அனுசரிததும் சூரிய வானம், சந்திர வானமென இரண்டு வகையாக ஜோதிடர்கள் கூறகிறார்கள். இரண்டிற்கும் கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் வித்தியாசப்படும். அமாவாஸ்யை முதல் இது தொடங்கினால் சந்திர மானம், சூரியமானம் பூர்ணமாசம் முதல் தொடரும். ஒன்று, இரண்டு நாட்கள் வித்தியாசப்படும். சேந்திர மாதப்படி விரதங்கள், பண்டிகைகள் எல்லாம் கொண்டாடப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே சூரயமானம், சந்திரமானம் இவை இரண்டையும் அனேகம் பேரும் வாழ்க்கையிலே கடைப்பிடித்து வருகிறார்கள். சந்திரமானம் தமிழ் நாட்டைத் தவிர மற்ற அனைத்து பகுதியிலும் வருடப் பிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. இதைத்தான் "யுகாதி" பண்டிகை என்று சொல்கிறார்கள். தமிழகத்திலும், கேரளத்திலும் மாத்திரம் சூரியமானத்தைப் பிரதானமாக வருட ஆரம்பத்தில் விசேஷமாகக் கொள்கிறார்கள்.

இதைத் தான் "தமிழ்ப் புத்தாண்டு" என்று சொல்லுகிறோம். ஒவ்வொரு காரியம் செய்வதற்கும் ஐந்து விஷயங்களைத் தெரிந்து கொண்டு செய்யவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எப்படி ஒரு காலண்டரைப் பார்த்து அன்றைய தேதியைத் தெரிந்து கொண்டு பலகாரியங்களை நாம் செய்கிறோமோ, அது போல் பழங்காலம் முதல் இருந்து கொண்டிருக்கிற ஒரு பழக்கம் FF, வார, நட்சத்திர, யோக, கரணம் என ஐந்து விதமான விஷயங்களையும் அறிந்து கொண்டு காரியங்களைச் செய்வது பழக்கமாயிருந்து வருகிறது. FF - 15, வாரம் - 7, நட்சத்திரம் - 27, கரணம் - 7 அதில் திரகரணம், சரகரணம் என இருவகையுண்டு. இதில் நாலு. அதில் ஏழு. இவ்விதமாக FF, வார, நட்சத்திர, யோக கரணங்களைத் தெரிந்து கொண்டு காரியங்களைச் செய்வது பழக்கம். ஒவ்வொரு திதிக்கும் தேவதைகள் உண்டு. அந்தத் திதியை நினைத்துக் கொண்டு தேவதையை நினைத்துக் கொண்டு காரியங்களைச் செய்யும் பொழுது அந்த தேவதையினுடைய ஆசீர்வாதம் கிடைக்கும் என்று சொல்வார்கள். "திதியேஸ்ச ஸ்ரீப்ரதம் க்ரோக்தம்" திதியை நினைத்துக் கொண்டு செய்தால் ஐஸ்வரியம் கிடைக்கும், அருள் கிடைக்கும் என்று சொல்லுவார்கள். "ஆராதாயுஷ்யவர்தனம்" கிழமைகளை நினைத்துக் கொண்டு செய்தால் அதன் மூலம் அல்பாயுசு இல்லாமல் கிடைக்கக்கூடிய ஆயுசு பரிபூர்ணமாக இருந்து காரியங்களைச் செய்ய முடியும் என்று சொல்லுவார்கள். "நட்சத்திர தர்தே பாபம்" நட்சத்திர தேவதைகளைப் பிரார்த்தனை செய்து கொண்டு காரியங்களைச் செய்தால் நம்முடைய வாழ்க்கையில் தெரிந்தோ, தெரியாமலோ செய்யக்கூடிய பழக்கங்கள் கூட அகன்று விடும் என்று சொல்லுவார்கள். "யோகாதுரோக நிவாரணம்" யோக தியானத்தின் மூலம் காரியங்கள் செய்தால், இயற்கையினாலும், செயற்கையினாலும் வரக்கூடிய வியாதிகள் கூட குறையும் என்று சொல்லுவார்கள். "கரணா கார்ய சித்திஸ்ச" கரணத் தியானம் மூலம் காரியங்கள் செய்வதினால் எடுத்த காரியம் இடையூறு இன்றி நன்றாக முடியும் என்பார்கள். இப்படி ஐந்து அங்கங்களைக் கொண்டது தான் பஞ்ச காலம் என்று

பஞ்சாங்கத்திற்கு விளக்கம் சொல்லுவார்கள். FF - 15, நட்சத்திரம் - 27, நாட்கள் - 7 நட்சத்திரம் எத்தனையோ, அத்தனை கரணங்கள், அத்தனை யோகங்கள் உண்டு. நட்சத்திரத்திற்கும், யோகத்திற்கும் சம்பந்தம் 27 நட்சத்திரத்திற்கு 27 யோகங்கள், பருவங்கள் திதியோடு தொடர்புடையது. ஆகவே திரிகரணம், சரகரணம் என்று திதியை வைத்துக் கொண்டு சொல்லுவார்கள். ஒவ்வொருநாளும் இந்த கிரகங்கள் எல்லாம் தொடர்ந்து சுற்றிக் கொண்டு வரும்பொழுது, சூரிய யோக காலத்தில் எந்த கிரகத்தினுடைய காலம், நேரம் இருக்கிறதோ அதைத்தான் அன்றைய தினமாகச் சொல்லுவார்கள். அதைத்தான் "ஹோரா சாஸ்திரம்" என்று நாம் எல்லோரும் குறிப்பிடுகிறோம். உதாரணமாக இன்றைக்கு ஞாயிற்றுக் கிழமை என்றால் இந்த ஏழு நாட்களுக்கு உள்ள ஏழு கிரகங்களும் ஒன்பது கிரகங்களில் ராகு, கேது தவிர பாக்கி ஏழு கிரகங்களும் சுற்றி சுற்றி வரும் பொழுது ஒவ்வொரு கிரகமும் இத்தனை மணி நேரம் சுற்றுவது என்று சொல்லிக் கொண்டு வரும் போது சூரியோதயத்துக்கு முன்பாக எந்த ஒரு கிரகம் சிறிது சமயத்தில் இருக்கிறதோ அந்த கிரகத்தினுடைய, நேரத்தினுடைய காலம் தான் அன்றைய தினத்தினுடைய காலமாக குறிப்பிடப்படுகிறது. சூரியனுடைய ஹோரை காலையில் இருந்தால் அன்று ஞாயிற்றுக்கிழமை. சந்திர கிரகத்தினுடைய ஹோரை காலையில் இருந்தால் அன்று திங்கட்கிழமை. செவ்வாய் கிரகத்தினுடைய ஹோரை காலையில் இருந்தால் அன்று செவ்வாய் கிழமை. இப்படி எந்தந்த கிரகத்தினுடைய ஹோரை சூரியோதய காலத்தில் இருக்கிறதோ அதை வைத்து அந்த கிழமை என்று குறிப்பிட்டார்கள். இப்படி ராகு, கேது தவிர பாக்கி ஏழு கிரகங்களுடைய சுற்றுதலை அனுசரித்து சூரியோதய காலத்தில் இருக்க கூடிய நிலையை அனுசரித்து அந்த கிழமைக்கும் பெயர் இருக்கிறது.

அதுபோல் சந்திரனுக்கு அருகில் எந்த நட்சத்திரம் வருகிறதோ அந்த நட்சத்திரத்தை வைத்து அன்றைக்கு உள்ள நட்சத்திரத்தை குறிப்பிடுவார்கள். அந்த நட்சத்திரத்தை வைத்துத்தான் யோகங்களும் வரும். திதியை அனுசரித்து அதற்கு ஒரு நாளைக்கு இரண்டு கரணங்கள் வரும்ட. அப்படி திரும்ப திரும்ப ஒரு நாளைக்கு கரணங்கள் வரும்பொழுது அநத் கிரக கரணத்திற்கு பெயர் வருகிறது. மாறுகிறது. இப்படியாக ஐந்து அங்கங்களைக் கொண்டு நம்முடைய பஞ்சாங்கம் காரியங்களை எல்லாம் செய்யச் சொல்லி இருக்கின்றது. இதை அறிந்து கொண்டு காரியங்களைச் செய்வதன் மூலம் பலவிதமான குற்றங்கள், குறைகள் எல்லாம் குறைந்து போக வாய்ப்பிருக்கின்றன. வெறும் நினைவு குறிப்பிற்காக ஆங்கில தேதியை நாம் பார்த்துக் கொள்வதைக் காட்டிலும், குற்றம், குறைகள் எல்லாம் குறைந்து காரியங்கள் எல்லாம் நல்லபடி நிறைவேறுவதற்கு பஞ்சாங்கம் பார்ப்பது என்பது பழக்கம்.

காலையில் எழுந்தவுடன் பஞ்சாங்கம் பார்க்கும் பழக்கம் பல ஊர்களிலும் பல இடங்களிலும் உண்டு. இன்றைக்கும் திருப்பதியிலும் கூட வெங்கடேஸ்வர ஸ்வாமி சன்னதியில் பஞ்சாங்கம் பார்க்கும் பழக்கம் இருந்து வருகிறது. ஆகவே பஞ்சாங்கப் படலம் என்பது ஒரு நல்ல காரியம்.

இது வருஷத் தொடக்கத்திலேயிருந்து ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் எல்லோரும் கூடி அன்றைய தினம் படிப்பதுண்டு. புது

வருஷத்தன்று எந்த சின்ன காரியம் செய்கிறோமா அது நாள் தோறும் தொடர்ந்து நடைபெறுவதற்காகவும் செய்வதுண்டு. நாள்தோறும் செய்ய வேண்டும் என்பதற்காகவும், நினைவுக்காகவும் செய்வதுண்டு. இப்படி ஒவ்வொரு நாளும் புத்தாண்டு அன்று பஞ்சாங்கப் படலம் செய்வது இன்றியமையாதது. வெயில் காலமானதால் அந்தக் காலத்திலே கிராமங்களிலே பானகம், நீர்மோர், MCP போன்றவற்றையெல்லாம் கொடுத்து பஞ்சாங்க படலத்தை நடத்துவார்கள். ஒவ்வொரு பஞ்சாங்கத்திலும் யுக கணக்கெல்லாம் போட்டிருப்பார்கள். கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்று இந்த யுகத்தினுடைய ஆண்டுகள் மாறிவருவதினால்தான் சந்திரமானம் கூடிய புண்ணிய வருஷப் பிறப்புக்கு 'யுகாதி" என்று பெயர் வைத்தார்கள். யுகம் முதலியவைகள் மாறி வருகிற நாளே இன்றைய தினம் என்பதை வைத்து யுகாதி என்று பெயர் வைத்தார்கள்.

ஆகவே யுகாதி பண்டிகை, வருஷப்பிறப்பு போன்றவைகள் எல்லாம் ஒரு புனிதமான நல்ல நன்னாள். அன்றைய தினம் அனைவரும் ஸ்நானம் செய்து, புத்தாடை உடுத்திக் கொண்டு சூரிய பகவானை வழிபட்டு ஆரோக்கியமாக இருப்பதற்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is நவராத்திரி
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is  ராம நாம மகிமை
Next