அறவழி வாசகம்
இந்தியா
இமயம் முதல் குமரி வரை எங்கள் பாரதம்
ஈடில்லாத சிறப்புடையது எங்கள் பாரதம்
காசிமுதல் சேதுவரை எங்கள் பாரதம்
கங்கைமுதல் காவிரிவரை எங்கள் பாரதம்
பகைவரிடத்தும் பற்றுவைப்பது எங்கள் பாரதம்
பண்புடனே பாரில் வாழ்வது எங்கள் பாரதம்
அஹிம்சை அண்ணல் தோன்றியது எங்கள் பாரதம்
அனைவருமே வாழ்த்துவது எங்கள் பாரதம்
தமிழ்நாடு
கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல
பல்விதமாயின சாத்திரத்தின் மணம்
பாரெங்கும் வீசும் தமிழ்நாடு!
3