ஸமீபகால ஸம்பவத்தில் புராண நிருபணம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

அப்படிச் சொல்வது நிஜந்தானென்று நிரூப்பிக்கிறதாக ஸமீபத்தில் ஒன்று நடந்தது. ராமேச்வரத்தில் சங்கர மண்டபம் கட்டிக்கொண்டிருந்தோம்*. அதில் ப்ரதிஷ்டை செய்யவேண்டிய ஆசார்யாள் பிம்பத்தை லாரியில் எடுத்துக் கொண்டு போயிற்று. ஜெய்ப்பூரிலிருந்து ஸலவைக்கல் தருவித்து காஞ்சிபுரத்தில் ஆசார்யாளுக்கும், அவருடைய நாலு சிஷ்யர்களுக்கும் பெரிசு பெரிசாக பிம்பம் பண்ணி அங்கேயிருந்து ராமேச்வரத்துக்கு லாரியில் எடுத்துக் கொண்டு போயிற்று. அப்போது வழியில் ஸரியாக இந்த அச்சிறுப்பாக்கத்திலேயே லாரி Break down ஆகி நின்று விட்டது! அப்புறம் பிள்ளையாருக்கு நூற்றியெட்டுத் தேங்காய் உடைத்து விட்டே, லாரியைப் பழுதுபார்த்துக் கிளப்பிற்று. அதற்குப் பிற்பாடு எந்த விக்னமுமில்லாமல் கும்பாபிஷேகம், ப்ரதிஷ்டை எல்லாம் ஜாம்ஜாமென்று நடந்தது. இந்த விக்னமும்கூட அநுக்ரஹம் என்று தான் தோன்றிற்று. தாம் கைலாஸ சங்கரனேதான் என்று நமக்கு உறுதிப்படுத்துவதற்காகவே நம்முடைய சங்கரபகவவத் பாதாள் இங்கே தம்முடைய நவீனகால ரத அச்சான லாரி ஆக்ஸிலை முறித்துக்கொண்டிருக்கிறரென்று தோன்றிற்று.


* ஸ்ரீ மடத்தால் ராமேச்வரம் அக்னி தீர்த்தக்கரையில் நிர்மாணிக்கப்பட்டு, 1963 சங்கர ஜெயந்தியன்று கும்பாபிஷேகம் கொண்ட மண்டபம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is தந்தை பூஜித்த தனயர்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  அன்னைக்கு உதவிய ஜங்கரன்
Next