சைவம்

சைவம்

ராமநாதஸ்வாமி, ராமேஸ்வரம், தமிழ்நாடு

மதுரையிலிருந்து 165 A.I. தூரத்தில் உள்ளது. ராமேஸ்வரம். பன்னிரெண்டு ஜ்யோதிர்லிங்க க்ஷேத்திரங்களில் ஒன்றானது ராமனாத அல்லது ராமலிங்கேஸ்வரர் ஆலயம். இந்த கோயிலில் உள்ள சிற்பம் நிறைந்த தூண்கள் கொண்ட பிரகாரங்களுக்காக மிகவும் சிறப்பு வாய்ந்த கோயில் இது. இந்த பிரகாரங்கள் 17 அடி முதல் 21 அடி அகலம் உள்ளதாகவும் 30 அடி உயரம் உள்ளதாகவும் மொத்தத்தில்4000 அடி நீளம் கொண்டதாகவும் உள்ளது.

நூறு அடி உயரம் கொண்ட கோபுரம் 1000 அடி நீளமும் 650 அடி அகலமும் கொண்டது. ராவணனை வெற்றி கண்டபின் ஸ்ரீ ராமசந்திரர் இங்கு ஸ்ரீ ராமநாதஸ்வாமியினை ஸ்தாபித்ததாக சொல்லப்பட்டிருக்கிறது. (தன்னுடைய பிரம்மஹத்தி தோஷம் நீங்க) பிறப்பால் வேத வழி வந்த பிராம்மணனாகிய ராவணனைக் கொன்ற ராமன் இங்கு சிவனை வழிபட்டார்.

ராமேஸ்வரத்திலிருந்து 20 A.e தூரத்தில் உள்ள தனுஷ்கோடியில் மணலை எடுப்பதிலிருந்து இந்துவின் புனிதப்பயணம் தொடங்குகிறது. இந்தப் புனிதப்பயணம் பிரயாகையில் உள்ள கங்கையில் இந்த மணலைக் கரைத்து கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமமாகும் பிரயாகை நீரைக்கொணர்ந்து ராமலிங்கேஸ்வரரை அபிஷேகம் செய்ய முடிவு பெறுகிறது. இந்தப் புனிதப் பயணம் காசியிலிருந்தும் துவங்கி ராமேஸ்வரம் சென்று மீண்டும் காசியில் முடிவடையலாம்.

இமய மலைகளின் மன்னனான ஹிமவான் மகளான பர்வதவர்த்தினி என அழைக்கப்படும் தேவி ராவணனை வென்று சீதையை மீட்டு அயோத்தி சென்று முடிசூட்டிக்கொள்ள ராமனுக்கு வரமளித்து அனுக்ரஹித்தாள். ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்மனின் சன்னதி ராமேஸ்வரத்தில் ஸ்ரீ ராமநாதலிங்கத்தின் தெற்குப்பகுதியில் அவரின் வடபாகத்தில் அமைந்துள்ளது.

அம்மன் சன்னதிக்கு முன்பு இருக்கிற மண்டபத்திற்கு நவசக்தி அல்லது சுக்ரவார அல்லது வெள்ளிக்கிழமை மண்டபம் என்று பெயர் வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீ பர்வத வர்த்தினி அம்பாளின் விக்ரகம் தங்கப்பல்லக்கில் மூன்று பிரகாரங்களைச் சுற்றிலும் மிகுந்த கோலாகலத்துடனும் இசையுடனும் எடுத்துச் செல்லப் படுகிறது. கடவுளர்க்கும் இது ஒரு கண்கொள்ளாக் காட்சி.

மஹாசிவராத்திரி சமயத்தில் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் ராமேஸ்வரத்தில் வந்து கூடுகின்றனர். ராமநாதபுர மன்னர்கள் ராமேஸ்வரத்திற்கு வரும் யாத்ரீகர்களின் காவலர்களாக விளங்கி வந்ததால் அவர்கள் சேதுபதி காவலர்கள் என அழைக்கப்பட்டனர். அவர்கள் ராமேஸ்வரனிடம் அதிக ஈடுபாடு

கொண்டவர்கள். கோயிலில் பல சிற்பங்களை வடித்துள்ளனர். கோயிலில் காணப்படும் சில சிலைகள் ராமநாதபுர சேதுபதிகளை குறிப்பிடுகின்றன.