சைவம் காளஹத்தீஸ்வரர், ஸ்ரீ காளஹஸ்தி, ஆந்திரப்ரதேசம் இயற்கையின் பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்று வாயுக்ஷேத்திரம் ஸ்ரீ காளஹஸ்தி ஆ

சைவம்

காளஹத்தீஸ்வரர், ஸ்ரீ காளஹஸ்தி, ஆந்திரப்ரதேசம்

இயற்கையின் பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்று வாயுக்ஷேத்திரம் ஸ்ரீ காளஹஸ்தி. ஆந்திரப்ரதேசத்தில் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதிக்கு 65 A.e. தூரத்தில் ஸ்ரீ காளஹஸ்தி அமைந்துள்ளது.

காற்றினால் அசைவது போல கர்ப்பக் கிரஹத்திலுள்ள விளக்கு ஒளி எப்போதும் அசைந்து கொண்டேயிருக்கிறது. ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் ஸ்ரீ - சிலந்தி, காளம் - பாம்பு, ஹஸ்தி - யானை என மூவராலும் வழிபடப்பட்டவர். இதனை தென்கைலாசம் என்று கருதப்படுகிறது. மேருமலையின் ஒரு பகுதியான கைலாச மலையாக இந்த காளஹஸ்தி மலை பழைய காலத்தில் கருதப்பட்டு வந்தது. தன்னுடைய சொந்த பூஜைக்காக கைலாயத்திலிருந்து இந்த லிங்கம் பிரம்மாவால் கொண்டு வரப்பட்டது. ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரின் அம்பாளுக்கு ஞானபிரஸன்னாம்பிகை எனப்பெயர். இந்த அம்பாளை வணங்கி பூஜிப்பவர்

ஞானம் பெற்று மீண்டும் பிறப்பு இறப்பு சக்கரத்தில் சிக்காமல் முக்தி அடைவர்.

திண்ணன் என்ற வேடனுக்கு ஸ்ரீ காளஹத்தீஸ்வரர் காட்சி அளித்து அருள் பாலித்தார். இறைவனுக்கு தன் கண்ணையே அளித்து தனது பக்தியின் ஆழத்தை வெளிக்காட்டியவர் அவர். அவர்தான் தமிழ் உலகம் புகழும் கண்ணப்ப நாயனார்.

இந்த கோயிலில் மஹாசிவராத்திரி மிகவும் சீரும் சிறப்புமாக கொண்டாடப்படுகிறது.