சைவம் சிதம்பரம், தமிழ்நாடு A H 6-ம் நூற்றாண்டு சரித்திரத்திலும் சாஸனத்திலும் புகழ் பெற்ற மிகவும் பழமை வாய்ந்த ஆன்மிக மை

சைவம்

சிதம்பரம், தமிழ்நாடு

A.H. 6-ம் நூற்றாண்டு சரித்திரத்திலும் சாஸனத்திலும் புகழ் பெற்ற மிகவும் பழமை வாய்ந்த ஆன்மிக மையமான சிதம்பரம் சென்னைக்கு தெற்கே 151 மைல் தொலைவில் உள்ளது. இந்த காலத்திற்கும் முன்பிருந்தே இந்த நகரம் இருந்திருக்கக்கூடும். அறிவின் சூழ்நிலை அல்லது சிற்றம்பலம் என்று புகழ்ந்து பெருமையுடன் அறியப்படுகின்ற சிதம்பரம் நடராஜராக விளங்கும் சிவபெருமானின் கோயிலினால் மிகவும் பிரசித்தமானது. நான்குபுறங்களிலும் வானளாவிய மதிர்சுவர்களால் சூழப்பட்ட இந்த கோயில் 32 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்தியாவில் மிகவும் மரியாதைக்கும் மதிப்பிற்கும் பாத்திரமான இந்த கோயில் உயர்ந்த சிற்பவேலைப் பாடுகள் நிறைந்த கோபுரங்களால் சூழப்பட்டுள்ளது. புனிதத்தன்மை மிகவும் நிரம்பியது. கர்ப்ப கிரஹத்தில் பஞ்சபூத லிங்கங்களில் ஒன்றான ஆகாச லிங்கம் உள்ளது. இதனை சிதம்பர ரகசியம் என்று அழைக்கின்றனர். இறைவன் இங்கு திரை மறைவில் இருப்பதாகவும் திரை விலக்கப்பட யாவருடைய கண்ணிற்கும் வெறும் வெற்றிடம்தான் தெரிகிறது. ஊனக்கண்களுக்கு ஆகாச லிங்கம் தெரியாது. உள் ஒளி பெற்று ஞானக்கண் கொண்டவர்களால் மட்டும் வெட்ட வெளியில் ஆகாச லிங்கத்தைக் காணமுடியும். இதுதான் ரகசியம்.

சிதம்பரத்தில் உள்ளது போல் சைவ வைணவ சகிப்புத்தன்மை ஒருங்கே அமையப்பெற்ற கோயில் இந்தியாவில் வேறு எங்கேயும் கிடையாது எனலாம். இங்கு பக்தர்கள் கோவிந்தராஜரையும் நடராஜரையும் ஒரே நேரத்தில் தரிசிக்கலாம். இதனைக்காட்டிலும் வேறு உயர்ந்த உதாரணம் என்ன இருக்க முடியும்?கடவுள் ஒன்றே. மதங்கள் பலவாக உள்ளன. பிரிவுகள் பலவாகவும் உள்ளன. கடவுள் என்ற மரத்திற்கு மதமும் பிரிவுகளும் கிளைகளும் துளிர்களும் ஆகும். பதஞ்சலி, வ்யாக்ரபாதர் என்ற இரண்டு பக்தர்கட்காக சிவபெருமான் தன்னுடைய தாண்டவ நாட்டியத்தை நிகழ்த்தினார் என்று வரலாறு கூறுகிறது. மத அடிப்படையில் இந்த கோயில் மிகவும் புனிதமானது. சிற்பக்கலை அடிப்படையில் இது மிகவும் பெரியது. ஆயிரம்கால் மண்டபம், நாட்டிய இசை வல்லுனர்கள், தாள மேள மேதைகள் நிறைந்த காரணத்தால் கலையின் அடிப்படையில் மிகவும் உயர்ந்த இடத்தை இந்த கோயில் வகிக்கின்றது. இங்குள்ள நிருத்த சபையிலும் பிரகாரங்களிலும் 108 நாட்டிய (லாஸ்ய) குறிகள் கிரேனைட்டில் செதுக்கப்பட்டுள்ளன.