சாக்தம் ஸ்ரீ காமாக்ஷி, காஞ்சிபுரம், தமிழ்நாடு தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் (தற்சமயம் காஞ்சிபுரம்

சாக்தம்
ஸ்ரீ காமாக்ஷி, காஞ்சிபுரம், தமிழ்நாடு

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் (தற்சமயம் காஞ்சிபுரம் மாவட்டம்) காஞ்சிபுரம் நகரத்தின் மையத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. தேவியானவள் கம்பீரமாக பத்மாஸன நிலையில் அமர்ந்து இருக்கிறார். வந்து தொழும் பக்தர்கட்கு அன்பும் அருளும் ஆசியும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். மேல் இரண்டு கைகளிலும் பாசம், அங்குசம் ஆகியவற்றினை தரித்து கீழ் இரண்டு கைகளிலும் கரும்புவில்லையும் மலர் பாணங்களையும் கொண்டிருக்கிறார்கள்.

ஸ்ரீ காமாக்ஷி தேவிதான் ராஜராஜேஸ்வரி இந்த உலகத்தின் சர்வசக்தியும் ஆன பராசக்தி. காஞ்சிபுரம் எல்லைக்குள் உள்ள எந்த சிவன் கோயிலிலும் சக்திக்கு என தனிசன்னதி எதுவும் கிடையாது.


ஸ்ரீ காமாக்ஷி தேவியின் முன்பு ஆதிசங்கரர் ஸ்ரீ சக்கரத்தை ஸ்தாபித்துள்ளார். தினமும் பூஜை அதற்கு நடக்கிறது. இதற்கு காமகோடி என்ற பெயர். காஞ்சி நகரத்தின் பிரதான தெய்வம் அன்னை காமாக்ஷி. கர்பக்கிரகத்திற்குள் உள்ள ஒரு குகையில் அன்னை பாலாதிரிபுரசுந்தரியாக வாசம் செய்கின்றார் என்று சொல்லப்படுகிறது. முன்னால் இருக்கும் மண்டபத்திற்கு காயத்ரி மண்டபம் எனப் பெயர். கர்பக்ரஹத்திற்கு முன்னால் உள்ள அர்த்தமண்டபத்தில் ஸ்ரீ வித்யா பரமேஸ்வரியாக தேவி ஒரு பீடத்தில் அமர்ந்திருக்கிறார்.