சாக்தம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி (திருவானைக் கோயில், தமிழ்நாடு) தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் பிரபலமாக திருவான

சாக்தம்
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி (திருவானைக் கோயில், தமிழ்நாடு)

தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் பிரபலமாக திருவானைக்கா என அழைக்கப்படும் ஜம்புகேஸ்வரம் ஸ்ரீ ரங்கத்திற்கு அருகில் உள்ளது. பஞ்சபூதக்ஷேத்திரங்களில் இது அப்பு க்ஷேத்ரம். இங்கு நீர் லிங்கம் அப்பு லிங்கம் இருக்கிறது.

இங்கு கர்ப்பகிரஹத்திற்குள் லிங்கத்தின் அடியிலிருந்து வற்றாமல் நீர் கசிந்து கொண்டே இருக்கிறது. இடைவெளிகளுக்கு இடையில் இந்த நீர் வெளியேற்றப்படுகிறது.

இங்கு சிவன் ஒரு நாவல் மரத்திற்கடியில் அமர்ந்து பிராம்மணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க விஷ்ணுவைக் குறித்து அவரின் தரிசனத்திற்காக தவம் செய்ததாக சொல்லப் படுகறது. உலக மாதாவான அகிலாண்டேஸ்வரி இங்கு சிவனை வழிபட்டார்கள். இன்றும் இதன் அடையாளமாக நடுப்பகலில் கோயில் சிவாசாரியார் புடவை அணிந்து ஜம்புகேஸ்வரருக்கு பூஜை செய்கின்றார்.

தற்போது தேவியின் காதுகளை அலங்ரிக்கும் இரண்டு காதோலைகளும் ஸ்ரீ சக்ர வடிவில் தாடங்கமாக ஆதிசங்கர பகவத்பாதர்கள் சமர்ப்பித்தார் என வழங்கப்படுகிறது. உக்ரமான காளியாக இருந்த தேவியினை சாந்தப்படுத்த தேவியின் முன்பு கணபதி விக்ரகத்தை ஸ்தாபித்தார்.