சாக்தம்
ஸ்ரீ மீனாக்ஷி, மதுரை, தமிழ்நாடு
சென்னையிலிருந்து 492 A.e. தொலைவில் உள்ளது மதுரை. இது பாண்டிய அரசின் தலைநகரமாக இருந்தது. தேவி மீனாக்ஷி கோயிலினால் மிகவும் பிரசித்தி பெற்றது. பராசக்தியின் அவதாரமே தேவி மீனாக்ஷி. மகா சிவபக்தனான மலயத்வஜ பாண்டியன் மகப்பேறு இல்லை என்பதால் புத்ர காமேஷ்டி யாகம் செய்தான் என்று தலவரலாறு சொல்லுகிறது. மீன்களைப் போன்ற கண்களை உடையவள் என்ற பெயரை இந்த மன்னனுக்கு மகளாக பிறந்த தேவி பார்வதிக்கு பெயரிட்டனர். தேவி மீனாக்ஷி சுந்தரேஸ்வரரின் பரம பக்தை. இறைவன் பல வடிவங்களில் வந்து பல திருவிளையாடல்களை தேவி மீனாக்ஷியை திருமணம் செய்து கொள்வதற்கு முன் நிகழ்த்தினார். பாண்டிய மன்னரின் அவையை பல புலவர்கள் அலங்கரித்தனர். தமிழ் இலக்கியத்திற்கு ஒரு பெரும் பீடமாக மதுரை திகழ்ந்தது. இங்குதான் தமிழ் சங்கம தோன்றியது என்று அறியப்படுகிறது.