சாக்தம்
ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி (வாரணாசி, உ..பி)
காசியின் பிரதான தெய்வம் தேவி அன்னபூரனேஸ்வரி. உலக மாதாவான தேவி மக்களுக்கு உணவும் ஐச்வர்யமும் மட்டும் அளிக்காமல் அவர்களின் ஆன்மிக முன்னேற்றத்திற்காக ஆத்ம ஞானமாகிய அமிர்தத்தையும் அளித்து தன்னைத்தான் உணர்ந்து அறிந்து கொள்ளும் அறிவையும் அளிக்கின்றார். ஆதிசங்கரர் அன்னபூர்னேஸ்லரியின் சக்தியினையும் புகழினையும் அழிவற்றதாக தன்னுடைய அன்னபூர்ணாஷ்டகப் பாடல்களில் ஆக்கி, நமக்காக தேவியிடம் ஞானத்தையும் வைராக்யத்தையும் அளிக்குமாறு பிரார்த்தனை செய்கின்றார்.
அழகு மிகுந்த அன்னபூர்னேஸ்வரி தேவியின் தங்கவிக்ரகம் அன்னபூர்னேஸ்வரி கோயிலில் உள்ளது. இந்தக் கோயில் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இருந்து நூறு கஜம் தள்ளியுள்ளது. தீபாவளி திருவிழா காலத்தில் தனத்ரயோதசி தினத்தன்று பொதுமக்களின் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்படுகிறது. அன்று இந்த தங்க விக்ரகத்திற்கு பூஜை நடைபெறுகிறது. மறுநாள் முழுவதும் (அன்று சோட்டி தீபாவளி என அழைப்பர்) பொதுமக்களின் தரிசனத்திற்காக வைக்கப் படுகிறது.
பன்னிரெண்டு ஆண்டு கால வரட்சி நிலவிய காலத்தில் பதரிகாஸ்ரமத்திலிருந்து தெற்கு நோக்கி பயணம் மேற்கொண்டிருந்த உலக மாதா,
காசியில் தங்கி வரட்சி நிவாரண பணி மேற்கொண்டார்கள் என தல புராணம் கூறுகிறது.