நவக்கிரகங்கள் சனிஸ்சரன் (சனி) இந்த கிரகம் மந்தர் என்றும் அழைக்கப்படுகிறார் இவர் பொதுவாக பலவிதமான இடங்களில் அமரும்

நவக்கிரகங்கள்
சனிஸ்சரன் (சனி)

இந்த கிரகம் மந்தர் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் பொதுவாக பலவிதமான இடங்களில் அமரும் போது தீய பலன்களையே வழங்குவார் என்று கருதப்படுகிறது. ஏழரை நாட்டு சனி, அஷ்டம சனி (எட்டாவது வீட்டில் சனி) என்பது உதாரணம். சனிக்கிழமைகளில் இவரை பிரார்த்தனை செய்ய இந்த காலங்களில் ஏற்படும் கஷ்டங்களில் இருந்த நிவாரணம் கிடைக்கும். எள் தானம் செய்தல், இரும்பு பாத்திரம் அளித்தல், கறுப்பு வஸ்திரம் அளித்தல், பல தடவை சனிஸ்வர ஸ்தோத்திரங்களை சொல்லுதல் ஆகியவை இந்த கோளினால் ஏற்படும் கஷ்டங்களுக்கு நிவாரணம் பெற உதவும்.

இவரை உள்ளன்புடன் துதிப்பவர்கட்கு எல்லா நலன்களையும் இவர் வழங்குவார் என்ற கருத்தும் நிலவுகிறது. இவர் மக-கும்ப வீடுகளுக்கு அதிபதி. இருக்கும் கோள்களிலேயே மிகவும் மெதுவாகச் செல்பவர் இவர் ஒருவரே. இவர் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் தங்கி 12 ராசிகளையும் சுற்றிவர 30 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளுகிறார். தமிழ் நாட்டில் சனீஸ்வரருக்கு என்றே தனிக் கோயில் திருநள்ளாரிலும் மஹராஷ்ட்ரத்தில் நயதோங்கி என்ற இடத்தில் உள்ளன.