காஞ்சி காமகோடி பீடாதிபதி
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள்
(ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலபெரியவர்கள்) அவர்களின் 33 அனுக்கிரஹ பாஷணங்கள்
அனுக்கிரஹ பாஷண ம் -12
இ ன்று உங்கள் யாவருக்கும் பெரியவர்களின் தரிசனமும் அவர்களின் சொற்பொழிவினைத் கேழ்க்கும் பாக்கியமும் கிட்டியுள்ளது. பரித்ராணாய ச ஸாதூனாம் வினாசாய ச துஷ்க்ருதாம் என்பது கீதையில் கிருஷ்ண பகவான் சொன்ன வாக்கு. மத்ஸ்யம் முதலிய பல அவதாரங்கள் பகவான் எடுத்துள்ளார். தசா அவதாரத்தின் முக்கிய நோக்கமே தர்மத்தினை நிலை நாட்டுவது தான். வேதத்தினைக் காப்பாற்ற ஏற்பட்டது தான் முதலாவதான மத்ஸ்யாவதாரம் ஸாத்வீக சக்தியினை வெளிப்படுத்த ஒரு அவதாரம். பகவான் எல்லா இடத்திலும் எப்போதும் இருக்கிறார் என்பதைக் காட்ட ஒரு அவதாரம். மனிதனுக்கு அகங்காரம் இருக்க கூடாது. தானம் செய்ய வேண்டும் என்பதைக் காட்ட வாமனா அவதாரம். தர்ம வழியில் நடந்து காட்ட ராமாவதாரம்.
நம்முடைய தர்மம் தான் மிகவும் பழமையானது. தர்மம் என்றாலே வழி என்று பொருள். வேதம், புராணம், இதிஹாஸம் ஆயர் வேதம், ஸங்கீதம் போன்றவை கிளைகள். மனிதனின் சக்திக்காக இவை. மனதிற்கு சக்தி வேண்டும். ஆரோக்யம் தேவை. அதற்கு என ஒரு சாஸ்திரம். பகவானை அடைய ஸங்கீதம். மனதிற்கு சரீரத்திற்கு சக்தி அளிக்கவே தர்மம். வெறும் பிரசாரத்திற்காக ஏற்பட்டது அல்ல நமது தர்மம். அனுஷ்டிக்கவும் முடியக் கூடிய ஒன்று. இந்து தர்மத்தின் ஸாரம் கீதை. ஆகாரம் எங்ஙனம் இருக்க வேண்டும். இதனால் சரீரத்தில் எங்கு பாதிக்கிறது என்பதை எல்லாம் அதில் சொல்லப்பட்டுள்ளது ஆகாரம் முதல் அத்வைதம் வரை சொல்லப்பட்டுள்ளது. இதில். உங்கள் பிரதேசமான குரு «க்ஷத்திரத்தில் ஏற்பட்டது. ஸ்வதீயம் வஸ்து கோவிந்த துப்ய மே வ என்ற எண்ணம் ஏற்பட வேண்டும். உள்ளது யாவும் உன்னுடையது. அதனை உனக்கே அளிக்கப்படுகிறது என்ற எண்ணத்துடன் அளிக்க வேண்டும். கைகளால் வணங்கி கால்களால் வலம் வந்து வாக்கால் புகழ்ந்து செயல் பட வேண்டும். இறைவனின் மகிழ்விற்காகவே செயல்படவே இந்த உடல். தானம் அளிப்பது முக்கியம். இதனால்தான் அதிதி தேவோ பவ என்று சொல்லியுள்ளது. வந்தவரை வாழ வைத்தது நமது தர்மம். எவருக்கு அளிப்பதால் மிகுந்த உபயோகம் ஏற்படுமோ அவர்கட்கே அளிக்க வேண்டும். எவருக்கு சிரத்தை இல்லையோ அவருக்கு கீதையினை சொல்லாதே என்று சொல்லப்பட்டுள்ளது. சிரத்தையுடன் நல்ல இடத்தில் நல்ல காலத்தில் நல்ல பாத்திரத்திற்கு அளிக்க வேண்டும். நாம் இன்று கொடுத்தால் நாளை நமக்கு அவர்கள் அளிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் அளிப்பதோ, கர்வத்துடன் அளிப்பதோ, ஸாத்வீக மானதாக ஆகாது. தேசே என்றதற்கு விளக்கமாக ஆதிசங்கரர் குரு «க்ஷத்திரம் போன்ற இடத்தில் என கூறியுள்ளார். வெட்கமின்றி, நம்பிக்கையுடன் நெற்றியில் அவரவர் ஸம்ப்ரதாய மத சின்னங்களை அணிந்து கிரந்தங்களை படித்து, நல்லவர்களாகவும் நல்ல வாழ்வு உங்களுடையதாகவும் ஆக்கிக் கொள்ள ஆசீர்வதிக்கிறோம்.
(15-11-97 ராஜஸ்தானில் உள்ள நர்நால் என்ற இடத்தில் ஹிந்தி மொழியில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்)