காஞ்சி காமகோடி பீடாதிபதி
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள்
(ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலபெரியவர்கள்) அவர்களின் 33 அனுக்கிரஹ பாஷணங்கள்
அனுக்கிரஹ பாஷண ம் -14
ம னிதனுக்கு விவேகம் மிகவும் தேவை. இதனால் ஆனந்தம் கிட்டும். விவேகம் என்ற ஞானத்தின் மூலம் எந்த பகுத்தறியும் சக்தி கிட்டுகிறதோ அது மிகவும் தேவை. அடுத்தவர்கட்கு கஷ்டம் அளிக்காமல் இருப்போம். மனிதனுக்கு விவேகம் அளிக்கவே குரு குல பரம்பரை வந்துள்ளது. சாந்தீபினி முனிவரிடம் கிருஷ்ண பகவானும், துரோணரிடம் அர்ச்சுனன் முதலனோர் பாடம் கற்றனர். பிரஹஸ்பதி, சுக்ராசார்யார் முதலானவர்கள் குருமார்கள். எதனை செய்தால் உடல் நலமாக இருக்கும், அமைதி கிட்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எங்ஙனம் காற்று, நீர், நெருப்பு ஆகியவற்றினை உபயோகித்துக் கொள்ள முடியும் என்பதை அறிந்து கொள்வது மிகவும் உபயோகம் ஆகிறது. சைசவே வித்யானும் என்பது போல் தாய் தந்தையரிடம் முதலிலும் பின் குருமார்களிடமும் வித்தைக் கற்றுக் கொள்கிறோம். கல்வியில் நான்கு வித நிலையுள்ளது. அக்ஷர ஞானம் ஏற்படும் போது பகவானின் நாமத்துடன் எழுத்து அறிவு முதலில் தரப்படுகிறது. வித்தையில் மத பேதம் இல்லை. ஏழை பணக்காரன் இல்லை. உலகில் பல நாடுகள் உள்ளன. வெளிநாட்டிலிருந்து பாரதத்திற்கு பலர் வந்து கொண்டிருக்கின்றனர். இங்கு செல்வம் அதிகம் இல்லை. இங்கு எண்ணை கிணறு போன்று எதவும் இல்லை. இருப்பினும் இங்கு வந்து இதனை மரியாதை படுத்துவதற்கு என்ன காரணம்?கம்ப்யூட்டர் போன்றவற்றையும் அடுத்தவர்களின் விஞ்ஞானம் எங்ஙனம் உபயோகப்படுத்தலாம் என்பதை வெளிநாட்டில் தெரிந்து கொள்ளலாம். மனிதன் வாழ்வில் அமைதி எப்படி கிட்டும் என்பதை தெரிந்துகொள்ள பாரத தேசத்திற்கு தானே வர வேண்டும். மாணவர்கள் உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளாக ஆனால் மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும்.விஞ்ஞானம் வளருவதுடன் மனித சக்தியும் வளர்க்கப்பட்ட வேண்டும். பொய் சொல்லாமல், கோபம் கொள்ளாமல், பொறாமை கொள்ளாமல் தொண்டு மனப்பான்மை கொண்டவர்களாய் மாணவர்கள் விளங்கிட வேண்டும். பல்வேறு கலைகள் வளர்க்கப்பட வேண்டும். சமூக சேவை, இயற்கை, இறைவன் என்பது தனித்தனி அல்ல. இதுயாவும் ஒருங்கிணைந்தது. இங்குள்ள மாணவர்களிடம் தேசபக்தி, இறைபக்தி, அடுத்தவர்கட்கு அளிக்கும் வள்ளல் தன்மை, தொண்டு மனப்பான்மை ஆகியவை ஏற்பட்ட இறைவனை பிரார்த்திக்கிறோம். ஆசிரியர் தந்தைக்கு சமமானவர். முதல் குரு தாய் அடுத்தவர் தந்தை. எழுத்தறிவித்தவரும் தந்தை என கருதப்படுகிறார். நல்லவர்களை தயார் செய்யும் பணி ஆசிரியர்களிடம் உள்ளது. கலாசாரத்தில் பழமையையும் அறிவில் நவீனத்தையும் வளர்த்துக் கொண்டு சிறப்புற நீங்கள் வாழ ஆசீர்வதிக்கிறோம்.
(17-11-97 ராஜஸ்தானில் லோஹரு என்ற இடத்தில் ஆண்கள் பள்ளியில் ஹிந்தியில் ஆற்றிய உரையின் மொழிபெயர்ப்பு)