காஞ்சி காமகோடி பீடாதிபதி
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள்
(ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலபெரியவர்கள்) அவர்களின் 33 அனுக்கிரஹ பாஷணங்கள்
அனுக்கிரஹ பாஷண
ம் -15

மது பாரத தேசம் மிகவும் பவித்ரமானது. மிகவும் பழமையான கலாசாரத்தைக் கொண்டது. ஆரம்ப காலத்திலிருந்து வந்துள்ளது. இதன் முக்கிய நோக்கம் உலகில் யாவருக்கும் நன்மையும் ஆரோக்யமும், சாந்தியும் கிட்டட்டும் என்பதே. நமது யோக, ஞான, தவ பூமி. வெளிநாட்டிலிருந்து தவசிகள் தவம் செய்த, பகவான் அவதரித்த, ஞானிகள் உள்ள நமது நாட்டிற்கு வேதாந்தத்தை தெரிந்து கொள்ள வருகின்றனர்.

முயற்சி இன்றி பலன் கிட்டாது. பார்வதி தேவி தவம் செய்தார்கள். தவத்திற்காக கஷ்டப்பபட வேண்டும். பலன் கிட்டிய பின் பட்ட கஷ்டம் மறந்து விடும். அர்ச்சுனன் பாசு பதத்திற்காக தவம் செய்தான், சிறு வயதிலேயே துருவன் தவம் செய்தான். தவத்தினால் பலன் கிட்டியது. சிலர் இதனை நல்ல முறையிலும், சிலர் தீயவழியிலும் செயல்படுத்தினர். இங்ஙனம் தவறான தீய வழியில் உபயோகப்படுத்தினவர்கட்கு தண்டனை அளிக்க வேண்டியதாயிற்று.

ராமன் அனுமானை ராவணினடம் அனுப்பினார். நன்கு படித்தவன், நன்கு அரசாட்சி செய்தவன். நாட்டு மக்களை காத்தவன் ராவணன் அவனிடத்திலும் கருணை காட்டினான் ராமன். இது தான் பாரத கலாசாரம். சமுத்திரம் பாலம் கட்ட உதவி அளிக்காத போது ராமனுக்கு கோபம் ஏற்பட்டது. சமுத்திர ராஜன் வந்து மன்னிப்பு கேட்ட போது சாந்தம் ஏற்பட்டது. விபீஷணன் சரணாகதி அடைந்தான். ராவணனையும் மன்னிப்பாயாக எனக் கேட்டதற்கு யதி வா ராவண ஸ்வயம் ராவணனே வந்தாலும் அபயம் அளிப்பேன் என்று மிகவும் உதார தன்மையுடன் ராமன் சொல்கிறார். இது தான் பாரத கலாசாரம்.

நகுஷன் என்ற ஒரு சந்திர வம்ச அரசன், இந்திர பதவி கிட்டியதால் கர்வம் கொண்டு, சப்த ரிஷிகளைக் கொண்டு பல்லக்கினை சுமந்த போது அகத்தியரைப் பார்த்து '' ஸர்ப ஸர்ப '' என்று சொல்ல அகத்தியர் அவனை ஸர்ப்பமாக சபித்தார், பகவான் அனுக்ரஹ மூர்த்தியாகவும் சிக்ஷ£ மூர்த்தியாகவும் இருக்கிறார். பாரதம் புண்ணிய பூமி. இங்கு நல்லதைச் செய்தவர் நலன் அடைகின்றனர். பாவம் செய்தவர் தண்டனை அடைகின்றனர்.

மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, ஆசார்ய தேவோ பவ, அதிதி தேவோ பவ என்பதின் விளக்கம் தான் இதிஹாஸ புராணங்கள். நைமிசாரன்யத்தில் 18 புராணங்களின் மூலம் பல நீதிக் கதைகள் சொல்லப்பட்டுள்ளன. படிப்பிற்காக பள்ளிக்கும், பணம் சம்பாதிப்பதற்காக அலுவலகங்கட்கும், நல்ல புத்திக்காக நல்ல காரியங்களைச் செய்து புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டும்.

பார்வதி தேவியின் மற்றொரு பெயர் அபர்ணா. இலையும் சாப்பிடாமல் தவம் செய்தார்கள்.

தினமும் நெற்றியில் அவரவர் ஸம்ப்ராதய மதச் சின்னங்களை தரித்துக் கொண்டு காலையில் காக்கும் கடவுளை '' நாராயணா '' '' ஸ்ரீஹரி சரணம் '' ஆகியவற்றினை சொல்ல வேண்டும். பின்பு '' ஹனுமான் சாலீஸா '' போன்ற பல ஸ்தோத்திரங்களை படிக்க வேண்டும். தங்களுடையதை தங்களுக்கே அளிக்கிறேன் என்ற மனோபாவத்துடன் முடிந்தவரையில் வரியவர்கட்கு தானம் அளிக்க வேண்டும். எவ்வளவு ஆசை இருந்தாலும், முக்கியமாக ''நல்ல புத்தி அளிக்க வேண்டும்''என்கின்ற பிரார்த்தனையினைச் செய்து கொள்ள வேண்டும். மாலையில் சங்கரரின் '' ஹர ஹர சங்கர '' என்ற நாமம் ஜபிக்க வேண்டும். பகவானை நினைத்து, தியானித்து தங்கள் வாழ்வில் எல்லா நலன்களும் கிட்ட பகவானை பிரார்த்தித்து ஆசீர்வதிக்கிறோம்.

(20-11-97 உத்திர பிரதேசத்தில் உள்ள மதுராவில் ஆற்றிய ஹிந்தி உரையின் தமிழாக்கம்)


Previous page in  அருளுரை - 39 அனுக்கிரஹ பாஷணங்கள்  is அனுக்கிரஹ பாஷணம் - 14
Previous
Next page in அருளுரை - 39 அனுக்கிரஹ பாஷணங்கள்  is  அனுக்கிரஹ பாஷணம் - 16
Next